தமிழ் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்ள சுவிற்சர்லாந்திற்கு வந்திருக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பு நவம்பர் 20ல் சுவிஸில் நடைபெறவுள்ளது. ‘சுவிஸ் வாழ் புலம்பெயர் உறவுகளை சந்தித்து மனம் திறந்த கருத்து பரிமாற்றங்களை நடத்துவதற்கான நிகழ்வு’ இதுவென இச்சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ள அக்கட்சியின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது. இச்சந்திப்பில் ‘சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிகழ்வுகள் குறித்தும் தமிழ் பேசும் மக்களுக்கான சாத்தியமான எதிர்கால அரசியல் தீர்வு குறித்தும் புலம்பெயர் உறவுகளின் கருத்துக்களும் ஆரோக்கியமான விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படும்’ எனவும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாளை (நவம்பர் 20ல்) ஆரம்பமாக உள்ள மாநாட்டிற்கு நேற்று (நவம்பர் 18ல்) பெரும்பாலான தமிழ் முஸ்லீம் கட்சிகளின் உறுப்பினர்கள் சுவிஸ் வந்தடைந்தனர். இவர்களுக்கு மாநாட்டினை ஆரம்பித்து வைக்கு முன்னர் இன்று மாலை (நவம்பர் 19) விருந்துபசாரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. (தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்)
இம்மாநாட்டுக்கு வந்திருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடனான சந்திப்பு ஒன்று நவம்பர் 18ல் இடம்பெற்றது. கிழக்கு மாகாணம் வந்து அபிவிருத்தியில் பங்கெடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பிற்கு புலம்பெயர்ந்த மக்கள் சற்றுத் தள்ளி நிற்பதாக முதலமைச்சர் குறைப்பட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண வரவுசெலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருப்பதால் முதலமைச்சர் தமிழ் கட்சிகளின் மாநாடு முற்றுப்பெறுமுன் இலங்கைக்குத் திரும்புவார் எனத் தெரியவருகிறது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பில் தேசம்நெற் வாசகர்கள் கேட்கும் கேள்விகளும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு அதற்கான பதில்கள் பெறப்பட்டு தேசம்நெற்றில் பிரசுரிக்கப்படும். ஆகவே தேசம்நெற் வாசகர்கள் தங்கள் கேள்விகளைப் பதிவு செய்யவும்.
அமைச்சரைச் சந்திப்பதற்காக லண்டனில் இருந்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் சுவிஸ் சென்றுள்ளனர்.
சந்திப்பு நடைபெறவுள்ள காலம்
மாலை 6:00 நவம்பர் 20 2009
சந்திப்பு நடைபெறவுள்ள இடம்
Katholische Universitätsgemeinde (AKI)
Alpeneggstrasse 5
3012 Bern
London boy
இந்த கேள்விகளை திரு டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிப்பீர்களா?
கேள்வி 1 இந்த இவ்வளவு காலமும் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் புலிகளை அரசு அழித்து முடித்த உடனேயே இலங்கைபோய் அரசுடன் உறவாடி தமது முதலீடுகள் செய்ய திட்டங்கள் போடுவது பற்றிய தங்களின் கருத்து என்ன?
கேள்வி 2 இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் ஏன் நேரடியாக என்ன செய்ய உள்ளனர் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை உங்களுக்கு தெரியப்படுத்தித்தான் உங்களை மாநாட்டுக்கு அழைத்தார்களா அல்லது நீங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புலம் பெயர் தமிழர்களின் கருத்தை அறிய என வந்தீர்களா?
கேள்வி 3 நீங்களும் உங்கள் கட்சியும் மாறிமாறி ஆட்சிக்கு வரும் அரசுகளுடன் தொடர்ந்து அங்கம் வகித்ததின் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன?
கேள்வி 4 இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு முன்வைக்கும் என நம்புகிறீர்களா?
கேள்வி 5 இலங்கை இந்திய ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரும் சாத்தியக் கூறுகள் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
கேள்வி 6 தற்போது நடைபெறும் சுவீஸ் தமிழர் மாநாட்டின் மூலம் தமிழ்மக்களுக்கு என்ன உதவி கிடைக்கப்போகிறது?
கேள்வி 7 இந்த மாநாட்டை லண்டனில் ( அரசியல்த்தளம்) நடாத்துவீர்களா?
கேள்வி 8 தமிழர்கட்சிகளில் பலம்பொருந்திய உங்கள் கட்சி ஏன் ஒரு பொது மாநாட்டை எல்லா தமிழ் கட்ச்சிகள் அமைப்புகளையும் அழைத்து நடாத்தக்கூடாது?
