‘மக்கள் விடுதலை இராணுவம்’ ஒரு புஸ்வாணம்? இது ஈரோஸ் சங்கர்ராஜி அணியா? : த ஜெயபாலன்

Nesan Shankar Rajeeமக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் புதிய மார்க்ஸிய இயக்கம் தோற்றம் பெற்றுள்ளதாக பிரித்தானிய ரைம்ஸ் பத்திரிகையில் அன்ரனி லொய்ட்ஸினால் எழுதப்பட்ட கட்டுரைக்குப் பின்னணியில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி நேசன் அணியே பின்னணியில் இருப்பதாக தேசம்நெற் க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை ஈரோஸ் அமைப்பின் நேசன் அணியினர் மறுக்கின்றனர். மக்கள்  விடுதலை இராணுவம் அல்லது மக்கள் விடுதலைப் படைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதே தங்களது உத்தியோகபூர்வமான அறிவிப்பு எனத் தேசம்நெற்க்குத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி தளநிலைமைகள் எப்படி என்று தன்னால் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

ரைம்ஸ் பத்திரிகையாளர் அன்ரணி லொய்ட் தனது நண்பர் என்று தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இன்னும் சில தினங்களில் இவ்வமைப்புப் பற்றிய மேலதிக செய்திகள் ரைம்ஸ் பத்திரிகையில் வர இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்த இருப்பதாக இன்று (Dec 7)  அன்ரணி லொய்ட் தனக்குத் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (Dec 7) ரைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளிவருவதற்கு முன்னதாகவே நேசன் சங்கர்ராஜி, சக்தி ஆகியோர் இலங்கை அரசு அரசியல் தீர்வு காணாதபட்சத்தில் அழுத்தம் டகொடுக்கும் நடவடிக்கைகளை வழங்க வேண்டும் என்ற வகையில் உரையாடி உள்ளனர். அந்த உரையாடலில் சிறிய அளவிலான தாக்குதல்கள் பற்றியும் உரையாடி இருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் வரை பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சங்கர் ராஜி நேசன் திடீரென இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது பற்றியும் பேசியது முரண்நகையாகவே இருந்தது.

இன்று ரைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பாக மக்கள் விடுதலை இராணுவத்தின் ‘தளபதி’ கோணேஸ் என்பவருடன் தொடர்பு கொள்ளமுற்பட்ட போது இலங்கையில் உள்ள ஒரு கைத்தொலைபேசி இலக்கம் தேசம்நெற்க்கு வழங்கப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்புகொண்டால் கோணேசுடன் பேச முடியும் எனவும் சொல்லப்பட்டது. அவ்விலக்கத்துடன் தொடர்பு கொண்டு கோணேஸா பேசுகிறீர்கள் என்று கேட்ட போது ஆம் என்று பதில் வந்தது.

தேசம்நெற்றை அறிமுகப்படுத்திக் கொண்டு மக்கள் விடுதலை இராணுவம் பற்றிக் கேட்ட போது அவர் ஈரோஸின் வரலாற்றை அளக்க ஆரம்பித்தார். அந்த அறிமுகமான குரலைக் கொண்டு ‘சக்தி’ பேசுகிறீர்கள் என்ற போது அவர் ‘ஓம்’ என்றார். இவரை சில வாரங்களுக்கு முன் தமிழர் தகவல் நடுவம் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு ஒன்றில் லூசியம் சிவன் கோவிலில் சந்தித்து இருந்தேன். அந்த அறிமுகம் இருந்தது.

நீங்கள் தான் மக்கள் விடுதலை இராணுவம் என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளீர்கள் என்று கேட்ட போது அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார் சக்தி. ‘உங்களுக்கு ஆயுதப் போராட்டத்தை மீள ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளதா எனக் கேட்டபோது ‘நிச்சயமாக. இலங்கை அரசு அரசியல் தீர்வை முன் வைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தவேண்டி ஏற்படும்’ என்றும் சக்தி தெரிவித்தார்.’ யார் அந்த மக்கள் விடுதலை இராணுவம்?’ எனக் கேட்டபோது ஒரு மணி நேரத்தில் மீண்டும் அழையுங்கள் முழுத்தகவல்களையும் பெற்று வைக்கின்றோம் என்றனர்.

அவ்வாறே சில மணி நேரங்களுக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது ‘சில விசயங்களை எப்படி உங்களுக்குச் சொல்வது’ என்று கதைத்துக் கொண்டிருக்கும் போதே தொலைபேசி அழைப்பு துணடிக்கப்பட்டது. மீண்டும் பலமுறை முயற்சித்த போதும் தொடர்புகொள்ள முடியவில்லை.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த குகணேஸ் என்ற முன்னால் போராளி ஒருவர் ஈரோஸ் நேசன் அணியில் உள்ளார் என்றும் தெரிய வருகின்றது. நேசன் அணிக்கும் பிரபா அணிக்கும் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னரேயே மக்கள் விடுதலை இராணுவம் ஆரம்பிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட முடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மக்கள் பாதுகாப்புப் படை’ இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனத் தெரிவித்த நேசன் சங்கர்ராஜி இவர்கள் புலிகளைப் போன்று பாஸிஸ அமைப்பாகச் செயற்பட மாட்டார்கள் என்பது அவர்களுடைய மார்க்ஸிய கருத்துக்களில் இருந்து வெளிப்படுவதாகத் தெரிவித்தார். 

ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகி உள்ள கோணேஸ் என்ற தளபதிக்கு மக்கள் பாதுகாப்புப் படை வழங்கிய பெயர் குகணேஸ் என்றும் அது தவறுதலாக கோணேஸ் என பிரசுரிக்கப்பட்டதாக பத்திரிகையாளர் அன்ரனி லொயட் தெரிவித்ததாக நேசன் சங்கர்ராஜி தெரிவித்தார்.

அன்ரனி லொய்ட் என்ன சொன்னார் என்பதை நேசன் சங்கர்ராஜி சொல்கிறாரா அல்லது நேசன் சங்கர்ராஜி விரும்புவதை அன்ரனி லொய்ட் ஊடாகத் தெரிவிக்கிறாரா என்ற குழப்பம் தவிர்க்க முடியாதது. அன்ரனி லொய்ட்க்குப் பின் நேசன் சங்கர்ராஜியும் அவருக்குப் பின் மக்கள் பாதுகாப்புப் படையும் அதற்குப் பின் இலங்கை அரசும் றிற்கின்றதா என்ற சந்தேகத்திற்கு நியாயங்கள் நிறையவே உண்டு.

ரைம்சில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சுப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வல ‘மக்கள் விடுதலை இராணுவம்’ என்ற அமைப்பின் பெயரை அரசாங்கம் அறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இவர்களை அரசியல் நிர்வாகரீதியாகக் கையாள்வதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழலில் இவ்வாறான அமைப்புகள் தோண்றுவது உலகில் சகஜம் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்க வரலாறுகளின் ஆரம்ப காலங்களில் ஈரோஸ் அமைப்பு இந்திய இராணுவத்திடமும் பாலஸ்தீனத்திலும் பயிற்சி எடுத்திருந்தது. ஆனால் தற்போது ஈரோஸ் பலவாகச் சிதறியுள்ளது. அதில் நேசன் அணி தனது தந்தை சங்கர்ராஜியின் நிழலில் இயங்குகிறது. இலங்கை அரசுடன் மிக நெருக்கமாக இருந்த இவ்வமைப்பு தற்போது இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் து}க்கவும் தயார் எனத் தெரிவிக்கின்றனர். இவர்களது கதையை கேட்க எத்தனை பேர் தயார் என்பதும் இவர்கள் தான் மக்கள் விடுதலை இராணுவமா என்பதையும் அறிய நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி ஏற்படாது.

