புலித் தலைமையின் தனிமனித வழிபாட்டு மற்றும் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இராணுவக் கண்ணோட்ட செயற்பாட்டாலும், பிரக்ஞையற்ற மற்றும் துரோநோக்கில் சிந்திக்காத ஆனால் உணர்ச்சிபூர்வமான வழிமுறையால் மனிதர்களின் உணர்ச்சிகளை சுரண்டி, மேலும் ஆயுத அதிகாரத்தின் மூலம் விடுதலைப் போராட்ட தலைமையைக் கைப்பற்றி, இறுதியாக தம்மை நம்பிய மனிதர்களை அரசியல் அநாதைகாளாக்கிவிட்டு போராட்டத்தையும் தோல்வியுறச் செய்துவிட்டு சென்றுவிட்டனர். மேலும் பல சிறுவர்களையும் இளம் தமிழ் சமூகத்தையும் சிறிலங்கா அரசினதும் அதன் இராணுவத்தின் பிடியிலும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். இவர்கள் எல்லாம் சிறிலங்கா அரசினால் எப்படி உருவாக்கப்படுவார்கள் என்று யாருக்கு தெரியும். இதனால் இன்று தமிழ் பேசும் இலங்கை வாழ் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மனிதர்கள், தமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அல்லது தற்காலிகமாகவேனும் விடுதலைப் போராட்டம் அடக்கப்பட்ட நிலையில் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பிறரிடம் கையேந்தி நிற்கும் பரிதாப நிலை. இந்த நிலையில் இவர்கள் கேட்பதெல்லாம் தமது குடியிருப்புகளில் நிம்மதியாகவும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு பாதுகாப்பாகவும் பயமின்றி சுதந்திரமாகவும் வாழ்வதற்கான சூழலையே. இப்படி இவர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இதைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாது சிறிலங்கா அரசினால் இவர்கள் மீது (ஜனாதிபதி) தொடர்ச்சியாக தேர்தல்கள் திணிக்கப்பட்டு வருகின்றது. இத் தேர்தல் தேவையில்லாத ஒரு தேர்தலாக இருந்தபோதும் விருப்பமின்றி எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் தமது அடிப்படைத்தேவைகளுக்காக குரல் கொடுக்கவும் அரசியல் அபிலாசைகைளை அடையவும் தம்மை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் தலைமையின்றியும் தமிழ் பேசும் மனிதர்கள் வாழ்கின்றனர். இதனால் ஒருவகையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.
இலங்கையில் வாழும் மனிதர்கள் குறிப்பாக தமிழ் பேசும் மனிதர்கள் இடம் பெயர்ந்தும் இராணுவ அதிகாரத்திற்குள்ளும் மனித உரிமைகள் அற்றும் வாழும் இந்த நேரத்தில் தேர்த்ல் ஒன்று அவசியமற்றது. மனித வாழ்வைப் பற்றி அரசியல்வாதிகளுக்கு என்ன கவலை. அவர்களைப் பொறுத்தவரை பதவி அதன் காலத்தை முடிந்தவரை நீட்டிச் செல்வது. எதிர்கட்சிக்கும் பதவியைக் கைப்பற்றுவது. தேர்தல் காலம் வந்துவிட்டால் சாதாரண மனிதர்கள் மீது என்றுமில்லாத அக்கறை அரசியல் வாதிகளுக்கு வந்துவிடும். எல்லாவிதமான வாக்குறுதிகளையும் அள்ளிவீசுவர். தாம் ஏன் தேர்தலில் நிற்கின்றோம் அல்லது ஏன் குறிப்பிட்ட ஒருவரை ஆதரிக்கின்றோம் என்பதற்கான தமது தர்க்கநியாயங்களை (அது மிக அநியாயமான நியாயங்களாக இருந்தபோதும்) முன்வைப்பர். அதற்காக உறுதியுடன் வாதிடுவர். இந்த அரசியல்வாதிகளால் எப்படி இப்படி மாறிமாறி முன்னுக்குப்பின் முரணாக கதைக்க முடிகின்றது என்பது எனக்குள் எப்பொழுதும் இருக்கின்ற ஒரு பெரிய கேள்வி. இந்த போக்குக்கு தமிழ் சிங்களம் பால் சாதி என்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்துபிரிவு அரசியல்வாதிகளும் ஒரே போக்குடையவர்களே. ஒரே குட்டையில் உறியவர்கள்.
