காலி சிவன் கோவிலில் கொள்ளையர் அட்டகாசம் 17 விக்கிரகங்களை பெயர்த்தெடுத்துச் சென்றனர்

காலி சிவன் கோவிலுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று நூறு வருடங்களுக்கும் மேல் பழைமை வாய்ந்த பெறுமதி மதிக்க முடியாத 17 விக்கிரகங்களைப் பெயர்த்துச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் தென் பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்தத் துணிகர கொள்ளை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பல அரசியல் பிரமுகர்களும் பொலிஸாரை வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது காலி நகரில் பஸ் நிலையத்திற்கு அருகிலும் நகரசபை மண்டபத்திற்கு முன்பாகவும் சிவன் கோவிலுள்ளது. ஆலயத்தின் நான்கு புறமும் பெரிய மதில் சுவர்கள் உள்ளன. ஆலயத்தின் முன்புறவாசல் காலிமாத்தறை வீதியிலும் பின்புறக் கதவு காலிகொழும்பு வீதியிமுள்ளது. கோயிலின் பாதுகாப்புக்காக காவலாளியும் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வாகனமொன்றில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர் கோயிலின் பின்புற வாசல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த போது அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் இவர்களை தடுத்து நிறுத்த முனைந்ததுடன் உதவி கேட்டு குரல் எழுப்பியுமுள்ளõர்.

எனினும் ஆலயத்தைச் சுற்றி நான்கு புறங்களிலும் பெரிய மதில் சுவர்களிருந்ததால் அது வெளியே கேட்கவில்லை.  இதற்கிடையில் அந்தக் கொள்ளையர்கள் காவலாளியை மடக்கிப் பிடித்து அவரைக் கடுமையாகத் தாக்கிய பின் அவரது கையையும் காலையும் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் அங்கிருந்த பெரிய சுற்றியல்கள் மற்றும் உளிகள் மூலம் சிவன் மற்றும் அம்மன் கோவில் கதவுளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து உள்ளே பூட்டப்பட்டிருந்த கதவுகளையும் உடைத்து விக்கிரகங்களை அடியோடு பெயர்த்துள்ளனர்.

ஐம்பொன் மற்றும் பவுணினாலான 14 பெரிய விக்கிரகங்களையும் மூன்று சிறிய விக்கிரகங்களையும் அவற்றின் இருப்பிலிருந்து பெயர்த்து பலத்த சிரமத்தின் மத்தியில் ஒன்றொன்றாக கோயிலினுள்ளிருந்து சுமார் 50 யார் தூரத்தில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு கொண்டு வந்து ஏற்றியுள்ளனர்.

மிகவும் பாரமான இந்த விக்கிரகங்களை தூக்கித் தூக்கி நிலத்தில் வைத்தவாறே வெளியே கொண்டு சென்றதற்கான அடையாளங்கள் உள்ளன. கொள்ளையர்கள் சிவன், முருகன், பிள்ளையார், வள்ளி, தெய்வானை, அம்மன், கிருஷ்ணர், சண்டேஸ்வரர் உட்பட 17 விக்கிரகங்களை பெயர்த்துச் சென்றுள்ளதாக ஆலய பரிபாலன சபைத் தலைவர் சேனாதிராஜா இரத்தினராஜா தெரிவித்தார். பெயர்த்தெடுக்கப்பட்ட அனைத்து விக்கிரகங்களும் நூற்றாண்டு பழைமை வாய்ந்தவை. இவற்றின் பெறுமதி மதிப்பிடப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரும் உடனடியாக அங்கு வந்து புலன்விசாரணைகளை ஆரம்பித்தனர். நேற்று மாலை வரை எவரும் கைதாகவுமில்லை.

Show More
Leave a Reply to paran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • vasanth
    vasanth

    இதனை கொள்ளைச்சம்பவமாக மட்டும் கருதவேண்டாம், இலங்கையில் இருந்து தமிழரின் சுவடுகளை அகற்றும் சிங்கள புத்தர்களின் மற்றொருவகை போரே இது.

    ஐரோப்பியங்கள் எமதுநாட்டினை கைப்பற்றியவுடன் இப்படித்தான், எமது கோயில்கள் பண்பாட்டு மையங்களை அகற்றி எமது மூதாதைகளை தமது மதத்திற்கு மாற்றி எம்மை எமது நிலத்திலேயே நாடற்றவர்களாக்கினர். நாம் எமது பண்பாட்டினை இழந்தபோது நிலத்தின்மீதானா எமது பற்றினையும், தொடர்ந்து உரிமையினையும் இழந்தோம்.

    Reply
  • paran
    paran

    கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கும் வரைக்கும் சிவன் என்ன செய்தவர்??

    Reply
  • BC
    BC

    Paran, இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கடவுள் கண்ணை குத்தி விடுவார்.அது மட்டும் அவர் செய்வார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘..கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கும் வரைக்கும் சிவன் என்ன செய்தவர்?..’

    வடக்கில் ஸ்ரீலங்கா குண்டு மழை பொழியும்போதும், இந்திய ராணுவம் அட்டகாசம் செய்யும் போதும் செய்ததையும் புலிகள் மசூதியில் புகுந்து சுடும்போது அல்லா செய்ததையும், அமெரிக்க அரசும் ஜிஹாதிகளும் இராக்கில் குண்டு வெடிக்கச்செய்து கொலை செய்தபோது அல்லாவும் ஜீசசும் செய்ததையும், ஜேவிபியினரை யூஎன்பி/ஸ்ரீமா அரசுகள் படுகொலை செய்து ஆற்றில் வீசியபோது புத்தர் செய்ததையும், கிட்லர் யூதர்களைப் படுகொலை செய்தபோது யூதக்கடவுள் (பல பெயர்கள்/குழப்பம்) செய்ததைய்மே காலிச் சிவனும் செய்தார் என நினைக்கிறேன்!

