ஆரம்ப காலங்களில் இருந்து நடந்தது என்னவென்றால் எமது மக்களுக்காக போராட புறப்பட்ட எல்லோரும் நாம் எதைநோக்கி புறப்பட்டோம் என்பதற்கு கொடுத்த நேரத்தைவிட உட்கட்சிப் போராட்டத்திற்கு கொடுத்த நேரம் அதிகம். இது அமிர் – இராசதுரை, உமா – பிரபா, உமா –மாணிக்கதாசன், ரட்ணா – சங்கர்ராஜி, வரதர் – டக்ளஸ், பொபி – தாஸ், பிரபா – கருணா, கருணா – பிள்ளையான், சம்பந்தர் – சங்கரி, உருத்திரகுமார் – நெடியவன் இப்படியே நீண்டு செல்கிறது.
இவர்கள்தான் இப்படியென்றால் இவர்கள் கட்சிகள் அதையும்மீறி TELO – சிறீTELO, EROS – EROS (பிரபா), EPRLF – EPRLF(நாபா) எனப் பிரிந்துள்ளது. இது EPRLF(நா), EPRLF(பா) என்று முடிந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. கொஞ்சம் நிறுத்துங்கள்.
தீர்வுவை தீர்வுவை இல்லாட்டி வோட்டு போட மாட்டோம் என்று 50 வருடமாக தீர்வு கேட்கிறோம் அவர்களும் தாற மாதிரித் தெரியவில்லை. நாங்களும் விட்டமாதிரித் தெரியவில்லை. தந்தை செல்வா தொடங்கி தனயன் பல்லி வரை தீர்வு கேட்கிறோம் என்னய்யா தீர்வு.. வட்டுக்கோட்டையா? ஈழமா? தமிழ்ஈழமா? நாடுகடந்த தமிழ் ஈழமா? தேசியமா? சுயநிர்ணய உரிமையா?……
இப்போது 50 வருடம் கழித்து இவ்வளவு உயிர்களையும் சொத்துக்களையும் பறிகொடுத்தபின் ஆரம்பித்த வட்டுக்கோட்டைக்கே வந்து நிற்கிறோம். வெட்கமாக இல்லையா? நோர்வேயில் வோட்டுப் போட்டால் நீர்வேலியில் வாழை குலை போடாது.
உண்மையான தீர்வு வந்த நேரத்தை நழுவ விட்டுவிட்டு இப்ப ‘தீர்வுவை தீர்வுவை. இல்லாட்டி வோட்டு போடமாட்டம்’ என்றால் எந்த பிரயோசனமும் இல்லை. ஒரு பெரிய நாட்டின் மத்தியஸ்தத்தோடு இலங்கை – இந்திய ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையையும் தமிழ்த் தாயகமாக இணைத்து அதிகார பரவாலாக்கல் மூலம் என்று தீர்வு வந்ததே அதை கோட்டை விட்டுவிட்டு இப்ப வடக்கையும் கிழக்கையும் பிரித்து வைத்துக்கொண்டு ‘தீர்வுவை’ என்றால் என்ன நிலை.
சங்கரியார் மாதிரி கடிதம் எழுதி எழுதியா தீர்வு காணப்போகிறோம். இலங்கையில் இப்போது ஒரு காந்தியோ ஒரு நெல்சன் மண்டேலாவையோ ஒரு பிடல் கஸ்ரோவையோ தேடி கண்டுபிடிக்க முடியாது. கொஞ்சமாவது அப்படி இருந்தவர்களையும் தொலைச்சுப்போட்டு நிற்கிறோம். அப்படியாயின் இப்போது இருக்கிற பேய்க்குள்ளே கொஞ்சம் நல்ல பேயை கண்டுபிடிச்சு அவங்கள் மூலமாக (நல்ல பேய்கள் கூட்டு சேர்ந்தாலும் நல்லது.) அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப் பரவலாக்கல் மூலம் எமது மக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை முதலில் செய்வோம். இதைவிட்டுவிட்டு அமெரிக்காவும் இந்தியாவும் எங்களோடை விளையாடுகின்றது என்று அதற்கு ஆராய்ச்சிக் கட்டுரை வேற எழுதுவானேன்.
ஏன் அமெரிக்காவும் இந்தியாவும் சீனாவோடும் சிங்கப்பூரோடும் விளையாடுகிறாங்கள் இல்லை. இருக்கிற நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்களும் ஒழுங்காக இருப்பாங்கள் தானே. முதலில் நாங்கள் தமிழர்கள் தான் எங்கள் நாடு இலங்கை என்பதை ஒத்துக்கொள்வோம்.
நாங்கள் முன்புவிட்ட பிழையே இதுதான். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ‘மட்ச்’ நடந்தால் நாம் இந்தியாவின் பக்கம் எனென்றால் அவன் சிங்களவன். இந்தியாவுக்கும் தென்ஆபிரிக்காவிற்கும் ‘மட்ச்’ நடந்தால் நாங்கள் தென் ஆபிரிக்காவின் பக்கம் ஏனென்றால் வடக்கத்தையன் ஏமாத்திட்டான். நமீதாவும் நயன்தாராவும் ஆடினால் அழகாக ரசிப்போம். மாலினியும் ரூபகலாவும் வந்து ஆடினால் யாழ்ப்பாணத்தை கெடுக்கிறாங்கள் என்போம். முதலில் இந்தத் துவேசத்தை நிற்பாட்ட வேண்டும்.
வெளிநாட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழி மூன்றாம் மொழி எல்லாம் படிப்பிப்போம் ஆனால் இலங்கையில் சிங்களம் படித்தால் குற்றமா? அவர்களும் தமிழ் படிக்கட்டும் நாங்களும் சிங்களம் படிப்போமே. இதை பள்ளிக்கூடங்களில் கட்டாயக்கல்வி என்று கொண்டுவந்தால்தான் என்ன குற்றம். இந்தியாவிலேயே தமிழ் அரசகரும மொழியல்ல. ஆனால் இலங்கையில் தமிழ் அரசகரும மொழி எனினும் இது சரியாக அமுல்படுத்தப் படவில்லை ஒத்துக் கொள்வோம்.
எல்லாவற்றுக்கும் விமர்சனம் செய்ய மட்டும்தான் விளைந்தவர்கள் என்றில்லாமல் நடந்த நன்மைகளையும் தட்டிக்கொடுத்து எழுதலாமே. என்னதான் சொன்னாலும் கடந்த ஆறு மாதமாக குண்டுவெடிப்பு இல்லை கரும்புலித் தாக்குதல் இல்லை. விமானம் வந்து குண்டு போடவில்லை. கிபீர் வந்து சனத்தை வெருட்டவில்லை. ரிவியில் கொடூரமான இறந்த கோரக் காட்சிகளைக் காணவில்லை இது தொடர வேண்டாமா. இந்த 6மாத காலத்திற்குள் அப்துல்கலாமாக வரக்கூடிய எத்தனை பிஞ்சுக் குழந்தைகள் தப்பியிருக்கிறார்கள் இது தொடர வேண்டாமா.
வடக்கு வழமைக்குத் திரும்புகிற யதார்த்தத்தை புரிந்து கொள்ளத்தானே வேணும். இதுதானே தொடர வேணும். இதோ நாடு சுபீட்சம் அடைந்துவிட்டது என்று சொல்லவில்லை. படிப்படியாகத்தானே சாதனைகளைப் படைக்க முடியும். இது நாங்கள் இங்கிருந்து செய்த சாதனை அல்ல. அவர்கள் செய்த சாதனை. அதைப் பாராட்டித்தானே ஆகவேண்டும். அதை விட்டுவிட்டு மகிந்தா அடிக்கிறான். கோத்தபாய சுருட்டுறான் டக்ளஸ் வெருட்டுறான் என்றதை மட்டும் எழுதாமல் மற்றைய பக்கத்தையும் எழுதலாமே. அதற்காக மகிந்தாவுக்கு ஆலவட்டமும் டக்ளஸ்ற்கு சாமரமும் வீசுவது என்பதல்ல அர்த்தம்.
ஜனநாயக சூழல் உருவாகி ஒழுங்கான எதிர்க்கட்சிகள் உருவானால் இவர்கள் பிழையென்றால் இவர்களையும் தூக்கி எறியும் அதற்கான சூழலை உருவாக்குமே. கையிலே தேன் வடிந்தால் யாரெண்டாலும் நக்கத்தான் பார்ப்பார்கள். அதை மட்டுமே எழுதாமல் அந்த மக்களும் நிம்மதியாக வாழ வழி எழுதுவமே.
சுவிஸ்சிற்கு வந்து சுயநிர்ணயம் கதைத்தால் சுன்னாகச் சந்தை கொடிகட்டிப் பறக்காது. வயலுக்குள் அவன் இறங்குவதற்கு தேவை நல்ல விதையும் உரமுமே. அதைக் கொடுங்கள். அவன் தானாக நிமிர்ந்து காட்டுவான்.
