ஜனாதிபதிக்கு தமிழ் கூட்டமைப்பு பா.உ. சிவநாதன் கிசோரின் பிறந்த நாள் வாழ்த்து

18kishor.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

18kishor.jpg

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • palli
    palli

    இதுக்கேன் மகிந்தா பண்ணிகாச்சல் வந்தவர் மாதிரி முகத்தை கோணிக்கிறார், சிரிப்பில் கூடவா இன உனர்வு: ஜயா வன்னி தந்த வளர்பிறையே உங்கள் பாசம் மிகவும் மோசமாக உள்ளது; இருந்தாலும் அவரால் உங்களுக்கு ஏதாவது பரிசாக தர(அமைச்சர்) கவசம் எதுவுமே இல்லையே; ஆனால் ரெலோ சிவம் மாதிரி செட்டிகுளத்தில் ஒரு சுகந்திரகட்ச்சி அலுவலகத்தை திறந்து அதன் நிர்வாக பொறுப்பை தாங்கள் எடுக்கலாமே, அதுக்கும் நீங்கள் முந்தினால்தான், காரனம் ரெலோ உதயனும் ஏற்க்கனவே விண்ணப்பம் போட்டுவிட்டு காத்திருப்பதாக கொழும்பு செய்திகள் சொல்லுகின்றன, புலம்பெயர் பினாமிகளை விட ஒருபடி மேலே போய் விட்டீர்கள்; இவர் முத்தம் கொடுக்கிறாரா? அல்லது சம்பந்தர் பற்றி மகிந்தாவிடம் போட்டு கொடுக்கிறாரா?? யாராவது புரிந்தவர்கள் சொல்லுங்கப்பா?

    Reply
  • Saturn
    Saturn

    கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயங்கும்
    வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

    Reply
  • palli
    palli

    பல்லி ஒரு விடயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன், அதுக்காக ஒரு கட்டுரை எழுத எனக்கு வல்லமை கிடையாது, ஆக எனது விடயத்தை எந்த கட்டுரையின் கீழ்போட என நினைத்தபோது இவர்கள் இருவரும் முத்த மழை பொழியும் காட்சி கன்முன்னே தோன்றியது, ஆக இதுவே சரியான தலைப்பாக இருக்கும் எனஇதில் எழுதுகிறேன், தவறாயின் பல்லியை மன்னித்துவிட்டு விடயத்தை மட்டும் கவனியுங்கள், இன்று இரவு TBC யின் அரசியல் அரங்கத்தில் ஒரு நகைசுவை நாடகம் போட்டார்கள்; அமைச்சர் ஒருவரை பேட்டி காண்பதுதான் கரு (அதுவும் இடதுசாரி கொள்கை உடைய அமைச்சராம்) தயவுசெய்து முடிந்தால் அதை நாளை மறு ஒலிபரப்பில் கேக்கவும்;

    TBC இயக்குனரும் ஆலோசகரும் சிரிப்போ சிரிப்பு; காரனம் தமிழ்மக்கள் பற்றி அமைச்சர் கருத்து அப்படி; இதில் முக்கிய விடயம் இது பதிலுக்கான கேள்வி நேரம்போல் இயக்குனர் நிகழ்ச்சியை மிக நிதானமாக நடத்தினார்; இதில் இரு மொழி பெயர்பாளர் வேறு, பரிஸில் இருந்து யோகரட்னம் என்பவர் தான் ஒரு இடதுசாரியென அறிமுகத்துடன் ஒரு கேள்வி கேட்டார்; அதுக்கான பதில் மூடியிட்டு போ என்பது போல் அமைச்சர் சொன்னார், இப்படி பல; ஆனாலும் இயக்குனரோ தான் ஒரு மிக நிதானமான வியாபாரி என்பதை அடிக்கடி பேட்டியின் மத்தியில் குறுக்கிட்டு குதற மறக்கவில்லை;