இந்த மக்கள் விடுதலை இராணுவத்திற்குப் பின் மக்களல்ல இலங்கை அரசு செயற்படுகின்றது என்ற சந்தேகம் வலுவடைந்து வருகின்றது. இவை பற்றிய உண்கைள் விரைவில் துலங்கும் என நம்பலாம்.

இன்னும் ஓரிரு வாரங்களில் ஈரோஸ் அமைப்பின் சங்கர்ராஜி அணி ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேசன் சங்கர்ராஜி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

._._._._._.

 New Tamil group People’s Liberation Army vows to start a fresh war
December 7, 2009, Anthony Loyd in Colombo

A Marxist group of Tamil militants with connections to the Palestinian Liberation Organisation and Cuba is preparing to mount a new insurgency in Sri Lanka six months after the Government declared an end to the 26-year-old war there.

The People’s Liberation Army (PLA) was founded in eastern Sri Lanka four months ago and has vowed to launch attacks against government and military targets unless its demands for a separate Tamil homeland are met.

“This war isn’t over yet,” Commander Kones, head of the PLA’s Eastern District military command, told The Times during a night meeting in a safe house in the east of the country last week.

“There has been no solution for Tamils since the destruction of the LTTE [Tamil Tigers] in May. So we have built and organised the PLA and are ready to act soon. Our aim is a democratic socialist liberation of the northeast for a Tamil Eelam [the desired Tamil state].”

Kones, a nom de guerre, claimed that the PLA had 300 active members and expected to recruit 5,000 volunteers from the 280,000 Tamil civilians recently freed from detention camps.

He said that the PLA, commanded by a ten-man committee, was an entirely separate organisation from the LTTE, but said that former LTTE cadres would be able to join the organisation provided that they swore their allegiance to the PLA’s political aims.

“There are former LTTE members in the PLA now,” he said. “But the LTTE was an extremist organisation that fought only for itself rather than the people’s needs.

“It is totally destroyed now and I don’t worry about it. We are socialist ideologues and we are trying to draw different Tamil groups together for a people’s struggle, a people’s war.”

Although the PLA’s capabilities remain unclear, it includes in its ranks several experienced insurgents who fought against the government forces in Sri Lanka in the 1980s before falling foul of the LTTE and either leaving the country or becoming dormant.

Commander Kones, now in his forties, had himself been given guerrilla training at a camp in Uttar Pradesh, India, in 1983, where his trainers included fighters from the Palestinian Liberation Organisation (PLO).

“We still have a relationship with the PLO, as well as Cuba and Indian Maoist groups,” he said.

“They fight for their rights just as we do.”

During later action against government forces in eastern Sri Lanka he was imprisoned and tortured, before escaping from the country to live in Europe.

The threat of an aspiring new Tamil insurgent group comes at a complicated time for the Sri Lankan authorities.The unified image that accompanied their decisive victory over the Tamil Tigers in May has been eroded. The architect of that victory, General Sarath Fonseka, has become embroiled in a political scrap with the incumbent President Mahinda Rajapaksa as both men vie for a presidential election victory next month.

Their rivalry could split the vote of the Sinhalese majority, offering the swing vote to the country’s Tamil minority, who have yet to declare their political allegiance.

A new round of violence during this period could have a dramatic reversal on efforts to stabilise the country.

“We are much more politically skilled than the LTTE ever were and know how to avoid the ‘terrorist’ label that they acquired,” Kones said.

“Our enemy is simply the Government here, and we fight just for Tamil rights. We are not against the international community,” he said. “Indeed, we want them to support us in pressurising the Sri Lankan Government.”

Kones said that he had no intention of trying to emulate the Tigers’ style of warfare, but suggested a more asymmetric strategy involving attacks by widely dispersed PLA cells. However, he added that his targets would include economic and administrative centres, as well as military forces.

Other PLA insiders said that one of their likely first fights would be with groups of former LTTE cadres led by the infamous Colonel Karuna. Karuna split from the LTTE ranks in 2004 and later joined the Government, but still holds influence in eastern Sri Lanka.

“We are getting stronger by the day, much stronger than any other group,” Kones said. “The day of action is close.”

A few nights after meeting Commander Kones, deep in a rural area, The Times encountered three young PLA recruits waiting for a guide to take them to one of the organisation’s jungle training camps.

Two were 15 years old, one was 16. “The PLA sound very interesting to us,” they said. “They are the only ones now doing something for the Tamil people.”

Theirs was not, however, a pervading sentiment. Shattered by their experiences in the war zones this year, depressed by their subsequent incarceration in detention camps, few Tamils expressed any great enthusiasm for a return to war.

“I’m not interested in Eelam,” Raja Muragaswaran, 31, who was released from a camp last month, said.

“I lost everything that I had ever worked for in the name of Eelam. How many died for Eelam, and all for what? We just want peace.”

www.timesonline.co.uk/tol/news/world/asia/article6946605.ece

Show More
Leave a Reply to chamalka Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

34 Comments

  • BC
    BC

    குலனுக்கு இப்படி ஒரு இயக்கத்தை ஏற்கெனவே தெரியுமோ?

    Reply
  • senthil
    senthil

    இது சிறிலங்கா படை புலனாய்வுத் துறையினரின் ஒரு புதிய வேலைத் திட்டம் போலத் தோன்றுவதாகச் சில அவதானிகள் கருதுகின்றனர்.
    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகளான ராம் மற்றும் நகுலன் அகியோரை வைத்து சிறிலங்கா படையப் புலனாய்வுத் துறையினர் முன்னர் “சித்து விளையாட்டு” ஒன்றை ஆட முற்பட்டன. ஆனால் – அது அம்பலமாகி அவர்களது திட்டங்கள் தோல்வியுற்ற நிலையிலேயே இந்தப் புதிய வேலைத் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகக் கருதப்படுகின்றது.

    தம்மிடம் சரணடைந்துள்ள மற்றும் கைதாகியுள்ள விடுதலைப் புலிப் போராளிகளையும், ஏற்கெனவே தம்மோடு இணைந்து செற்படும் தமிழ் குழுக்களின் உறுப்பிளர்களையும் இந்தப் புதிய நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் பயன்படுத்தக்கூடும். இது தமிழ் மக்களை ஏமாற்றி – அவர்களை ஒரு குழப்பத்தில் வைத்திருப்பதற்கான எற்பாடுகளில் ஒன்று எனவும், அதே வேளையில் – “தமிழ் பயங்கரவாதம்” இன்னும் அழிந்துவிடவில்லை என்ற விதமாகக் கதைகளைப் பரப்பி – எதிர்வரும் தேர்தல் சமயத்தில் சிங்கள மக்களிடம் வாக்கு வேட்டையாடும் ஒரு முயற்சி எனவும் அவதானி ஒருவர் கருத்துக் கூறினார்.