கிழிந்து போன வலையுடன் கடலுக்குப் போனால் சுறா பிடிக்கலாமா. அவன் சும்மாதானே திரும்புவான். வேண்டிக் கொடுங்கள் நல்ல வலையை அவன் சுறாவல்ல திமிங்கிலமும் கொண்டு வருவான். அவனுக்குத் தேவை உங்கள் தேசியமல்ல. உங்கள் தேசியமும் சுயநிர்ணய உரிமையையும் விடுத்து அவர்களை முதலில் வாழவிடுங்கள்.
அழகான இலங்கையை வழமான நாடாக மாத்துவோமே.
முன்னைய பதிவு : மானாட மயிலாடா : ஜெயராஜா (பிரான்ஸ் – தேசம்நெற் வாசகர்)
Anonymous
குனிஞ்சு நிற்கவும், கும்புடு போடவும் நீங்க சுத்தி வளைச்சு எழுதிறீங்கள். முதல்ல மாத்தையாகிட்ட சொல்லி நம்மள நிமித்தி விடுங்கோ. நாங்க கையை கட்டிக்கிறம். வாயையும் பொத்திக்கிறம். சரிதானே.
suban
குனிஞ்சு நிற்கவும் கும்பிடுபோடவும் என்று சும்மா எதுகைமோனையிலை எழுதி சுய இன்பம் காணாமல் பயனுள்ள படி கொஞ்சம் யோசியுங்கோ. மனுச குலம் இருக்கும் வரை போராட்டம் என்பது ஏதோவகையில் நடந்தே ஆகும். யாராவது வந்து எங்கள நிமித்திவிட கையையைும் வாயையும் பொத்திறது சாத்தியமில்லை. இலங்கையில் ஆயுதப்போராட்டம் என்பது குறைந்தது ஐந்து வருடத்திற்கு சாத்தியமில்லை. சனம் தாங்காது. புலம் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கு இது ஒரு விளையாட்டு பொழுதுபோக்கு. ரிவிய திறந்து பாருங்கோ. வெத்துவேட்டுகள் விடியவிடிய அலம்புதுகள். இலங்கையில இருக்கிற தமிழ்மக்கள் செய்யக்கூடியது பற்றி யோசியுங்கோ. அதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளால யோசிச்சாலும் பிழையில்லை. அதைப்பற்றி கதையுங்கோ.
Mohan
What you wrote is correct, and some narrow minded people from west who already ran from sri lanka nowshouting for nothing but they need money for their better living there writing nonsense for collecting some pounds & dollars, see in north of Sri Lanka , the original respective marawar tamils how, they manage to stand again and just starting their life, taking good breath & steps from all hardships, apprecaite the SL government for what they did for tamils, talk on points very useful for all and take actions on what you all find quick solutions, see now in kilinochi SL govmt destroyed all tamil monuiments try to create the old kilinochi, they are telling about Thunukkai resettlemets but it is 15 km from Mankulam west, but it is not the real Mullaitivu district in whole, the real mullaitivu means about 35 km from Mankulam to mullaitive beach which is in the east of Mankulam, totally under the SL govnt milittary control, talk something about on the points which is the real wanni area, From parantan to kankesenthurai OK, but from Wavuniya to Kilinochi,from mullitivu to wellankulm the SL govmt making a semi-sinhala Wanni work for that, see only one Muslim minister, Rizad who does a good job for all for resettlenments, but all tamil Ministers and others still just talk all directions for nothing, forget about east as they have enough streanth to stand with their own unlimited resources, but talk about the Budhist temples in Trinco, Military camps in Muttur, stop the sinhala settlements in Manalaru ( Sinhala Welioya ), talk to appoint tamils in all north east courts for tamil language respect, work for appoint more than 50% policemen to be tamils in north & east, rearrange the education as per our needs based on tamil language, see the two tamil ladies do a lot join with the hands with SL government, forget about the arms struggle in future, try to bring out the gold from the wanni and north lands, from wavaniya to mannar already semi-sinhala region is made, if not you all talk about and forget to workout on useful points we will lose all respect and identities which we thing we are the owners of all.
I am a muslim who was living in thunukkai for for 10 yrs from 1978 to 1988, travelled all the wanni region, and north, know the very innocent and hardwaorking mind of wanni people, now they are in wavuniya jail for nothing, I never forget the wanni people’s hospitality and the mind for respecting all, if you are ungreatful to mankind even the god also never pardon us.
Karuna also doing big mistakes again as joined the SL govmt but pillayan does something, wht pillayan demanding is correct, karuna just on the why to cheat the tamils & muslims with MR, ”wish you all for goodness”
kalai
/கிழிந்து போன வலையுடன் கடலுக்குப் போனால் சுறா பிடிக்கலாமா. அவன் சும்மாதானே திரும்புவான். வேண்டிக் கொடுங்கள் நல்ல வலையை அவன் சுறாவல்ல திமிங்கிலமும் கொண்டு வருவான். அவனுக்குத் தேவை உங்கள் தேசியமல்ல. உங்கள் தேசியமும் சுயநிர்ணய உரிமையையும் விடுத்து அவர்களை முதலில் வாழவிடுங்கள்/
அண்ணா! சுறா பிடிக்கத் தெரியாதவனிடம் வலையக்கொடுத்து நாம் கடலுக்கு அனுப்பவில்லை. தான் பிடிக்கிறேன் என்று பிடிவாதமா எங்களையும் பிடிக்கவிடாமல் போனவர் போனவர் தான்;;;;;;;;;;;;
Tamil
Anonymous, நீங்கள் நிமிர்ந்து நின்று என்ன சாதித்தீர்கள், ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்ததைத் தவிர! கட்டுரையாளர் கூறும் உண்மையை, யதார்த்தை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் விதண்டாவாதத்தை விட்டுவிட்டு!!
vinotharan
நண்பர் ஜெயா உங்கள் பார்வையில் இன்று தமிழர்கள் – முஸ்லீம்கள் என்ன செய்ய வேண்டும் என்ற உங்கள் கருத்தை திட்டவட்டமாக ஒரு கட்டுரை எழுதுங்கள்
Rohan
//Anonymous,, நீங்கள் நிமிர்ந்து நின்று என்ன சாதித்தீர்கள், ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்ததைத் தவிர! கட்டுரையாளர் கூறும் உண்மையை, யதார்த்தை புரிந்து கொள்ளுங்கள், உங்கள் விதண்டாவாதத்தை விட்டுவிட்டு!!//
மிக்க நல்லது Tamil ,
அப்படியானால் நாங்கள் தொடர்ந்து கூனிக் குறுகி நிற்பது சரி தான் என்று சொல்கிறீர்கள்!
Gee
Anonymous- எதிர்த்துக் கதைக்காமல் ஒரு கூட்டத்துக்கு குனிந்து நின்று நீங்கள் கண்டது என்ன என்று கொஞ்சம் விளக்குங்கோ? அந்தக்கூட்டத்துக்கு முன்னால நிமிர்ந்து நின்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லத்தேவையில்லை!
கட்டுரையாளர் சொல்லவந்தது “அங்கிருப்பவர்களை வாழ விடுவோம்” என்பது தான். அவர்கள் இன்னும் கஷ்டப்பட்டால் தான் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் வெளிநாடுகளில் நிமிர்ந்து நிற்க முடியும் என்ற உங்கள் ஆதங்கம் நன்றாகப் புரிகிறது!
நீங்கள் ஏன் இங்க இருக்கிற உங்கட ஆக்களையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய் அங்கு மாத்தயாவுக்கு முன்னால நிமிர்ந்து நின்று காட்டக்கூடாது?
-Gee, Herts, UK
பல்லி
//தனயன் பல்லி வரை தீர்வு கேட்கிறோம் //
என்னது நான் தீர்வு கேட்டேனா? எங்கே கேட்டேன், அல்லது வேறு பல்லி கேட்டுதா, புரியவில்லை,
ஆனால் நான் கேட்டது தீர்வு கேப்பவர்களை தீர்வு கேக்க நீங்கள் யார், நீங்கள் கேக்கும் திர்வுக்கும் மக்களுக்கும் ஏதும் உடன்பாடு உண்டா? அல்லது உங்கள் சார்ந்த தீர்ப்பை மக்கள்மீது சுமத்த பார்க்கிறியளா? என்பதுதான்,
//அழகான இலங்கையை வழமான நாடாக மாத்துவோமே.//
அதுக்கு முன் அங்கிருக்கும் பல தமிழ் தலமைகளை நாடு கடத்துவோமே;
VS
Due to the recent political upheaval in the land of Sri Lanka (SL), several people have come out and claimed the victory of the war. So we frequently hear/read the statements like “I am responsible for the victory over the LTTE”.
