பனிக்காடாய் கிடந்த பூமி, வெப்பம் அதிகரிப்பினால் பனி உருக நிலம் புலப்பட ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். ஒன்றுமில்லாது இருந்து பூமியில் ஒன்றாக உயிரினங்கள் உயிர்த்தெழத் தொடங்கி கூர்ப்பு, வளர்ச்சி, கலப்பு என்று வேற்றுமை அடையத் தொடங்கியது. பூச்சியத்துக்குள்ளிருந்த பூமி, இராச்சியமாக மாறி இன்று உலகமயமாதல் என்பதில் வந்து நிற்கிறது.
ஆயிரத்தித் தொளாயிரங்களில் நாடுகள் பிரிவதும், ஆட்சிகள் அமைப்பதும், உலகமெங்கும் விடுதலை இயக்கங்கள் உருவாவதும், தனித்து நின்று போராடியதும், வென்றதும், ஒரு தலைமையின் கீழ் நாடுகள் இருந்ததும், இயக்கங்கள் அமைந்ததும், சாதாரணமான ஒன்றாக இருந்தது. தலைமை என்பதும் அதற்குப் பணிதல் என்பதும் அத்தியாவசியமான ஒன்றாகவே இருந்தது வந்தது. உலகத்தின் பாதுகாவலராக சோவியத்தும், அமெரிக்காவும் இருந்து ஒரு பனிப்போரை நடத்தினர். காலப்போக்கில் பெருந்தலைமை என்பது மறையத்தொடங்க பிராந்திய வல்லரசுகள் உ.ம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் தலைதூக்கத் தொடங்கின. அமெரிக்க இரசியப் பனிப்போர் உடைந்ததால் பிராந்தியங்களின் பாதுகாப்பு பிராந்திய வல்லரசுகளின் கையில் சென்றுள்ளது. இடதுசாரித்துவ பெருநிலப்பரப்பைக் கொண்ட சோவியத்தை உடைக்கப்போய் அமெரிக்கா பொருளாதாரம் உடைந்து சுக்கு நூறானது தான் மிச்சம்.
இந்தப் பிராந்திய வல்லரசுகள் தம்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அயல் நாடுகளுடன் நட்புறவாகவும் அன்னியோன்யமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடனும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வந்து நிற்கிறது. வல்லரசுகளைப் பொறுத்தவரையில் புஜபலம் பொருந்திய அயல்நாடுகள் நட்புறவுடன் தமது இராஜதந்திர நடவடிக்கைகளுடன் இருந்து வந்தன. உ.ம் ஜேர்மன் பிரான்ஸ். இந்து சமுத்திரத்தைப் பொறுத்தமட்டில் 3 பிராந்திய வல்லரசுகள் தமது எல்லை விரிவாக்கங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுகிறன்றன. இந்த நிலையைச் சரியாகப் பயன்படுத்தி, புலிகளின் கோட்டையை உடைத்தெறிந்தது சிங்களப் பேரினவாத அரசு.
புலிகள் இடதுசாரித்தன்மையைக் கொண்டவர்களாகவும் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தும் ஏன் புலிகளுக்கு சீன உதவி கிடைக்கவில்லை? இந்தியத் துணைக்கண்டம் 6 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களைக் கொண்டவர்கள் ஒரேமொழியும் இரத்தஉறவும் கொண்ட துணைக்கண்டம் ஏன் புலிகளுக்கு உதவி செய்யவில்லை? பாக்கிஸ்தானைப் பொறுத்தமட்டில் தமிழ் பேசுபவர்களே முஸ்லீம்களாக மாறினார்கள் இவர்கள் தமிழ் முஸ்லீம்களே. இப்படியான எல்லா வசதிகளும் தொடர்பு வசதிகள் இருந்தும் புலிகள் நந்திக்கடலில் குதித்தது ஏன்? உலக அரசியலை நன்கு உணராமை, இராஜதந்திரம் இல்லாமை, மக்களை, மக்கள் போராட்டத்தை மதியாமை, சரியான கெரில்லாவாக இயங்காமை, முரண்டு பிடித்தமை, எல்லாவற்றையும் விட முக்கியமாக அரசியலே இல்லாமை, ஷோ காட்டி வாழ விளைந்தமை. மக்கள் சக்தியையும், அரசியலையும் சரியாக உணர்ந்து கொண்டிருந்தால் நந்தியோ நந்தியாக நின்று காப்பாற்றியிருக்கும்.
மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து அலசி சந்தர்பத்தைச் சரியாகப் பயன்படுத்தியது இலங்கை அரசு என்பதை யாரும் மறுக்க இயலாது. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஆப்பு அறைந்து அனுப்பியது இலங்கை அரசே. இன்றைய உலகில் புஜயபலத்தை விட புத்திப்பலமே மேலோங்கி நிற்கிறது என்பதை புலிகள் ஏன் மறந்தார்கள். இந்துசமுத்திர அரசியல் சதுரங்கத்தில் பலமுள்ள சிறுநாடுகளை தன்கைக்குள் போடமுயன்றன பிராந்திய வல்லரசுகளான இந்தியா சீனா பாக்கிஸ்தான். இச்சதுரங்கத்தில் காய்களை சரியாக நகர்த்தி பிராந்திய வல்லரசுகளை ஒழுங்குபடுத்தி புலிகளுக்கு செக் வைத்தது சிங்கள அரசு. இராக்கியப் போரையும் தலிபானையும் கருத்தில் கொண்ட அமெரிக்கக் கனவில் இருந்த பிரபாகரனுக்கு புலம்பெயர் தமிழர்களின் அம்புலிமாமா கதை நிலாச்சோறாக அமைந்தது. கடைசி வேளையிலும் அமெரிக்கா வரும் ஒபாமா வருவார் என்ற நம்பிக்கையில் சரணடைந்து வாள்வெட்டு பட்டு இறந்தார் தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன். தேசியத்தலைவன் என்பவன் மக்களின் பிரதிநிதியாக மக்களுடன் இருக்க வேண்டியவன். பங்கருக்குள்ளா இருப்பான் என்றும் மக்களை மையப்படுத்தடா மடையா என்றும் எத்தனைபேர், மாற்றுக்கருத்தாளர்கள் கத்தினார்கள். கேட்டார்களா? சொந்த மக்களை நம்பமுடியாத போராட்டவீரன் எப்படி அமெரிக்காவை நம்பினார்.