தேர்தல் களத்திலோ குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில், பிரதானமாக தேர்தலில் எந்த சிங்கள பேரினவாத தலைவரை தெரிவு செய்வது என்பது தொடர்பான விவாதமே நடைபெறுகின்றது. சிலர் மகிந்தவை பலப்படுத்துவதே நமது (தமிழ் பேசும் மனிதர்களின்) தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவியாக இருக்கும் எனக் கூறி ஏற்கனவே ஆதரவு வழங்கியுள்ளனர். மகிந்த புலிகளை தோற்கடித்தமை இவர்களது நன்றிக் கடனுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். வேறுசிலரோ இன்னும் ஒருபடி மேல் சென்று பொன்சேகாவை உப்புச்சப்பில்லாத காரணங்களுக்காக ஆதரிக்கின்றனர். இதன்மூலம் ஒரு இராணுவ தலைவரின் ஆட்சியை இலங்கையில் முதன்முறையாக ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்கின்றனர் என்ற உண்மையை உணர மறுக்கின்றனர். இதுவரை புலிகளின் தலைமையின் வழிகாட்டலில் செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதன் முதலாக தமது சொந்த புத்தியில் முடிவெடுக்கவுள்ளனர். இவர்களது முடிவும் இரண்டு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பது அல்லது தனித்து தாமும் போட்டியிடுவது என்பதாகவே இருக்கின்றது. எந்த ஒரு தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் பேசும் மனிதர்களின் இன்றைய யதார்த்தத்தையோ அல்லது அவர்களது அரசியல் அபிலாசைகளை எதிர்காலத்திலாவது அடைவதற்கு ஏற்றவாறான அரசியல் முடிவுகளை எடுப்பதாக தெரியவில்லை.
இலங்கை சுந்ந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்றுவரை ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் வாக்குறுதிகளை நம்பி இரண்டில் ஒரு கட்சிக்கே மாறி மாறி தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தலைமைகளுட் ஆதரவு செய்து வருகின்றனர். இதற்கான காரணம் இவர்களது சிந்தனை மற்றும் வர்க்கம் சார்ந்ததாகவே இருக்கின்றது என்பதை யாரும் புரிந்துகொள்ளலாம். இன்றும் சிறிலங்காவின பிரதான கட்சிகள் இரண்டின் தலைவர்களும் தமிழ் பேசும் மனிதர்களுக்கு பிச்சை கொடுப்போம் என வழங்கிய உறுதி மொழிக்காக சில தமிழ் தலைவர்கள் தமது ஆதரவை வழங்குகின்றனர். தேர்தலின் பின் அந்த பிச்சையைக் கூட வழங்காதுவிடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது நாம் கடந்தகால அனுபவத்தில் இருந்து கற்றது. ஆனால் இது தமிழ் தலைவர்களுக்கு இன்னும் புரியமால் இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது. ஏன் தமிழ் பேசும் தலைமைகள் புதிதாக சிந்திக்க மறுக்கின்றனர்.
மனிதர்கள் எந்த இழி நிலையில் வாழ்ந்தபோதும் ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தீர்மானிக்கும் திணிக்கும் அரசியலில் தவிர்க்க முடியாதவாறு பங்குபற்ற வேண்டிய சூழல். நிர்ப்பந்தம். ஆரசியல் வாதிகளின் வாக்குறிதிகளை நம்பியும் ஊடகங்களின் பக்கச் சார்பான செய்திகளின் அடிப்படையிலும் மற்றும் ஆயுதபாணிகளின் மிரட்டலினாலும் தம்முள் குடியிருக்கும் பயத்தினாலும் போட்டிபோடுகின்றவர்களில் மோசமானவர்களில் அதாவது கெட்டவர்களில் நல்லவர்களை தேடுவர். ஓப்பிட்டளவில் நல்லவர்கள். அல்லது யார் குறைந்த கெட்டவர் என்று கணிப்பிட்டு தம் வாக்கையளிப்பர். இவ்வாறான முடிவுக்கு வருவதற்கு மேற்குறிப்பிட்டவாறு பல காரணிகள் இவர்களை நிர்ப்பந்திக்கின்றன. மறுபுறம் இந்த ஐனநாயக தேர்தல்கள் சிறுபான்மைக்கு எதிரானதாகவே என்றும் இருக்கின்றது. ஒப்பிட்டளவில் பிற அரசியல் அணுகுமுறைகளைவிட ஜனநாயக முறைமை நல்லதாக இருந்தபோதும் நியாயமானதாக இல்லை. ஏனனில் தேர்தல் வெற்றியின் பின் தோற்கடிக்கப்பட்ட சிறுபான்மையின் குரல்கள் ஏதோ ஒருவகையில் நசுக்கப்படுகின்றன. இருந்தபோதும் சிறுபான்மைக் குரல்களுக்கு தம்மை நியாயமாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய சிறந்த ஒரு முறைமை கண்டுபிடிக்கும்வரை இந்த தேர்தல்களில் பங்குபற்றுவதை தவிரவேறு வழிஇல்லை.