    அதே வேளையில் – தொடர்ந்தும் அதே பழைய “பயங்கரவாதப் பூச்சாண்டி”யைக் காட்டி, உலகையும் ஏமாற்றி – தம் மீது வரக்கூடிய சர்வதேச அழுத்தங்களைத் தமக்குச் சாதகமாக வளைத்து எடுக்கும் ஒரு முயற்சியாகவும் சிறிலங்கா அரசு இதனைச் செய்வதாக இன்னொரு அவதானி கருத்துக் கூறினார்.

    அதே வேளை – இந்த விடயத்தை ஒரு வெறும் உள்நாட்டு விடயமாக மட்டும் பார்த்துவிட முடியாது. வேறு ஒரு கோணத்திலிருந்து நோக்கும் போது – தமது பிடியை விட்டு நழுவிப் போய்க்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களைப் போட்டு – அதனைத் திரும்பவும் தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கோடு – ஏதோ ஒரு பெரிய வெளிச்சக்தி கூட தமது புலனாய்வாளர்கள் மூலமாக – இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் பாவித்து – இந்த மாதிரியான காரியங்களில் ஈடுபடலாம் என்று கருதவும் இடமுண்டு.

    கோணேஸ் என்பவர் சொல்லியிருக்கும் கதைகளையும், பேசியுள்ள விதங்களையும் பார்க்கும் போது – வெளிச் சக்தி ஒன்றின் ஈடுபாடு இதில் இருப்பது போலவே தெளிவாகத் தோன்றுவதாக அவதானி ஒருவர் தெரிவித்தார்.

    Reply
  • ruban
    ruban

    மழை பெய்யலாம் அல்லது பெய்யாமலும் விடலாம் என்ற வானிலை அறிக்கைபோலுள்ளது.

    Reply
  • senthil
    senthil

    1.புதிய இயக்கம் தொடங்கும் எவரும் லண்டனில் இயங்கும் ஒரு ஊடகத்துக்கு தனது மறைவிடத்துக்கு அழைத்து சந்திக்கமாட்டார். வெளிநாட்டு பத்தியாளர்கள் அதிக கண்காணிப்பில் சிறிலங்காவில் உள்ளனர்.ஏன் உள்ளூர் ஊடகத்துக்கு இதனை ஒரு தொலைபேசி அழைப்பின் ஊடாக கூட சொல்லவில்லை?

    2.வன்னி முகாமில் உள்ள 280000 பேருக்குள் இருந்து எதிர்வரும் காலத்தில் 5000 பேரை திரட்ட போவதாக புதிதாக தொடங்கும் ஒரு இயக்கம் சொல்வது எவ்வளவு முட்டாள்தனம் என்பது வேறுவிடயம்.ஆனால் அந்த முகாமில் உள்ளவர்களையும் இனி வரும்காலத்தில் கண்காணிப்புகுள் வைத்திருக்க அரசு இதன் மூலம் திட்டமிட்டு விட்டதும் அல்லாமல் புலிகள் இயக்கத்தில் இருந்த சரணடைந்தவர்களையும் விடுவிக்க முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தலாம்.அல்லது இந்த இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவோ இயங்கியதாகவோ சுட்டுக்கொல்லவோ கைது செய்யவோ வாய்ப்பை ஏற்படுத்தலாம். அதற்கான புறச்சூழலை முதலாவது செவ்வியிலேயே தொனிக்கப்பண்ணியுள்ளனர்.

    3.அடுத்து பத்தியாளர் பார்க்க கூடியவகையில் 15 வயது சிறுவர் போராளிகள் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக காட்டியமை. இன்னமும் கேள்விக்குட்படுத்துகிறது. இன்று இந்த செய்தி வரும் வரை இந்த இயக்கம் பற்றி சிறு மூச்சுக்கூட வராதநிலையில் சிறிலங்கா புலனாய்வு அமைப்புக்களுக்கே கசியாத தகவல். எப்படி 15 வயது சிறுவனுக்கும், வன்னி முகாமில்லிருந்து திரும்பிய இளைஞனுக்கும் இந்த இயக்கம் பற்றி தெரிய வந்தது ?

    4.உத்தரபிரதேச முகாமில் பயிற்சி பெற்ற கோணேஸ்க்கு இந்திய பயிற்சி முகாமில் பலஸ்தீன பயிற்சியாளர்களும் பயிற்சி வழங்கினார்களாம். யாரும் தெரிந்தால் சொல்லுங்கள்?

    5.இந்த செய்தி வந்துவிட்டது இனி சிறிலங்கா அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை வைத்துக்கொண்டு 300பேரை பிடிக்க அல்லது அழிக்க என்ன நடவடிக்க்கை செய்யப்போகிறது என்பதை வெகு விரைவில் இந்த இயக்கம் பற்றியும் யார் வழிநடாத்துகிறார்கள் என்பதும் தெரிந்து விடும்.

    6.எல்லா இயக்கங்களும் கிழக்கில் முளைப்பதன் பின்னணி என்ன? ராம்,நகுலன் அணியினர் ஏன் இன்னும் சல்லடை போட்டு தேடப்படவில்லை. ஏன் ராமின் அறிக்கை பற்றி அரசு எதும் சொல்லவில்லை என்பதற்கு எல்லாம் விடை தெரிந்துவிடும். அல்லது இது தொடர் கதையாக மக்களை குழப்பி நம்பிக்கையீனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த திட்டமிட்ட வகையில் அரச இயந்திரம் முடக்கிவிடப்பட்டுள்ளது.

    Reply
  • kamal
    kamal

    செந்தில் சொல்கிற அரசியல் அவதானிகள் யார் யார்? எந்த நாட்டில் உள்ளவர்கள்.

    – தமது பிடியை விட்டு நழுவிப் போய்க்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களைப் போட்டு – அதனைத் திரும்பவும் தமது வழிக்குக் கொண்டுவரும் நோக்கோடு – ஏதோ ஒரு பெரிய வெளிச்சக்தி கூட தமது புலனாய்வாளர்கள் மூலமாக – //
    இதுநல்ல விடயம்தானே தமிழருக்கு நல்லது நடந்தால் சரி என ஏன் நீங்கள் நினைக்கவில்லை. மீண்டும் மீண்டும் நீங்கள் பொறுமையிழந்தவராக நீங்கள் விடும் பின்னோட்டம் பார்க்கையில் உங்களை ஏதோ விடயம் உறுத்துவது தெரிகிறது நேரிடையாகச் சொல்லலாமே!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    ஆயிரம் கேள்விகளும் பலவித போராட்டங்களும் இனியும் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கும். பலமாதங்கள் வருடங்களில் சமாதனமும் அமைதியான நிலையும் வந்து விடாது. இதை இயங்கியல் விதியாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஆறுமாதங்களாக ஓரளவு இலங்கை அமைதியைக் கண்டிருக்கிறது என்றால் அது புலிகள் அழித்தொழிக்கப் பட்டதின் விளைவே என்பதை மறுப்பவர்களுக்கு எதுவும் சொல்வதற்கில்லை. இது அவரவரின் இருப்புகளையும் சிந்தனை வளர்ச்சியையும் பொறுத்தது.