உடைபட்ட பனிப்போரால் உடைபடத்தொடங்கின நாடுகள். இதேவேளை புஜபலகண்காட்சி மாயையை தொடர்ந்தும் நிலைநிறுத்த ஒரு இராக்குப்போர் நடந்தது. இப்போரால் பொருளாதார ரீதியில் வெற்றியைக் கண்டது அன்றை இடதுசாரி நாடுகளான இரஸ்சியாவும் சீனாவும்தான். சச்சேனிய தீவீரவாதத்தை முடிவுக்குக் கொண்ட வந்து தமது ஒற்றனான சச்சேனிய தீவீரவாதி ஒருவனின் கையில் அதை ஒப்படைத்து விட்டு அவர்களை அவர்களுடனே அடிபட விட்டுவிட்டு இரஸ்சியா தன் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்திக் கொண்டது. புஜபலம் காட்டப்போய் அமெரிக்கா இராக்கிலும் ஆவ்ஃக்கானிஸ்தானிலும் முடங்கிப்போய் கிடந்து இன்று பொருளாதார நெருக்கடிக்குள் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் வேளைதான் ஒபாமா வந்தார். இவரை நம்பியா புலிகள் சரணடைந்தார்கள். புலிகள் கூப்பிட்டவுடன் ஓடிவர ஒபாமா என்ன சித்தப்பனா?
இந்தியா சதுரங்கத்தில் தன்காய்களைச் சரியாகவே நகர்த்திக் கொண்ட இருக்கிறது. தமக்கு அயலில் தலையிடியாக இருந்துவந்த பாக்கிஸ்தானுக்கு தனிபான்களினூடாக ஒரு செக்கை இன்று வைத்துள்ளது. அன்றைய இராணுவத்தலைவர் இதன் பின்னணியில் இருப்பாரா என்பது இன்றைய கேள்வியாக உள்ளது. அமெரிக்காவால் இரஸ்சிய அரசுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பின்லாடனை பின் அமெரிக்காவே அழிக்க வேண்டிய நிலையானது. இப்படிப் பின்லாடன் இருக்கிறானா இல்லையா என்ற முடிவில்லாமல் போனதால் தலிபான் தொடர்ந்து போராடுகிறது. அமெரிக்கா தன் வெற்றியை உறுதிப்படுத்த முடியாமல் நிற்கிறது. இந்த நிலையையாவது பிரபாகரன் உருவாக்கி விட்டுவிட்டுப் போயிருக்கலாம். பிரபாகரன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் ஒருவனாவது போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு இருந்திருப்பான். சிங்கள அரசோ பேரினவாதமோ தன் இனவெறியைக் காட்டாமலும் போரின் வெற்றியை உணராமலும் இருந்திருப்பார்கள் ஆனால் பிரபாகரன் என்ற பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும். சிலவேளை மக்களின் போராட்டம் தொடர்ந்திருக்கும். அமெரிக்கா வரும் என்ற புலம்பெயர் புலம்பல்களில் கனவுகண்டு உலக இயற்கை நிதர்சனங்களை விட்டுவிட்டு சரணடைந்து எம்மினத்தை முழு நிர்வாணமாக்கிச் சென்றிருக்கிறார் பிரபாகரன்.
இனிவரும் தலைவர்களாவது இன்றைய உலக அரசியல் நிலமையை உணர்வார்களா? உலகமயமாதல் எதற்காக நடக்கிறது? இதன் விளைவுகள் என்னவாகும்? இவற்றைக் கருத்தில் கொண்டு அரசியல் நடத்த முயற்சியுங்கள்.
பெருந்தலைமை உடையும்போது சிறுசிறு தலைமைகள் உருவாவது இயற்கையானது. இந்தச் சிறுதலைமைகள் சுயமாக தம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்பது கடினமானதே. இதனால் இணைவுகளும் உடன்படிக்கைகளும் அவசியமாகிறது. இதனால் இசைவாக்கமுள்ள தம்முடன் ஒத்துப்போகக் கூடியவர்களை இணைத்து தம்நாட்டின் ஆட்சிப்பலத்தையும் பிராந்தியப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் சிறு சிறு நாடுகளின் பங்களிப்புகள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் உலகமயமாதல் என்பது அவசியமாகிறது.
கணனிகளாலும் இலத்திரனியல்சார் தொழில்நுட்பங்களாலும் உலகம் ஒரு கிராமம் போல் குறுகிவிட்டது. இன்நிலையைப் பயன்படுத்திய வசதியான நாடுகள் தம் வசதிகளை மேலும் பெருக்கிக்கொள்ள வளர்முக நாடுகளை நாடுகிறார்கள். அங்கே தொழிலாளர்கூலி மிகக் குறைவாக இருப்பதுடன் தயாரிப்புகளுக்கான மூலப்பொருட்களும் மலிவாகவே கிடைக்கின்றன. தொழிற்சாலையின் இரசாயனக்கழிவுகளையும் வளியசுத்தங்களையும் அங்கேயே விட்டுவிட்டு தயாரிப்புகளை மட்டும் தமது முத்திரைகளுடன் உலகநாடுகளின் பெரும் விலையில் சந்தைப்படுத்தி பெருங்கொள்ளை இலாபம் ஈட்டமுடியும். ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் தம் முதலீடுகளை 3ம் உலகநாடுகளில் செய்வதினூடு சுமார் 200மடங்கு இலாபத்தைப் பெறலாம். மூலப்பொருட்களை 3ம் உலகநாடுகளில் இருந்து கொண்டுவந்து பொருள்களை இங்கே உற்பத்தி செய்து அதைச் சந்தைப்படுத்துவதனால் அடையும் இலாபத்தை விட எல்லாவற்றையும் அங்கேயே எடுத்து கழிவுகளையும் அங்கேயே விட்டு விட்டு அதாவது சக்கையை அங்கே எறிந்து விட்டு சாற்றை மட்டும் இங்கே எடுத்துவந்து சந்தைப்படுத்துவதை விட இலாபம் தரக்கூடிய சிறந்த வியாபாரம் என்ன இருக்கிறது.
இந்நாடுகளின் முதலீடுகள் அங்கே ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் போர் எப்படியும் நிறுத்தப்பட வேண்டும். அங்குள்ள அரசின் நட்புறவு வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்து பெரு இலாபம் பெறமுடியும். இவையனைத்தும் குறுகிய காலத்தில் நடந்தேறினால் மட்டுமே பெருலாபம் உறுதியாகும். இந்நிலையில்தான் தமிழர்களது தலைவிதியும் புலிகளின் ஈழக்கனவும் நந்திக்கடலினுள் கொட்டப்பட்டது.