இந்தடிப்படையில் நீண்ட காலம் தமது பல உறவுகளின் உயிர்களை இழந்து தமது சுயநிர்ணைய உரிமைக்காக போராடிய தமிழ் பேசும் மனிதர்களுக்கு இந்த தேர்தல் முக்கியமானது. அரசியல் தலைமையற்ற தமிழ் பேசும் மனிதர்கள் குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமது அரசியல் செய்தியை உறுதியாக வெளியுலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய சூழலில் வாழ்கின்றனர். ஏனனில் இம் மனிதர்களை நீண்டகாலமாக எந்த ஒரு அரசியல் தலைமையும் உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சந்தர்ப்பவாத அரசியல்வதிகளும் ஆயுதம் தாங்கிய போராளிக் குழுக்களுமே அதன் தலைமையுமே தமிழ்பேசும் மனிதர்களை பிரதிநிதித்துவப்படுத்தின. உண்மையான அரசியல் தலைமையற்ற அநாதைகளாகவே தமிழ் பேசும் மனிதர்கள் நீண்டகாலமாக வாழ்கின்றனர். அந்தடிப்படையில் இன்றைய தேர்தல் முக்கியமானது.
ஆயுதப் போராட்டம் தற்காலிகமாகவேனும் தோற்கடிக்கப்பட்டதால் (இனியும் ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டாம்) இனிவரும் காலங்களில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது ஐனநாயகபூர்வமான அரசியல் செயற்பாடுகளுடனையே தமது உரிமைகளுக்காக போராட வேண்டியுள்ளது. தேசங்கள் என்பது கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் வடிவம். இதனடிப்படையில் இலங்கையில் இனமுரண்பாடும் இன ஒடுக்குமுறையும் இருக்கின்றது என்பதுடன் ஒரு தேசம் இன்னுமொரு தேசத்தை ஆக்கிரமித்துமுள்ளது என்பதில் நியாயமாக சிந்திக்கின்ற எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இன்றைய தேர்தல் சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் மீது திணித்திருக்கும் ஒரு தேர்தல். இதில் தமிழ் பேசும் மனிதர்கள் தமது பிரதிநிதியாக ஐனாதிபதிபதிவிக்கு ஒருவரை போட்டிக்கு நிறுத்துவதில் அர்த்தமில்லை. மாறாக சிங்கள தேசத்தின் எந்த பிரதிநிதியுடன் நாம் சேர்ந்து வேலைசெய்தால் தமது அரசியல் அபிலாசைகளை சாதாரண சிங்கள மனிதர்களுக்கும் வெளி உலகுக்கும் புரியவைக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே முக்கியமானது. ஏனனில் பெண்ணியவாதிகள் குறிப்பிடுவதுபோல் துரதிர்ஸ்டவசமாக அடக்கப்பட்ட மனிதர்கள் தம்மை அடக்கும் மனிதர்களுக்கு மீள மீள தம்மீதான அவர்களது அடக்குமுறையை புரியவைக்க வேண்டி நிலையிலையே தொடர்ந்தும் உள்ளனர். இவ்வாறு செய்வதற்கு எந்த சிங்கள தலைமைகளுடன் கூட்டு வைக்கலாம் என்பது பற்றி சிந்திப்பதே நல்லது.
சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிகளையும் அவர்களது வாக்குறுதகளையும் இதுவரை நம்பியது போதும். இன்று அவர்கள் தருவதாக கூறும் பிச்சையும் தமிழ்பேசும் மனிதர்களுக்குத் தேவையில்லை. மேலும் இன்று தமிழ் அரசன் எல்லாளனை (பிரபாகரனை) தோற்கடித்த சிங்கள அரசனான துட்டகைமுனுவாக வலம் வரும் கருதப்படும் மகிந்தவே (சரத் அல்ல) இத் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது சந்தேகமில்லை. தமிழ் பேசும் மனிதர்களின் பிரச்சனை தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதல்ல. மாறாக நமது அடிப்படைய உரிமைகளை யார் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதே. தமிழ் பேசும் மனிதர்கள் கேட்பதெல்லாம் தமது அடிப்படை உரிமையையே. அதாவது சுயநிர்ணைய உரிமையையே. இதுவே தமிழ் பேசும் மனிதர்களை சுதந்திரமானவர்களாகவும் ஜனநாயக உரிமைகளுடனும் வாழ வழிவகுக்கும். இந்தக கோரிக்கைகளை எந்தக் கட்சி ஏற்கின்றதோ அவர்களையே தமிழ் பேசும் மனிதர்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் தமிழ் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். இவ்வாறனா ஒரு கட்சி சிறிலங்காவில் இருக்கின்றது என்றால் அது விக்கிரமபாகுவின் தலைமையில் செயற்படும் நவசமசமாஜக் கட்சி மட்டுமே. இவர்கள் மட்டுமே தமிழ் பேசும் மனிதர்கள் அவர்களை தேர்தல் காலங்களில் கணக்கெடுக்காமல் தூக்கி ஏறிந்தபோதும் தமிழ் பேசும் மனிதர்களின் அடிப்படை உரிமைக்காகவும் சுயநிர்ணைய உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளனர். தமிழ் பேசும் மனிதர்கள் பல தேர்தல்களில் தம்மை பல தடவைகள் நிராகரித்தார்கள் என்பதற்காக பிற கட்சிகளைபோல் (ஏன் தமிழ் பேசும் மனிதர்களுக்காக போராடிய இயக்கங்களைப் போல் கூட) தமது கொள்கைளை காவுகொடுக்காமால் தொடர்ந்தும் உறுதியாக முன்னெடுத்துச் செல்கின்றனர். சிங்களம் பேசும் மனிதர்கள் மத்தியில் அதற்காக உறுதியுடன் குரல் கொடுக்கின்றனர். வாக்குகளைப் பெறுவதற்காக கொள்கைகளை மாற்றி அரசியல் சமரசமோ வியாபாரமோ இதுவரை செய்யவில்லை. ஆகவே தமிழ் பேசும் மனிதர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்காது அவர்களை அரசியலில் சம அந்தஸ்துள்ளவர்களாக மதிக்கும் அதற்காக குரல் கொடுக்கும் விக்கிரமபாகுவிற்கு தமிழ் பேசும் மனிதர்கள் வாக்களிப்பதே பொருத்தமானது. அவ்வாறு இவர்களுக்கு வாக்களிக்காது விடுவது தமது எதிர்கால அரசியல் அபிலாசைகளை மட்டுமல்ல இன்றைய சூழலில் தமது அரசியல் நிலைப்பாட்டையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்த முடியாத நிலைக்கு இட்டுச் செல்லும்.
தமிழ் பேசும் மனிதர்களே இதுவரை சிங்கள மனிதர்களை இனவாதிகளாக முட்டாள்களாக மட்டும் பார்த்தது போதும். சிங்கள மனிதர்களிலும் முற்போக்கானவர்கள் உள்ளனர் என்பதை புரிந்துகொள்வதுடன் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். தமிழ் பேசும் மனிதர்களைவிட தேசிய இனப் பிரச்சனையையும் யுத்தத்தையும் ஆழமாகவும் விரிவாகவும் பார்க்கும் பல சிங்களம் பேசும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழர்களுக்கு வியப்பானதாக இருக்கலாம். ஆனால் அது உண்மையானது என்பதை அவர்களுடன் கூட்டாக வேலை செய்யும் பொழுது புரிந்துகொள்ளலாம். இவர்களது முற்போக்கான விரிவான சிந்தனைகளுக்கு அவர்களது எழுத்துக்களும் திரைப்படங்களும் சாட்சிகளாக உள்ளன. புல விடயங்களில் தமிழ் பேசும் மனிதர்களைவிட ஆழமாகவே சிந்திக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாதது. ஏப்படி இன்றைய தமிழ் அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பேசும் மனிதர்களை மதிப்பீடு செய்ய முடியாதோ அதேபோல் சிங்களம் பேசும் மனிதர்களையும் இன்றைய சிங்கள அரசியல்வாதிகளைக் கொண்டு மதிப்பீடு செய்யமுடியாது என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வது சிறந்தது. ஆகவே தமிழ் பேசும் மனிதர்களே சிங்களம் பேசும் மனிதர்களை எதிரிகளாக பார்த்ததுபோதும். இனி அவர்களை ஆகக் குறைந்தது சிங்கள முற்போக்கான மனிதர்களையாவது நட்புடன் பார்ப்போம். சிங்கள முற்போக்காளர்களுடன் கூட்டுவைப்போம். தமிழ் குறுந்தேசியவாத மற்றும் சிங்கள பேரினவாத சக்திகளைப் புறக்கணிப்போம். இவ்வாறன ஒரு கூட்டுச் செயற்பாடே அடக்கப்படும் தமிழ் பேசும் மனிதர்கள் மட்டுமல்ல சுரண்டப்படும் தமிழ் சிங்கள தொழிலாளர்களும், அடக்கி ஒடுக்கப்படும் பெண்களும், இருபால் உறவுக்கு அப்பாற்பட்ட மனிதர்களுக்கும், மற்றும் அடக்கப்படும் பால்களுக்கும், குழந்தைகளுக்கும் சாதிகளுக்கும் நன்மையளிக்கும். இவர்களின் விடுதலைக்கான சுதந்திரத்திற்கான ஆரோக்கியமான பாதைகளாக அமையும்.
