ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவிக்கையில்இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். ஒன்று
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல். அடுத்ததாக தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வாக அரசியல் அதிகாரப் பகிர்வு என்பனவாகும்.கடந்த காலங்களில் நாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் தொடர்ச்சியாக கதைத்து வந்தபோது அவற்றைச் செய்து முடிப்பேன் என்ற உறுதிமொழியைத் தந்திருந்தார். இந்த வகையில் மீள்குடியேற்றம் தொடர்பிலான உறுதிமொழிகளை இப்போது அவர் நிறைவேற்ற ஆரம்பித்திருக்கின்றார்.
நாங்கள் அந்த மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றோம். அங்கு மக்களின் வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த நிலத்திற்கு வந்த திருப்தியில் வாழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களுடைய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதற்குத் தொடர்ந்தும் நாங்கள் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருகிறோம். அதைச் செய்வதாக அரசாங்கமும் உறுதியளித்திருக்கின்றது.
இப்போது யுத்தம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தன்னுடைய மகிந்த சிந்தனையின் இரண்டாம் தவணையில் நியாயமான தீர்வொன்றைத் நிச்சயமாக வழங்குவேன் என்று எங்களுக்கு உறுதி தந்திருக்கின்றார். இப்படியான நிகழ்ச்சி நிரல் ஒன்று நடந்துகொண்டிருக்கின்றபோது இந்த நிகழ்ச்சி நிரலைக் குழப்பிவிடக்கூடாது. அதனடிப்படையில் எமது கட்சி அவரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
palli
ஏதோ இதுவரை தமிழருக்காக பாடுபட்டமாதிரி இப்போ ஜனாதிபதிக்கு ஆதரவு என அறிக்கை; என்றுமே ஜனாதிபதிக்கே எமது ஆதரவு என அறிக்கை விடுவதே நல்லது, யார் ஜனாதிபதியாக இருந்தாலும் ஆழும் கட்ச்சிக்கு கழகத்தின் ஆதரவு தொடரும்,
Rohan
அய்யோ நீங்கள் தானே மகிந்தவுடன் நிண்டிருந்தால் கிடைச்ச ஆதரவும் கிடைச்சிருக்காது எண்டு சொன்னியள். இப்ப ஏன் இந்த மன மாற்றம்? Better bargain ஏதும் கிடைச்சிருக்கோ என்னவோ?
மாயா
புளொட் தாமதமாக எடுத்த முடிவு. இதை வவுனியா தேர்தல் சமயத்தில் எடுத்திருக்க வேண்டும். இப்போதாவது கண் திறந்ததே? பார்க்கலாம்? இருந்தாலும் புளொட் தலைமை இன்னும் சரியாக இல்லை. அதை சுவிசில் மீண்டும் காண முடிந்ததாக புளொட் தோழர்களே சொல்லி வேதனைப் பட்டார்கள். சித்தர் , சுவிசுக்கு வந்து மேடையில் பேசியதோடு சரியாம். இறுக்கமான ஆதரவாளர்கள் தூரமாகி விட்டார்கள்? அதை , பழைய தோழர்களோடு பேசிய போது உணர முடிந்தது.
இனியாவது புளொட் தோழர்கள் மீண்டும் இணைவார்கள் என நினைத்தேன். இல்லை என்பதே என் கணிப்பு. கொள்கை – நம்பிக்கை – போராட்டம் – எதிர்பார்ப்பு – புணரமைப்பு – தியாகம் என நம்பியவர்கள் மனதால் துவண்டு போய் விட்டார்கள். உமாவோடு புளொட் அழிந்து விட்டது. புலியும் பிரபாவோடு அழிந்து விட்டது. இப்போது வீதியில் இருப்போர் சப்பானி கொட்டி ஆமா போட்ட கூட்டம் என்றால் பலர் நம்ப மறுப்பார்கள். ஆனால் அதுதான் உண்மை. இனியும் இவர்களோடு இணைந்து அழிய நினைத்தால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. நீங்கள்தான் பொறுப்பு.
palli
மாயா உங்கள் அனுபவ எழுத்தில் தெரிகிறது ;அருமயான கருத்து;
Anonymous
இது செய்தியே அல்ல. PLOT அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்ற அறிக்கை வந்தால் அதுதான் செய்தி.
suban
தமிழ்மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஏதாவது நிலைப்பாடு எடுத்தே ஆகவேண்டும்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காது தவிர்த்தல் என்பது கூடஒருபக்க ஆதரவு நிலைதான். கடந்த ஜனாதிபதி தேர்தலைப்போல.
தெரியாத பிசாசைவிட தெரிந்த பிசாசு பரவாயில்லை.
