சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபட ஒருபோதும் நினைக்கவில்லை: அனோமா பொன்சேகா

mrs-sarathfonseka.jpgதமது கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா ஒருபோதும் அரசியலில் ஈடுபட எதிர்பார்க்கவில்லை என அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். பௌத்தர் என்ற ரீதியில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் களனி விஹாரைக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் யாருக்கும் எவ்விதமான தீங்கும் இழைத்ததில்லை என அவர் திவயின பத்திரிகைக்கு அளித்துள்ள செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். பௌத்த மதத்தையே தாங்கள் முழுமையாக நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • palli
    palli

    அக்கா நீங்கள் பேட்டி அளிக்கும் போதே அவர்(அதுதான் உங்க சேகரா) அதுக்கு வந்து விட்டார் என்பது உறுதியாகிகுறதே;

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நாம் அதைப்புரிந்து கொள்ளுகிறோம். தோல்விக்குமேல் தோல்விகளை சந்தித்து கொண்டிருக்கிற ஐக்கியதேசியக் கட்சிக்கு என்னதேவை இருக்கிறது என்பதும் மேற்குலகம் இலங்கை விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்பதும் நாம் அறியாதா!?.அதற்கு நீங்கள் என்ன செய்யமுடியும்? அனோமா பொன்சேகா!.

    Reply
  • Thaksan
    Thaksan

    சரத் பொன்சேகாவுக்குள்ள என்ன ஆசை இருக்கு எண்டு புரியாத உங்களுக்கு அவரின் இரத்தத்தில ஊறி இருக்கிற இனவாதத்தை புரிய முடியுமா? சரத்தின்ர அண்ணர் ஒருவர் நீர்ப்பாசன இலாகாவில வேலை செய்தவர். அவர் அம்பாறையில வேலை செய்தபோது அவருக்கு தமிழ் சக ஊழியர் ஒருவர் நல்ல நண்பனாக இருந்திருக்கிறார். இருவரும் ஒருவரின் குவார்டர்ஸில் ஒருவர் தங்குவதும் ஒன்றாக சமைத்து சாப்பிடுவதும் வழமையாம். எப்பவாவது சரத் பொன்சேகா அவரின் அண்ணரின் குவார்டஸூக்கு வருவதுண்டாம். இது 1980களில். அந்த நேரத்தில் அந்த தமிழ் நண்பருக்கு சரத்தின் அண்ணர் சொல்வாராம் அவனுக்கு(சரத்துக்கு) தமிழனெண்டாலே பிடிக்காது.> அவன் வாற நேரத்தில் நீ என்ர குவாட்டசுக்கு வாராத எண்டு. அந்த தமிழ் அரச ஊழியர் அச்சுவேலியை சேர்ந்தவர். இப்ப அவருக்கு வயசு 70 ஆகுது. சரத் பொன்சேகா>
    சிறீலங்கா சிங்களவர்களின் நாடு: தமிழர்கள் வேண்டுமென்றால் ஒரு பகுதியில் வாழ்ந்துவிட்டு போகட்டும். ஆனால் உரிமை உழவாரம் எண்டு எதுவும் கதைக்கப்படாது எண்டு பேட்டி(கிளிநொச்சி பிடிபட்டவுடன்) கொடுத்தது அவெரின்ர துவேச உணர்வுக்கு ஒரு சின்ன உதாரணம்.

    Reply
  • மாயா
    மாயா

    // சரத் பொன்சேகா> சிறீலங்கா சிங்களவர்களின் நாடு: தமிழர்கள் வேண்டுமென்றால் ஒரு பகுதியில் வாழ்ந்துவிட்டு போகட்டும். ஆனால் உரிமை உழவாரம் எண்டு எதுவும் கதைக்கப்படாது எண்டு பேட்டி(கிளிநொச்சி பிடிபட்டவுடன்) கொடுத்தது அவெரின்ர துவேச உணர்வுக்கு ஒரு சின்ன உதாரணம்.- Thaksan //

    இவரை ஜனாதிபதியாக்கத் துடிக்கும் ரணில் மற்றும் கூட்டத்தை விட , மகிந்த எவ்வளவோ மேல். அதை நம்ம சனம் விளங்கினால் நல்லது. “மகிந்த, யதார்த்தவாதி” இதை நான் சொல்லயில்ல நம்ம தேசியத் தலைவர் சொன்னது. தேசியத் தலைவரா? யாரது என்று கேட்கிறது எனக்கு கேட்குது? எனக்கு அப்பவே தெரியும் நம்ம சனம் அப்படித்தான் என்று?

    Reply