இதனுடன் உடன்படாதவர்கள் இவ்வாறான இக்கட்டான சூழலில் இவ்வாறன ஒன்றுக்கு ஆதரவளித்து தொடர்ந்தும் எவ்வாறு ஆரோக்கியமாக செயற்படலாம் என்பது பற்றி சிந்திப்பதே நல்லது. இன்றைய உலகமயமாக்களில் தமிழ் பேசும் மனிதர்கள் பிற மனிதக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததும் முற்போக்கானதுமாகும். இதற்கு தமிழ் பேசும் மனிதர்கள் பரந்துவாழ்வதும் ஒரு சாதகமான அம்சம். இதற்கான எனது முன்மொழிவு பின்வருமாறு. இன்று புலம் பெயர் புலி ஆதரவு தலைமைகளினால் மேலிருந்து திணிக்கப்படும் நாடுகடந்த அரசிற்கான கோரிக்கையை தமிழ் பேசும் மனிதர்களிடம் திணிக்கப்படும் முறைமையை நிராகரிப்பது. எந்த ஒரு அமைப்பும் அடிப்படையிலிருந்தே அதாவது கீழிருந்தே கட்டமைக்கப்பட்டு வரவேண்டும். மேலிருந்து திணிக்கப்டும் புலிகளின் குறுந்தேசியவாத இராணுவக் கண்ணோட்ட அரசியல் தமிழ் பேசும் மனிதர்கள் மீது திணிக்கப்பட்டதனாலையே ஒரு நியாயமான விடுதலைப் போராட்டம் இன்று தோல்வி கண்டுள்ளது. அல்லது அடக்கப்பட்டுள்ளது என்பதை என்றும் மறக்காமல் நினைவிலிருத்திக் கொள்வது அனைவருக்கும் நன்மையானது. ஆகவே கீழிருந்து எவ்வாறு ஒரு அமைப்பைக் கட்டுவது என்பது தொடர்பாக சிந்திப்பதே இன்றைய தேவை.
ஒவ்வொரு மனிதரதும் அடிப்படைக் கோரிக்கை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொண்டு தமது இடத்தில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக அரசியல் உரிமைகளுடன் வாழ்வதே. இதேவேளை இயற்கையையும் சுற்றுசூழலையும் பாதுகாப்பது அல்லது இனிவரும் காலங்களில் மனித வாழ்வே கேள்விக்குரியதாகிவிடும். ஆகவே தமிழ் மதம் சாதி பிரதேசம் தேசம் நாடு என்பவற்றுக்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு அரசியல் கட்சியை அல்லது ஒரு அமைப்பை கட்டமைப்பதுதான். இந்த அமைப்பானது “மனித நல மேம்பாட்டுக்கும் மற்றும் சுற்று சூழலை பாதுகாப்பதற்குமான கட்சி அல்லது அமைப்பு” என்ற அடிப்படையில் ஒரு பொதுவான பெயரை கொண்டு அனைத்து நாடுகளிலும் இயங்க வேண்டும். உலகில் பன்முக அடக்கு முறைகளை எதிர்கொள்ளும் சகல மனிதர்களுடனும் அடிப்படை கோரிக்கைகளுடன் உடன்பட்டு கூட்டுச் சேருவதுடன் எல்லா அடக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதாக இனிவரும் செயற்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறன ஒரு விரிந்த பார்வையும் பன்முகச் செயற்பாடுமே இனிவரும் காலங்களில் ஆரோக்கியமான ஒரு அரசியல் செயற்பாடாக அமையும். இது தொடர்பாக தொடர்ந்தும் உரையாடுவோம்.
இதற்கு முதல் படியாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்…
முற்போக்காளர்களின் பிரதிநிதியான தமிழரின் அடிப்படை உரிமைகளுக்காகவும் சுயநிர்ணைய உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிப்பது.
இதன்மூலம் சிங்கள முற்போக்காளர்களுடன் கைகோர்த்து செயற்பாடுவதற்கான செய்தியை தெரிவிப்பதுடன்.
தமிழ் பேசும் மனிதர்களின் சுயநிர்ணைய உரிமைக்கான குரல் மீண்டும் உறுதியாக ஒலிக்கச் செய்வது.