    இந்த உள்நாட்டு யுத்தம் நிறுதப்பட்டது இலங்கை உழப்பாளி வர்கத்திற்கு மகிழ்ச்சி அளிக்கிற வேளையில் இலங்கையில்லுள்ள சிலருக்கும் வெளியுலகத்தில் உள்ளவருக்கும் மனவேதனையை அளிப்பது மட்டுமல்லாமல் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இவர்கள் மேமாதம் 19 ம்திகதிக்கு முன்பிருந்த காலத்தை மீளக்கொண்டு வருவதற்கே நித்தமும் கனவு கொண்டிருக்கிறார்கள். மக்கள் இனியொருதரம் ஏமாரவோ புதை சேற்றில் காலைப்புதைக்கவோ விரும்பமாட்டார்கள். ஆயுதம் குண்டு என்று புதுக் கதைசொல்லி வருபவர்கள்- போராட்டம் என்று சொல்பவர்களை அரசு என்ன செய்கிறதோ தெரியாது. ஆனால் இலங்கைமக்கள் குறிப்பாக தமிழ்-முஸ்லீம்மக்கள் இதற்கு தக்கமுறையில் பதிலடிகொடுப்பார்கள்.

    புலத்தில் வரும் ஆலோசனைகளும் கருத்துக்களும் தமக்கு “தொண்டையில் முள்” என்பதை அறியாமல் இருக்க அவர்கள் முட்டாள்களாக இருந்துவிடப் போவதில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    //.உத்தரபிரதேச முகாமில் பயிற்சி பெற்ற கோணேஸ்க்கு இந்திய பயிற்சி முகாமில் பலஸ்தீன பயிற்சியாளர்களும் பயிற்சி வழங்கினார்களாம். யாரும் தெரிந்தால் சொல்லுங்கள்?//
    ஜயோ ஜயோ இது பளய கழக காரர்க்கு ஆப்பு வைக்கும் திட்டம்போல் உள்ளது; எதுக்கும் இந்த தறுதலை யார் என்பதை ஆரம்பத்தில் கண்டு பிடித்து அவருக்கு வேண்டிய ஈழமோ அல்லது தனிநாடோ கொடுத்து அனுப்புவதுதான் நல்லது, அதை விட்டு இந்த திருடன் பொலிஸ் விளையாட்டு விளையாடி மக்களை மிரிபட வைப்பது சரியல்ல; அடங்கவே மாட்டாங்களா??

    Reply
  • Anonymous
    Anonymous

    இப்படித்தான் எழுபதுகளின் பிற்பகுதியில் மாக்சிச சட்டையும்,திருநீற்று பட்டையும் கொண்டபடி,LONDON தொடர்பில் PLO,CUBA,LIBIYA பெயர்களைச் சொல்லி ஒருவர் தற்கீகம் பண்ணித் திரிந்தார். அதன் பிறகு எல்லாரும் தொடர்ந்து E–EELAM அடிச்சுக் கொண்டு திரிஞ்சினம். அவையளெல்லாம் இப்ப அரசோடதான். இப்ப அவையை விட்டுட்டு CUBA,PLO எண்டு எல்லாரும் P–PEOPLE அடிச்சு வெளிக்கிடுகினம். இந்த PLA விஷயம், குயில் கூவும் பின்னணி இசையில், மகாவீர(MAHAWEERA_SPEAK.WAV) தலைப்பில் வந்த ராமின் உரை மாதிரி, PLA அல்ல, வெறும் BLAH,BLAH

    Reply
  • Vasu
    Vasu

    Speaking to Daily Mirror, Minister Rambukwella said that he is aware of the existence of the group and that this sort of situation arises anywhere in the world. He added that since the country was in a reconciliation process after the defeat of the LTTE the government would deal with the issue politically.

    Please note this comment “The government would deal with the issue politically. ” Not militarily, so some thing fishy going on……

    Reply
  • Appu hammy
    Appu hammy

    This is a creation of ‘u know who’ himself. To convince da ppl that, giv him a chance 2 defeat this terror as well. Beware this might backfire, then how da r u gonna defeat them, without a great general?

    Yes,this story is definitely being created by the UPFA.That is a good excuse to keep the emergency going and intimidate all members of the opposition.Good idea but it will not work for long!

    So you all thought the War was over….Joke

    Reply
  • Anil Foneska
    Anil Foneska

    The world knew this would happen due to the actions being taken by the sri lankan government on the Tamils. Honestly, this could be just another Karuna groups which are essentially helping the Sri Lankan government to crack down all international networks worldwide which the LTTE owns. Rajapaksa, keep trying.

    Reply
  • chamalka
    chamalka

    “AS EXPECTED”…because the Government needs to long time to resettle and satisfied Tamil people in equal ways…Anyway, with qualified foreign advice and intelligent Western support all these unnecessary problems would never start again…!?! WILLIE

    this is do dangerous.if MR really loves his country he must find a long lasting political solution for ths problem . time to discuss this with all the Tamil parties in Sri Lanka .

    Reply
  • santhanam
    santhanam

    பி. எல்.எ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ன் இராணுவகட்டமைப்பாக 1984-1990வரை இயங்கியது. அவர்களும் கடும் மார்க்கிசம்தான்.

    Reply
  • puthiyavan
    puthiyavan

    வரலாற்றில் முதன் முதலாக ஒரு புரட்சிகர அமைப்பு தாம் யார் எங்கு மறைந்திருக்கிறரர்கள் யாரிடமெல்லாம் பயிற்சி பெற்றார்கள். யாரோடெல்லாம் தொடர்புகள் வைத்திருக்கிறர்கள். எப்போது தாக்குதலை ஆரம்பிப்பார்கள். யாருடன் முதலில் மோதுவார்கள் என்பன போன்ற சகல விபரங்களையும் மக்களுக்கு தெரியப் படுத்தியிருக்கிறது. வெல்க புரட்சி.

    Reply
  • jude
    jude

    இது புடிச்சு வைச்சிருக்கிற 12000 புலிகளையும் வன்னிக்கு கொண்டுசென்ற அப்பாவி உயிர்களையும் போட்டுத்தள்ளுவதற்கான நியாயத்தைப் தேடும் ஓர் ஆபத்தான அறிக்கை. இதை அலட்சியம் செய்யாது அத்தனை தரப்புகளும் மிகக் கடுமையான அறிக்கைகளை விட்டு அனைவரையும் விழிப்படையச் செய்யவேண்டும்.

    Reply
  • jalpani
    jalpani

    விரைவில் தாக்குதல் செய்யப் போகிறார்களாம். யாரை துரையப்பா ஆக்கப் போகிறார்களோ?

    Reply
  • Thaksan
    Thaksan

    நல்ல கதை. ஆனால் நீளம் பத்தாது. ஈ.பி.ஆர்.எல்.எவ்.> புளொட் தோழர்களுக்கு ஆப்பு. புலிக்கு அடுத்து புளொட் தான் தமிழீழ கோரிக்கைக்கு சரியெண்டு யாரோ யோசிக்கினம் போல இருக்கு. இதனாலதான் புளொட் மகிந்தருக்கு சப்போட் எண்டு முந்தியடிச்சு கொண்டு அறிக்கை விட்டுதோ??

