வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வேளை வந்துவிட்டது. மகாநாயக்கர்களை சந்தித்த பின் ஜெனரல் பொன்சேகா

pr-can.jpgயுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இப்போது வழிபிறந்துள்ளது என்று தெரிவித்த எதிரணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா வட, கிழக்கு மக்களின் உரிமைகளை கவனிக்கவேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை சென்று தலதாமாளிகையில் வழிபட்டபின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற சரத்பொன்சேகா பின்னர் அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

வட,கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண இப்பொழுது வழி ஏற்பட்டுள்ளது. யுத்தம் முடிவுற்றதால் மக்கள் அமைதியாகவும் அச்சமின்றியும் வாழும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்றாலும் அகதி முகாம்களில் உள்ளவர்களை மீள்குடியேற்றும் விடயத்தில் தாமதம் காட்டப்படுகிறது. அவர்கள் சொந்த இடத்திற்கு உடனே அனுப்பப்படவேண்டும்.

வட,கிழக்கு யுத்தம் முடிவுற்று மக்கள் அமைதியாக வாழும் வேளையில் அவர்களது உரிமை பற்றி நாம் கவனிக்கவேண்டும்.கவனிக்க வேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளோம். யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் 13 ஆவது அரசியலமைப்புத்திருத்தச்சட்டம் இருந்தபோதும் இன்று நிலைமை வேறாக உள்ளது. அதற்கு மேலாக உரிமைகள் உள்ள சரத்துகள் அடங்கிய தீர்வை பாராளுமன்றில் பெறப்படும் அதிகாரம் மூலம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.சிங்களவர்,முஸ்லிம்கள்,தமிழர்கள் எல்லோரும் இந்த நாட்டு பிரஜைகள்,அவர்கள் மத்தியில் ஒற்றுமை ,புரிந்துணர்வு ஏற்பட வேண்டியது இன்றைய தேவையாகும். 13 ஆவது அரசியலமைப்பு சட்டத்தினை ஜே. வி.பி. எதிர்த்தபோதிலும் இப்பொழுது எம்முடன் இணைந்துள்ள அவர்கள் அதற்கு ஆதரவளிக்கிறார்கள். இதற்காக அதிகாரத்தை பரவலாக்குவதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படும். என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

 • MBBS
  MBBS

  பொன்சேகா பதவிக்கு வரவேண்டும் என்பதே எனது விருப்பம் காரணம். தமிழ் ஆயுத குழுக்கள் அனைத்தின் விரலாறும் அடங்கும் தமிழ் இணையத்தளங்கள் பலது அதாவது மகிந்தவின் மடிக்குள் இருந்து கூத்தாடும் தமிழ் இணையத்தளங்கள் பலதும் அடங்கும்.

  Reply
 • palli
  palli

  ஆடினகாலும் நீட்டிய கையும் ஓயாது என்பார்கள், அதுபோல்; புலியாக வாழ்ந்த புண்ணாக்கும்; பரபரப்பாய் படியேறிய பேனாக்களும் தளம் மாறும்;
  என்பது போல் நண்பர் ஆதங்கம் இருக்கு, சேகரா வருவாரோ இல்லையோ உங்கள் ஆசையும் கடந்த கால ஈழமும் ஒன்றுதான்;

  Reply
 • VS
  VS

  What is unpardonable in this saga is that the enemies whom Sarath Fonseka fought are using him now to destroy the very forces he fought to protect. He was accepted as a hero because he fought to defend the nation. Every battle he won was seen as a victory for the nation threatened by the enemies. Of course, a share of it goes to him too. But the war was won not for Sarath Fonseka but for the nation. How can he now join the same old enemies who continue to threaten the nation? How can he now get out of his uniform and destroy the very ideals that he fought to uphold and protect?

  Heroes die with their boots on defending the causes they fought for. They don’t change their uniforms and turn against the forces that lifted them into the high pedestal of heroism. This is the tragedy of Gen. Fonseka. He has turned against himself. He was trusted, admired and hero-worshipped when he fought for the nation. Now he is seen as a civilian fighting for his own glory. This has undermined his reputation as a selfless defender of the nation. This not only questions his character and motives but also his commitment to fundamental principles to which he pledged his life. “Over my dead body,” he said committing himself unequivocally to the principles which he swore to defend. This has placed his followers in a serious dilemma. Whom are the voters going to trust: is it the civilian Sarath Fonseka playing politics with the enemies of the nation or the Gen. Fonseka they knew as their hero? By joining his former enemies isn’t he committing hara-kiri? He seems to be the typical flawed Shakesperian character like Coriolanus whose hubris brought him down, despite his brilliance in the battlefield.

  Reply
 • kamal
  kamal

  வடகிழக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண இப்பொழுது வழி ஏற்பட்டுள்ளது.//

  அப்ப இவ்வளவு காலமும் புலிதான் தடையாக இருந்ததென்கிறீங்கள். பிறகு புலியின் காசிலென்றாலும் தேர்தலில் நிற்பேன் என்றும் சொல்லுறீங்கள். அரசியலில் அனுபவமும் உங்களுக்குப் பத்தாது என்கிறீங்கள் அந்த விடயத்தில் புலியுடன் உங்களுக்கு உறவு வர சந்தர்ப்பம் உண்டுதான். குழப்புறீங்கள்.

  எல்லாம் சரி வடகிழக்கு பிரச்சினைக்குத் தீர்வுகாண உத்தேசமா? தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண உத்தேசமா? இதிலேயே உங்கட திருவிளையாடலைக் காட்டுறீங்கள்

  Reply
 • kamal
  kamal

  இப்ப எத்தனை வருசமாய் இந்தப் போராட்டம் நடக்குது. இன்னும் எத்தனை வருசத்திற்க இதே போராட்டம் செய்யப் போகிறீங்கள்.; தமிழ்க் கடைககாரர் இலங்கைப் பொருட்களை இறக்காமல் விடுங்கோ. சிங்களவர் கடைகளில் நீங்கள் போய்ச் சாமான்கள் வாங்காதேங்கோ. பிரச்சினை முடிஞ்சுது, போராட்டமும் தேவையில்லை.

  சரி இலங்கையில் முதலீடு செய்யும் புலிப்பினாமிகளை என்ன செய்ய உத்தேசம்.

  Reply