    பிள்ளையான் பற்றிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் சொன்னார் ஒரு பதில் பாருங்கள் அங்குதான் அவர் இடதுசாரிதான் என்பதை நிருபித்தார், மொத்தத்தில் நாம் தருகிறதை நக்குங்கள் என்பதுபோல் அமைச்சர் கருத்தும் அமைச்சர் சொல்லிவிட்டார் நக்குவதுக்கு ஏன் தயக்கம் என்பது போல் இயக்குனர் ஆலோசகர் பேச்சும் அமர்க்களம்; ஆனால் TBC மிக ஆபத்தான ஒரு ஊடகம் தமிழருக்கு என்பதை மிக தெளிவாக இவர்களது நாடகம் தெளிவுபடுத்தியது, ஆய்வாளர் கூட இன்று ஆலோசகராகவும் மொழிபறிப்பாளராகவும் மாறி மாறி கலக்கிவிட்டார்;
    தொடரும் பல்லி;;;;

    Reply
  • Thaksan
    Thaksan

    தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதே முரண்பாடுகளின் பதவி ஆசைக்கான கூட்டு என்பதை முன்னரும் குறிப்பிட்டிருந்தேன். பதவிகளுக்காக அவர்கள் கூடியிருந்தபோதும் கடிவாளம் அப்போது புலிகளிடமிருந்தது. சுண்டியிழுக்கும்போது காலடியில் விசுவாசம் செய்யும் நன்றியும் உயிர்ப்பயமும் அப்போதிருந்தது. இப்ப காசுக்கு மாரடிக்கும் சு.பி.னாவை தவிர மற்றயவர்கள் தங்கட விருப்பப்படி லாபம் எங்கயிருக்கோ அங்க யாவரத்தை நடத்துகினம். கிசோருக்கு தேசியம் கிலோ என்ன விலை எண்ட தடுமாற்றம். சம்பந்தருக்கு தேசியம் சமன் பாராளுமன்ற கதிரை. சுரேசுக்கு அது காசுக்கு சமன். மாவைக்கு அது மலிஞ்ச சாமான். டெலோவுக்கு அது உயிர்ப்பிச்சை. இப்பிடி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி. ஆனால் தமிழ்ச் சனத்துக்கோ அது அகதி முகாம் எண்டாகிப்போச்சு…

    Reply
  • thaya
    thaya

    பல்லி!
    நீர் கேட்ட வானொலி நிகழ்ச்சியை நானும் கேட்டேன். இதை கேட்ட நேரத்திலிருந்து மிக மனம் வெதும்பியிருந்தேன். நீங்கள் மிக நளினமாக இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருந்தது மனதிற்கு சிறிது ஆறுதலாக இருந்தது. அதுவும் பொருத்தமான (விலைபோகும் கூட்டத்தின் அடையாளத்துடன்)உங்கள் கருத்தை வெளிப்படுத்தியிருந்தது மிக சரியானதே.

    பல்லி எந்தக் கருத்தைச் சொன்னாலும் உச்சியில் அடித்தது போல் சொல்வதுதான் பல்லியின் சுப்பர் ஸ்டைல். இவர்கள் தரவழிகளுக்கெல்லாம் இது உறைத்து திருந்திவிடப் போகின்றார்களா? இலலலே இல்லை. ஆனால் காலாதிகலத்திற்கும் அரசியலை வைத்தே பிழைப்பு நடாத்தி வருபவர்களை தொடர்ந்தும் அம்பலப்படுத்துங்கள்.

    யோகரட்ணம் என்பவர் குணசேராவிடம் கேட்ட கேள்விக்கு குணசேகரம் கொடுத்த பதிலை இந்த விடயத்தில் குறிப்பிடவேண்டும். அதாவது-இலங்கை ஒரே நாடு ஒரே மக்கள் தான் என்பதனை தமிழ்பேசும் மக்களுக்கான செய்தியாக குறிப்பிட்டிருந்தார். இவரின் இடதுசாரித்தத்துவம் இவ்வளவுதானா?இதனை பேட்டிகண்ட-மொழிபெயர்த்த நிலையத்திலிருந்த இரு இடதுசாரி கொள்கையை ஏற்றுவழிநடப்பதாக- வழிநடாத்துவதாக சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல் கட்சி செயற்குழு உறுப்பினரொருவரும் பத்துவருடமாக ரி.பி.சி.யில் இடதுசாரித் தந்தையாக -அரசியல் ஆய்வாளராக தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல்கொடுப்பதாக இதுவரை ஓங்கிஒலித்த குரலும் ஏன் மெளனித்திருந்தன.