Mavil-Aru conflict 2006 was the beginning of the war with LTTE and at that time General Fonseka was in the hospital after the suicide attack.
Mavil Aru was a bloody confrontation. LTTE closed the sluice gates of the Mavil Aru to block the supply of water to about 30,000 acres of ripe paddy affecting about 60,000 farmers. Started as a humanitarian operation, the Govt needed to restore the water supply from Mavil Aru to the innocent farmers.
On August 8, 2006 when the LTTE announced it was restoring the water supply, everyone expected the SL govt to call off the operation and come to a settlement. If it was Ranil or Chandrika at the helm, it would have been the end of the story. Even the LTTE expected the same from Mahinda, but the Govt went ahead with the operation “Watershed” until it gained the full control of the sluice gates controlling the water flow.
During the operation “Watershed” and immediately after, there was pressure from the International agencies and diplomatic missions to stop the operation and come to a ceasefire. Even the ex US president Bill Clinton intervened at one stage. In this instance President and the Govt selected the Military approach over the political solution to resolve the issue and which was never expected by the LTTE. The most important aspect of this operation was to re-establish the credibility of the security forces and totally sideline the SLMM (Monitoring mission).
If the operation had failed – what would have been the outcome? LTTE would have taken the total control of the whole eastern province including Trincomalee. – Mahinda’s head would have been on the chopping block.
Tamil
Rohan, Gee அவர்களின் பதிலே என் பதிலாகும், புரியாவிட்டால் சுவிரில் தலையை முட்டுவதைத் தவிர வேறு வழியில்லை (உங்கள் தலையை!)
Tamil
நாங்கள் இங்கு வயிற்றுப் பிழைப்புக்காக குனியவில்லையா! எமக்கொரு நியாயம் மற்றவருக்கொரு நியாயமா? சரி இப்பிழைப்பு வேண்டாமென்றுதான் ஈழம் என்றால், நாம் அங்கிருந்தெல்லவா வட்டுக்கோட்டையையும் வடமராட்சியையும் கோரவேண்டும்!
chandran.raja
// அதுக்கு அங்கிருக்கும் பல தமிழ் தலைமைகளை நாடு கடத்துவோமே // பல்லி.
பல்லி இன்னமும் கடந்த காலத்திலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
சரி. அடாவடித்தனத்தில் (புலிகளின் செயல்பாடுகள் போல்) நாடுகடத்தி விட்டோம். அந்த இடத்தை நிரப்புவர்கள் யார்?. பல்லியா? தேசம்நெற்ர
பல்லிதான் தனக்குரிய அறிவால் தேசம்நெற்றை துணைக்கு இழுக்கிறாரோ ஒழிய தேசம்நெற் என்றைக்கும் பல்லியை ஒரு ஊண்டுகோலாக் பாவிக்க முற்பட்டது இல்லை. பல்லியை பொறுத்தவரை எல்லாமே இருட்டு. ஈழத்தில் இருந்து அரசியல் செய்பவர்கள் எல்லோரும் மரியாதைக்குரியவர்கள் அல்ல. ஆனபடியால் புலம்பெயர் நாட்டில்லிருந்து தான் இனி ஏதாவது படையல் இலங்கைக்கு அல்லது தமிழ்மக்களுக்கு செய்தாக வேண்டுமென்று பல்லி நினைக்கிறாரா? பல்லி தனது தெளிவான போக்கை வெளிப்படுத்த வேண்டும். தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவது அழகல்ல.
Tamil
//அதுக்கு முன் அங்கிருக்கும் பல தமிழ் தலமைகளை நாடு கடத்துவோமே – பல்லி//
பிந்திய செய்தி: “விடுதலைப் புலிகளின் மூன்று கப்பல்கள் சொத்ததுக்கள் இலங்கைக்கு கொண்டுவர முயற்ச்சி” – நல்லது அவற்றுடன் இஙகுள்ள அவற்றின் சொந்தக்காரர்களையும் கொண்டு செல்வதெப்போ! பல பிரச்சனைகளிற்கு உடனடி தீர்வு கிடைக்கப்படும்
shawn zack
TAMIL NATIONAL (TAMI,MUSLIM) ONDRU PATTAL UNDU VAALVU WE WILL BE MAJORITY. UN SAYS IN A COUNTRY ANY ETHNIC GROUP MORE THAN 25% THEY ARE MAJORITY. I M A MUSLIM. THINK. SINTHIUNGAL
jalpani
ஒரு இரண்டுவருடம் பொறுங்கள். சிங்கள தலைமையுடன் சரி வராது என மக்கள் முணுமுணுக்க தொடங்குவார்கள். அதற்குள் ஏன் இந்த அடிபிடி? wait and see.
Nada
ஜெயராஜ் உங்கள் எழுத்துக்கள் தொடர வாழ்த்துக்கள். இன்னும் உயிர்கள் போனால் தானே Anonymous போன்றோர் பூக்கள் போட ஆட்டு மந்தைகள் போல் அலையலாம்.
பார்த்திபன்
கட்டுரையாளர் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகளை நன்றாகவே சுட்டிக் காட்டியிருக்கின்றார். இன்றும் வெளிநாட்டில் போராட்டம் என்று கூக்குரலிடும் பல புலன் பெயர்ந்த புண்ணாக்குகளுக்கு தாம் எதற்காக கூக்குரலிடுகின்றோமென்ற அடிப்படையே தெரியாமல் கும்பலில் நின்று கோவிந்தா போட்டே பழகி விட்டது. பழக்க தோசத்தில் அதையே தொடர்ந்து செய்ய சில புண்ணாக்குகள் விரும்புவதில் வியப்பென்ன??
எனியாவது உளச் சுத்தியோடு சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் புரையோடிப் போயுள்ள பிரைச்சசினைகளுக்கு தீர்வு காண முன் வர வேண்டும். அதற்குள் பாதிக்கப்பட்ட எம்மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப புலம் பெயர்ந்து வாழும் மக்களும் முன் வரவேண்டும். மொத்தத்தில் எல்லாயின மக்களும் கடந்த கால தங்கள் தவறுகளிலிருந்து மீண்டு, உளச் சுத்தியோடு ஒரு ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப முன் வர வேண்டும்.
Anonymous
இங்கே எழுதுகிற யாரும் அந்த மக்களுடன் இல்லை. உம்மால் சேர்ந்து வாழு என்ற தீர்வை சொல்ல முடியுமானால், இன்னொருத்தனுக்கு போராடி வாழு என்று சொல்லுகிற உரிமை இல்லாமல் போய்விடாது. இந்த கருத்தாடல்காரர்கள் மட்டும் தமது சொற்கள் உண்மையும் யதார்த்தமும் கொண்டவை என்று எப்படி உத்தரவாதம் செய்கிறார்கள்?
jalpani
எனியாவது உளச் சுத்தியோடு சிங்களத் தலைமைகளும், தமிழ்த் தலைமைகளும் புரையோடிப் போயுள்ள பிரைச்சசினைகளுக்கு தீர்வு காண முன் வர வேண்டும்.”
என்ன பார்த்திபன் இப்படி சொல்லி விட்டீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வா? பிரச்சனையே இல்லை என்று தானே பலமாக குரல்கள் ஒலிக்கின்றன. பிரச்சனை இருக்கிறதா இல்லையா என்றே குழப்பமாக இருக்கிறது. யாராவது முதலில் இதை தீர்த்து வையுங்கள்.
chandran.raja
ஆரம்பகாலத்தில் இராணுவத்தின் கையில் அகப்பட்டு போனவர்களில் சபாரத்தினம் சபாலிங்கம்மும் ஒருவர். இராணுவத்தின் சித்திரவதைகள் தற்கொலை முயற்சிக்கு பிறகு இவர் பாரீஸ் வந்து சேர்ந்தார். வந்தவருக்கு அவருடைய மனச்சாட்சி சும்மா இருக்க விடவில்லை.தன்னுடைய இனம் என்று சொல்லி தனது கருத்தையும் தன்னால் இயலுமான உதவிகளையும் செய்தும் சொல்லியும் வந்தார். இரண்டு பிள்ளைகள் பெற்றிருந்தும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்த போதும் தன்வாழ்கையை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. வேறுஒரு நாட்டவர் என்றாலும் பரவாயில்லை தனது சொந்த இனத்தவனாலேயே பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப் பட்டார். சிங்களவர் இனவெறியர் என்றால் இந்த தமிழ் இனத்தை என்னவெறி என்பது?
பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்தை ஏன் நினைவூட்டுகிறேன் என்றால் புலம் பெயர் புண்ணாக்கு மூட்டைகளுக்கு இலங்கை அரசியலில் தலையிடுவதற்கு என்ன அருகதையிருக்க முடியும். அநேகமாக அகதி அந்தஸ்து நாம் பெறும்போது சிங்களஅரசையும் குற்றம் சாட்டியுள்ளோம் இயக்கங்களையும் குற்றம் சாட்டியுள்ளோம். இதையாரும் மறுக்கமுடியாது.
