புதிய 1000 ரூபா நாணயத்தாள் நேற்று முதல் புழக்கத்தில்

new1000ru.jpgநாட்டில் சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்குமான வழி பிறந்துள்ளதையொட்டி இலங்கை மத்திய வங்கி ஞாபகார்த்த ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்றினை நேற்று வெளியிட்டு வைத்தது. மத்திய வங்கியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஆயிரம் ரூபா நாணயத்தாளை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட கப்ரால் புதிய நாணயத்தாளினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார். 1998ம் ஆண்டின் 6ம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் நியதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த நாணயத்தாள் நேற்று முதல் தேசிய ரீதியில் புகழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

new1000.jpg

rs1000.jpgதாளினது முன்பக்கத்தின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் சுபீட்சத்தினை நோக்கி முன்னேறிச் செல்கின்ற இணக்கம்மிக்க ஒரு நாடு என்ற தொனிப்பொருளும் தாளின் வலது பக்கத்தில் ஜனாதிபதியின் தோற்றம் பொறிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply to selvanathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • Ilangaithamilan
    Ilangaithamilan

    வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் வெள்ளிபார்த்து கொண்டிருந்த நரபலி நரகாசுரனை பலியெடுத்து எம்மையும் எம்பிள்ளைகளையும் மீட்ட எம்தேசத்தலைவனே!
    எம்மை கொடூரனின் கோரப்பிடியில் இருந்து காப்பாற்றிய காவலனே!
    பிணக்கணக்கை காட்டி பிழைப்பு நடாத்திய பிள்ளைபிடிகார தரித்திரத்தின் தலைவனின் சரித்திரத்தை முடித்த சகலகலாவல்லவனே!
    உனக்கு எங்கள் உளம் கனிந்த மனம்உவந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    Reply
  • selvanathan
    selvanathan

    Happy Birthday Mr.President ! Wednesday, 18 November 2009

    President Mahinda Rajapaksa celebrates his 64th birthday today and completes four years as Executive President on office the same day.

    Born in 1945, President Rajapaksa followed the footsteps of his late father, DA RAjapaksa in politics in the early 1970’s. He was then the youngest member to enter parliament.

    In his long political career he held several important cabinet ministries before being elevated to the office of Prime Minister early this year. President Rajapaksa was elected Executive President in 2005 for a first term of six years. Several religous events are on cards today to invoke blessings on the Head of State.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    மூன்று சகாப்தகாலம் யுத்தம் தொடர்ந்து தமிழ்மக்களின் வாழ்வை சீர்ரழித்தது என்றால்… அதை ஒரு தரப்பில் மட்டும் பழிபாவத்தை போடமுடியாது. இருதரப்பு மட்டுமல்லலாமல் மூன்றாம் தரப்பும் இதில் ஈடுபட்டு சுவாலிச்சு எரிவதற்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருந்தார்கள். இதை மகிந்தா ராஜயபச்சா தெளிவாக இனம் கண்டுகொண்டு சாதுரியமாக கையாண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் .இந்த மூன்றாம் தரப்பு முன்னைவிட இன்னும் மூர்கத்தனமாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.
    மகிந்தா ராஜயபக்சா இதிலும் வெற்றிபெற்று பிளவுயில்லாத சுபீட்சமான இலங்கையை படைப்பார்என்று கூறி புலம்பெயர் தமிழர்கள் சார்பில் அவருக்கு “நீண்ட ஆயுள் வழமாகுக” எனக்கூறி வாழ்த்து தெரிவிக்கிறேன்.

    Reply
  • john
    john

    20 000 தமிழரை 10 000 சிங்களவரை பலிகொடுத்துவிட்டு இன்னமும் சனங்கள் தவித்துக் கொண்டிரக்க பிறந்த நாள் கொண்டாட்டமா போடுகிறியள். பிரபாகரனும் இப்பிடித்தான் சனத்தை நசுக்கி தான் துள்ளிக் குதிச்சு அடங்கினவர். இப்ப உங்கட ரேன்

    Reply
  • jalpani
    jalpani

    தாளின் பின்பக்கத்தில் என்ன போட்டிருக்கிறது என்பதை தேசம்நெற் சொல்லாமல் விட்டிருப்பது ஏனோ? பயமாய் இருக்கிறதா? அல்லது…..?

    Reply
  • BC
    BC

    தாளின் பின்பக்கத்தில் இலங்கையின் தேசிய கொடியை இராணுவம் ஏற்றும் படம் உள்ளது. இதில் தேசம்நெற் பயப்பட என்ன இருக்கிறது? வேண்டுமானால் மற்றவர்களுக்கு பயம் காட்டலாம்.