போர்காரணமாக அகதிகளின் பெருக்கம் ஐரோப்பிய நாடுகளில் அதிகரிப்பதனால் கலாச்சாரச் சீரழிவுகளும், சட்டவிரோதச் செயல்கள் அதிகரிப்பும், பொருளாதார நெருக்கடியும் எற்படுகிறது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதனால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றாகி விடுகிறது. அகதிகளை திருப்பி அனுப்பவும் வசதியாகிறது. தமிழ்மக்களின் அழிவையும் அரசாங்கத்தின் அஜாரகங்களையும் நேரில் நின்று பார்த்த நாடுகளே அகதிகளை அனுப்புவற்கான விண்ணப்ப நிராகரிப்புகளை பெருந்தொகையாகக் கொடுக்கத் தொடங்கி விட்டன.
புலிகளுக்கு உதவிசெய்வதூடு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு என்ன இலாபம் ஏற்படமுடியும்? மாறாக நட்டமே ஏற்படும். புலிகளுக்கு உதவி செய்வதூடு போர் நீடிக்கும், தமது முதலீடுகள் தக்கவைக்கப்படும், ஆயுதவிற்பனையால் ஏற்படும் வருமானத்தை விட ஒரு தொழிற்சாலையூடு அள்ளப்போகும் பெருந்தொகையான இலாபத்தை யார் கைவிடத்தயார்? இதனால் இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ள ஐரோப்பிய, அமெரிக்க, பிராந்திய வல்லரசுகள் விரும்பவில்லை. இதுவே ஐரோப்பிய அமெரிக்க தெருக்களில் எங்கள் கண்ணீர்கள் காணாமல் போனதற்கும், எங்கள் குரல்கள் கேட்காமல் போனதற்கும் காரணமாகும்.
இது ஒரு பெரியகட்டுரையாக வளராமல் இருப்பதற்காக உலகமயமாதலினால் ஏற்படும் நன்மை தீமைகளை புள்ளிவடிவத்தில் தந்து மீதியை பின்னோட்ட எழுத்தாளர்கள் கொண்டு சென்று முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் விட்டுவிடுகிறேன்.
• உலகமயமாதலினால் சிலவேளைகளில் பொருளாதாரச் சமநிலை ஏற்பட சாத்தியம் உண்டு.
• 3ம் உலகநாடுகளில் மூலவளங்கள் அழிக்கப்படும் ஆனால் தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கலாம். வெளிநாடு சென்று திரைகடலோடியும் திரவியம் தேடாமல் வெளிநாட்டவர்களே உங்களை நோக்கி வரும் காலம் கனிந்துள்ளது.
• பொருளாதார வளங்கொண்ட நாடுகளின் முதலீடுகள் உறுதியுடனும் உத்தரவாதத்துடனும் இருக்க வேண்டுமானால் போர்கள் நிறுத்தப்படும். இது இலங்கையில், பிலிப்பைந்து, சுமாத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் நடந்தேறின.
• போர்கள் நிறுத்தப்படும் போது இணைதல்கள் சாத்தியமாகும். பலமுள்ளவர்கள் இணைந்து பலவீனர்களை உண்பார்களா?
• வளர்முகநாடுகள் ஐரோப்பிய அமெரிக்கநாடுகளின் கழிவறையாக மாற்றம் பெறும்.
• வளர்முகநாடுகளிலும், படித்தவர்களுக்கும் வசதியானவர்களுக்குமே வேலைவாய்ப்பு என்று ஆகிவிடும். இதனால் கறுப்புப் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
• பொருளாதார மையமாக்கல் வலதுசாரித்துவத்துக்கு வழிகோலும். பணக்காரன் பெரும் பணக்காரனாவதும் ஏழைகள் தொடந்து கொடுமைகளை அனுபவிப்பதும் ஊக்கிவிக்கப்படும்.
• வலதுசாரித்துவம் வகுப்புவாதத்துக்கு தூபமிடும்.
• சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் பிராந்திய வல்லரசுகளாலும், பெரும்பான்மை இனத்தவர்களின் இணைவுகளாலும் வெளியே வராமல் நசுக்கப்படும். உ.ம் சீனாவில் நடந்து கொண்டிருக்கும் உகுரு இனப்போராட்டம். சிறுபான்மை இனங்கள் உருந்தெரியாமால் பையப் பைய அழிக்கப்படுவார்கள் அன்றேல் தானாக அழிவார்கள்.
• ஆதிக்க மொழிகள் ஆட்சியைப் பெறும் உ.ம் ஆங்கிலம், அரேபிய மொழி இரஸ்சிய மொழிகளால் சிறுமொழிகள் சிறுபான்மை இனம்போல் உலகத்தை விட்டே விரட்டப்படும்.
• சிறுகைத்தொழில்கள் அழிக்கப்படும். பெருந்தொழில்கள் அவற்றை விழுங்கும்.
• மனிதனின் அடிப்படை தேவையான விவசாயம், பண்ணைகள் அழிக்கப்பட்டு பெருவருமானம் தரும் கைத்தொழில்கள் முதன்மைப்படுத்துப்படும். இதனால் வளியசுத்தம் அதிகரித்து உலகில் சமநிலை பாதிக்கப்படும். உணவு தயாரிப்புக்குப் பதிலாக வில்லைகள் தயாரிப்பு அதிகரிக்கும்.
• 3ம் உலகநாடுகளில் முன்பின்னறியா புதிய வியாதிகள் வில்லை வியாபாரங்களுக்காக வலம்வரும். உ.ம். தெங்குக்காச்சல், பறவைக்காச்சல், பன்றிக்காச்சல் இனி பூனைக்காச்சல், நாய்காச்சல் என்று இன்னும் எத்தனை எத்தனையோ காச்சல்களும் பேச்சல்களும் பீச்சல்களும் உருவாகும்.
• பெருந்தெருக்களாலும், போக்குவரத்து, தொழிற்சாலை போன்றவற்றினால் ஏற்படும் வளியசுத்தமும், இரசாயனக்கழிவுகளும் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளில் குறைப்பதற்காக 3ம் உலகநாடுகளுக்கு வெளிநாட்டு முதலீடு எனும் பெயரில் ஏற்றுமதி செய்யப்படும். அதாவது வளர்முகநாடுகள் பொருளாதார வல்லரசுகளின் கழிவறையாகும்.
• உலகரீதியாக பொருளாதாரச் சமநிலை ஏற்படச்சாத்தியம் இருந்தாலும் வல்லரசுகள் அவற்றை தடுக்கும். ஆனால் வளர்முக நாடுகளில் ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் இருக்கும்.