புலம்பெயர்நாட்டில் உள்ளவர்கள் எத்தனை பேர் தாய்நாட்டிற்கு போக விரும்பிகிறீர்கள்? அவர்களாக பிடித்து ஏற்றும் வரை ஒருவருமே இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை.
அரசியல் என்பது விளையாட்டு சதுரங்கம் ஆடுவதல்ல.வாழ்வோடு சம்பந்தபட்டது. எதிர்காலத்தைப் பற்றியது. இலங்கையில்லுள்ளவர்களே! இலங்கை அரசியலை நிர்ணயிக்க வேண்டியவர்கள். முடிந்தால் உங்களுக்கு பிடித்தவர்களுடன் இணைந்து செயல்படுங்கள். அவர்கள் கரங்களை வலுப்படுத்துங்கள். அது யதார்த்திற்கு ஒவ்வானது. இங்கிருந்து கொண்டு ராஜகட்டளை இடாதீர்கள். அப்படிச் செய்தீர்களேயானால் அதுவும் புலிப்பாதையே! ஆயுதஇயக்கங்களின் போக்கே !! என்பதை சந்தேகம் இல்லாமல் சொல்லமுடியும்.
Tamil
சேர்ந்து வாழு என்று கூறுவதற்கோ போராடி மடி என்று கூறுவதற்கோ எமக்கு உரிமையில்லை, ஆனால் அவர்கள் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க அனுமதிக்குமாறு கூற எமக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமையுண்டு
nanthan
//ஒரு இரண்டுவருடம் பொறுங்கள். சிங்கள தலைமையுடன் சரி வராது என மக்கள் முணுமுணுக்க தொடங்குவார்கள். அதற்குள் ஏன் இந்த அடிபிடி ? றயவை யனெ ளநந.//தயடியni
ஒரு இரண்டுவருடம் பொறுங்கள். சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழலாம் தமிழர்களால்த்தான் பிரச்சினை என்றும் சிங்களத் தலைமைகள் தான் சரி என்றும் மக்கள் முணுமுணுக்க தொடங்கலாம்தானே. எது நடக்குமென்று யாருக்குத் தெரியும். அதற்குள் ஏன் இந்த அடிபிடி
பல்லி
நான் எதோ சொல்லகூடாததை சொல்லி விட்டது போல் சந்திரா துடிக்கிறார், எனது கருத்து ஒரு புலியோ அல்லது புளியோதான் தமிழரின் தலைவிதியை நிர்னயிக்க வேண்டுமா? அப்படியாயின் மக்கள் அனைவரும் தகுதி அற்றவர்களா?? ஏன் அவர்களில் இருந்து ஒருவரோ அல்லது ஒரு நிர்வாகமோ உருவாக கூடாது என்பதே, இதைதான், கட்டுரையாளரும் சொல்லியுள்ளார்; அழகியும் ஒரு கட்டுரையில் சொல்லுகிறார்கள், மக்களுக்கு குடிசையே இல்லாத போது மகிந்தாவுக்கு கோவில் கட்டும் அரசியல்வாதி நாடு கடத்தபடுவதில் என்ன தப்பு?
கடிதத்தில் அரசியல்; நீங்கள் ஏதோ பார்த்து செய்யுங்கள் என சிலரும், வீட்டோடு மாப்பிளையாய் ஒருவரும் இருந்து கொண்டு மக்கள் பற்றி வாய்கிழிய பேசுவது தேவையா என்பதே எனது வாதம்; புலியால் எமது மக்கள் சீரளிந்தனர் என்பதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதேதவறை பதவி மோகத்தால் சிலர் செய்யும் போது அவர்களுக்கு ஆமா போட பல்லிக்கு தெரியாது, யார் இவர்கள் சந்திரா எனக்கு யார் மீதும் பகை இல்லை, ஆனால் இவர்கள் அனைவரும் எமது இனத்தின் தலமைகள் அல்ல, அதுக்கு உதாரனம், சமீபத்தில் சுவிஸ் உல்லாச பயணம்; இவர்கள் அரசியலை விட்டு ஒதுங்குவர்கள் ஆனால் மிக நல்ல நிர்வாகிகள் மக்களிடத்தில் இருந்து புறப்படுவார்கள்; இவர்களுக்குள் உள்ள பிரச்சனை மக்கள்நலன் சார்ந்ததா? அல்லது தமது பதவி சார்ந்ததா? சங்கரியர் ஒரு கடிதம் எழுதினார் தோழர் பற்றிய கொடூரத்தை மகிந்தாவுக்கு; ஏன் மக்கள் நலன் சார்ந்த இருவரும் தாமே பேசி ஒரு முடிவுக்கு வரகூடாது; வடக்கே மக்கள் புலிக்கு என்ன பயமோ அதே பயம் தோழர் வட்டத்துக்கும் உண்டு, கற்பழிப்பில் இருந்து கடன் வாங்கல் வரை புலிக்கு போட்டியாக கழகம், தோழர்; பிள்ளையான் செய்யவில்லையென யாராவது சொல்ல முடியுமா?
கருனா சொல்லவே வேண்டாம்; அவர் அன்றும் இன்றும் கசாப்புகடைகாரந்தான், இப்படி விடயங்களை பல்லி சொன்னதால் சந்திராவுக்கு கோபம் வந்துவிட்டது; ஏன் புலிகள் பற்றி பேசும்போது இதுவல்லவா கருத்து என ஆரவாரம் செய்யும் நீங்கள் சிலரை பற்றி சொன்னால் தடா செய்கிறீர்கள், இது எனது கருத்து;
இப்போ சந்திராவின் கேள்விக்கு வருகிறேன்:
//சரி. அடாவடித்தனத்தில் (புலிகளின் செயல்பாடுகள் போல்) நாடுகடத்தி விட்டோம். அந்த இடத்தை நிரப்புவர்கள் யார்?. பல்லியா? தேசம்நெற்ர//
ஏன் இலங்கயில் வாழும் தமிழர் நிர்வாகதிறன் அற்றவர்களா? அல்லது அவர்களை உங்களுக்கு மனிதர்களாக தெரியவில்லையா? இந்த இடத்தில் உங்களுக்கு தோழர் சிவபாலனையும் திருமதி யோகேஸ்வரனையும் நினைவு படுத்துகிறேன், எம்மை விட மிக திறமைசாலிகள் அங்குதான் உள்ளார்கள் நாம் சந்தர்ப்ப வாதிகள்; ஓடும் குதிரைமீது பணம் கட்டும் வல்லவர்கள்;
//பல்லிதான் தனக்குரிய அறிவால் தேசம்நெற்றை துணைக்கு இழுக்கிறாரோ ஒழிய தேசம்நெற் என்றைக்கும் பல்லியை ஒரு ஊண்டுகோலாக் பாவிக்க முற்பட்டது இல்லை.//
இது உங்கள் ஏல்லாதனத்தை மிக எளிதாக காட்டுகிறது, பல்லி எங்கே சொன்னேன் பல்லியால் தேசம் ஓடுகிறது என, அதேபோல் நான் எங்கே தேசத்தை உதவிக்கு அழைத்தேன்? சிலரது பின்னோட்டங்களை உதாரனம் காட்டுவேன், உங்களுடையதையும் கூட, ஆனால் எனக்கு தேசம் தளம் தந்திருக்கு, அதுக்காக நான் எழுதுவதெல்லாவறையும் விடுவார்களா? தணிக்கை செய்துதான் விடுவார்கள்; ஆக உங்கள் ஏலாமையால் என்மீது பழி சுமத்தாதீர்கள் நான் அரசியல் வாதியல்ல;
//பல்லியை பொறுத்தவரை எல்லாமே இருட்டு. //
உன்மைதான் நான் லெனினோடு ஊர்சுற்றவில்லை, கஸ்ரோவின் கிணற்றை எட்டி பார்க்கவில்லை, மார்க்ஸ்சத்தை மல்லாக்க படுத்து துப்பவில்லை, சீன கமினிஸத்தை கையை பிடித்து தெருவை தாண்டவில்லை, எனது குக்கிராமத்தில் சிமிளிவிளக்குடன் பல தறுதலைகளை மட்டும் மிக தெளிவாக பார்த்தேன், அதனால் எனது வாழ்க்கை மட்டுமல்ல பலரது வாழ்க்கை இருட்டிய உன்மையை உனர்ந்தேன், இன்று எழுதுகிறேன்;
//ஈழத்தில் இருந்து அரசியல் செய்பவர்கள் எல்லோரும் மரியாதைக்குரியவர்கள் //
யார் அந்த உத்தமர் சொல்லுங்கோ பார்க்க ஆசையாக உள்ளது;
//புலம்பெயர் நாட்டில்லிருந்து தான் இனி ஏதாவது படையல் இலங்கைக்கு அல்லது தமிழ்மக்களுக்கு செய்தாக வேண்டுமென்று பல்லி நினைக்கிறாரா? //
அந்த கவலை சந்திராவுக்கு வேண்டாம், எமது தலமைகள் ஒருவரை ஒருவர் சுகம் விசாரிப்பதானால் கூட இப்போதெல்லாம் ஜெனிவாவில்தான், அதனால் நமக்கு அந்த கவலை வேண்டாம், ஆனாலும் பலரது ஆலோசகர்கள் புலம்பேர் அழிவு ஜீவிகள் என்பதை பல்லி சொல்லியா சந்திரன் தெரிய வேண்டும்,
//தனது தெளிவான போக்கை வெளிப்படுத்த வேண்டும். //
அப்படி வெளிபடுத்தினால்தான் உங்களுக்கு உருவந்து விடுகிறதே;
:://தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவது //
நான் அடிக்கடி குழம்புவேன் உங்கள் எஜமாஙளின் திருகுதாளங்களை பார்த்து, ஆனால் நான் குழப்பி குழம்ப்பும் நீங்களா இப்படி பல்லியை நிக்க வைத்து குத்துறியள்;
//அழகல்ல.//
இது பல்லிக்கு புதிதல்ல:
Anonymous
மற்றவனுக்கு உரிமை உண்டு, இல்லை என நிர்ணயிக்க முயல்கிற ஒரு துப்பாக்கி அற்ற துரைத்தனம் செய்கிறீர்கள். நாங்கள்தான் அந்த மக்களின் இரட்சகர்கள் என்று கதை விடுகிறீர்கள். ஆனால் இன்று “அவர்கள் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்க அனுமதிக்குமாறு கூறும்” அளவிற்கு நீங்களும் அவர்களை கேவலமாகத்தான் பார்கிறீர்கள். ஆக மொத்தத்தில் புலத்தில் புலியாக இருக்க முடியவில்லை என்கிற எரிச்சலின் வெளிப்பாடுதான் உங்கள் சிந்தனையா?