    Reply
  • kovai
    kovai

    தாளில் மறைக்கப்பட்ட பக்கம்தான் ஒரு பெரிய தத்துவத்தை வெளியிட்டு நிற்கின்றது.காட்டிய பக்கம் களிப்பேருவுகைதான். இதில் பயப்படும் விடையம் எதுவுமில்லை, மாறாக பதப்படும் விடையந்தான்.

    Reply
  • அருட்சல்வன் வி
    அருட்சல்வன் வி

    //தாளின் பின்பக்கத்தில் என்ன போட்டிருக்கிறது என்பதை தேசம்நெற் சொல்லாமல் விட்டிருப்பது ஏனோ? பயமாய் இருக்கிறதா? அல்லது…..?// – jalpani

    //இதில் தேசம்நெற் பயப்பட என்ன இருக்கிறது? வேண்டுமானால் மற்றவர்களுக்கு பயம் காட்டலாம்.// – BC

    தொழிநுட்பக் கோளாறு காரணமாக தாளின் பின்பக்கப் படத்தை பிரசுரிக்க முடியவில்லை.

    இருப்பினும் தற்போது சிறிதாக சேர்த்துள்ளோம்

    Reply
  • jalpani
    jalpani

    இது ஆரோக்கியமாகவா இருக்கிறது? இலங்கையின் தேசியக் கொடி அதன் மக்கள் மேலாண்மைக்குரியதா? இராணுவத்தின் மேலாண்மைக்குட்பட்டதா?
    என்ன இருந்தாலும் ஏதோ தயக்கத்தில் தேசம்நெற் அதை வெளிக்காட்டவில்லை.BC வந்து போட்டுடைக்க வேண்டியுள்ளது.

    Reply
  • Lio
    Lio

    எண்டாலும் அருட்செல்வன் பிழை இரண்டு கண்டுபிடிச்சிட்டேன். தாளின் முன்பக்கத்தைப் பெரிசாகவும் பின்பக்கத்தை சிறிதாகவும் போட்டிருக்கிறியள். மற்றது முன்பக்கம் பற்றி எழுதினமாதிரி நோட்டின் பின்பக்கம் பற்றி எழுதவில்லை.
    அப்பாடா இப்பத்தான் நிம்மதியாய் இருக்குது

    Reply
  • kovai
    kovai

    நாணயத்தை காட்டி, நாணயமற்றதையும் காட்டி விட்டீர்கள்

    Reply
  • Thamil
    Thamil

    தன்னைப்பற்றிய மாற்று கருத்துக்களையும் மாற்றான் கருத்துக்களுக்கும் மாறாட்டமான கருத்துகளுக்கும் இடம்கொடுக்கிற அளவுக்கு தனிமனித சுதந்திரம் மீது அக்கறையுள்ள, நாட்டின் சுபீட்சத்தை பற்றி எப்போதும் எண்ணுகின்ற, நாட்டை அடைவு வைக்காத அதேவேளை அண்டை நாடுகளுடன் நட்புறவுகளை நன்கு பேணுகின்ற, எவனையும் சமாளிக்க தெரிந்த, சாதுரியமும் சாணக்கியமும் மிக்க தேசத் தலைவனே!
    நீ இந்நாட்டில் பிறந்ததால் இலங்கை பெருமை கொள்கிறது!!!
    நீ நீடுழி வாழ்க!!!
    உனக்கு எமது மகிழ்ச்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

    Reply
  • palli
    palli

    மனிதனாய் வெற்றி கண்டாய்;
    மிருகமாய் தொடர்வதால் நீ;
    மீண்டும் பயம் எமக்கு;
    உன் குணம் மாறியதால்;

    பிரபா கெட்டவரா.
    மகிந்தா நல்லவரா,
    இருவரும் மிருகம்தான்;
    தமிழரது பார்வையிலே:

    அமெரிக்கா அழைக்கிறது,
    விருந்துக்கல்ல விசாரனைக்கு;
    அதுக்கிடையில் பொன்சேகா;
    புதுவித புரட்சியாய்,

    வாழ்க நீ வாழ்க,
    பிரபா போல் வாழ்க;
    கேக்க யாருமில்லை,
    அதனால் நீ வாழ்க;

    வாழ்க நீ வாழ்க
    உலகம் உருண்டையென;
    உனக்குதான் தெரியாதா;
    அதனால் நீ வாழ்க வாழ்க;

    Reply
  • Thamil
    Thamil

    How Mahinda carefully steered the nation through a deadly minefield during the height of the war is now even the talk of Harvard Political Science debates!!

    Reply