    நீண்ட காலமாக புலிகளே நீங்கள் அரசியலிருந்து ஒதுங்குங்கள் நாங்கள் மக்களை பார்த்துக் கொள்கின்றோம் என்று முழக்கமிட்ட ஜனநாயக குரல்களெல்லாம் எஙகே? இன்று ஒற்றையாட்சி குடைக்குள் நீங்களும் முக்காடு போட்டுவிட்டீர்களா? இதில் வானொலி இயக்குனரைப்பற்றி (பல்லி சொன்னமாதிரி) கவலைப்படத் தேவையில்லை. அவர் ஒரு வியாபாரி அவர் அப்படித்தான் வாழ்க்கை முழுக்க அரசியலை விற்றுப் பிழைப்பு நடத்துபவர். அவர் அப்படித்தான். அவரை யாரும் கண்டுகொள்ள முடியாது. ஏனெனில் அவர் ஊடகம் என்றதை தனக்கு கேடயமாக என்றும் பாவிப்பவர். அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனை யாவரும் அறிந்தது தானே

    மேலும் குணசேகரா தமிழ் பேசும் மக்களை மடையர்களாக நினைத்து பலவிடயங்களை வீசியெறிந்துவிட்டு போனார். இதில் பொpய கவலைக்குரிய விடயம் கலையகத்திலிருந்தவர்கள் தான் அப்படியென்றால் வானலைக்கு வந்தவர்களும் ஒத்துப்பாடி- தமிழ் மக்களின் உரிமைகளை போட்டுக் கொடுத்துவிட்டு போனார்கள்.

    குணசேகராவின் தகலின்படி 6000தமிழ் போலிஸார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளதாகவும் புணர்வாழ்வு மையங்கள் மிக சிறப்பாகவும் அங்கு அடைபட்டு அல்லலுரும் எம் மக்கள் மிக செழிப்பாக நிறைவாக வாழ்வதாகவும் அங்கு எந்தப் பிரச்சனையும் தமிழ் மக்களுக்கு இல்லை ஒற்றையாட்சியில் எல்லாம் ஒழுங்காக நடப்பதாகவும் குறிப்பிட்டு தனது கொள்கைப் பிரகடனமாக மகிந்த அரசுக்கே எல்லாவிதத்திலும் கைகொடுப்பதாக பீற்றிக் கொண்டிருந்தார். மகிந்த அரசினால் சிறிது பட்டுத்திருந்தியதாக நாம் நினைத்த ஜேர்மனிய ஆய்வாளருமா?இவற்றையெல்லாம் கேட்டிருந்து விட்டு தனது பங்கிற்கு வானொலியில் வந்து வாழ்த்துச் சொல்லி- ஒத்துப்பாடி விட்டுப்போய்யுள்ளார். ஆகவே இப்படிப் பட்ட தமிழ்பேசும் மக்களுக்கான வழிகாட்டிகள் என்று சொல்லித்திரிபவர்கள் இருக்கும் போது சிங்கள இனவாத அரசு என்றும் எம்மக்களுக்கு எந்தத் தீர்வையும் பேச்சுக்குக்கூட சொல்லி ஏமாற்றத் தேவையில்லை. இப்படியான எம்மவர்களே துவசம் பண்ணிவிடுவார்கள். வஞ்சகரின் வலைக்குள் இப்படிப்பட்டோர் தாமாகவே தமது சொந்த லாபங்களுக்காக சேர்ந்து கைகொடுப்பார்கள். ஒருபுலி கொடுமைக்குள் இருந்து மீண்டுள்ள மக்கள் இன்றுபல புலிகளுக்கும் சிங்கத்தின் வலைக்குள்ளும் சிக்கிச் சீரழிகின்றனர். ஜயோ தமிழினமே! காலதிகாலத்திற்கும் உன்னாலேயே உன்க்கு அழிவு .

    Reply
  • nimalan
    nimalan

    இருட்டில் ஒளிந்துகொண்டு வெளிச்சத்தில் நிற்பவனை நோக்கி கல் எறிவது இலகு.