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ANTI-COLONIAL HINDUTUVA-“JAI HIND!”.

    CIA record captures the spectre of Netaji’s return in 1950
    Submitted by vinayras on Wed, 11/18/2009 – 17:34. CIA Secret document.Freedom of Information
    In a first instance of its kind, the world’s the Central Intelligence Agency (CIA) has declassified and released to an Indian citizen based in India two records sought under the US Freedom of Information Act (FOIA).
    The released documents make some interesting comments about India of circa 1950. Main among them is that four years after the reported death of Subhas Chandra Bose, the spectre of his return from the USSR remained strong enough to make many well-off Indians feel jittery. Since the source of CIA’s information had to be but a highly-placed individual, the import of his inputs is that the belief of Bose’s presence in USSR after his so-called disapperance was equally rooted among the elites, as with man on the street.
    India of 1950 faced — in source’s estimate — “some real potential danger”. That is: Bose “is alive and is in Siberia, where he is waiting for a chance to make a big comeback”.
    The second record released by the agency is a “Restricted” one-line Information Report acquired in 1948. It speaks of the recurring rumor that Subhas Bose was alive and “active in the underground RSS movement”.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    நாம் மிக அவதானமாக இருக்க வேண்டிய காலமிது. கண்ட நிண்டவர்கள் எல்லாம் கலர் கலர்ராய் படம்காட்ட முயற்சிப்பார்கள். மக்கள் களைத்து விட்டார்கள். கதைகளைக் கட்டி இராணுவம் மண்ணாங்கட்டி என்று மீதியாய் உள்ளவர்களையும் கொன்று விடாதீர்கள் மக்கள் பலப்படவும் சிந்திக்கவும் காலம் தேவை. புஸ்வானங்கள் இன்னும் பல வரவிருக்கிறது. ராம் இலங்கை அரசின் ஒற்றன் என்பது போல் இதுவும் இருக்காது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. இந்தியா சீனாவையே பின்னிப் பினல் எடுத்த இராசபக்சவின் இராஜதந்திரமாக இதுவும் இருக்கலாம். இருந்துதான் பார்க்க வேண்டும்.

    Reply
  • Anonymous
    Anonymous

    dom moraes என்கிற இந்திய பத்திரிகையாளர் ஒருவர் எண்பதுகளின் முற்பகுதியில் விடுதலைப் புலிகளைக் காட்டில் சந்தித்ததாக ஒரு கட்டுரை ஆங்கிலப் பத்திரிகையில் வரைந்திருந்தார். யாழ் சுபாஷ் ஹோட்டலில் மூட்டை பூச்சிகளுடன் தங்கியிருந்ததாகவும், காட்டுக்கு சென்ற போது,பீடி குடித்துக் கொண்டிருந்த பிரபாகரன், தன்னிடம் சிகரெட் வாங்கி குடித்ததாகவும்,ஒரு பெட்டிக்குள் இருந்த துருப் பிடித்த ஆயுதங்களை காட்டி,தனது நவீன ஆயுதங்கள் என்று சொன்னதாக எழுதியிருந்தார்.முப்பது வருசங்களுக்கு பிறகு Anthony Loydம் அப்படித்தான், நல்லாத் தண்ணி அடிப்பாரா?

    //Anonymous on December 7, 2009 1:11 pm //
    த.ஜெயபாலன் என் கருத்தை சரியாக்கி, உறுதிப்படுத்தியதிற்கு நன்றி.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    என்னப்பா இது வர வர போராட்டமென்பது வடிவேலுவின் காமெடி ரேஞ்சிற்கு போய்க் கொண்டிருக்கின்றது. வடிவேலுவின் காமெடியாவது சிரித்து சிரித்து உயிரை வாங்கும். இது உள்ள அப்பாவி மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் நோக்கத்திலல்லவா போகின்றது.

    Reply
  • Kulan
    Kulan

    பி.சி! உங்கள் கேள்விக்கு என்னால் சுருக்கமாக ஒரு பதிலைத்தான் சொல்லமுடியும். மழை அடித்து முடிய ஏற்படும் தூவானங்கள் தான் இவை. முற்றுப்பேறும் போராட்டங்களின் இறுதிப் பகுதியில் புதிய சிந்தனை போக்கு அற்றவர்கள் இப்படி அப்படி என்று ஏதாவது செய்வார்கள் என்பது இயல்பே. கிட்லர் ஆட்சி அடக்கப்பட்ட பின்பும் இப்படி சில அவர் கருத்தில் ஊறிய வாரிசுகள் அவரின் சுவடுகளைத் தொடர எண்ணின. இது உடனடியாக நடக்காவிட்டாலும் சிறிது சிறிதாக அங்கொன்று இங்கொன்றாக ஏதாவது ஆரம்பமாவது தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் அங்குள்ள மக்களிடம் இன்று சக்தியற்று இருக்கின்றனர் என்பதற்காக நாம் எல்லாவற்றையும் மறந்து விட இயலாது. இதே மக்களில் இருந்து ஒரு புரட்சிகரமான அரசியல் சக்தி மக்கள் மயமாக உருவாகும். தம்மக்களை வென்றெடுக்கும். புலம்பெயர் நாடுகளில் உருவாவது வெறும் புஸ்வாணங்களே. இவை பணம் பண்ணமுயலும் பகட்டாளர்கள்

    Reply
  • தினக்குரல்-செய்தி
    தினக்குரல்-செய்தி

    thinakkural -08.12.2009 இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கம் பிரகடனப்படுத்திய 6 மாதங்களின் பின்னர் தமிழ் போராளிகளின் மார்க்சிஸ்ட் குழுவொன்று புதிய கிளர்ச்சிக்கு தயாராகிவருவதாகவும் இக்குழுவானது பாலஸ்தீன விடுதலைக் கழகத்துடனும் கியூபாவுடனும் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் பிரிட்டிஷ் பத்திரிகையான “த ரைம்ஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

    நான்கு மாதங்களுக்கு முன்னர் கிழக்கிலங்கையில் மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ.) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.தனித்தமிழ் தாயக கோரிக்கை நிறைவேற்றப்படாவிடில் அரசாங்கத்துக்கும் இராணுவ இலக்குகளுக்கும் எதிராக தாக்குதல்களை ஆரம்பிக்கப்போவதாக அந்த இயக்கம் சூளுரைத்துள்ளது.இந்த யுத்தம் முடிவடையவில்லை என்று மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்கு மாவட்ட இராணுவப் பிரிவின் தலைவரான தளபதி கோணேஸ் என்பவர் கடந்தவாரம் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள பாதுகாப்பான இல்லத்தில் இடம்பெற்ற இரவு நேரச் சந்திப்பின்போது “ரைம்ஸ்” பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

    மேயில் புலிகள் அழிக்கப்பட்டபின் தமிழர்களுக்கு தீர்வு இல்லை. ஆதலால் நாங்கள் மக்கள் விடுதலை இராணுவத்தை கட்டியெழுப்பியுள்ளோம். விரைவில் செயற்படுவதற்கு தயார்.எமது குறிக்கோள் தமிழ் ஈழத்திற்கான வட,கிழக்கின் ஜனநாயக சோசலிச விடுதலை என்று அவர் கூறியுள்ளார்.மக்கள் விடுதலை இராணுவத்திடம் 300 உறுப்பினர்கள் இருப்பதாக கூறியுள்ள கோணேஸ், அண்மையில் முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட 2 இலட்சத்து 80 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் மத்தியிலிருந்து 5 ஆயிரம் பேரைத் திரட்டுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக கூறியுள்ளார்.

