ஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 4 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வருகை தரவுள்ளன. ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய தேர்தல் ஆணைக்குழு என்பனவற்றைச் சேர்ந்த நான்கு குழுக்கள் தேர்தலை கண்காணிக்குமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தமக்கு அறிவித்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க இத்தகவலை தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளரின் தேர்தல் பிரசாரங்களைத் தடுப்பதற்கு அரசாங்க அதிகாரிகள் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டி வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்ததுடன், பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஐ.தே.மு. ஆட்சியமைக்கையில் அவர்கள் தொடர்பாக சட்டரீதியில் நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
பல்லி
அமெரிக்கா;; லண்டன்;; ஜேர்மன்;; பிரான்ஸ் ;; இந்த நாலு நாட்டையும் அழைகலாம்; இல்லை ரஸ்யாவையும் சேர்த்து அழைக்கலாம்; இவர்கள்தான்
எம்நாட்டின்(இலங்கை) தேர்தலை கவனிக்க கூடிய வல்லமை படைத்த நாடுகள்;