உரிமைகளக்காக போராட ஆயுதவழி இல்லாத ஆரோக்கியமான வழிகளைக் கண்டுபிடிப்பது, சிந்திப்பது…
Anonymous
நீண்ட காலமாக தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய ஒரு சிங்கள தலைவர் என்கிற வகையில் விக்ரமபாகு அவர்களை ஆதரிப்பது தமிழரின் நன்றிக்கடன் மட்டுமல்ல,ஒரு கொலையனையும்,கொலைவெறியனையும் தமிழ் மக்கள் நிராகரிப்பதாகவும் இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியப்படுமா? ஏனெனில் இப்போது நம்மிடம் இருப்பவர்கள் குனியவும் கும்பிடவும் தெரிந்தவர்கள் மட்டுந்தான்.
jalpani
விக்கிரமபாகுவை ஆதரியுங்கள் என கோர தமிழ் மக்களிடையே முதுகெலும்பு உடையவர்கள் இல்லை.
மாயா
விக்கிரமபாகுவின் சிந்தனை நல்லதுதான். இருந்தாலும் ஓடாத ஒரு குதிரைக்காக பணத்தை கட்டி , எந்த தமிழருக்காவது ஏதாவது விமோசனம் கிடைக்குமா? இதற்கு காலம் வரும். அதுவரை முடிவை வேறு விதமாக எடுத்தே ஆகவேண்டும். அதற்காக இராணுவ தளபதியை அதிபராக்கி , நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள ரெடியாகாதீர்கள்?
உண்மைகளை உணர, நாம் வழி காட்ட வேண்டியதில்லை. இன்னும் சித்த சுவாதீனமற்றவர்களாக யாரும் இல்லையே?
DEMOCRACY
“இந்த யுனிவர்சிட்டி குறுந்தாடி இடதுசாரி சிந்தனை” பழைய கள்தான்!. ஆனால் சிந்தனை பாசிட்டிவானது!. லங்கா சமசமாஜ கட்சி ஏன் “சிங்களம் மட்டும் சட்டத்தை” ஏன் ஆதரித்தார்கள் என்று புரிந்துக் கொண்டால் தவறு எங்கிருக்கிறது என்று தெரியும். நவ சமசமாஜ கட்சி, அதே தேசிய உண்ர்வுடன் (பாசிட்டிவ்)சுயநிர்ணய உரிமையை ஆதரித்தால், பிரபாகரன் வங்கிக் கொடுக்காததை கருணாரட்ணா வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று துளிரவிடலாமா?!. இலங்கைத் தமிழ் பேசும் மனிதர்களே!, உங்களை அறியாமல் ஒரு வட்டத்திற்குள்ளேயே பிடிவாதமாக நிற்கிறீர்கள்!. அந்தவட்டம் முப்பது வருட போராட்டத்தில் மேலும் சுருங்கியிருக்கிறது. உங்கள் கருத்துக்கள், “உடல்மொழி (ஃபாடி லாங்குவேஜ்)எல்லாமே இந்த வட்டத்தையே பிரதிபலிக்கிறது. மேடையிருந்தவரை(தமிழ்) தேவடியா ஆட்டம் ஆடலாம், கலைஞர் கருணாநிதி செய்ததுபோல், சுவர்(தமிழ்) இருந்தவரை சித்திரம் எழுதலாம். அது இந்தப் போராட்டத்திற்கு பிறகு இல்லை. தமிழ் பேசும் மனிதர்களில் இலங்கையர்கள் ஐந்து சதவிகிதமே! அப்படியிருந்தும் தமிழ் மேடை இல்லை!. எஞ்சியவர்களுக்கு ,விரும்பியோ விரும்பாமலேயோ, இருப்பது இந்திய மேடையே!. கூத்தாடி, கூத்தாடி போட்டுடைச்சாச்சு!. இதை உணர்க, சிதறிய நெல்மணிகளை சிறிதளவேனும் சேகரிக்க, பசியாவது ஆறும். கருணாரட்ணா நல்லவர் என்பதைவிட, அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க!.
VS
Finally, the inevitable happened. On 6 October 2008, Janaka, his wife and a host of others were blasted into smithereens at the opening of the UNP office in Anuradhapura. Strangely, again Ranil was absent at the moment of mayhem and escaped as usual. On this occasion, fingers were pointed even at the government, in the state of sheer madness triggered by the inability to even guess who was behind the heinous crime.
The stage is now firmly set for Sarath Fonseka, widely sung supreme war hero of our time. As the Tigers are now generally regarded as a spent force, if and when the predictable happens to Fonseka, most gullible people (that is the majority of Sri Lankans) would believe that it was engineered by Mahinda’s government. Fonseka’s whinging about reducing his protective guard would give much credence to such a belief. No amount of explanation would erase the inevitable damage to the reputation of Mahinda et al.