    10 பேரடங்கிய குழுவை கட்டுப்பாட்டுக்குழுவாக மக்கள் விடுதலை இராணுவம் கொண்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளிலிருந்தும் இது முழுமையாக வேறுபட்ட அமைப்பு எனவும் குறிப்பிட்ட கோணேஸ் ஆனால், அமைப்பில் முன்னாள் புலி உறுப்பினர்கள் இணைந்து கொள்ள முடியுமெனக் கூறியுள்ளார்.இப்போது மக்கள் விடுதலை இராணுவத்தில் முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், புலிகள் மிகவும் தீவிரவாதமான அமைப்பாக இருந்தனர். அவர்கள் மக்களின் தேவைகளிலும் பார்க்க தமக்காகவே சண்டையிட்டனர் என்று கோணேஸ் கூறியுள்ளார்.அந்த அமைப்பு தற்போது முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக நான் கவலைப்படவில்லை.நாங்கள் சோசலிசக்கொள்கை உடையவர்கள் மக்கள் போராட்டத்திற்காக மக்கள் யுத்தத்திற்காக வேறுபட்ட தமிழ் குழுக்களை இழுத்தெடுக்க நாம் முற்படுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆற்றல் தொடர்பாக தெளிவற்ற நிலைமையே காணப்படுகிறது.ஆனால், அதில் அனுபவம் பெற்ற பல கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். அவர்கள் 1980 களில் இலங்கை அரசபடைகளுக்கு எதிராக போராடியவர்களாகும்.புலிகளின் எதிராளிகளாக மாறுவதற்கு முன் சண்டையிட்டுள்ளனர்.அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி அல்லது செயற்படாமல் அமைதியாக இருந்தனர்.

    கோணேஸுக்கு இப்போது 40 வயதிருக்கும்.1983 இல் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இவர் பயிற்சி பெற்றிருந்தார். பாலஸ்தீன விடுதலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு பயிற்சி அளித்திருந்தனர். இப்போதும் நாங்கள் பாலஸ்தீன விடுதலைக்கழகம் கியூபா மற்றும் இந்திய மாவோயிஸ்ட் குழுக்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறோம். அவர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.நாமும் அதனையே செய்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

    கிழக்கிலங்கையில் அரசபடைகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன், சித்திரவதை செய்யப்பட்டார். நாட்டிலிருந்து தப்பிச்சென்று ஐரோப்பாவில் வசிப்பதற்கு முன் இது இடம்பெற்றது. புதிய தமிழ் கிளர்ச்சிக் குழுவின் அச்சுறுத்தலானது இலங்கை அதிகாரிகளுக்கு சிக்கலான தருணத்தில் வந்துள்ளது. மேயில் தமிழ் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். அது தொடர்பான பிரதிமைக்கு ஊறுவிளைவிப்பதாக இது காணப்படுகிறது.

    அந்த வெற்றியின் சிருஷ்டிகர்த்தாவான ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் அரசியல் மோதலில் ஈடுபட்டுள்ளார். இருவரும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கிடையிலான போட்டியானது பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை பிளவுபடுத்தக்கூடும். சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாக்குகளில் திருப்பத்தை ஏற்படுத்தும் தன்மையை இது ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இன்னமும் தமது அரசியல் ரீதியாக அணி சேர்வதற்கான விருப்பத்தை அறிவிக்கவில்லை. இந்தத்தருணத்திலான புதிய வன்முறைகள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.புலிகளிலும் பார்க்க நாங்கள் எப்போதுமே அதிகளவில் அரசியல் ரீதியாக தேர்ச்சிபெற்றவர்கள்.பயங்கரவாதி என்று இலச்சினை குத்தப்படுவதை எவ்வாறு தவிர்த்துக்கொள்வது என்பது எமக்குத் தெரியும் என்று கோணேஸ் கூறியுள்ளார்.

    எமது எதிரி இங்குள்ள அரசாங்கமாகும்.தமிழர்களின் உரிமைகளுக்காக நாம் போராடுகிறோம்.நாங்கள் சர்வதேச சமூகத்துக்கு எதிரானவர்கள் அல்ல. உண்மையில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து அவர்கள் எமக்கு ஆதரவளிக்கவேண்டுமென நாம் விரும்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.புலிகளின் பாணியிலான போர் நடவடிக்கைக்கு முயற்சிப்பது தனது நோக்கம் அல்ல என்றும் ஆயினும் பரவலாக உள்ள மக்கள் விடுதலை இராணுவத்தால் சமச்சீரற்ற தந்திரோபாயமான தாக்குதல்களை அதிகளவில் மேற்கொள்வது தொடர்பான கருத்தை அவர்முன் வைத்துள்ளார். ஆயினும் தனது இலக்குகள் பொருளாதார நிர்வாக நிலையங்கள் மற்றும் இராணுவ படைகளாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    நாங்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக வந்துகொண்டிருக்கிறோம்.எந்தவொரு குழுவிலும் பார்க்க வலிமை பொருந்தியவர்களாக வந்து கொண்டிருக்கிறோம். நடவடிக்கைக்கான நாள் நெருங்கிவிட்டது என்று கோணேஸ் கூறியுள்ளார். மிகவும் பின்தங்கிய பகுதியில் கோணேஸுடனான சந்திப்பின் பின்னர் சில இரவுகள் கடந்த பின்னர் மக்கள் விடுதலை இராணுவத்தைச்சேர்ந்த மூன்று பேரை த ரைம்ஸ் சந்தித்தது. அக்குழுவினர் காட்டுக்குள் இருக்கும் பயிற்சி முகாம்களில் ஒன்றிற்கு செல்வதற்காக அவர்கள் காந்திருந்தனர்.இருவர் 15 வயதுடையவர்கள் .மற்றவர்கள் 16 வயது,மக்கள் விடுதலை இராணுவம் எமக்கு ஆர்வத்தைத் தந்துள்ளது. அவர்கள் மட்டுமே தமிழ் மக்களுக்காக இப்போது ஏதோவொன்றை செய்கிறார்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால், மீண்டும் யுத்தத்துக்கு திரும்புவது குறித்து தமிழர்கள் ஆர்வம் காட்டவில்லை.எனக்கு ஈழத்தில் ஆர்வம் இல்லை என்று ராஜா முருகேஸ்வரன் (31 வயது) என்பவர் கூறியுள்ளார். அவர் முகாமிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டவராகும்.ஈழத்தின் பெயரால் நான் சகலவற்றையும் இழந்துவிட்டேன். ஈழத்திற்காக எத்தனை பேர் இறந்துவிட்டனர். எதற்காக நாம் சமாதானத்தையே விரும்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

    Reply
  • suban
    suban

    உநதச்செய்திக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை. புலத்துமேட்டு புலிகள் பற்றி அக்கறையாயிருப்பது நல்லது. 2009 மாவீரர் விழாவையும் வெற்றிகரமாக கடந்துவிட்டார்கள். இப்போ வட்டுக்கோட்டைத் தீர்மானத்தேர்தல். சனம் அவியத்தான் போகுது. சரி புலத்து மோடுகள்தானே அழியட்டும் என்று விடமுடியாது. ஏனெனில் இதன் தாக்கம் ஈழத்தில் எதிரொலிக்கும். போராட்டத்தால் வாழ்ந்த கூட்டம் ஒன்றும் இருக்கவே செய்கிறது. இது இன்னும் வாழத்தான் தன்னாலான மட்டும் போராடும்.