இங்கிருந்து யார்தான் பின்னூட்டமிட்டாலும் இலங்கை அரசினூடகவே இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெல்லமுடியும் என்பதே இன்றைய யதார்த்தம். சாப்பாட்டுக்கே வழியற்றுக்கிடப்பவனிடம் பிரியாணி செய்வது அல்லது எப்படிச்சாப்பிடுவது என்று பேசிக்கொண்டிருப்பது கொஞ்சம் அபத்தம்.
புளொட் ஒரு அறிக்கை விட்டால் அதை நாங்கள் செய்தியாக்கினால் அந்த அறிக்கை பற்றி பேசுவதே நியாயம். கேலி கிண்டல்கள் இந்த இடத்தில் தேவையில்லை
Thaksan
சரத் பொன்சேகாவா? மகிந்தவா எனும் நிலையில் மகிந்த தெரிந்த பிசாசு என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டின் நலன் என்று பார்க்குமிடத்து சுமார் 40 வருடங்களாக இராணுவ அனுபவத்தில் மட்டுமே இருந்தவரிட்ம் நாட்டின் தலைமையை கையளிப்பது இலங்கையை இராணுவ ஆட்சியை நோக்கி தள்ளிவிடுவதாகவே அமையும். அது தமிழர்களை பேசாமடந்தைகளாக்கிவிடும் என்பதுடன் ஒட்டுமொத்த இலங்கையரின் ஜனநாயகத்தையும் ஆழக்குழிதோண்டி புதைத்துவிடும். வருங்காலத்தில் ஆட்சியதிகாரத்திற்கெதிராக இன முரண்களை களைந்து ஒட்டுமொத்த இலங்கையரையும் ஒற்றுமையுடன் கிளர்ந்தெழ வைக்கும் சாத்தியம் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் கிடைக்கலாம். ஆனால் அதற்காக கொடுக்கப்படும் மனித உயிர்களின் விலை மிகமிக அதிகமாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இனியும் அழிவுகளை எதிர்கொண்டு வரலாற்றை படைக்கும் கனவுகளில் மிதக்க இந்த மண் தயாராக இல்லை. புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதகமில்லாதவரை உணர்ச்சி பொங்கும் வார்த்தைகளில் அரசியல்> போராட்டம் பற்றி உசுப்பேத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த நாட்டின் அரசியல் பற்றி கதைக்ககூட தார்மீக உரிமை கிடையாது என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் பொருளாதார அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடுகளில் சுதந்திரமிழந்து அடிமைகளாக தங்களை பக்குவப்படுத்தி வாழப்பழகிக் கொண்டார்கள். அங்கே அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை சிந்திக்கக்கூட நேரமில்லாமில்லாமல் அடிமையிலும்கேவலமாக உழைப்பை(பணத்தை) மட்டுமே குறியாக்கி வாழ்ந்து தொலைக்கிறார்கள். இலங்கை அரசியல் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு> சிலருக்கு வருமானம்> சிலருக்கு தங்கள் குற்றஉணர்வின் காழ்ப்பு. தயவுசெய்து இனியாகிலும் உங்கள் ஊரின்> உறவுகளின் வாழ்வுக்கு மதிப்பளியுங்கள்.
palli
சுபன் இந்த கட்டுரையில் உங்கள் பின்னோட்டம் மட்டுமே கேலியாகவும் கிண்டலாகவும் இருக்கு, அதுவும் யதார்த்தமான கிண்டலாக, சாப்பாடு பிரியாணி அளவுக்கு போய் விட்டியள், நாம் கேப்பது வாழ உயிர் வேண்டும்; குடிக்க (குழிக்க அல்ல) தண்ணி வேண்டும் சிறிது சுகாதாரமும் எம்மை சுகந்திரமாக நடமாட விட்டால் அதுவே போதும்; சோத்தையும் பிரியாணியையும் நாமே சேகரிக்கலாம், அதுக்காக குரல் கொடுக்கவோ அது பற்றி சிந்திப்பவர்களின் கருத்தை கேக்க சித்தாத்தர் மறந்து விட்டார்; அதே போல் மாகான தேர்தலில் அரசுடன் கூட்டு சேர்ந்திருந்தால் சிலவேளை வெற்றி பெற்று வவுனியாவுக்காவது ஏதும் செய்திருக்கலாம்; ஆனால் இந்த ஜனாதிபதி தேர்தலில் அரசுக்கு ஆதரவு கொடுத்து அவர் வெற்றி பெற்று திரும்பவும் ஜனாதிபதியாகி அவரிடம் கழகம் கோரிக்கை அதை அவர் நிறைவேற்றுவதை இப்போதே அவர்தானே நாட்டாண்மை கேட்டு பெறலாமே; கலியாணம் செய்து குழந்தை பெற்றுக்க முடியாதவன் 60ம்கலியானத்துக்கு பின்பு பார்ப்பம் என்பதுபோல் நீங்கள் வந்து எங்களை கேலி செய்து விட்டு;;;;;;;;;;;
Rohan
இலங்கை அரசியல் மேடையில் தமிழனுக்குப் பெயர் கால்பந்து