இணக்கப்பாட்டு அரசியலால் மக்களுடைய பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் – அமைச்சர் டக்ளஸ்

011109dag.jpgஎதிர்ப்பு அரசியலை நடத்துவதினை விட்டு இணக்கப்பாடு அரசியலை நடத்துவதின் மூலம் எமது மக்களுடைய பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியுமென சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவில் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

தனது அமைச்சு நிதியிலிருந்து வவுனியா பாடசாலைகளுக்கு புத்தகங்கள், கணனி மற்றும் தேவைப்படும் முக்கிய உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் அவர் உரையாற்றினார். தெற்கு வலயக் கல்வி பணிமனையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் மேலும் பேசுகையில் கூறியதாவது :-

இனம் தெரியாதவர்களினால் கடத்தல் என்பதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. கடத்தல் சம்பந்தமாக எதுவும் நடைபெற்றால் தெரியப்படுத்துங்கள். நடவடிக்கை எடுக்கப்படும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

  • accu
    accu

    Dogs may bark but caravan moves on. தோழர் உங்கள்மேல் நம்பிக்கை உள்ளது. செயல்படுங்கள் .

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ”…இனம் தெரியாதவர்களினால் கடத்தல் என்பதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது. …’
    இனம் தெரிந்தவர்களால் நடத்தப்பட்ட கடத்தல்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்?

    ‘….எமது மக்களுடைய பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியுமென …’
    மிக முக்கியமான ”சில” பிரச்சினைகளே எமது மக்களின் முக்கிய பிரச்சினைகள் என்பது தெரியாதா தோழரே?

    Reply
  • palli
    palli

    இணக்கபாடு உன்மைதான்:
    அது யாருடன்?
    தமிழ் அமைப்புகளுடனா??
    மகிந்தா அரசுடனா.,,,??
    சிங்கள கட்ச்சிகளுடனா??
    கடந்த கால அனுபவம் இப்படி கேக்க வைக்குது, இருப்பினும் தமிழருக்காக எதாவது செய்ய நினைத்தால் விரைவாக செய்யவும், சிலவேளை ஆட்ச்சி மாறினால் உங்கள் பதவி போய்விடும்தானே; நீங்கள் மறுகட்ச்சி வந்தாலும் ஆட்ச்சியில் இருப்பீர்கள் என தெரியும் இருப்பினும்
    அதுக்கு சில காலம் எடுக்குமல்லவா? அதனால் முடிந்ததை விரைவாக செய்யுங்கள் ;

    Reply
  • appu hammy
    appu hammy

    Where were you when Pillaiyaan wanted police powers and other privileges for the Provincial Council?

    Reply
  • menika
    menika

    Is it an election campaign? Good joks!!

    Reply
  • BC
    BC

    அமைச்சர் டக்ளஸ்சை பற்றி நல்ல செய்திகளே இப்போ வருகின்றன. தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்.

    Reply
  • Upul Karu
    Upul Karu

    மகிந்தா வென்றால்தான் நீர் பாராளுமன்றத்தில் இருக்க முடியும்! சரத் பொன்சேகா வென்றால், நீர் வெகுவிரைவில் கம்பி எண்ண வேண்டி வரும்! அதற்கு இடையில், எங்கேயாவது வெளிநாடொன்றுக்கு ஓடித்தப்பும்!

    ஓன்றாக நின்று தமிழனை அடிமையாக்கினீர்கள் பிரிந்து சென்று பிரதேசவாதம் உருவாக்கியது மட்டுமல்ல 30 வருட நம்பிக்கைகளை நாசமாக்கினீர்கள் இப்போது எல்லோருக்கும் நானே தலைவன் என்ற நினைப்பில் புத்திமதி கூற வருகின்றீர், உம்மைப் பொறுத்தவரை தமிழர்கள் யாவரும் மடயர்கள் நீர் மட்டும்தான் புத்திசாலி என்று எண்ணுகிறீரா??

    உமது வேலையைப் பாரும், மக்களுக்கு தெரியும் எப்படி வாக்களிப்பதென்று ஏனென்றால் நாம் இயக்கங்களை தொடங்கும் முன்பே அவர்கள் வாக்குச்சாவடியைப் பார்த்தவர்கள்.

    Reply
  • nathan
    nathan

    அதைநீர் இனம்தெரியாமல் போன புலிகளிடம்தான் கேட்கவேண்டும். அல்லது பிரபாகரனால் நாணக்கயிற்றில் கட்டிவிட்டிருந்தவர்கள் இப்போது கட்டாககாலியா திரிபவரிடம் கேழும்….?எந்த தலைவர்களையாவது சிறிலங்கா அரசு சுட்டதாய்யா ?உம்மிட பிணம்தின்னி தலைவர்தானையா சுட்டவர்; அந்த மனிசனும் பாவம் பிள்ளைகள் சிறையில உண்ணாவிரதம் இருக்குதுகள் என்று பார்கச் செண்றமணிசன அடிச்சுக்குதறி சக்கொண்டு போட்டியளே; மீண்டும் அந்தமனிசன் யேசுநாதர் உயிர்தெழுந்து வந்தமாதிரி வந்து புலிகளால நடுத்தெருவில விட்டமாக்களை எப்படியாவது பாதுகாத்திட வேனும்மென்டு அந்தமனிசன் பாடபடுகிறார். அந்த மனிசனட்டப்போய் விதண்டாவாதமா. புலியால் தேசத்துரோகியெண்டும் அரசால் புலியெணறும் காணாமல் போனய்கொணடு இருக்கிற பட்டியலை அந்மனிசன குறைக்க வேனுமெண்ட பார்க்குது. அதைநீர் கேள்வி கேடக வேனுமெண்டா நீங்கள் காலாகாலமாக வாக்குப்போட்டு அனுப்பினிங்களே இப்ப கட்டாகாலியாக திரியினம் ரிஎன்ஏ காறர் அவயட்ட கேளுங்கோவேன் தம்பிமாரே..

    Reply