சந்தனம்
கண்கெட்ட பின் சூரியநமஷ்காரம் போல உள்ளது முற்றத்தில் ஏழை 2மாடி வீட்டில் பணக்காரன் அந்த ஏழையை ஏறுடெத்து பார்க்காத சொந்தம் புலத்திலிருந்து கோசம் மக்களில் அக்கறை போல காசைமட்டும் நோக்கமாக சுனாமியின் செய்தி சரியாக காலையில் என்காதிற்கு வரவில்லை இரண்டு பேர் அதைசொல்லி காசிற்கு என் வீட்டுவாசலில் இது தமிழனின் தலைவிதியா.
Tamil
நாங்கள் துரைத்தனம் செய்யவில்லை, ஆனால் உங்களை செய்யாதீர்கள் என கேட்கிறோம். மீண்டுமொரு இரட்சகனை உருவாக்காதீர்கள் எனகேட்கிறோம். அவர்கள் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க அனுமதிக்குமாறு கேட்கிறோம் (எமது எதிர்காலத்தை அவர்களா தீர்மானிக்கிறார்கள்?)
புலத்தில் மட்டுமல்ல, எங்குமே ஆறு அறிவுள்ள மனிதனாக இருப்பவனின் சிந்தனை வெளிப்பாடு இது.
chandran.raja
பல்லியின் கம்யூனிச விரோதம் தேசம்நெற்ரை பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு புதியதல்ல. மகிந்தா அரசு டக்கியஸ் தேவானந்தா ஆனந்த சங்கரி சித்தாத்தன் சிறீதரன் கருணா பிள்ளையான் எல்லோரையும் நாடுகடத்திவிட்டு நீங்கள் சொல்லுகிற மக்களுக்காக எப்படி? பாடுபடப் போகிறீர்கள் என்பதையாவது நேரிடையாக முன்மொழியுங்கள் பல்லி!. நானும் என்னைப்போல் சிலவாசகர்களும் இதையறிய மிக ஆவலாக உள்ளோம். சரி என வரும் பட்சத்தில் உங்களை தொடர்ந்து வரவோ கப்பல் ஏறவோ நாம் தயாராக இருக்கிறோம் என உங்களுக்கு அறியத் தருகிறோம்.
பல்லி
//. மகிந்தா அரசு டக்கியஸ் தேவானந்தா ஆனந்த சங்கரி சித்தாத்தன் சிறீதரன் கருணா பிள்ளையான் எல்லோரையும் //
இவர்கள் அல்லது புலிகள்தான் நாட்டையும் மக்களையும் ஆள பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் கொட்டாவி விட்டே மாள பிறந்தவர்களா?
திரும்பவும் ஒரு முறை எனது (கடந்த )பின்னோட்டத்தை கவனிக்கவும்; புலம்பெயர் அறிவுஜீவிகள் 22 கொழும்பில் போய் கூட்டம் போடுவினம்; அதை தளத்தில் பேச்சில் முன்னெற்றம் என கதை விடுவதும்; இலங்கையில் இருந்து 22 ஜெனிவாவில் ஒருங்கினைப்பு ; கூத்தமைப்பு 22 நாடுநாடாய் திரிய, புலிசார்ந்த (பத்மநாதன்)22 இலங்கையை வலம்வர மக்கள் மட்டும் மகிந்தாவிடம் கைஏந்த வேண்டும், அதில் சந்திராவுக்கு ஒரு மகிழ்ச்சி; ஒரு சில நாள் நாடு கடத்திய கருனாவால் இன்று பிள்ளையான் என ஒரு முதல்வர் வந்திருக்கும் போது ;;;;;;;;;;;;;;;;; இதுகூட புரியா ம்ஸ்சைகள் மீது பல்லி விரோதம் அல்ல ஒதுங்கி போவது நல்லதுதான், உன்மையில் தோழர் சிவபாதமோ அல்லது திருமதி யோகேஸ்வரனோ இருந்திருந்தால் கண்டிப்பாக வடக்கில் வசந்தம் வந்திருக்கும்; இப்போதுள்ளவர்களால் சில தலைகளுக்கு சிலையோ அல்லது கோவிலோ வரலாமே தவிர மக்களுக்கு ஒன்றும் வராது ,
தொடரும் பல்லி
பல்லி
//அரசியல் என்பது விளையாட்டு சதுரங்கம் ஆடுவதல்ல.வாழ்வோடு சம்பந்தபட்டது//
ஆம் உங்களளவுக்கு இல்லாவிட்டாலும் 30 வருட அனுபவத்தில் சிறிது கற்று கொண்டோம், அதுவே எமக்கு இத்தனை விடயத்தை புரிய வைக்குது எனில் சகலதும் அறிந்தால்!!!! சரி அரசியல் விளையாட்டல்ல அப்படியானால் இப்போது அங்குள்ள தமிழ் தலமைகள் என்ன செய்யினம்(சிங்களமும்தான்) அரசியலா? சதுரங்கம் அல்ல; அப்படிதான் நானும் நினைத்தேன், ஆனால் சங்கரியரும் தோழரும் ஆடுவதென்ன? கருனாவும் பிள்ளையானும் ஆடுவதென்ன? மகிந்தாவும் சந்திரிகாவும் ஆடியது என்ன? சித்தாத்தரும் கூட்டமைப்பும் இன்று(மாகானசபைக்கு பின்) வவுனியாவில் ஆடுவதுக்கு என்ன பெயர்? புலம்பெயர் தேசத்தில் இருந்து உதயனை கூட்டி சென்று தோழர் புதிய ரெலோவை உருவாக்கினாரே இது உங்களுக்கு அரசியல் நாகரிகமாக தெரிகிறதா? வில்லதனத்தை தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கும் தமிழ் தலமைகள் அரசியலை விட்டு விலகினால் கண்டிப்பாக புதிய முகங்கள் அரசியலில் வருவார்கள், அங்கிருந்து நரிதனங்கள் செய்வதை விட்டு அகதி விண்ணப்பம் கோரினால் அந்த மக்கள் நின்மதியாய் இருப்பார்கள்; எனக்கு யார்மீதும் கோபம் இல்லை ஆனால் தொடர்ந்தும் மக்களை வைத்து மாறிமாறி வியாபாரம் செய்ய்கிறார்களே; புலி சமாதான பேச்சுக்கு வந்து தலைவலியால் திரும்பியதை நாம் விமர்சித்தோம்; ஆனால் அதே ஜெனிவாவுக்கு வந்த 22ம் என்ன செய்தார்கள்: இதுதான் என் ஆதங்கம்,
chandran.raja
திரும்பவும் பல்லி பழைய பாணியிலேயே கதை சொல்லுகிறீர்கள். இறந்தவர்களை திரும்ப கொண்டுவரவா முடியும்?. உயிரோடு இருப்பவர்களைப் பற்றி கதையுங்கள் பல்லி!. வடலி வளர்த்து கள்ளுக் குடிக்கிற மாதிரி இல்லையா உங்கள் கதை. தமிழ்மக்களுக்குரிய உடன்பாட்டிற்கு வெளியில்லிருந்து எதற்கு நிகழ்சிநிரல் அம்மண்டபதில் இருந்தவர்கள் தான் தமிழ் அரசியல் தலைவர்கள்தான் அதை தயாரிக்க வேண்டுமென்ற வாதம் முற்றிலும் ஏற்றுக்கொள்ளகூடியதே! அதை கீழ்தரமானவாத யாரும் பார்க்கவில்லை. அதையும் விட இந்த முதல்சந்திப்பு ஒருஆரம்ப- ஆரோக்கியமான வெற்றியே என்தான் சந்தித்தவர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள். இன்னும் எத்தனை சந்திப்புகள் தொடர்ச்சியாக நடக்கும்.நடக்குமா? என்பது கூட தெரியாமல் இருக்கிறது என்ற வேளையில் எல்லாவற்றையும் போட்டுஉடைகிற மாதிரியல்லவா? இதைப் பார்கிறீர்கள் திரும்பவும் சொல்லுங்கள். நாம் என்ன செய்யவேண்டும் பல்லி? கருத்தை திசைதிருப்பி வேறு எங்கோ இழுத்துச் செல்லாதீர்கள். உங்கள் கருத்தில் தான் நாம் ஆவலாக இருக்கிறோம்.
