2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று காலை 11.30 மணிக்கு கண்டி ஸ்ரீ புஷ்பாதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு என்பது பற்றியோ எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.
கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் வருமாறு
*இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவேஇ முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று,
* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு
* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு
* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு
* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.
*நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
*ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.
*நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.
*யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
*முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.
*ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.
* ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.
* நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
*கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.
இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும் என கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியில் உப தலைவர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
பார்த்திபன்
கொள்கையாவது கத்தரிக்காயாவது. முதலில் இவரர் தனது மருமகன் மூலம் செய்த ஆயுதக் கொள்வனவு ஊழலை வெளிக் கொணர்வாரா?? அடுத்தவனுக்கு உபதேசிக்க முன் தான் சரியாக நடந்து காட்ட வேண்டும். அதைவிடுத்து சும்மா கதையளப்பதெல்லாம் வெறும் ஊருக்கு உபதேசம் தான்.
சாந்தன்
பார்திபன் சொன்னது முற்றிலும் சரி. கொள்கைப்பிரகடனம் தமிழர் பிரச்சினை என எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிடுவோரில் இவரும் பத்தோடு பதினொன்றுதான். பொங்கல், தீபாவளிக்கு தினகரனில் தமிழர் சகோதரர்கள் எல்லோரும் இந்நாட்டுவாழ் பொன்னான மக்கள் என கதைவிடும் கொள்கைப்பிரகடனம் நாம் பார்க்காததா? இந்நாட்டில் சிறுபான்மை இனம் என்று ஒன்றுமே இல்லை என மகிந்தா சொல்லியதனை ஒருவேளை இவரும் ஏற்றுக்கொண்டு தமிழர் இருப்பதையே மறந்து விட்டாரோ?
Anonymous
என்னைப் பொறுத்தவரை சரத் ஒரு தெரிந்த கெட்டவன். இங்கு ஒளிவு மறைவு இல்லை. சரத் முக்காடு போடாமல் அவற்றைச் செய்ய மற்றையவர்கள் முக்காடு போட்டுக்கொண்டு அதனைச் செய்கிறார்கள். சரத் போன்றவர்களை இலகுவில் அடையாளம் கண்டு சிகிச்சையளிக்கலாம். ஆனால் மற்றையவர்களை அவ்வளவு இலகுவாக அடையாளம் காணவும் முடியாது சிகிச்சை அளிக்கவும் முடியாது. இவர்களே சமூகத்திற்கு மிக ஆபத்தானவர்கள். மிகமோசமான சமூகக்கொல்லிகள்
bash
Channel 4 is not lying. This I believe is true. MR and brother must tell the truth.
Lrd Buddha knows who’s lying and what the facts are.
The Times of London had hired a renown expert Grant Fredericks to analyse the documentary and I have no doubt he is genuine. However the full report should have been offered to Sri Lankan authorities for a response before publication. Also, The Times has published only extracts from the report and we cannot be sure of the Terms of Reference given to Mr. Fredericks. E.g. The report mentions that the footage had been taken by a video camera and transferred to a mobile phone. In contrast all along, it was claimed the footage was taken by a mobile phone understandably as a video camera would have been spotted.