• ஒருநாட்டில் இன்னொருநாடு தங்கிவாழவேண்டி அமைவதால் சிறுபான்மைகளின் கருத்துக்கள் போராட்டங்கள் பெரும்பான்மை இணைவுகளால் கொல்லப்படும். பெரும்பான்மை பெரும்பான்மையுடன் கைகோர்த்துக் கொள்ளும் உம் இந்திய இலங்கை உறவு. சீன இலங்கை உறவு.
• கணனிகளாலும் அதிவேக வாழ்வியலாலும், இரசாயனக்கழிவுகளாலும் வளியசுத்தங்களினாலும் அங்கே மக்களின் வாழ்வுக்காலம் குறையும், கூட்டுவாழ்வு குலையும். தனித்துவமான கலாச்சாரங்கள் அழியும்.
• கலாச்சாரங்கள் இணைவுகளால் பலமானதே வாழும். இயந்திரவாழ்க்கை ஒன்று மிருகவாழ்வியலுக்கு வித்திடும்
• உடன்பாடுகளுடன் நாடுகள் இணைந்து பெருலாபம் பெறும்.
• நாடுகளின் எல்லைகள் உடையும், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு அதிகரிப்பதனால் வகுப்புவாதமும் வர்க்கபேதமும் போராட்டங்களும் அதிகரிப்பதற்கு சாத்தியம் உண்டு.
• தனித்துவமற்ற சமூகம் உருவாகி பணத்துக்காக அலையும்.
• பொருளாதாரப் பரிமாற்றம் போல் பயங்கரவாதப் பரிமாற்றமும் வெகு வேகமாக நடைபெறும். அமைதியான நாடுகளில் களவு கன்னக்கோல் பாலியல் வல்லுறவு என்பன அதிகரிக்கும்.
• நன்மை தீமைகள் இரண்டும் பொதுவானாலும் பொருளாதாரம் ஐரோப்பிய அமெரிக்க பிராந்திய வல்லரசுகளின் கையிலேயே என்றும் இருக்கும்.
• இவ்வளவு காலமும் 3ம் உலகநாடுகள் வல்லரசுகளின் ஆயுதக்கழிவகமாக இருந்தது. இன்று அவை வழியசுத்தம், இரசாயனக்கழிவகமாக மாற்றம் பெறுகின்றன. எது எப்படி வளர்ந்தாலும் மாற்றம் பெற்றாலும் ஒன்று மட்டும் உண்மை ஏதோ ஒருகழிவகத்தை எம்மக்கள் சுமப்பார்கள்.
இப்படி நன்மை தீமைகளுடனான ஒரு உலகமயமாதல் நடந்தேறும். நான் தவறவிட்ட விடயங்களை பின்நோட்டம் விடுவோர் விட்டுவைக்காது தொடருங்கள்.
chandran.raja
நன்றி குலன். எப்படியெல்லாமோ உங்களை கணிப்பீடு செய்திருந்தேன். இந்த கட்டுரை மூலம் உடைத்தெறிந்து விட்டீர்கள். உங்களுக்குயுரிய சந்தேகங்களே எனக்கும் உரியது. எனக்கு மட்டுமல்ல தேசம்நெற் வாசகர்களுக்கும் தான்.
உங்கள் எழுத்துக்களை துணிகரமாக முன்வையுங்கள். நிச்சியம் வெற்றியளிக்கும். என்னையும் ஏதோ ஒருவழியில் உசுப்பேற்றி விட்டது. மனிதன் மனிதனுக்காக வாழ்கிற வாழ்வை நாங்கள்யாகுதல் அரங்கேற்றி வைப்போம். எப்பேற்பட்ட பழியுடனும். மீண்டும் உங்கள் கட்டுரையை பின்தொடருவேன்.
Anonymous
கொண்டோடிச் சாமியார் சாத்திரம் சொன்ன மாதிரி எழுதிப்போட்டியள். சாமியாராய் நான் சொல்லுறன். கேளுங்கோ…
பெரிய சண்டியர்மார் (அமெரிக்கா, ருஷ்யா) பிரச்சனையில பிறந்தது கொசொவொ. இனிச் சிறிய சண்டியர்மார் (இந்தியா, சைனா) பிரச்சனையில் பிறக்கிறது தமிழிழம்.
kusumbo
நல்லாய் சொன்னியள் சாமியார். நம்பாதைங்கோ நம்பாதையுங்கோ என்று நம்பி கெட்டதும் தம்பிதான். நீங்கள் என்னும் தமிழீழக்கனவில் இருந்து மீழவில்லைப்போலை கிடக்கு. எதிர்காலம் சொல்ல முன்பு சாமியார் நிகழ்காலத்திலை என்ன நடக்குது எண்டு பாருங்கோ. உங்களுக்குத் தெரியுமே சாமியார் தமிழீழம் என்று அடிபட்ட தம்பியும் புலிகளும் போய் சேந்திட்டினம் பாருங்கோ.
பல்லி
// சிறிய சண்டியர்மார் (இந்தியா, சைனா) பிரச்சனையில் பிறக்கிறது தமிழிழம்.//
அது சரி பிறக்காத தமிழீழத்துக்குதான் இத்தனை உயிர் பலியா?? பிறக்கும்போது மிகுதியும் போய்விடுமோ?? அங்கு வாழ போறது இந்தியா சைனா உறவுகளா? அதையும்விட தமிழீழமோ; அல்லது தலை ஓடிய ஈழமோ எதுவாயினும் அந்த வன்னியில் வாழும் இரண்டு லட்ச்சம் பேருக்குதானே கேக்குறியள்; ஆனால் அந்த மக்களில் ஒருவர் கூட உங்க சதிராட்டத்தை எனி ஏற்றுகொள்ள மாட்டார் என பல்லியும் பலன் சொல்லுகிறது,
Anonymous
சாமிதான் திரும்பவும் சொல்லுது!
சிங்கம் இருந்தா புலி இருக்கும்.
கொசொவோ வந்தா தமிழிழம் வரும்.
தவழும் பிராணியின் பலன் தவறித்தான் போகும்.
மோட்டில இருந்து கொண்டு தமிழிழக்கனவு, சதிராட்டம்,போய் சேர்ந்திட்டினமெண்டு சும்மா குசும்பு பண்ணாதேயுங்கோ.
இரத்தம் இல்லாதது பிரவசமா?
பேரழிவில்லாதது வரலாறா?