jalpani
“பல்லியின் கம்யூனிச விரோதம் தேசம்நெற்ரை பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு புதியதல்ல. மகிந்தா அரசு டக்கியஸ் தேவானந்தா ஆனந்த சங்கரி சித்தாத்தன் சிறீதரன் கருணா பிள்ளையான் எல்லோரையும் நாடுகடத்திவிட்டு நீங்கள் சொல்லுகிற மக்களுக்காக எப்படி”//
சங்கரி ,டக்ளஸ் ,மகிந்த, சித்தார்த்தன், சிறி, உதயன் எல்லோரும் எப்பப்பா கம்யூனிஸ்ட் ஆனார்கள்?
chandran.raja
யாழ்ப்பாணி தவறான விளக்கத்துடனே திரும்பவும் வந்திருக்கிறீர்கள்.
இவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் ஆனார்கள் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்?
முதுகெலும்பைப் பற்றி ஏதோ ஒரு இடத்தில் கேட்டிருக்கிறீர்கள். விக்கிரபாகு சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுத்திருந்தால் மதிக்கப்பட வேண்டும் அல்லாமல் பாதுகாக்கப்படவும் வேண்டும். அதை எந்த ஒரு முற்போக்கு சிந்தனையுள்ளவனும் மறுக்க முடியாது. புலிகள் சிறுபான்மை இனங்களின் சுயநிர்ணயத்தை எற்றுக் கொண்டவர்கள் அல்ல. இவர்களை அரசியலோடு தொடர்புபடுத்திக் கதைப்பதே தவறு. விக்கிரமாபாபாகு புலிகளுக்காக பிரச்சாரம் செய்வதற்காகவே தனது மேடைகளை பாவித்திருக்கிறார். சிறுபான்மை இனங்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவராக இருந்தால் வடபகுதியில்லிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீங்களுக்காக குரல் கொடுத்திருப்பார். இவற்றில்லிருந்தே இவர்களை மதிப்பீடு செய்யமுடியும் நிறத்தையோ இவர்கள் போடுகிற அரிவாள் சுத்தியல் அடையாளங்களை கொண்டோ அல்ல.
பல்லி
உங்கள் கேள்விக்கு போதுமான விளக்கம் தந்துவிட்டேன்; யார் கருத்தை திசை திருப்புவது என வாசகர்கள் புரிந்து கொள்ளட்டும்; உங்களால் அல்ல எந்த கமினிஸ்ட் வாதியாலும் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது, நானும் இறந்த புலிக்கு மாலை போடுவதைவிட்டு புலியின் இடத்தை நிரப்ப துடிக்கும் புளியளை இப்பவே இனம்கானுவோம் எனதானே சொல்லுகிறேன்; புரியாமல் கேப்பவர்களுக்கு மிக எளிதாக சொல்லமுடியும்; ஆனால் நீங்களோ உங்கள் கருத்தை பல்லி ஏற்க்கும் வரை உங்களுக்கு புரியாது போல்தான் இருக்கும், எது எப்படியோ புலிக்கு ஒரு கூட்டமைப்பு, மகிந்தாவுக்கு ஒரு கூடாத அமைப்புகள் இதுதான் வேறுபாடு செயல்பாடு இரண்டுமே முதலாளியின் விசுவாசிகள்தான்,
ஜெயராஜா
நான் எங்கே தீர்வு கேட்டேன்//பல்லி
அப்படியாயின் பல்லி ஏன் நீங்கள் புளொட்டுடன் சேர்ந்து போராட ஆரம்பித்தீர்கள் என்று சொல்லமுடியமா? தீர்வு தேவை என்றுதானே போராட போனீர்கள் தீர்வு தேவையில்லை என்றால் ஏன் தேசம் நெற்றில் வந்து கருத்து எழுதுகிறீர்கள்
பல்லி குப்பையை கிளறுவதானால் குப்பைதானே வரும் எமக்கு என்ன தேவை என்பதுதான் முக்கியம்.
டக்ளஸ் பிள்ளையான் என்று கருத்து எழுதும்போது இதையே பிரதிபலிக்கின்றீர்கள். பிள்ளையான் டக்ளஸ் அவர்கள் புதுமாற்றம் பெற்று வருகிறார்கள் இதை பிரபாகரனும் செய்து வந்திருந்தால் நாம் ஏற்றுக்கொண்டிருப்போம்.
எடுத்ததிற்கு எல்லாம் மரணதண்டனை மட்டும்தாதன் தீர்ப்பா? பிள்ளையான் டக்ளஸ் போன்ற தலைவர்கள் தவறு விட்டிருந்தால் என்ன தீர்ப்பு?
சிவபாலன் திருமதி யோகேஸ்வரன் போன்ற தலைவர்கள் தனித்து நின்று சாதித்திருக்க முடியமா? இவர்கள் போன்றவர்களை எப்படி தலைமை தாங்க வைப்பது அல்லது இவர்கள் போன்றவர்கள் பெரிய கூட்டங்களுடன் சேர்த்து செயற்பட முடியமா?
சிந்திப்போம் அடுத்து என்ன செய்வோம் எப்படியாக செயற்படுவோம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே சாலச்சிறந்தது.
பல்லி
//பல்லி ஏன் நீங்கள் புளொட்டுடன் சேர்ந்து போராட ஆரம்பித்தீர்கள் //
என்ன புதுவிதமான கற்பனையுடன் ஜெயராஜா மிரட்டுறியள், அப்படி நான் யார் என்பதை தெரிய வேண்டுமாயின் நோர்வே நக்கீரனுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள், அதை விட்டு உங்கள் கற்பனையால் எதோ உங்களுக்கு தெரிந்த ஒருவரை வம்புக்கு இழுக்காதையுங்கோ; கழககதைகள் பலது தெரிவதால் கழகத்தில் இருக்க வேண்டுமா என்ன?
