இதுவரை பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ் இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 நோய்த்தாக்கத்தின் காரணமாக கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர் நவம்பர் 04, 2009ஆம் திகதி உயிரிழந்தார்.
தற்போது 10 பேர் அளவில், ஏ/ எச்1என்1 நோய்த்தாக்கத்தின் காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இதையடுத்து, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாணத்திலுள்ள 1470 பாடசாலைகளையும் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.