மத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பொலீஸ் நிலையங்களை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரெத்ன தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் மத்திய மாகாணத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிவதோடு, சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தப் பொலீஸ் நிலையங்கள் தம்புள்ள, சீகிரிய மற்றும் கண்டலம ஆகிய பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன. இதேவேளை நாட்டின் சட்டவிதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக இந்தப் பொலீஸ் நிலையங்களின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.