கேள்வி 9 இலங்கை அரசும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வும் பற்றிய உங்களின் தனிப்பட்ட அபிப்பிராயம் என்ன?
கேள்வி 10 அரசுடன் சேரும் சிறீரெலோ போன்ற அமைப்புக்களை ஏன் உங்கள் ஈபிடிபியுடன் உள்வாங்கக் கூடாது?
கேள்வி 11 நாடு கடந்த தமிழ்ஈழம் அமைப்பது பற்றிய தங்களின் கருத்து என்ன?
கேள்வி 12 வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று வாக்கெடுப்புக்கள் நடாத்தப்படுகிறதே இது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?
கேள்வி 13 தமிழர் ஜக்கிய முன்னணி ஒன்று அமைக்கபடுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா? நீங்கள் முன்வந்து செயற்படுத்துவீர்களா?
கேள்வி 14 நீங்களும் ஆனந்த சங்கரியும் அடிக்கடி கடிதச் சண்டைகள் செய்தீர்களே அந்த விவகாரங்கள் எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டனவா?
கேள்வி 15 இன்று தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? எதிர்வரும் தேர்தலில் மகிந்தாவை ஆதரிப்பது சரியா? அல்லது ரனிலை ஆதரிப்பது சரியா? அல்லது சரத்தை ஆதரிப்பது சரியா?
கேள்வி 16 நீங்கள் வந்திருக்கும் இந்த இடத்தில் எல்லா தமிழ் அமைப்புக்களும் உள்ளனர் இவர்களுக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்ன?
கேள்வி 17 இன்று வரையில் தனித் தமிழ்ஈழம் அமைப்பதில் புலிகளின் ஆதவாளர்களின் ஆதங்கத்திற்கு உங்கள் பதில் என்ன?
கேள்வி 18 இந்தியாவுடனான உங்கள் உறவுகளின்படி இந்தியா தமிழரின் மாநில உரிமைகள் சுயாட்ச்சி உரிமைகள் விடயத்தில் என்ன கருத்துடன் இருக்கிறது?
கேள்வி 19 இந்தியா இலங்கை- இந்திய ஒப்பந்தம் பற்றி என்ன நிலைப்பாட்டில் உள்ளனர்?
கேள்வி 20 நீங்களும் மகிந்தா சகோரர்களில் ஒருவராக முடியமா?
palli
கேள்வி 21 இத்தனை கேள்விக்கும் அமைச்சராய் இல்லாமல் தமிழனாய் பதில் சொல்ல முடியுமா??
jalpani
இன்று ஜிரிவி யில் இந்த சந்திப்பு தொடர்பாக வெளிச்சம் என்ற நிகழ்ச்சியில் பேசப்பட்டது. இதன் பின்னால் புலியின் ஆளுமை இருப்பதாக சந்தேகம் வருகின்றது. இப்படிப்பட்ட சந்திப்புக்கள் குறித்து ஜிரிவி அவ்வளவு இலேசில் பேசமாட்டாது. மேலும் யுஎன்பியை மீண்டும் கொண்டு வருவதற்காக மேற்குலக அரசுகளாலும் புலிகளாலும் ஆடப்படும் சதுரங்க அரசியல் நாடகமாக இது இருக்கலாம் எனவே தோன்றுகின்றது. ஏனெனில் கடந்த காலங்களில் மாறி மாறி இதுதான் இலங்கையில் நடந்தது. மற்றும் எப்போது மகிந்தா அரசியல் தீர்வை வைக்கப் போகின்றார்?
திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இவற்றை கேட்குமாறு வேண்டுகின்றேன்.
Thamil
புலிக்கு பிரபாகரன்தான் தலைவர் இரண்டாம் முன்றாம் தலைவர்கள் கிடையாது. பிரபா அவமாய் அழிந்ததோடு புலியும் அழிந்துவிட்டது. புலிக்கும் ஈபீடீபீக்கும் என்ன வித்தியாசம்?. டக்லஸ் பொத்தென்று போய்விட்டால் ஈபீடீபீயும் உடன்கட்டை ஏறவேண்டியதுதான்.
இனியாவது இந்த தனிநபர் ஹீரோயிசத்தை விட்டு சரியான ஜனநாயக அமைப்புக்களை நாம் உருவாக்க வேண்டும்.
thamilan
என்ன ஆச்சரியம்!
தமிழன் என்ற பெயரில் நான் கேட்க இருந்த அதெகேள்வியை தமிழ் என்றபெயரில் ஒருநண்பர் கேட்டிருக்கிறார்.
palli
:://என்ன ஆச்சரியம்!//
இதுவா ஆச்செரியம்; கொழும்பில் இருந்து சுவிஸ்க்கு கொட்டாவி விட வந்ததை விடவா இது ஆச்செரியம்;