    Reply
  • palli
    palli

    இருட்டு ஆம் இருட்டுதான்;
    மகிந்தாவின் அரசியல் இருட்டு;
    டக்கிளசின் பதவி இருட்டு,
    சங்கரியரின் கடிதம் இருட்டு,
    சித்தரின் அறிக்கை இருட்டு,
    பொன்சேகாவின் புதுமுகம் இருட்டு,
    அமெரிக்காவின் விசாரனை இருட்டு;
    இந்தியாவின் 100கோடி இருட்டு,
    சுவிஸ்சின் ஒன்று சேரல் இருட்டு;
    கிசோவின் முத்தம் இருட்டு;
    நாடு கடந்த ஈழம் இருட்டு,
    TBC இருட்டு,
    GTV இருட்டு,
    தேசம் இருட்டு,
    நீங்க இருட்டு;
    அத்தனையும் இருட்டு,
    பல்லி மட்டும் வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம், இருட்டை தவிர்த்து இருட்டில் நடக்கும் திருட்டை கவனிக்கலாமே,

    Reply
  • nimalan
    nimalan

    பல்லி நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பேரும் வெளிச்சத்தில் இருக்கிறார்கள். என்னைத்தவிர. அவர்கள் அரசியல் உங்களுக்குத் தெரிகிறது. அதில் தெரிந்த பகுதியை விமர்சிக்கிறீர்கள். ஆனால் அவர்களால் மறைக்கப்பட்ட பகுதியை அல்லது நீங்கள் காணமுடியாத பகுதியை நீங்கள் தேடுகிறீர்கள். அதுதான் நீங்கள் சொல்லும் இருட்டு. ஆனால் இங்கு நீங்களும் தயாவும் நானும்தான் இருட்டில் இருக்கிறோம்.காரணம் நமது அரசியல் எதுவென்று எவருக்கும் தெரியாது. அல்லது நாம் சொல்வது எதுவோ அதுதான் நம் அரசியல் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். ஆனால் யாரும் நம்மை விமர்சிக்க முடியாதல்லவா. அதைத்தான் நான் இருட்டில் ஒளிந்துகொண்டு வெளிச்சத்தில் நிற்பவனை நோக்கி கல் எறிவது இலகு என்றேன். இதில் நான் நிற்குமிடமும் இருட்டு. ஆனால் நான் யாரை நோக்கியும் கல்லெறியவில்லை. ஒருவரின் பிழையை நாம் திருத்த வேண்டுமென்றால் நாமும் எம்மை வெளிக்காட்டி சொல்லும் கருத்தே வலுவானது.

    Reply
  • Kusumpu
    Kusumpu

    என்ன பல்லி என்ன கவிதை கவிதைகளாகக் கொட்டுகிறீர். என்ன கவிஞர் வீட்டுச் செத்தையில்தான் தொங்குகிறீரோ? இப்போ புலிகளெல்லாம் அரசாங்கத்தோடை சேர்ந்து நச்சு நாகங்களாக மாறி விட்டார்களாம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நிமாலன் உங்கள் கருத்து நியாயமானது. வானொலி நான் கேட்காவிட்டாலும் நம்பிக்கைக்குரியவரிடம் கேட்டேன். டி.யு.குணசேகராவின் பேட்டி தரமாக இருந்தது என்று சொன்னார்கள்.
    கண்களை மூடிக்கொண்டு இடதுசாரிகளை எதிர்கவேண்டுமென்று எழுதுபவர்களை என்ன செய்யமுடியும்?. அவர்கள் கூடாதவர்கள் என்று அர்த்தமில்லை. அலட்சியப்போக்கும் அறியாமையுமே காரணம் என நினைக்கிறேன். இவர்கள் வரலாற்று ஒட்டத்தில் பிரச்சனையை சந்திக்கவர முடிவதில்லை. மாறாக வரலாற்றை தம்பக்கத்திற்கு திருப்ப பிரயத்தனப்படுகிறார்கள். கோபிக்கவோ சண்டைபிடிக்கவோ முடியுமா?.

