தமிழ்க் கூட்டமைப்பின் மனமாற்றங்களை வரவேற்கிறோம் – ஈ.பி.டி.பி. அறிக்கை

“தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால செயற்பாடுகள் சில அவர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த மனமாற்றம் என்பது உண்மையானதும், நேர்மையானதுமாக இருப்பின் அவை காலங்கடந்தவையாக இருப்பினும் அதை மனந்திறந்து வரவேற்கின்றோம்” என ஈ. பி. டி. பி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எமது மக்களின் சார்பாக 22 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்பது என்பது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாகும். அதை எந்த வழிமுறையில் அவர்கள் பெற்றிருந்தாலும் தமிழ் பேசும் மக்களை இருண்ட யுகத்தினுள் இருந்து மீட்பதற்காக அதைப் பயன்படுத்தியிருந்தால் நாம் அதனை மனமகிழ்ச்சியோடு ஏற்றிருப்போம். ஆனாலும், அந்த அரசியல் பலத்தை அவர்கள் சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை என்ற மனத்துயரங்களினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நாம் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உட்படுத்தியிருந்தோம்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பான தீர்விற்காக கனிந்து வந்திருந்த ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் எமது மக்களை அவலங்களில் இருந்து மீட்டெடுக்க முடிந்த அரசியல் தந்திரோபாய திட்டங்கள் குறித்தும் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தார். ஆனாலும், அவர்களில் பலரும் அந்த நியாயமான வழிமுறைகளை ஏற்று வந்திருக்கவில்லை. இன்று அவர்கள் மனந்திருந்தி வந்திருப்பது போல் அன்றே அவ்வாறு வந்திருந்தால் எமது மக்களின் அவலங்களையும், அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்துடன் சுமுகமாக பேசி வருவதோடு எமது கட்சியாகிய ஈ. பி. டி. பி. வலியுறுத்தி வரும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களில் சிலர் மனந்திறந்து கருத்து தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது.

அதேவேளை, ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த கால அனைத்து தவறுகளையும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு வரும் பட்சத்தில் அவர்களோடு தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்காக மட்டும் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பல்லி
    பல்லி

    தோழர் அவசரபாடாதையுங்கோ கூட்டமைப்பு சிதறிய அமைப்பாய் சீர் கெட்டுபோய் இருக்கு; அதனால் அவர்களது செயல்பாடு அவர்களுக்கே
    தெரியாது; அதனால் அவர்கள் ஒரு குடையுக்குள் அல்ல ஒரே நாட்டுக்கு முதல் வரவேண்டும்; பேசவேண்டும்; அறிவிக்க வேண்டும், விலவேண்டும் இப்படி பல வேண்டும் இருப்பதால் இவர்களை நம்ப முடியாது இருப்பினும் உங்கள் பெரும் தன்மையை பாராட்டலாம் இப்போதைக்கு;

    Reply
  • Thaksan
    Thaksan

    சபாஷ். கூட்டமைப்புக்கு வைக்கிற முதல் ஆப்பு.
    ஜனநாயக வழியில் அரசியல் செய்யிறம் எண்ட பேரில் புலி காட்டின பிலிம் தான் த.தே.கூட்டமைப்பு. பதவிக்காக பணிஞ்சு போன சம்பந்தர்… உயிருக்காக குனிஞ்சு போன சுரேஸ்… நாற்காலிக்காகத் திரிந்த அடைக்கலநாதன்… இவையெல்லாரையும் சேர்த்து தங்கள் சொல்லுக்கு கட்டுப்படுற கழுதைக் கூட்டமாகவே கூட்டமைப்பை அவர்கள் ஏற்படுத்தினார்கள். இப்ப கட்டறுந்த கழுதைகளாக கூட்டமைப்பினர் ஆளுக்கொரு பக்கம் இழுத்து இடறுகிறார்கள். இதுக்க வேற சுரேஸ் காசு சம்பாதிக்கிறார்.

    Reply
  • santhanam
    santhanam

    கொள்கைக்காக கூட்டமைப்பு உருவாக்கபட்டிருந்தால் இப்பவும் மக்களிற்காக உழைத்திருப்பார்கள் புலியின் கட்டளைக்காக ஒன்று சேர்ந்தவர்கள் எப்படி ஓற்றுமையாக முடியும் சிறுபிள்ளை தமிழ்செல்வன் வழிநடாத்திய அரசியலில் இவர்கள் குளிகாய புறப்பட்ட புண்ணாக்கு அறிவு……

    Reply