If the Rajapakses are as astute as seen more often than not, they would provide top notch protection to Fonseka and even rein in their mangy dogs who have snarled at him in the recent past. The belief that Fonseka is safe because the Tiger suicide cadres are almost wiped out is misplaced. We must realize that not only there are remnant Tamil terrorist cadres in the country, but that Fonseka could be taken out by mere contract killers. It is well known that both these groups are symbiotically linked to the enemies of the current government.
As for Fonseka, who is in a perpetual ego trip, no advice may work. However, at least in a fleeting sane moment – if such moments exist – it would be healthy for him to think about the villain who was behind all the assassinations of the past soldier heroes. After all, Sri Lankans want Sarath the war hero to live, not die in vain and ignominiously like Janaka.
The scoundrel responsible for the deaths of the great soldiers is also responsible for the assassinations of his own party leaders so that he could rise up the ladder, one rung at a time (one rung up and two rungs down). A born loser, one of the most despicable characters in Sri Lanka’s political history, he is the one who conferred with the Tigers and contrived the demise of Lalith Athulathmudali, Ranasinghe Premadasa and Gamini Disanayake.
Unless he wakes up from his dream soon, General Fonseka would never see the day of the election, he is only a disposable pawn in the villain’s power game.
BC
//மாயா- விக்கிரமபாகுவின் சிந்தனை நல்லதுதான்.//
வெளிநாடுகள் புலியை தடை செய்த போது புலிகள் மீதான தடையை நீக்கி புலிகள் தொடர்ந்தும் மக்களுக்கு சமாதான சேவைகள் செய்ய அனுமதிக்கும்படி வேண்டுகோள் விட்டாரே அந்த சிந்தனையும் தான்.
VS
From Fulgencio Battista in Cuba to Augusto Pinochet in Chile all those who were propped up in power over their people in Nicaragua, the Dominican Republic, Venezuela, Bolivia and Argentina too, were dictators, almost all of whom waged into politics in military uniform. There were other such people seen in Africa such as Idi Amin, and in the Middle East, too.
President who has been elected by popular mandate in a free and fair election, and who is seeking a fresh mandate, before his first term is over,.
In the coming election, President Mahinda Rajapaksa is seeking a second term on the basis of what he has achieved for the country in the four years of his first elected term of six years. The highlights of it are the defeat of the LTTE’s terrorism under his watch as Head of State.
He is also placing before the country the record of development in the past four years, which far exceeds what any government since independence had carried out in such a short period, or even in much extended terms as the UNP’s 17 years from 1977 to 1994, and the UPFA led by Chandrika Kumaratunga did from 1994 to 2005.
Jumbo shove
As the a section of the UNP, with strange allies such as Mangala Samaraweera, and Chandrika Kumaratunga too, in what seems to be an impossible campaign to get Sarath Fonseka elected President, the vast majority of traditional UNP voters are in a quandary as to what has become of their own party. After more than 60 years in politics it has failed to field its own candidate.
Its leader is so unpopular that he fears running for election, as does the party fear to field him. But what is even worse is that the UNP has had to abandon out its own cherished symbol of the elephant, as well as its, colour green, to serve the interests of Fonseka who believes that he can float into office on wings of a swan.
Sarath Fonseka choosing the swan as his election symbol is indeed prophetic. Legend has it that the song of the swan heralds its impending demise. The non-superstitious would call it mere coincidence and others may argue that Fonseka’s is crowing and whinging, not singing, but the quirk is weird, indeed.
It will be interesting to see what more the UNP will be ready to shed, as it gets closer to the JVP; and also how the JVP will explain to the people and its own cadres how they can be in such a tight political embrace with the UNP. But such is the politics of opportunism, especially in a situation of desperation, when forces repeatedly discarded by the people at the polls, have to seek the shelter of a discarded uniform and faded brass to come before the people, with a plethora of promises that are self-contradictory in their essence.