Kulan
தமிழ்ஈழம் அமையுமோ இல்லையோ என்பது யதார்த்தமாகவும் நிதர்சனமாகவும் கண்ட உண்மைகளின் பின்பும் வட்டுக்கோட்டையையும் தமிழீழத்தையும் கொண்டு திரிந்தால் என்னதான் செய்ய முடியும். சரி அப்படி தமிழீழம் மீதியுள்ள தமிழர்களின் பிணங்களில் தான் அமைவது என்றால் அமையட்டும் ஆனால் அதுவரைக்கும் வன்னிமக்கள் உயிருடன் இருப்பார்களா? தமிழ் என்றொரு மொழி இருக்குமா என்ற கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டியவர்கள் ஆகிறோம். 1980ல் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு. இன்றுள்ள தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தீர்களானால் தமிழீழம் என்பதற்கு சாத்தியமே இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் உலகமயமாதலை யாரும் தடுக்க இயலாது. ஏற்கனவே சீனா இந்தியா பாக்கிஸ்தான் அமெரிக்கா…. என்று இலங்கையைப் பங்கு போட்டு வித்தாயிற்று இனி பங்குதாரர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தான் அடுத்த கேள்வி. புலி அழிப்பிலும் பங்குதாரர்களின் பங்களிப்பே அதிகம் என்பதை மறக்க முடியாது. பங்குதாரிகள் தாம் போட்ட முதலை வட்டியும் குட்டியுமாய் எடுக்காமல் போய்விடுவார்களா என்ன? இன்நிலையில் இலங்கைவாழ் தமிழர்களின் நிலைதான் என்ன? இந்த உலகமயமாதலூடாக எம்மினத்தை; எம்மக்களை எப்படிக் காப்பாற்றலாம் என்று சிந்தியுங்கள். சும்மா வட்டுகோட்டை கனவை விட்டுவிட்டு நிஜத்துக்குத் திரும்புங்கள்.
Kusumbo
அனோனிமஸ்சு!
//இரத்தம் இல்லாதது பிரவசமா? பேரழிவில்லாதது வரலாறா?//
இப்ப நீங்கள்தான் குசும்பு பண்ணுறியள் என்னைக் கிளறிவிட்டுட்டுக் கூத்துப்பார்க்க நிக்கிறயள். இரத்தமில்லமில்லாத பிரசவம் இல்லைத்தான். போனஇரத்தம் பத்தாதோ? தாயே போனபிறகு பிள்ளையும் செத்துப்போச்சு. பிணப்பிரசவத்தைப்பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறயள். மிச்சம் மீதியாய் கம்பிவேலிகளுக்குப் பின்னாலை நிக்கும் சனத்தையும் காவு கொடுப்பம் எண்டு நிக்கிறியளோ? ஐயோ கொசோவொவை நினைச்சுத்தானே ஐயா உங்கடை தலைவன் வெட்டுவாங்கிக் கொண்டு நந்திக்கடலில் குதித்தவன். மிச்சம் மீதியாய இருக்கும் சனத்தையும் எந்தக் கடலிலை கொட்டப்போகிறியள்.
மாயா
//பேரழிவில்லாதது வரலாறா?//
ஐயோ , வரலாறு வேணாம். வாழ வேணும். வாழ விடுங்கோ
பல்லி
//தவழும் பிராணியின் பலன் தவறித்தான் போகும்.//
நீங்கள் நடக்கும் பிராணியின் அதுவும் காட்டில் வாழகூடிய பிரானியை நம்பி தமிழீழம் கிடைக்கும் என கனவுகண்டதை வைத்து வீட்டில் அதுவும் மக்களுடன் பிரானியாய் வாழும் பிரானி சொல்வது பலிக்காமல் விடுமா ?
//கொசொவோ வந்தா தமிழிழம் வரும்.//
அதுவரட்டும் ஆறுதலாய் அப்போது பார்ப்போம்; அதுக்குமுன் அந்த வன்னிமக்களை கொசுவிடம் இருந்து காக்கமுடியுமா? அதை யோசிக்கவில்லையா??
//தமிழிழக்கனவு, சதிராட்டம்,போய் சேர்ந்திட்டினமெண்டு சும்மா குசும்பு பண்ணாதேயுங்கோ.//
குசும்பா?? பல்லியா? அப்படியா??
ஜயா நீங்க இந்த 30 ஆண்டுகாலம் அங்கு செய்தது என்ன கனல் கண்ணனின் சண்டை காட்ச்சியா?? அதுகூட பல இடத்தில் காமடியாய் மாறி இறுதியில் சோகமான சங்கதி எல்லாம் மறந்தாச்சா?
//இரத்தம் இல்லாதது பிரவசமா?//
இப்படி சொல்லிதானா கல்லறையில் மட்டும் 26ஆயிரம் பேர்;
கணக்கில்லா இரத்தங்களுக்கு கணக்கே இல்லை;
பொது ரத்தம்:
துரோகி ரத்தம்;
சகோதர ரத்தம்;
வேண்டாத ரத்தம்;
வேண்டியவர்க்காக ரத்தம்;
ராணுவ ரத்தம்;
சிங்கள ரத்தம்;
முஸ்லீம் ரத்தம்;
தலமைகளின் ரத்தம்;
அயல்நாட்டு ரத்தம்,
புலம் பெயர் ரத்தம்;
இத்தனை ரத்தமும் ஆறாய் ஓடியும் பிரவசம் கிடைக்காததன் காரணம்??
//பேரழிவில்லாதது வரலாறா?//
அதுதான் சுனாமிக்கு வரலாறு காணாத நிதியும், தலையின் ஒழிப்புக்கு பின் புதிதான வரலாறு சொல்லி நிதியும் சேர்த்து வரலாறு படைத்து விட்டியளே;
தொடரும் பல்லி;;
BC
தலைவர் உள்ளே ராணுவத்தை வரவிட்டு அடித்து தமிழிழம் எடுக்க போகிறர், நம்புங்கள் தமிழிழம் நாளை பிறக்கும் என்று சொல்லி முடிந்து இப்போ சாமியார் சொல்கிறார் தமிழிழம் பிறக்கும் என்ற நிலைக்கு வந்தாயிற்று.
