கிழக்கு ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் நாட்டு மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு மீட்டெடுத்துள்ளனர்.
மியன்மார் மீனவர்கள் 12 பேர் சென்றுகொண்டிருந்த இரண்டு படகுகளும் ஆழ்கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான நிலையில் இலங்கை கிழக்கு கடற்பரப்பிலிருந்து 300 மீற்றர் ஆழ்கடலை நோக்கி வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இங்கு தத்தளித்துக் கொண்டிருந்த நிலையிலேயே கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு இவர்களை மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் அதுல செனரத் தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட 12 மீனவர்களும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.