நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரியாக ஆட்சிசெய்ய எண்ணியுள்ளேன்: – ரணில்

ranil.jpgஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமமந்திரியாக செயற்பட எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் இதற்கு வாய்ப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சரத் பொன்சேகா ஜனாதிபதியாக தெரிவானால் மூன்று விடயங்களை நிறைவேற்றுவது குறித்து முன்னுரிமை கொடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, நாடாளுமன்ற அரசாங்க முறை, மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரிமுறை என்பன அதில் உள்ளடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அடடா தாராளமாக நீங்கள் ஆசைப்படலாம். உங்களைப் பிரதமராக்க மக்களும் விரும்ப வேண்டாமுங்களா?? அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் சரத் வென்று வந்தால், அவர் தனது அதிகாரத்தை குறைக்க முன் வருவாரென்று நீங்க நினைப்பதுவும் மகா தப்புங்க. அப்படி அதிகாரத்தை குறைப்பதற்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெருண்பான்மை கிடைத்தால் தான் முடியும். அப்படிப் பெருண்பான்மை தங்கள் கட்சிக்கு கிடைக்குமென்று இன்னுமா நீங்கள் நம்புகின்றீர்கள்.

    Reply
  • Mohan
    Mohan

    ஜனாதிபதி தேர்தலில் தட்டித்தவறி சரத் பொன்சேகா வென்றுவிட்டால் உங்கள் கட்சியில் நீங்கள் மாத்திரம் தான் எஞ்சியிருப்பீர்கள். மிச்சமுள்ள அனைவரும் சரத் பொன்சகாவின் கட்சியில் சேர்ந்தவிடுவார்கள் என்பது கூடவா உங்களுக்கு தெரியாமல்போனது ரணில் ஐயா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    சரியாச்சொன்னீங்க பார்த்திபன்.
    ஆட்சி அதிகாரத்தைக்க்குறைக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதே இயலாது என்பதனைத் தெரிந்தும் தமிழருக்கு உரிமைகிடைக்க அரசியலமைப்பை திருத்தி (13 + ) குடுப்போம் என்ற கதை விடுதல்களை நம்புவோரை என்ன செய்வது. இனியாவது தலைக்குள் ஏறுமா?

    Reply