Kulan
கட்டுரை உலகமயமாதல் பற்றியது. சாமியார் பின்நோட்ட எழுத்தாளர்களைக் கடத்திக் கொண்டு எங்கோ போகிறார். இந்த உலகமயமாதலில் எம்மக்களுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் அற்றி அலசி ஆராயலாமா? இது இன்றைய காலத்தின் தேவை. இதை சரிவரச் சிந்தியாததால் தான் நந்திக்கடலில் குதித்தார் பிரபாகரன். இந்த உலகமயமாதல் பல தேசிய இனங்களின் அழிவுக்கு வித்திடப்போகிறது. ஏழைகளை எட்டி உதைக்கப்போகிறது. நிலம் புலம் என்று நின்றவர்கள் எல்லாம் பணம் பலம் என்று நிற்கப்போகிறார்கள்.
ragavan
நல்ல கட்டுரை. பக்கம் பக்கமாக கட்டியெழுப்பாமல் புள்ளி வடிவில் துள்ளியமாக கூறியுள்ளீர்கள். தொடருங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். தேசியம் அதன் வடிவங்கள் கூட உலகமயமாதல் மூலம் மாறப்போகின்றன. Global Cities உருவாகி விட்டன. உதாரணமாக லண்டன் பாரிஸ் ரொரண்ரோ நியுயோர்க் போன்ற பெரிய நகரங்கள் பல்வேறு இனக் குழுமியங்கள் வாழும் இடமாக மாறிவிட்டன.அத்துடன் இனக் குழுமியங்கள் பெரும்பான்மையானவாகவும் இந்த நகரங்களில் உள்ளன. புலம் பெயர்ந்த நாங்களும் மூன்றாம் உலக நாடுகளை அழிக்கும் தூய்மையை கெடுக்கும் காரணிகளுள் ஒன்றாகப் போகின்றோம். புலம் பெயர்ந்த மக்களின் நிறுவனங்களும் இந்த குப்பை கொட்டலிற்கு உதவுகின்றன.
valarnathy
“புலிகள் இடதுசாரித்தன்மையைக் கொண்டவர்களாகவும் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் இயல்பு கொண்டவர்களாக இருந்தும் ஏன் புலிகளுக்கு சீன உதவி கிடைக்கவில்லை?”
புலிகளை இடதுசாரி என்று எப்படி சொல்ல முடியும்? அதன் நிறம் கூட அறியாதவர்கள். நிம்மி அக்கா ரொரண்ரோவில் கைதட்டலுக்காக கூறியதாக கேள்வி. குலன் நீங்களுமா?………………
பல்லி
//எழுத்தாளர்களைக் கடத்திக் கொண்டு எங்கோ போகிறார். :://
அதுவே அவருக்கு தலைவர் பொட்டரை அருகில் வைத்ததால் வந்த வினைபோல் வந்துவிடபோகிறது, குலன் இப்போது பல்லி உங்கள் கட்டுரைக்குள் வருகிறேன், வல்லரசு யார் என்பது தெரியும், இனை வல்லரசுகள் யார் என்பதையும் சுட்டி காட்டிவிட்டீர்கள், ஆனால் இந்த புலம் பெயர் அறிவு கொழுந்துகள் (புலி இருந்து புல்லாங்குளல் வரை) எதுக்குள் அடங்குகிறார்கள், உலகமயமாகுதல் பற்றி பேசும்போது இவர்களே நாயகர்களாக பல்லிக்கு படுகிறது, தீர்வு திட்டங்கள் கூட எம்மைனத்தின் தேவைகருதி இல்லாமல் தாம்வாழுகின்ற படித்த கேள்விபட்ட நாடுகளை சாடியே இந்த கொழுந்துகள் தயாரிக்கினம்;
அடிக்கடி தாம் வாழும் நாட்டின் பிரதநிதிகளாக கொழும்புக்கும் போய் வருகினம்; வல்லரசுகளில் கூட ஈழம் காணலாம் என ஒரு கூட்டம், இல்லை கொழும்புக்கு போய் ஆங்கிலத்தில் பேசினாலே தமிழர் பிரச்சனை தீர்ந்துவிடும் என சில தனி குழுக்கள்; பிள்ளை பிடிகாரன் என நாம் சிறுவயதில் நினைத்த அமெரிக்காவை எமது சிறுவர்களை காப்பாற்று, சிங்கள அரசிடம் இருந்து எம்மக்களை மீட்டுதா இதுவும் எம்மவர்தான், சோசலிஸ ரஸியாவோ ஸோவுக்கு கூட சோஸலிசம் இல்லாமல் திண்டாடுகிறது, மருத்துவ மாணவரே (எம்மவரும்தான்) பகுதிநேர வேலையாக மாவியாவில் கடமையாற்றுகிறார்கள், சினா சொல்லவே வேண்டாம், இருப்பினும் இலங்கயில் ஒரு ஓலை குடிசைதன்னும் வேண்டும் என்பதில் இரவு பகலாய் உழைக்கிறது, இந்தியாவின் நிலைபாடோ ஏழுபிள்ளை நல்லதங்காள் நாடகம்போல் இழுவையும் சோகமுமாக உள்ளது, ஜரோப்பா அடேங்கப்பா என்ன கரிசனை ஈழதமிழர் மீது, இப்படி எங்கே பார்த்தாலும் எம்மவர் வார வட்டிக்கே வல்லரசுகளுக்கு பணம் கொடுப்பவர்கள் போல் செயல்பட்டால் (மகிந்தா உட்பட) ஈழம் என்ன இலங்கையே உலகத்தின் தத்து பிள்ளையாய் தவிக்க நேரிடலாம்; இதுவே உங்கள் கவலையும் உன்மையும் கூட;
தொடரும் பல்லி;;
Kulan
வளர்நதி அவர்கட்கு!
குலன் நீங்களுமா? …. எனக்கேட்ட கேள்வி நெஞ்சை ஊடறுத்தது போன்று உள்ளது. புலிகள் என்றும் இடதுசாரிகளாக இருந்ததில்லை ஆனால் தம்மை இடதுசாரிகளாகவே வரையறுத்தார்கள்; காட்டிக்கொண்டார்கள். ஆரம்பகாலங்களில் அதாவது 70ன் கடசிப்பகுதிகளிலும் 80ன் ஆரம்பத்திலும் இவர்களுடன் ஒன்றாக இருந்தவன் என்பதால் இங்கே சிலவிடயங்களைக் கூறுகிறேன். நாம் அன்று வாசித்ததும்; போதித்ததும் இடதுசாரித்துவப் புத்தகங்களே. அவைதான் வழிகாட்டியாக இருந்தன. பிரபாகரனும் இடதுசாரிப் புத்தகங்களை வாசித்ததுண்டு. புளொட் பிரிந்து போகும் போது துப்பாக்கிகளுடன் பலபுத்தகங்களை மூட்டை கட்டி எடுத்துச் சென்றார்கள். என்று புளொட் பிரிந்து சுந்தரம் சுடப்பட்டாரோ அன்றே இடதுசாரிப் புத்தகங்களும் எரிக்கப்பட்டன. பிரபாகரன் அம்புலிமாமா தான் வாசித்திருப்பார் என்று எண்ணுகிறேன்.