Kulan
மாயா நான் உங்கள் கருத்துடன் ஒத்துப்போனாலும் கூட நாம் பலவிடயங்களை ஆழமாக மட்டுமல்ல அகலமாகவும் பார்க்க வேண்டியுள்ளது. மகிந்தவையோ காக்கிபோயையோ (சரத்) தமிழ்மக்களால் ஆதரிக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மை. விழுந்த இரத்தம் காயவில்லை. ஒடியகண்ணீர் ஆறவில்லை. எமது அடுத்த தெரிவு சம்பந்தரா? விக்கிரமபாகுவா? என்ற நிலைவரும் போது இருவரும் புலிகளை வேறு வழியின்றி ஆதரித்தவர்கள் தான். விக்கிரமாபாகு தான் கொண்ட கொள்கையில் நின்று சிறுபான்மை இனத்தைப் பார்த்ததனால் ஆதரித்தார். இதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அவர் தமிழர்வாழும் பகுதியில் வாழவில்லை வரவுமில்லை. இப்படி இருந்தும் கூட சிறுபான்மையான தமிழர்களுக்குள்ள பிரச்சனைகளை உணர்ந்தார். நன்றிக்கடனுக்காக மட்டுமல்ல கொள்கைக்கடனுமுள்ளது. சம்பந்தரோ கிழக்கைச் சேர்ந்தவர். இவர் ஒருவர் மட்டும் தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்கக் கூடிய ஒருவராக இருக்கிறார். இவர் நிலையில் இருந்த யோசப்பை போட்டு விட்டார்கள். பிள்ளையாளோ அன்றி கருணாவோ ஒற்றுமை முற்போக்கு அடிமட்டமக்களின் பிரச்னைகள் என்பனவற்றை எண்ணிப்பார்க்கவே முடியாதவர்கள். சம்பந்தரோ புலிகள் மக்களுக்கு பிழைவிடுகிறார்கள் என்பதை தெட்டத்தெழிவாகத் தெரிந்தம் ஆதரித்தவர். இவரை விக்கிரமபாகுவுடன் ஒப்பிட இயலாது. தமிழர்கள் அவர்களில் எவரை ஆதரித்தாலும் கட்டுப்பணம் இழப்பவர்களாக இருந்தாலும் நாம் சொல்லவரும் செய்தியை இவர்களை வைத்துத்தான் சொல்ல முடியும். என்கணிப்பில் சர்வதேசம் என்பது அழகுபடுத்தலுக்காகச் சொல்லும் ஒரு வார்த்தையே.
இன்று நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பிராந்திய வல்லரசுகளின் ஆர்வத்தை மட்டுமே. இதுபற்றியும் எனக்கு ஒரு கட்டுரை எழுத விருப்பம் தான் நேரம் தேசத்தில் இடம் போன்றவை கேள்விக்குறிகளாக இருக்கின்றன: மாயா சொல்வது போல் இவர்கள் இருவரும் ஓடாத குதிரைகள் தான் ஆனால் சேறு சகதியினுள் கிடப்பதை விட ஏறியிருந்து சிறிது உயரத்தில் இருந்து எமக்கு எட்டியவரை பார்த்து எமது குரல்களைக் கொடுக்கலாம் என்பது என்சிற்ரறிவு. எமது சகல அரசியல்வாதிகள் புலிகள் அனைவருமே தம்சுயலாபங்களுக்காகத் தமிழர்களை விற்றவர்கள் என்பதை யாரும் மறக்க இயலாது. சிங்கள அரசியல்வாதிகள் முற்போக்காளர்கள் பலர் திறந்த மனதுடன் பலர் இருந்தனர். இன்று சிலராகக் குறுகியுள்ளனர். எமக்கு சிங்கள மக்களுடன் சேர்ந்து தமிழ்மக்களுக்காகச் செய்யவேண்டியன பல உண்டு. நாம் சிங்கள முற்போக்கு வாதிகளுடன் இணைந்து எமது கருந்துகளைச் சொல்ல வெல்லத் தயாராக இருக்கிறோம் என்ற சமிஞ்ஞையை நாம் காட்டுவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக நாம் காட்டலாமல்லவா? என்பின்நோட்டப்படி நான் இவருக்குத்தான் வாக்குகளைப் போடுங்கள் என்று சொல்லவில்லை. சிந்தனைக்கு சிறு துண்டுதநதேன் அவ்வளவுதான்.
தமிழர் தமிழர் என்று நின்று நாம் இழந்தது பல. மனிதர் மனிதர் என்று நின்றிருந்தால் அனேகம் வேற்றிருக்கலாம். மனிதன் மாறக்கூடியவன் மாற்றலாம் என்று நம்பிக்கை உண்டு. சிங்களவனும் மாறுவான். நாம் இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்க்கையில் காணாத இனத்தவர்களுடன் சேர்ந்து வாழ்வதுடன் வேலையும் செய்கிறோமே. எப்படி? நாம் என்றும் அழுத அழுதுதான் பேரம் பேசினோமே தவிர எமது அறிவியல் பொருளாதார இயக்கவியல் பலங்களை வளர்த்துக் கொள்ளவுமில்லை அதனூடாக வெல்ல முயலவுமில்லை. நாம் குடம்பியாக இருந்து பலப்பட்டு சிந்திக்க வேண்டிய காலமிது. காரணம் சூனியவாழ்விற்குள் எம்மக்களைச் சுற்றிவிட்டுப் போய்விட்டனர் புலிகள்.