    Reply
  • palli
    palli

    நிமலன் மீண்டும் இருட்டில் கால் வைக்க நான் விரும்பவில்லை, அதை குசும்பும் கண்டிப்பார் போல இருக்கு;
    // வெளிச்சத்தில் இருக்கிறார்கள்//
    உன்மைதான் தமக்கான வெளிச்சத்தையும் விரும்புகிறார்கள்;

    //அவர்களால் மறைக்கப்பட்ட பகுதியை அல்லது நீங்கள் காணமுடியாத பகுதியை நீங்கள் தேடுகிறீர்கள்//
    இதை இப்படி சொல்லி பாருங்க மக்களையோ அல்லது தாம் சார்ந்தவர்களை ஏமாற்றுவதை நாம் சொல்லுகிறோம், 30வருட சுனாமியின் அனுபவதின் ஊடாக எனி வரகூடிய சூறாவளி பற்றி சொல்லுகிறோம், ஆனால் நிர்பந்திக்கவில்லை; மழை வர போகுதென தான் வானிலை அறிக்கை சொல்லும்; குடை கொண்டு போவதும் போகாததும் எமது செயல்தானே,

    //இங்கு நீங்களும் தயாவும் நானும்தான் இருட்டில் இருக்கிறோம்//
    இதுக்கான காரனத்தை சிந்தியுங்கள் என தான் பல்லி பலன் சொல்லுகிறேன்

    பல்லி

    Reply
  • palli
    palli

    //வானொலி நான் கேட்காவிட்டாலும் நம்பிக்கைக்குரியவரிடம் கேட்டேன்.//
    சந்திரன் தயவுசெய்து அந்த மறு ஒலிபரப்பை கேக்கவும்: பேட்டி கொடுத்தவர்; நாட்டை ஆளும் ஒரு அமைப்பின் அமைச்சர்; பேட்டி எடுத்தவர்கள் மாற்று கருத்துக்கு பெயர் பெற்ற ஊடகத்தின் இயக்குனரும், ஆய்வாளரும்; ஆக இது பரபரப்போ அல்லது ஒரு பேப்பரோ போல் விடயம் தெரியாத கோமாளிகளின் செயலல்ல,

    அதேபோல் யோகரட்னம் என்பவர் ஒரு அனுபவமிக்க இடது சாரியென சொல்லுகிறார்கள் அவரது கேள்விக்கே சரியான பதில்இல்லை, இதைதான் நான் சொன்னேன், இது பதிலுக்கான கேள்வி நேரம்என, சந்திரா இதே TBC உடைக்கபட்ட போது அதை TBC யைவிட தேசமே அக்கறை கொண்டு அம்பலப்படுத்தியது, காரனம் ஊடகம் அவசியத்தை உனர்ந்தே, அதிலும் பல்லி பலருடன் கருத்து முரன்பட்டேன்; இதில் பல்லியின் நண்பர்களான சிலருடன் கூட மிக கடுமையாக விமர்சித்தேன்(உங்களுக்கு தெரியாதா என்ன) இருப்பினும் இன்று மகிந்தா என்னும் மந்திரகோலுக்கு பின்னால் பலர் அனிவகுப்பது போல் TBC யும் போய்விட்டது என்பது போலவே இந்த நிகழ்ச்சி நடந்தது,
    இதில் ஆய்வாளர் இன்றுவரை பலரால் புகழபடும் (பல்லியும்தான்) இவரே ஆமா சாமி போட்டது பல்லிக்கு வெதனை தருகிறது, யாரைதான் நம்புவது என்னும் ஆதங்கமே இதை நான் சொல்ல காரனம், அதைதவிர TBC மீது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, முடிந்தால் ஒருமுறை அதை மறு ஒலிபரப்பில் கேட்டு மகிழுங்கள்; இன்றய நிகழ்வுகள்தானே நாளைய வரலாறு, ஆக அந்த வரலாற்றில் நாமும் குழிக்கவோ நீந்தவோ முயல்கிறோம்:

