மியன்மார் அரசாங்கம் தனது பாரிய இராணுவத்துக்கு தொடர்ந்தும் சிறுவர்களை சேர்த்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ள சிறுவர் போராளிகள் தொடர்பான விவகாரத்துக்குப் பொறுப்பான ஐ.நா.நிபுணர் ராதிகா குமாரசாமி, அதேசமயம் இலங்கையில் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல் விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஐ. நா. தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது மியன்மாரில் தான் ஸ்வேயின் அரசாங்கம் தொடர்ந்தும் படைக்கு சிறுவர்களைத் திரட்டி வருவது தொடர்பாகவும் இலங்கை முகாம்களிலிருந்து சிறுவர்கள் உட்பட இடம்பெயர்ந்த மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் ராதிகா குமாரசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மியன்மாரில் பிராந்திய மட்டத்தில் ஆட்திரட்டல் இடம்பெறுவதாக தென்படுவதை ராதிகா குறிப்பிட்டிருப்பதாக இணையத்தள செய்தி சேவை தெரிவித்தது. இலங்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் டிசம்பர் இல் இலங்கைக்கு செல்வதற்கு பற்றிக் கம்மெயார்ட்டை தான் நியமித்திருப்பதாகவும் அதன்பின் அவர் செய்தியாளர் மாநாட்டை நடத்தி இலங்கை தொடர்பான சகல கேள்விகளுக்கும் பதிலளிப்பாரெனவும் கூறியுள்ளார்.