தென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த முத்துஹெட்டிகம நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
காலி மஜிஸ்திரேட் நேற்று பிறப்பித்த பிடிவிறாந்து உத்தரவுக்கமைய இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
மாகாண சபைத் தேர்தலின் போது அதிகாரிகளுடன் முறைகேடாக நடந்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.