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ஈழத் தமிழர்கள் அதிர்ச்சி.
    அமெரிக்க செனட் கமிட்டியின் இந்த அறிக்கை பெரும் திருப்பத்தையும், தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.Ranil Wickramasinghe propitiating Saturn in Tamil Nadu and Mahinda Rajapaksa performing Thulaapaaram in Kerala.- tamilnet.com சிங்களவர்களுக்குப் புரிந்தது ஏன் மடச்சாப்பிராணிகளான இலங்கைத் தமிழருக்குப் புரியவில்லை?.மகிந்தா கொடுத்த அதே துலாபரத்தை, குருவாயூரில் என்னுடைய ஆறாவது வயதில்,நேந்திர வாழைப்பழமாகக் கொடுத்தேன்!.கேரளாவின் இந்தக் கலாச்சாரத்திற்கும்(தம்பிரான்களின்),மேனன்கள் மற்றும் நாராயண்களுக்கும் சம்பந்தம் இல்லை.இது பிராமணர்களின் ஆதிக்கம்(தமிழ்நெட் படி)அல்ல.திராவிட இயக்க(குறிப்பாக கருணாநிதியின்)மற்றும் உருப்படாத,கார்த்திகேசு சிவத்தம்பியின் கருத்துக்களைப் படித்துவிட்டு மிரளும் சண்டித்தனம்!.என் முன்னோர்படி,வைணவ வழி வந்தவர்கள்.குலோத்துங்க சோழன் காலத்தில்,தில்லை நடராசர் ஆலயத்தில்,கோவிந்தராஜப் பெருமாள் கூறியது சரி! என்று வாதிடுபவர்கள்.திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடக் கூடாது என்பவர்கள்!.இது வடநாட்டு ஆதிக்கம் கிடையாது.தற்போதைய பாகிஸ்தானில் உள்ள பெஷாவரை ஆண்ட சந்திரகுப்த மெளரியன் தன் கடைசிக் காலத்தை தென்னாட்டில்(தற்போதைய தமிழ்நாட்டு எல்லையிலுள்ள கர்நாடகத்தில்)தான் கழித்தான்.இது ஐரோப்பியர்களின் திருகுதாளம்.வரலாற்றை லாஜிக்காக அணுகுங்கள்,பல விஷயங்கள் உங்களுக்குப் புரியும்.மகிந்தாவும்,கருணாவும் எதிரிகளல்ல,தற்போதைய சூழலில் இந்த நகர்வு தவிர்க்க முடியாதது- பொன்சேகாவை ஒதுக்கியதே இதற்கு உதாரணம்.நான் ஏற்கனவே கூறியுள்ளேன்,பிரபாகரனும்,எல்.டி.டி.யும்.,இலங்கைத்தமிழரது ஆசை அபிலாஷைகளின் பிரதிபலிப்பு என்று.பிரபாகரன் படுத்தவுடன் ஏறி மிதிக்கும(பணத்திற்காக)ஒவ்வொரு இலங்கைத்தமிழனும் தானும் அப்படி அழிக்கப் பட வேண்டியவர்கள் என்பதை உணர்க!.ஐரோப்பியர்கள் நமக்கு எதிரியல்ல.ஆப்பிரிக்காவில் ருவாண்டாவில்,ஹுட்டு மற்றும் டுட்சி இனங்களிடையே,ஒன்று ஐரோப்பிய மரபணு கொண்ட உயர்ந்தது என்று “டார்வின் கொள்கை ஆராய்ச்சியின்படி” ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களால்,தங்கள் நலனுக்காக ஆவணப் படுத்தப் பட்டு “தலைப்பாகை கட்டப் பட்டது”- இதுதான் அந்தப் படுகொலைக்கு காரணம்.இலங்கைத் தமிழர்களே!,உங்களுடையப் போராட்டம் தமிழர்களைத்தான் படுகொலைக்கு உள்ளாகியிருக்கிறது.நீங்கள் ஏறி பயணிக்கும் வணங்காமண் கப்பல்,சென்னையைநோக்கிப் பயணித்த எம்டன்(எமன்),உங்கள் அடுத்தக் கட்ட நகர்வு அப்படிதான் இருக்கிறது.கப்பலுக்குள் சொகுசு செய்து தரப்பட்டிருக்கிறது,ஆனால் அது போடுவதோ தமிழர்களின் மீது குண்டு!.நேதாஜி பயணத்தின் கடைசி கேள்வி சரி!,அறிஞர் அண்ணாவின் திராவிட நாட்டுக்கான காரணம் சரி!,பிரபாகரன் பயணத்தின் கடைசிக் கேள்ள்வியும் சரி!,- விடைக் காணவேண்டியது தார்மீகக் கடமை!.அதற்காக நாடுகளைப் பிரிக்கக் கூறவில்லை.எல்லாவற்றையும் ஏற்கனவே கூறியாகிவிட்டது!,உணர முடியாவிட்டால் ,வாயை மூடிக் கொண்டு சும்மா இருந்தாலேயே சுகம் தரும்.

    Reply