வழமையாக மாவீர்ர உரையை பாலா அண்ணை தான் தலைவருக்கு எழுதிக் கொடுக்கிறவர் என்றது தெரியும்தானே. அதுக்குப் பிறகு பாலா அண்ணையும் எங்கட கவிஞர் சேரனும் அதுக்கு பொழிப்பும் விளக்கமும் குடுக்கிறது வழமை. ரெண்டு மூன்று வருசமா பாலா அண்ணை இல்லாத்தால திருநாவுக்கரசு போன்ற ஆட்களைக் கொண்டுதான் மாவீரர் உரை எழுதுறது வழக்கம். அதுக்கு விளக்கம் பொழிப்பு எழுத நம்மட கவிஞரைப் போல கனபேர் வந்திட்டினம்.
இந்த வருசம் ஒரு மாறுதலுக்காக புது ஆளைக்கொண்டு மாவீரர் உரையை எழுத தலைவர் யோசிச்சு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பெரும்பாலும் தேசம்நெற் கட்டுரையாளர் ஈழமாறன் தான் இந்த உரையை தலைவருக்கு தயாரித்துக் கொடுக்க இருப்பதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கின்றது. வழமைக்கு மாறாக இந்தத் தடவை தன்னுடைய மாவீரர் உரைக்கு முன் மக்கள் என்ன விசயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்றதையும் தலைவர் அறிய ஆவலாய் இருக்கிறாராம். அதால தேசம்நெற் பின்னூட்டக்காரர் முக்கிய விசயங்கள் ஏதும் தலைவரிட்டை இருந்து எதிர்பார்த்தால் அதை இங்கனேக்கை பதிந்துவிடுங்கோ.
வழமைக்கு மாறாக இந்த வருசம் தலைவற்றை உரைக்குப் பதிலா புலனாய்வுத் தலைவர் பொட்டம்மானின் உரை வர இருப்பதாக சில வதந்திகள் வெளிவந்திருக்கிறது. அதால் தலைவர் இந்த வருசம் மாவீரர்தின உரையை 24 மணி நேரத்திற்கு முன்னதாக நவம்பர் 26ல் நிகழ்த்த இருக்கிறார். நாட்டின் புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு உரை மக்களுக்கு ஒலி ஒளி பரப்பப்படமாட்டாது என்றும் சொல்லி இருக்கிறார். அதனால பங்கருக்குள்ள இருந்து வாசிச்சுப் போட்டு தேசம்நெற்றில் அதனை பிரசுரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்காம் என்றதையும் சொல்லிக் கொள்கிறன்.
பார்த்திபன்
மகிந்த அரசு ஏற்கனவே தலையை, மண்டையில் போட முன், விசேடமாக உரையாற்ற வைத்து பதிவு செய்துள்ளதாம். அநேகமாக அந்த அலறல்ச் சத்தம் தான் இம்முறை “மாவீர” உரையாக வெளிவருமென்றும் ஒரு கிசு கிசு உலாவுது.
chilli
ஈழமாறனை எழுதச் சொல்லித் தலைவர் கேட்டிருப்பது வரவேற்கத் தக்கது. டொக்டர் மூத்திக்கு நோட்டிஸ் குடுத்திட்டுப் போன ஈழமாறன் மூத்தியுடன் கூட்டணி சேர்ந்து விட்டாரோ என்று எண்ணினேன். அவர் மாவீரர் செய்தி எழுதுவதில் பிசியாக இருந்திருக்கிறார் போல.
john
ஈழமாறனின் பங்குப் பிரச்சினைதான் அப்பிடி எழுத வைத்திருக்கிறது போலிருக்கிறது. இவரும் புலிக்குத்தான் வேலை செய்கிறார் போலும்.
கடியன்
ஈழமாறன் “தேசம் நெட்” இணைதளத்தின் எழுத்தாளன். அவர் புலிக்கு வேலை செய்தால், “தேசம் நெட்” இவ்வளவு காலமும் புலியினை நடு வீட்டுக்க வைத்திருந்திருக்கின்றது. அல்லாவிடில் “தேசம் நெட்” ம புலிக்குதான் வேலை செய்கின்றதோ? எந்த கன்னைக்கு வேலை செய்கின்றது? ஈழமாறன் கன்னைக்கு இல்லைபோல.
Rahul
ஈழமாறன் ஓடி ஒளிந்து விட்டாரா இல்லை புலத்து புலிகளுடன் சமரசம் செய்துகொண்டாரா? மாவீரர் செய்தியைக் காணம்.