புலிகளின் விமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விமானப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புலிகள் மிகவும் சு10ட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே விமானப் படையினர் நடத்திய தேடுதலின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு பொருத்தப்படும் அதிசக்தி வாய்ந்த என்டனாக்கள் – 02, வி 8000 ரக தகவல் பரிமாற்ற கருவிகள் – 04, கனரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் – 300, பிஸ்டல்கள் – 02, 9 மி.மி. ரக துப்பாக்கி ரவைகள் இரவு நேரத்தில் பயன்படுத்தும் தொலை நோக்கிகள் என்பன மீட்டெடுக்கப்பட்டுள்ளது.