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பல்லி நீங்கள் இப்பொழுது யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்?. அமைச்சரையா? ஒலிபரப்பு நிர்வாகத்தையா? கேள்வி கேட்ட நேயரையா? இது எல்லாம் இருட்டு என்பது மாதிரியல்லவா இருக்கிறது. சரி இருட்டாகவே இருக்கட்டும். உங்கள் வெளிச்சமான பாதைதான் என்ன?
    நீங்கள் “தேசம்நெற்”ஜ வம்புக்கு துணைக்கு இழுத்து வருகிறீர்கள். அது ஒரு ஊடகம் என்பதையும் மறந்து. நான் மகிந்தா ராஜயபக்சா அரசுக்கு நிபந்தனையில்லாத ஆதரவை வழங்குகிறேன். அதைவிட்டு வேறு ஒரு கட்சிக்கு அதாவது அடுத்தகட்சிக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால்.. அவர்களில் காலத்தில்தானே இனவாதங்கள் விஸ்வரூபம் எடுத்தது? அதை மறுக்கிறீர்களா? மகிந்தாவுக்கு ஆதரவு நீங்கள் ஆதரவு வழங்க மறுத்தால் உங்களை அறியாமலே ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குகிறீர்கள். அப்படி நீங்கள் செய்வீர்களானால் புலிக்கொடுமையை விட பாரிய கொடுமைகளை நாம் சந்திக்க நேரிடலாம் இதில்லிருந்து முதல்தெளிவு பெறுங்கள். மற்றவை எவையும் விதண்டாவாதங்களே அர்த்தம் இல்லாதவை. அர்த்தம் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் .கற்கனையில்லாமலும் வீனான எதிர்பார்பு இல்லாமலும் யதார்தமாக இருக்கவேண்டும். அப்படி ஒன்று இல்லையென்பதே எனது சிற்றறிவுக்கு தெரிகிறது. இருந்தால் நிரூபிக்கவேண்டியது உங்கள் கடமை.

    Reply
  • palli
    palli

    //மகிந்தாவுக்கு ஆதரவு நீங்கள் ஆதரவு வழங்க மறுத்தால் உங்களை அறியாமலே ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குகிறீர்கள்//
    நல்ல வேளை புலிக்கு ஆள்சேர்க்கிறியள் என சொல்லவில்லை; பல்லிக்கு மகிந்தாவும் ஒன்றுதான் ரணிலும் ஒன்றுதான், அதுக்காக ஒரு ரவுடிதனமான குடும்ப அரசியலை அம்பலபடுத்த எனக்கு உரிமை உள்ளதுதானே? இன்று இலங்கயின் முன்னனி ரவுடிகளில் கோத்தய ராஸபட்ச்சாவும் அடக்கம், இதை நான் சொல்லவில்லை,

    //யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்//
    சந்தேகமே வேண்டாம் ஊடகத்தையும் நிர்வாகத்தையும்தான், காரனம் கேள்விக்கான பதிலை தேடாமல், பதிலுக்கான கேள்வியை உருவாக்கியதுக்கு; யார் யார் அரசுடன் என்ன ஒப்பந்தம் செய்து செயல்படுகிறார்கள் என விரைவில் ஜயா கடிதம் எழுதுவார்;

    //அப்படி நீங்கள் செய்வீர்களானால் புலிக்கொடுமையை விட பாரிய கொடுமைகளை நாம் சந்திக்க நேரிடலாம் //
    இதில் நான் உங்களுடன் வம்புக்கு வரவில்லை, ஆனால் மகிந்தா அரசு மிக மோசமாகத்தான் இன்று தமிழரை நடத்துகிறது என்பதை எடுத்து சொல்லகூட இப்போ உரிமை கிடையாதுபோல் உள்ளது;

    //யதார்தமாக இருக்கவேண்டும்//
    இதை தவிர பல்லிக்கு வேறு ஏதும் தெரியாதே;

    //அப்படி ஒன்று இல்லையென்பதே எனது சிற்றறிவுக்கு தெரிகிறது. இருந்தால் நிரூபிக்கவேண்டியது உங்கள் கடமை//
    கண்டிப்பாக ஓடி ஒழிய மாட்டேன், மகிந்தா குடும்பம் அமெரிக்க விசாரனை குழுவிடம் கேட்டதுபோல் நீங்க பல்லயை கேக்கிறியள்; முயற்ச்சிக்கிறேன்,

    Reply