//தீர்வு தேவையில்லை என்றால் ஏன் தேசம் நெற்றில் வந்து கருத்து எழுதுகிறீர்கள்//
தீர்வு திட்டஙளை பாதிக்கபடும் மக்களையும் சேர்த்து எழுதும் படிதான் கேக்கிறேன்; அதுக்காக ஏன் விமானத்தில் பறக் வேண்டும்,அதுசரி தங்களிடமும் ஏதும் கைவசம் இருக்கோ; தேசம் நெற்றில் எழுதுவது பிரச்சனையெனில் ஜெயராஜாபோல் இன்னும் நாலு பேர் சொல்லட்டும் வேறு தளம் தேடி ஊருகிறேன், அதுவரை இங்குதான் குழப்பவேண்டும்;
//பல்லி குப்பையை கிளறுவதானால் குப்பைதானே வரும்//
இது உங்கள் பார்வையில் ஆனால் எனது பார்வையில் சில பொக்கிசங்களும் வரலாம், ஆனால் இப்போது (ஈழத்தில்) கிண்டும் இடம் எல்லாம் இரும்புகள்தான் (ஆயுதம்) வருகுதாம்,
//சிவபாலன் திருமதி யோகேஸ்வரன் போன்ற தலைவர்கள் தனித்து நின்று சாதித்திருக்க முடியமா? //
இதை நான் சிவபாலனிடம் கேட்டேன், கண்டிப்பாக முடியும் மக்கள் பற்றி சிந்திக்காத இயக்கங்களே வளரும்போது மக்கள்பற்றி சிந்தித்து செயல்பட நினைக்கும் நாம் ஏன் வளர முடியாது பல்லி என கேட்டார், இருப்பினும் அரசதரப்பால் தமக்கு பிரச்சனை வராது ஆனால் இயங்கங்கள் சிலவேளை தடைசெய்ய கூடும் என சொன்னார், ஆனால் தட்டுவார்கள் என இருவரும் நினைக்கவில்லை, ஆக அவர்களை அழித்ததில் இருந்தே தெரியவில்லையா தம்மை விட ஒரு சக்தி உருவாகி விடும் என பயம் இருக்கென, இது புலிக்கு மட்டுமல்ல அனைத்து இயக்கங்களுக்கும் உண்டு,
//டக்ளஸ் பிள்ளையான் என்று கருத்து எழுதும்போது இதையே பிரதிபலிக்கின்றீர்கள். //
அவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் எனது கருத்துக்காக மன்னிப்பு கேக்கிறேன், ஆனால் கருனாவே பிள்ளையானை தொலைக்க நினைக்கும் போது பல்லியின் கருத்தில் தாங்கள் பிழை பிடிப்பது எதோ ஒரு சங்கடமான கருதாய் இருக்கு;
//எடுத்ததிற்கு எல்லாம் மரணதண்டனை மட்டும்தாதன் தீர்ப்பா?//
இது மட்டும் இல்லாவிட்டால் எந்த அமைப்பும் மக்களிடம் இருந்து
தப்பமுடியாது; இந்த கருத்தில் எனது வோட்டு உங்களுக்குதான்,
//டக்ளஸ் அவர்கள் புதுமாற்றம் பெற்று வருகிறார்கள்//
அவர் மக்களுக்காக செய்த பல நல்ல விடயங்களை பல்லியே முதல் பின்னோட்டமாக வாழ்த்தி பாராட்டி இருக்கிறேன்,
//இவர்கள் போன்றவர்களை எப்படி தலைமை தாங்க வைப்பது அல்லது இவர்கள் போன்றவர்கள் பெரிய கூட்டங்களுடன் சேர்த்து செயற்பட முடியமா?/
கண்டிப்பாக முடியும் என்பதுவே பல்லியின் தனிபட்ட கருத்து, இது தவறாக கூட இருக்கலாம்; ஆனால் முயற்ச்சியே இல்லாமல் முடியாது என சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை;
//சிந்திப்போம் அடுத்து என்ன செய்வோம் எப்படியாக செயற்படுவோம் என்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதே சாலச்சிறந்தது//
உன்மைதான் தொடர்வோம் கருத்துக்களுடன், பல்லியை இனம்கான துடிப்பதால் எனது கடந்தகால பின்னோட்டம் ஒன்றில் என்னை சுயவிமர்சனம் செய்துள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளவும், அதையும் விட நான் என்னை அறிமுகம் செய்து பின்னோட்டம் இடும் அளவுக்கு தகுதியானவனா தெரியவில்லை, கட்டுரை ஒன்று எழுத முயற்ச்சிக்கிறேன் ;அப்போது தேச நிர்வாகத்திடம் என்னை அறிமுகம் செய்கிறேன்; அதுவரை தேடல்களை விட்டு தேர்வுகளை கவனிப்போம்; பல்லியும்தான்;
தொடரும் பல்லி;
பல்லி
//சுவிஸ்சிற்கு வந்து சுயநிர்ணயம் கதைத்தால் சுன்னாகச் சந்தை கொடிகட்டிப் பறக்காது. வயலுக்குள் அவன் இறங்குவதற்கு தேவை நல்ல விதையும் உரமுமே. அதைக் கொடுங்கள். அவன் தானாக நிமிர்ந்து காட்டுவான்//
ஜெயராஜா எனது அனைத்து பின்னோட்ட கருத்தும் இதுதான்;
chandran.raja
// கேள்விகளுக்கு போதுமான விளக்கம் தந்துவிட்டேன் // பல்லி.
இல்லை பல்லி.நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்? யாருமே இல்லையா? நீங்கள் அடிக்கடி சொல்லும் மக்கள் இலங்கையில் தான் இருக்கிறார்களா? கட்சி தலைவர்கள் இயக்கங்கள் ஏதாவது உண்டா? அதுவும் யாருமே இல்லையா? ஆரம்பம் முதல் எமது கேள்வி இதுவாகவே இருந்தது. இதற்கு மதிப்பளிப்பீர்கள் என்று நினைக்கிறோம்.
பல்லி
சந்திரா உன்மையில் எனக்கு உங்களளவுக்கு சாமத்தியம் பத்தாது, எழுத்துலகுக்கு புதிதுதானே; அதனால் புரிதலும் சிறிது கஸ்ற்றமாகதான் உள்ளது; நீங்கள் கேட்ட கேள்வியை விட்டுவிட்டு பல்லி எதோ எல்லாம் உளறி விட்டேன் போல் உள்ளது; இதுக்குதான் பல்லிக்கு நான் தினம் சொல்வேன் தேசத்தில் வரும்போது அடக்கி வாசிப்பது அவசியம் என,
//நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்?//
இதுவரை எந்த கட்ச்சி தலமையையும் ஆதரிக்கவில்லை, சம்பந்தரின் வயசிலும் அரசியல் அனுபவத்திலும் சில நம்பிக்கை வைத்திருந்தேன், ஆனால் அவர்கூட இயக்கபடுகிறார் போல் ஒரு உனர்வு எனக்கு இருப்பதால் யாரையும் நம்ம்ப முடியவில்லை, ஆனால் யார் எம் மக்களுக்கு(எனக்கல்ல) நல்லது செய்தாலும் ஆதரிக்காவிட்டாலும் பாராட்டவோ அல்லது ஏற்றுகொள்ளவோ தயங்க மட்டேன், அது நீங்களாய் இருந்தால் கூட,
// யாருமே இல்லையா?//
இருந்தால் சுட்டி காட்டுங்கள் முயற்ச்சிக்கிறேன்;
//நீங்கள் அடிக்கடி சொல்லும் மக்கள் இலங்கையில் தான் இருக்கிறார்களா?//
அவர்களை மட்டுமே நான் மக்களாய் பார்க்கிறேன் (புலி தவிர்ந்த)அது தவறாயினும் அதுவே என் கருத்து இதை நீங்கள் கிண்டல் செய்யலாம்;
//கட்சி தலைவர்கள் இயக்கங்கள் ஏதாவது உண்டா? //
பிள்ளையானை சொல்லலாம்; காரனம் குறுகியகாலத்தில் மிக வளர்ச்சி; ஆனால் அவர்கூட சிலவேளையில் இருப்பிட (முதல்வர்)நிலையை தக்கவைக்க செயல்படுகிறாரோ என தோன்றுது, ஆனால் அவருக்கு பின்னால் இருந்து இயக்கும் ஆலோசகர்களை பாராட்டலாம்; இவர் கூட ஒரு புதுமுகம் தானே உங்கள் பலகேள்விக்கு பிள்ளையான் வளர்ச்சியே பதிலாக அமையும்;
:://அதுவும் யாருமே இல்லையா? //
இருக்கு ஆனால் இல்லை என்பதே என நிலை;(வில்லதனமான கேள்வி)
//ஆரம்பம் முதல் எமது கேள்வி இதுவாகவே இருந்தது.//
30 வருடத்துக்கு முன்பிருந்தே என் நிலை இதுதான், இதுக்காக எனக்கு இயக்க வேறுபாடு இன்றி பரிசுகள் கிடைத்தன, புலம் பெயர் தேசத்தில் புலிகளால் கிடைத்தது; அந்த அளவுக்கு எனது நிலையில் நான் நிதானமாக இருக்கிறேன்,
//இதற்கு மதிப்பளிப்பீர்கள் என்று நினைக்கிறோம்.//
இதைதான் பலர்இடம் இருந்து எதிர்பார்க்கிறேன் (மக்களை மதியுங்கள்). நான் எதிர்பார்ப்பதை நான் மற்றவர்களுக்கு கொடுக்க தயக்கமா என்ன,
சந்திரா முடிந்தவரை முயற்ச்சித்துள்ளேன்; என்னமாய் போட்டு படுத்துறாங்களப்பா,,,,,,??
jalpani
புலி இருந்தவரை இலங்கை தளத்தில் இருந்தவர்களின் (முக்கியமாக டக்ளஸ்) அரசியலை புரிந்து கொள்ள முடியும். புலியின் நெருக்கடிகளின் உச்சத்தில் அவர்கள் என்ன செய்ய முடியும். அது புரிந்து கொள்ளப்பட வேண்டியதே. ஆனால் இப்போது தான் புலி இல்லையே! ஏன் தமிழருக்கான தீர்வுகள் குறித்து தோழர் வெளிப்படையாக பேச மறுக்கிறார். நேற்றும் மூடுமந்திரமான அறிக்கை வெளியிட்டாரே ஒழிய மகிந்த என்ன தரப் போகின்றார் என சொல்லவில்லையே? எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்களோ என்றுதான் தோன்றுகின்றது.
santhanam
கம்முனிஷம்; மாக்சிசம்; லெனிஷ்சம்; அரசியல் பேசியவர்கள் அனைவரும் துரோகிகளாக புனையபட்டு என்கவுன்டரில் சுடப்பட்டார்கள் .ஆயுதம் மட்டுதான் எனது தலைவனும் தான் கடவுள் என்றவர்கள் இதற்கு விரோதி.
chandran.raja
கேட்ட கேள்விக்கு மதிப்பளித்து பதில் வழங்கியமைக்காக பல்லிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனியும் தொடருவோம்.