    Reply
  • senthil
    senthil

    1996 வரைக்கும் திருகோணமலையில் ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் அமைப்பாளராக அலுவலகம் வைத்து இயங்கிய சக்திக்குமார் திருகோணமலையில் பிரபலமாக அறியப்பட்ட சிறிலங்கா புலனாய்வாளர் பைத்துல்லாவுடன் நெருங்கி தொடர்புபட்டு இயங்கியவர். இந்த நேரத்தில் பைத்துல்லாவின் வேண்டுதலில் புலிகளுடனும் தொடர்புகொண்டு புலிகளுக்கு இரகசியமாக உதவி செய்துவந்தவர். சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு விசுவாசமாக புலிகளுக்குள் ஊடுருவி வேலை செய்தவர் இந்த சக்திக்குமார். 1996இல் திருகோணமலை கட்டைப்பறிஞ்சானில் இவரை சந்திக்க சென்ற புலிகளின் அணியொன்று இடைமறிக்கப்பட்டு பதுங்கி தாக்குதல் நடத்தியதில் புலிகளின் ஒரு மேஜர் தர புலியொருவர் உட்பட 7புலிகள் மரணமைடைந்தனர்.

    இந்த சம்பவத்துடன் இவர் புலிகளால் சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டு யாழ்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் புலிகளினால் இவர் தொடர்பான சந்தேகம் உறுதிப்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம், பருத்தித்துறை ஆகிய பகுதியில் தங்கியிருந்தவர். பின்னர் லண்டனுக்கு வந்தவர். புலிகள் தன்னை பிடித்து வைத்திருந்தது பற்றிய ஒரு புத்தகத்தை வெளியிடப் போவதாக சொல்லித் திரிந்தவர். பின்பு கனடாவுக்கு இடம்மாறிக் கொண்டார். அண்மைக்காலத்தில் நாடு திரும்பிய சக்தி டக்ளஸ் தேவாவுடனும் சில சமயம் காணப்பட்டார். இப்போது மக்கள் விடுதலை படை தலைவராக மாறியுள்ளார். இனி……….

    Reply
  • BC
    BC

    சுபன் சொன்னதில் உண்மையுள்ளது.கண் முன்னால் தெரிகிறது.
    //போராட்டத்தால் வாழ்ந்த கூட்டம் ஒன்றும் இருக்கவே செய்கிறது. இது இன்னும் வாழத்தான் தன்னாலான மட்டும் போராடும்.//

    Reply
  • பல்லி
    பல்லி

    பல்லியை பொறுத்த மட்டில் இந்த சதிராட்டம் இடைதங்கல் முகாமில் அடைத்து வைத்திருக்கும் தமிழ் இளசுகளை ஆயுள் கைதியாக்கி வேடிக்கை பார்க்கும் செயலாகவே படுகிறது, இதுக்கு பெயர் போராட்டமல்ல பேயாட்டம், தானாக அடங்கும் இல்லையேல் ஊற்ற வேண்டியதுதான் தண்ணீரை; அதுசரி இவர்களது சர்வதேச ஆய்வாளர் யாரென தெரிந்தால் சொல்லுங்கோ, ஒருவாட்டி அவரை சந்தித்து ஒரு பூகொத்தை கொடுத்து நாலுவரி பாராட்டி திட்டிவிட்டு வருவோம்; இவர்களது சின்னம் என்ன பண்ணியா???

    Reply
  • sivam
    sivam

    தமிழர்களின் போராட்டத்தை எதிர்த்து புலி எதிற்பு போர்வையில் வாழ்ந்த தட்டுக்களும் இருக்கத் தான் செய்யும். புலியின் அழிவிற்கு பின்னர் இந்த தட்டுக்கள் பங்குக்கு பேரம் பேசுவதில் காலத்தை செலவழித்தன. இந்த புதிய இயக்கம் என்று கேள்விப் பட்டவுடன் பரபரக்க தொடங்கி விட்டன. ஒரு பரபரப்பும் தேவை இல்லை இது கோத்தபாயவின் இயக்கம். ஒரு விதமான பங்கு போடல் போராட்டம். உள்வீட்டு அலுவல். எல்லா உள்வீட்டு அலுவலும் எல்லாருக்கும் தெரிய நியாயமில்லை

    Reply
  • kamal
    kamal

    / சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு விசுவாசமாக புலிகளுக்குள் ஊடுருவி வேலை செய்தவர் இந்த சக்திக்குமார். /senthil
    உங்கள் கருத்தப்படி பார்க்கையில் புலியின்(பொட்டரின்) புலனாய்வுத் துறையவிட ஈரோஸ் கெட்டிக்காரங்கள் என்று சொல்கிறீர்கள்.

    Reply
  • BC
    BC

    சிவம், நல்லாக தான் வாழைப்பழத்தில் புலி விஷ ஊசி(புலி நச்சு ஊசி ) தேசம் நெற் வாசகர்களுக்கு போடுகிறீர்கள்.

    Reply
  • sivam
    sivam

    அரண்டவன் கண்களுக்கு ஆகயமெல்லாம் பேய், புலி எதிற்பு, அரச வழிபாட்டு அரசியல் மயக்கத்தில் பார்க்குமிடமெல்லாம் புலி. புலி இருக்கும் போது புலியின் அரசியலை விமர்சித்த அனைவரையும் புலி துரோகி என்றது. புலி எதிர்பாளர்கள் இன்று வேறு கருத்து சொல்பவர்களை விஷ ஊசி வைத்தியர்கள் என்கின்றனர். புலிக்கும், புலி எதிர்ப்பளர்களுக்கும் வெளியில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் உண்டு. இந்த அரசியல் வட்டுக்கோட்டை தீர்மான் தேர்தல்கள் மூலம் புலி அரசியலுக்கு உயிர் குடுப்பதில் இருந்தோ அல்லது ஸ்ரீ லங்கா அரசின் தீவு முழுமையான அடக்கு முறை அரசினையும் அதன் ஆதரவுகளையும் ஆதரிப்பதில் இருந்தோ வேறுபட்டது.

