நமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் சகிப்புத் தன்மையையும் கட்டியெழுப்புவோ மென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, சமாதானத்தின் இளவரசரான இயேசு நாதரின் பிறந்த நாளை முழு உலகமும் பேருவகையுடன் கொண்டாடும் இவ்வேளையில், பயங்கரவாத அச்சுறுத்தலை விட்டும் நீங்கிய ஒரு நாட்டில் இவ்வருட நத்தார் பண்டிகையை கொண்டாடக் கிடைத்தமை இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணமாய் அமைகின்றது.
நத்தார் பண்டிகையின் உண்மையான அர்த்தம் அன்பு, கருணை, கொடை என்பதாகும், இது கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை அம்சமான அன்பு பற்றிய போதனையை தன்னுடன் கொண்டுவந்த இயேசுநாதரின் பிறப்பு பற்றிய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கு குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்று சேர்க்கின்றது.
மூன்று தசாப்த காலமாக பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த எமது மக்களின் சிதைந்துபோன வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பி, எமது நாட்டில் அமைதியையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டும் வகையில் சமூகங்களுக்கு மத்தியில் புரிந்து ணர்வு, சகிப்புத்தன்மை என்ற புதிய பாலங்களைக் கட்டியெழுப்பும் இந்த அன்பையும் கருணையையும் இலங்கை மக்கள் பெரிதும் வேண்டி நிற்கின்றனர்.
பெத்லஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு, அன்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தாழ் நிலையிலுள்ள மக்கள் முதல் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் உயிரினங்கள், எம் எல்லோருக்கும் வளம் சேர்க்கும் இயற்கை ஆகிய எல்லாவற்றையும் தழுவிச் செல்ல வேண்டும் என்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது.
நத்தார் பண்டிகையின் நாதஒலி நல் உள்ளம் படைத்த எல்லோருக்கும் புதியதோர் சமாதான யுகத்திற்கான விடியலை அறிவிப்புச் செய்து நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியை பரப்புகின்றது.
பல்லி
தேசத்துக்கும்; நண்பர்களுக்கும், அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக கிறிஸ்த்துவ மதம் சார்ந்த மக்களுக்கும் பல்லி குடும்பம் சார்ந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்; பல்லி குடும்பம்;
Kusumpu
கொலைப்பட்ட எம்மைச் சகிக்கச் சொல்கிறீர்களா