கரம் கொடுப்போம்!
வடம் பிடிப்போம்!!
யாரையும் தடம் போட்டு இழுக்க மாட்டோம்!!!.
Nanthan
Yes you are right if you said this in 1970s. Now we suffered/lost more than enough,& we need justice, respect, rights and freedom before we even consider your article. just forget all our past painfull/hatefull Tamil history, work together for Tamils freedom from Sinhala oppression.Thank you for your late “Ganam”
rooto
எல்லாம் சரி இலங்கை எங்கட நாடு எண்டு நான் என்னன்டு ஏற்கிறது?? நான் எனது பல்கலைக்கழக படிப்பையும் முடித்து கணக்கீடு படிப்பிலும் பாதிவரை முடித்தவன்! நான் எனது வேலைக்காக தேடியலைந்த நாட்களில் ஒரு பிரபல கொம்பனியின் இன்ரவியூவில் எல்லாம் சரியாகி கடசியா அவன் சொன்னான் நீ தமிழன் உன்னை இந்த வேலையில் போடேலாது எண்டு.(துறைமுக பகுதிக்குள்ளும் செய்யவேண்டிய வேலை அது/ அப்ப ஏன் அவன் சிங்களவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் எண்டு போடல? இது எங்கட நாடா? வேற எந்த நாட்டில நீ இந்த நாட்டு குடிமகன் ஆன உனக்கு இந்தவேலை தரமாட்டன் ஏனெனில் நீ குறிந்த இனத்தை சார்ந்தவன் என்பது மட்டுமே பிரச்சனை) தவிர எனது நண்பர் ஒருவர் கடல்கடந்த கிளகள் கொண்டியங்கும் ஜப்பனின் கொல்சிம் கொம்பனியின் இலங்கை கிளையில் சுமார் 1 வருடங்களாக வேலை செய்தான். சும்மா வேலை இல்லை மனேஜர் பொசிசன். அவன் வேலை நிமிர்த்தம் ஒரு உயர்பாதுகாப்பு இடத்துக்கு செல்லவேண்டியிருந்தது. கேவலம் அவன் தமிழன் என்ற காரணத்தால் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கபடவில்லை. அவனது வாகன ஓட்டுனர் சிங்களவனாலேயெ அவ் வேலை செய்யும்படி அந்த அதிமேதாவி சிங்கள துருப்புகள் கூறின!! இதை அவன் கொம்பனியில் முறைப்பாடு செய்தவுடன் அவனது கடமைகள் மாற்றப்பட்டனவே அன்றி அவனை இலங்கை என்னுடைய நாடு என்று சிந்திக்குமளவிற்கு எதுவும் செய்யப்படவில்லை. இது நடந்தது 2007 களில். அப்ப புலி இருந்தது இப்ப புலி இல்லை எண்டு பேசவராதயுங்கோ!! 1970 களிலும் இதே நிலைதான் தமிழனுக்கு!! நீங்க வெளிநாட்டில இருந்து படிச்ச அரசியல் அறிவாளிகள் கருத்தை தீர்வை முன்வைக்கிறன் எண்டு… ஒருக்க இலங்கை வந்து இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் விறுத்தத்தை பாருங்கள்!! நான் புலியை வெறித்தனமாக ஆதரிக்கும் ஒருவனோ அல்லது புலி எதிர்ப்பை எனது வாழ்வின் லட்சியமாக கொள்ளும் ஒருவனோ அல்ல!! ஆனால் இப்படிபட்ட என்னாலேயே இலங்கையை எனது நாடு என்று எண்டும் சொல்ல ஏலாது!!
பல்லி
அப்போ கொழும்பில் வேலைசெய்யும் அனைவரும் சிங்களவர்களாய் மாறியவர்களா? இப்படி புருடா விட்டுதானே தொடங்கினியள் சன்னதத்தை, அடங்கின பாடே இல்லையா? தொடக்குபவர்கள் யாரோ தொலைபவர்கள் யாரோ;
பார்த்திபன்
பல்லி,
இப்ப பலபேர் அப்படியே சொல்லிக் கொடுத்ததை அல்லது வேறு யாரும் அளந்ததை அப்படியே ஒப்பிக்க வெளிக்கிட்டினம். சமீபத்தில் திருமாவளவனனின் பேச்சொன்றைக் கேட்டேன். அதில் அவர் கிருசாந்தி உட்பட 600 இளம் பெண்களை இந்திய இராணுவம் கற்பழித்துக் கொலைசெய்து, செம்மணி என்ற இடத்தில் புதைத்ததாக வீராவேசமாக பிளந்து கட்டிக் கொண்டிருந்தார். திருமாவளவனுக்கு சந்திரிகா காலத்திலும் இந்திய இராவணுவம் இலங்கையிலிருந்ததாக எவர் சொல்லிக் கொடுத்ததோ?? அதுபோல் சீமான் சமீபத்திய குமுதம் பேட்டியில் தலைவர் கரும்புலிகள் தாக்குதலுக்கு செல்ல முன், அவர்களை அழைத்து நீங்கள் தாக்குதல் நடத்தப் போகும் இடத்தில் பெண்களும் சிறுபிள்ளைகளுமிருந்தால், முதலில் அவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தி விட்டே தாக்குதலை நடத்தும்படி கண்டிப்பாக கட்டளையிடுவாராம். அது போல் மடு தேவாலயத்தை இலங்கை இராணுவம் தாக்கியழித்து விட்டதாம். அதனைக் காப்பாற்றவே புலிகள் இலங்கை இராணுவத்தோடு அந்தப் பகுதியில் போர் புரிய வேண்டி வந்ததாம். சீமானின் பேட்டியைக் கேட்டபின் அப்படியே கண்ணைக் கட்டிட்டுது…….
sivam
புலியின் அரசியல், புலி எதிட்பு வாதம், அரசின் சிங்கள இனவாதம் ஆகிய மூன்றும் ஒன்றல்ல. வேறு வேறு அரசியல் இலக்குகள் ஆனால் இவைகளுக்குள் இருக்கும் நெருங்கிய தொடர்பு தீவின் அணைத்து மக்களுக்கும் ஆபத்தானது. தமிழர்கள் இனவாத ரீதியில் ஒடுக்கப்படவில்லை என்பது சிங்களமக்கள் சுரண்டப்படவிலை என்று சொல்வதற்கு சரி.
chandran.raja
// என்னாலேயே இலங்கையை எனது நாடு என்று சொல்ல முடியாது// றோட்ரூ.
பட்டதாரியின் அறிவு பளிச்பளிச் என்று கண்ணை குத்துகிறது. என்ன? சுகமாய் பிரச்சனையை முடித்துவிட்டீர்கள்.பட்டதாரி என்பதால் இலவுவாக வாழமுடிகிறது. ஏழை பாளைகள் என்ன செய்யமுடியும்? தாய்நாடு என்று சொல்லி வாழ்ந்து தானே! தீரவேண்டும். றோட்ரூ இப்ப உங்களுக்கு எது? தாய்நாடு. நாளை??
nathan
சிறு பிழை திருத்தம்
சிந்தனையாளர்களே…….
கெஞசம்பொறுங்கள் இப்போ நொந்து நொடிந்து போய் இருக்கும் மக்களை உடன் காப்பாற்ற என்ன வழியென்று பாருங்கள் புதிதாக இனி ஓருவரை தேடுவதைவிட இபருப்வர்களை வைத்து முதலில் சாகிடக்கும்மக்ககள காப்பதற்கு வழியைச் சிந்தியுங்கள் (அழகி சென்னது போல் குறைந்தது தென்னைமரம்போல் இருப்பவாகளை வைத்தாவது இதை செய்வதற்கு முயற்சி செயவதற்கு வழியைக்காண முயற்சி செய்யுங்கள்.