மக்களுக்கும் பிறநாடுகளுக்கும் பிரபாகனும் புலிகளும் தம்மை இடதுசாரிகளாகவே காட்டிக் கொண்டார்கள். இன்றும் பிரபாகரன் பேட்டி யூரியூப்பில் உள்ளது தமிழீழம் மலர்ந்தால் திதோ போல் ஒரு செக்கோசிலவேக்கியா அன்றைய பல்கான் போல் ஒருஇடதுசாரி நாடாகத்தான் இருக்கும் என்று கூறினார். பிரசாரங்களிலும் கியூபா; திதோ தான் விளக்கத்துக்குரிய பதில்களாக இருந்தன. அதனால்தான் நான் வெளிப்பார்வைக்கு புலிகளை இடதுசாரிகள் என்று குறிப்பிட்டேன். அவர்கள் என்றும் இடதுசாரிகளாக இருந்தது இல்லை; நடந்ததும் இல்லை என்பதை நான் நன்கு அறிவேன். சின்ன உதாரணம் ஒரு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தில் இருந்து வந்தவர்தான் துரையப்பா. ஏழைமக்கள் உயரப் பாடுபட்டவரும் கூட இவரைப் போட்டது தம்பி. இவர் எப்படி ஏழைகளின் தோழனாகவும் பாட்டாளியின் கூட்டாளியாகவும் இருக்க முடியும். இப்படி பலவற்றை என்னால் அடுக்க முடியும். இருப்பினும் தம்மை புறத்தோற்றத்துக்கு புலிகள் இடதுசாரிகளாகவே காட்டிக் கொண்டார்கள்.
suman
வளர்நதியின் கரத்துடன் நான் ஒத்துப்போகிறோன் புலிகள் என்றுமே சமூகம் பற்றியோ சமூகத்தில் உள்ளவர்கள் மூளையுள்ளவர்கள் என்றோ கருதியதில்லை இவர்களை இடது சாரித்தன்மை கொண்டவர்கள் என்று எழுதி இடது சாரித்துவத்தை கொச்சைப்படுத்தி விட்டீர்கள்.
இலங்கையில் பெயர்போன இடதுசாரிக் கட்pகளே இடதுசாரித்துவத்துக்கும் இந்த கட்சிகளுக்கும் தொடர்பில்லாதவர்கள் இது இப்படி இருக்க புலிகளை பயங்கரவாதிகளை இடது சாரிகளிளுடன் ஓப்பிட்டது தவறு
இன்றுள்ள இடதுசாரிகள் எனப்படுவோர்கள் கள்ளர் கூட்டமே தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்காதவர்கள் மற்வர்கள் தமிழரின் சுயநிர்ணய உரிமைகள் என்று கத்துவதின் மூலம் மட்டுமே தமது கட்சியை வளர்க்கலாம் என்ற தமது சுயநலப் போக்கு கொண்டவர்கள் எல்லாம் வாக்குகளுக்காக இடது பேசுபவர்களே இலங்கையின் எல்லா இடது சாரிகளும்
Kulan
சந்திரன் ராஜா; இராகவன்; வளர்நதி போன்றோர் கட்டுரையை வாசித்து அதற்குள் நின்று எழுதுவது மகிழ்சிக்குரியது. உலகமயமாதல் என்பதும் ஒருவகைச் சுனாமிதான். கொக்கோ கோலா தயாரிப்பால் தென்னிந்தியாவில் ஒருபகுதி விவசாய நிலம் களிவறையாகவும் பாலைவனமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. இதை அறியாத இந்தியா தன் களிவறைகளை இலங்கையில் கட்ட முயல்கிறது மிக வேடிக்கையான ஒன்றுதான்
Anonymous
உலகமயமாதலின் எழுத்தின் சிகரமே இதுதான்.
/ஆரம்பகாலங்களில் அதாவது 70ன் கடசிப்பகுதிகளிலும் 80ன் ஆரம்பத்திலும் இவர்களுடன் ஒன்றாக இருந்தவன்….., ,
சின்ன உதாரணம் ஒரு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தில் இருந்து வந்தவர்தான் துரையப்பா. ஏழைமக்கள் உயரப் பாடுபட்டவரும் கூட இவரைப் போட்டது தம்பி./
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
மேளம்
காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட கட்டுரை குலன் அவர்களுக்கு மேளத்தின் வாழ்துக்கள். கட்டுரை நல்லா இருக்கிறதே எண்டகையோட கீழபோனா பழயகுருடி கதவத்திறவடி…. அப்பவும் புலிதான்… இப்பவும் புலிதான். புலி செத்தாலும் வாழுது… இது தேவையா? சாமியார் பின்நோட்ட எழுத்தாளர்கள எங்கயோ கூட்டிட்டுப்போறாரே எண்டு பார்த்தா… பல்லியும் பின்னால ஓடுது. அட என்ன நடந்தது எண்டு இன்னும் கொங்சம் கீழ போனா பறவாயில்ல நம்ம பல்லி ஆக்கள கொஞ்சம் கடந்து நேராஓடுறமாதிரி தெரியுது.
மேளம்
Anonymous
குலன் எழுதியது உலகமயமாதல் என்பதைப் பற்றிய அனுமானங்கள். அது தொடர்பான என் அனுமானமே கொசோவோ,தமிழிழம். இதில் புலிகளை குறி வைத்து வெறி கொண்டலையும் பின்னாடல்காரர்கள் அறிவு வெளிப்படையானது.
சாந்தன்
‘…நல்ல கட்டுரை. பக்கம் பக்கமாக கட்டியெழுப்பாமல் புள்ளி வடிவில் துள்ளியமாக கூறியுள்ளீர்கள். தொடருங்கள். …
உலகமயமாக்கலை மட்டுமல்ல வேறெந்த மயமாக்கலையும் புள்ளி வடிவில் எழுதலாம். ஆனால் துல்லியமாகச் சொல்ல முடியாது. அவை தென்தெட்டாகவே இருக்கும்.
The devil is in the detail.
Kulan
பல்லி! நீங்கள் எழுதிய கடசிப்பின்னோட்டத்தை வாசித்து வாசித்துச் சிரித்தேன். தனிமனிதபத்திவாதச் சமூகத்தில் வளந்த புத்தி ஜீவிகள் புத்தியை சீவியே காட்ட விரும்புவார்கள் அதையே செய்கிறார்கள். இவை அனைத்தும் விழுமியங்களாக நாமும் அவர்களும் கொண்டு வந்தவையே.
சுமன்!
