ரொறன்ரோ லண்டன் வியூகம் வெளியீடுகளைத் தொடர்ந்து வீயூகம் வெளியீடு டிசம்பர் 27 அன்று பிரான்ஸில் நடைபெற்றது. அரசியல் ஆர்வலரும் செயற்பாட்டாளருமான அசோக் யோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வியூகம் ஆசிரியர் குழுவின் சார்பில் ரகுமான் ஜான் கலந்துகொண்டார். சஞ்சிகை பற்றிய அறிமுகத்தையும் விமர்சனத்தையும் வி.ரி இளங்கோவும், லியோதர் பெர்ணான்டோவும் முன் வைத்து உரையாற்றினார்கள்.
இவ் விமர்சன உரையாடல் நிகழ்வில் “ஓசை” மனோ, உதயகுமார், நேசன் சுதாகரன், மகேஸ் உட்பட பலரும் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். சஞ்சிகை ஒன்றின் வெளியீடு வெவ்வேறு நாடுகளில் குறித்த காலத்தில் வெளியிடப்படுவது இதுவே முதற்தடவையாகும். மே 18 இயக்கத்தின் இதழாக வெளிவரும் வியூகம் இதழுடன் நூல் வெளியீடுகளையும் அவ்வமைப்பினர் மேற்கொள்ள உள்ளனர்.
வியூகம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:
‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்
மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்
தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்
இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்
பல்லி
இதன் விபரங்கள் தரவும்;
புதிய பயணிகள்
மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் சஞ்சிகை பற்றிய விமர்சனமும் அறிமுக உரையாடல்களும்…
27.12.2009 ஞாயிற்றுக் கிழமை பி.ப 15.00 தொடங்கி 20.00மணிவரை
இடம்: பாரீஸ்
முகவரி மேலதிக விபரங்களுக்கு: 06 19 45 02 76
humanwatch.sl@hotmail.com
ஒருங்கிணைப்பு
புதிய பயணிகள்….. தோழமை வட்டம்
santhanam
இவர்கள் தமிழ் இலக்கியவியூகம் 25வருடமாக தமிழ்மக்களிடம் காலத்தை கழித்ததை விட எமது நிலபுலம் சம்பந்தமாக அன்னிசக்திகளிடம் கலந்துரையாடியது தான் அதிகம்.
Anonymous
சரி நாடு நாடாத் திரியிறியள்,காசு எங்கிருந்து வசூலாகுது?