    வைகாசி மாதம் புலி மட்டும் தோல்வி அடையவில்லை, ஆயுத போராட்டம் என்ற வேலைத்திட்டமும் ஒரு முடிவுக்கு வந்தது. ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்படிருக்கும் இந்த கட்டுரை அது தொடர்பான ஜெயபாலன் தரும் தகவல்கள் மட்டுமல்ல, தீவின் அரசியலை புற நிலையாக கவனிக்கும் அனைவருக்கும் தெரியும் இந்த புது இயக்கம் கோத்தபாயவின் “போராட்டத்தின்” ஒரு பகுதி என்பது.

    இந்த நிலையில் இது பங்கு போடல் போராட்டம், உள்வீட்டு அலுவல் என்று சொல்வது எந்த வகையில் புலியின் விஷ ஊசி வயித்தியம். புலி விரும்பினாலும் அரசு தயாரில்லை. மற்றைய அனைத்து தமிழ் கட்சிகளும் அரசியல் அதிகாரம் என்பதை நோக்கமாக கொண்டு இயங்கவில்லை? சம்பந்தன் மகிந்தவிற்கும், பொன்செகவிட்கும் இடையில் தேர்வு செய்ய நிற்கும் பொழுது ஏன் புதிய இயக்கம் என்ற பெயரில் யாராவது தனது அதிஸ்டத்தை முயற்சி செய்யகூடாது.

    பங்கு கேட்பவர்கள் ஒரு பெரிய போட்டியினை சந்திக்க வேண்டும், அது தான் இந்தப் பரபரப்பு. பதினேழு கட்சிகளை கொண்ட அரசாங்கத்தில் ஏற்கனவே உலகத்தில் பெரிய மந்திரிகள் குழு ஒன்று இருக்கின்றது. புலி எதிற்பு மட்டும் காணாது மந்திரிக்கு அலுவலக உதவியாளனாக ஒரு பதவி கிடைபதட்கு.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நில்லுங்கோ! போகிற போக்கில் இதையும் ஒருமுறை கேட்டு………

    “புத்திஜீவிஇயக்கம்” என்பதாக நிரம்பவும் மெச்சப்பட்ட (தம்மைத்தான் மெச்சிக்கொண்ட)இயக்கம் ஈரோஸ் அமைப்பாகும். மற்றவர்களை விட தாமே அறிவு சார்ந்தவர்கள் என்று மிதந்து திரிந்தவர்கள். இவர்கள் நசுக்கிடாமல் செய்த துரோகிகள் சமூகவிரோதிகள் ஒழிப்பு தத்துஉலகில் உயர்வரிசைக்கு குரியவை. தமக்கெதிராக அகதிக்கான குடியேற்றங்களை ஏற்படுத்தினார் என்பதற்காக லண்டனை சேர்ந்த கந்தசாமி என்பவரை இரகசிமாக யாழ்ப்பாணத்தில் கழிவுவாய்க்காலுக்குள் வீசினார்கள்.
    சர்வோதயா அமைப்பை சேர்ந்த கதிரமலையை அரசஉளவாளி என்று அவர்கள் கொலைசெய்த முறை தமிழ்இயக்கங்களின் கொடுரமான மன விகாரங்களுக்கு மட்டுமல்ல யாழ்பாண நடுவர்கத்தினது பூசிமழுப்பும் குணத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். கதிரமலையை கொல்வதற்காக பிடித்து காரில் பஸ்நிலையத்தை நோக்கி கொண்டு சென்றபோது அவரின் கண்முன்பாக மற்றுமொரு காரில் அவருக்கான சவப்பெட்டி அவர் முன்னாலேயே கொண்டு செல்லப்பட்டது .உயிர்ருடன் தன்சவப்பெட்டியை பார்த்த முதல்மனிதன் கதிரமலையாகத்தான் இருக்கமுடியும் .பின்பு பஸ்நிலையத்தில் வைத்து சகலரும் பார்க்கும் வண்ணம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    ஆனால் கந்தசாமியின் கொலையை ஈரோஸ் கடைசிவரை உரிமை கோராமல் மறைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக அந்தசமயத்தில் தம்வெளிநாட்டு தோழர் ஒருவரிடம் பேசிய பாலகுமார் தாமே இக்கொலையை செய்ததாகக ஒப்புக்கொண்டதுடன் இதை தனிப்பட்டமுறையில் உங்களுக்கு சொல்லுகிறேன் பகிரங்கமாக மக்கள்மத்தியில் ஒப்புக்கொள்ளமாட்டோம்.!!??

    நன்றி; அகதி இணையத்தளம்.

    Reply
  • மேளம்
    மேளம்

    //இதே மக்களில் இருந்து ஒரு புரட்சிகரமான அரசியல் சக்தி மக்கள் மயமாக உருவாகும். தம்மக்களை வென்றெடுக்கும். புலம்பெயர் நாடுகளில் உருவாவது வெறும் புஸ்வாணங்களே. இவை பணம் பண்ணமுயலும் பகட்டாளர்கள்// குலன்

    உண்மையியே குலனுடைய கருத்தோடு மேளத்துக்கு உடன்பாடு உண்டு என்பது மட்டுமல்லாது… இதுவே யதார்த்தம் என்பதையுயும் இந்த புலம் பெயர் புத்தி சீவிகள் ஏற்று. தங்களது மேதாவித்தனத்தை அந்த மக்கள் மீது இனிமேலும் உரசிப்பாராமல் இருப்பதே அந்த கம்பிவேலிக்குள் முடக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு இவர்கள் செய்யும் மேலான உதவியாகும்.

    மற்றயது மேலே அமைக்கப்பட்டுள்ள புண்ணாக்கு அமைப்பு பற்றியது. மேளமும் இந்த கண்ட நிண்டதெல்லாம் வாசிக்கிற கூடாத பழக்கம்கொண்ட கூட்டத்துக்குள்ள ஒண்டு. நேற்று மட்டக்களப்புக்கு டெலிபோன் எடுத்து அங்க இரிக்கிர ஒரு விதானையாரோட கதைச்சாப்போல… இஞ்ச வாசிச்ச விடயம் நெனவுக்குவர…. விதானையார்ட கேட்டன் என்ன? இப்புடி ஒரு விசயம் வாசிச்சன் கேள்விப்பட்டியளா எண்டு? மனிசன் சொன்ன பதில் “ஆரையோ போடப்போறானுகள்” அப்பிடி ஒண்டும் கேள்விப்படல்ல…… இப்பயும் கச்சேரிக்குப் போயித்துத்தான் வந்து நிக்கிறன்….. இதெல்லாம் அங்கதான் இஞ்ச ஒண்டும் இல்லல. இது இதுதான் அங்கும்…. இங்கும்.

    மேளம்

    Reply
  • பல்லி
    பல்லி

    மேளம் மிக அருமையாக குலனின் கருத்துக்கு விளக்கம் கொடுத்தார், உன்மையில் புலம்பெயர் புருடாக்களும், புண்ணாக்குகளுமே அங்கு வாழும்
    மக்களை வைத்து கபடி ஆட நினைக்கிறார்கள், இதில் புலி இருந்து மே 18 ல் வியூகம் வகித்தவர்கள் வரை அடங்கும்; விடுக்கப்பா அந்த மக்களை நின்மதியாய் வாழ,

    Reply