வளர்நதி அவர்களுக்குச் சொன்ன பதிலை வாசியுங்கள். பலர் தம்மை இடதுசாரிகளாக ஏற்றுக்கொள்ளாதபோதும் தம்மைப் போராளியாகவும் புத்தி ஜீவிகளாகவும் காட்டிக் கொள்வதற்காக வரிந்த கொண்ட பாத்திரமே இடதுசாரித்துவமாக இருந்தது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப்பேசும் ஈழப்பிரிவினைவாதிகள் ஏன் தமிழர்களுன் பிரித்துவைத்த சமூகங்களின் சுயநிர்ணய உரிமைபற்றி பேசவில்லை போராடவில்லை? புரிகிறதா அத்திவாரம் சரியாக அமையாததால்தான் தமிழ்ஈழம் சரிந்து கடலிலனுள் விழுந்தது.
Kulan
சாந்தன்!
//உலகமயமாக்கலை மட்டுமல்ல வேறெந்த மயமாக்கலையும் புள்ளி வடிவில் எழுதலாம். ஆனால் துல்லியமாகச் சொல்ல முடியாது. அவை தென்தெட்டாகவே இருக்கும்./
மேலே விபரமாக எழுதிய பின்பே புள்ளி வடிவத்துக்குச் சுருங்கினேன். இக்கட்டுரையையே பெரிதாக இருக்கிறது என்று வாசிக்காது விட்ட அவசர உலகத்தாரின் செய்திகளைக் கேட்டேன். உலகமயமாதலை இன்னும் விரிவாக ஆழமாக எழுதப்போனால் பக்கம் பக்கமாக எழுதலாம் என்பதைத் தாங்களும் அறிந்திருப்பீர்கள். இது ஒரு இலகுவான தலைப்பும் அல்ல. இது நாம் இன்று சிந்திக்க வேண்டிய முக்கியமான விடயம். இந்த உலகமயமாதலை எப்படி இலங்கை அரசு தமக்குச்சாதகமாகப் பயன்படுத்தியது என்பதை இன்னும் புலிகளும் அறியவில்லை; பல்லி சொன்னதுபோல் பலபுத்தி ஜீவிகளும் பேசவில்லை. இந்த உலகமயமாதலை எப்படி எம் அரசியல் தலைமைகள் எப்படிப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதில்தான் எம்மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. இப்பவும் வட்டுக்கோட்டையைக் கொண்டு ஓடித்திரிகிறார்களே என்ன செய்ய? நான் புள்ளிவடிவத்துக்கு இறங்கியதற்குக் காரணமும் எழுதியுள்ளேன். என்னை விட பின்னோட்டம் விடுவோருக்கும் உலகமயமாதல் பற்றிய எண்ணங்களும் எம்மக்கள் பற்றிய எதிர்காலங்களும் தெரியும் என்பதில் நம்பிக்கை உண்டு என்பதாலே உங்கள் கைகளில் மீதியைத் தொடருமாறு விட்டேன். தேசத்தில் கட்டுரை என்பது ஒருதளம் பின்நோட்டம் என்பது இன்னொரு தளம். இந்தப் பின்நோட்டத்தளத்தில் எத்தனையோ அறிவுஜீவிகள் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும்.
Kulan
அனோனிமஸ்! இக்கட்டுரை என் அனுமானமல்ல. நடந்த நடந்து கொண்டிருக்கிற ஜதார்த்தம். புலிகளுக்கு மூடுவிழா வைத்ததே உலகமயமாதல் என்பதை இன்னும் புரியவில்லையா? இது அனுமானமல்ல நடந்து முடிந்த கொடுமை.
Anonymous
குலன்!
பொதுவாக அலசிஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்படும் விடயமே யதார்த்தம். நீங்கள் எழுதியது உங்களுக்கு யதார்த்தமாக இருக்கலாம். ஏனையோருக்கு அனுமானமே, அது அறுதியாக நிறுவப்படும் வரை.
ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையை ஒரு கணித சமன்பாடாக தீர்வு காண முடியாது. உங்கள் எழுத்தின் நேர்மையை, ஆய்வுத் திறனை எல்லோரும் அறிந்து கொள்ள, ‘உலகமயமாதலின் எழுத்தின் சிகரமே இதுதான்.’ என்ற குறிப்பிற்கு பதில் சொல்லுங்கள்
Kulan
அநோனிமஸ்!
//பொதுவாக அலசிஆராயப்பட்டு, அங்கீகரிக்கப்படும் விடயமே யதார்த்தம்.//
ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சனை உள்ளது தீர்க்கப்படவேண்டும் என்று முன்வந்த நாடுகள் ஏன் நோர்வே கூட அங்கிகரித்தது. ஆனால் ஏன் உண்மையாக எம்மக்களுக்கு நடந்த வன்னிப்பாதகச்செயலை அந்த ஜதார்த்தத்தை ஏற்கவில்லை? யதார்த்தங்கள் மறைக்கப்படுவதுண்டு. இந்தியாவில் கொக்கோ கோலாவின் கழிவறையால் தரிசாகிக் கொண்டிருக்கிறது விவசாய மண். சீனாவில் வெளிநாட்ட உற்பத்தியாளர்களின் முதலீடுகளால் காலை வேளைகளில் பீக்கிங்கில் மனிதரை மனிதர் பார்க்க முடியாதவாறு புகைமூட்டம். இனி இந்தப்பிராந்திய வல்லரசுகள் தம்நாட்டுப் பாதுகாப்பை முதன்மைப்படுத்தி முதலீடு எனும் பெயரில் எம்மண்ணில் காலூன்றி கழிவறைகளை திறக்கிறார்கள் என்பதை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக்கொண்ட உண்மை.
//நீங்கள் எழுதியது உங்களுக்கு யதார்த்தமாக இருக்கலாம். ஏனையோருக்கு அனுமானமே//
உங்களின் இந்த வரிகளுடன் உடன் படுகிறேன்.
நிச்சயமாக ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையை ஒரு கணிதச்சமன்பாடு போல் தீர்வுகாண முடியாது என்பதை நன்கறிவேன். அதனால் தான் வரலாற்றின் பின்பக்கங்களையும் பனிப்பேரையும் தொட்டுச்சென்றேன். ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை பல பரிமாணங்களுக்கு உட்பட்டது. அன்று சரியெனப்பட்டது இன்று பிழையாக இருக்கலாம்: இன்று வட்டுக்கோட்டைத்தீர்மானம் சரியானதா என்று மீழாய்வு செய்வதே பரிமாணத் திரிபாக்கம் தானே. எனது கருந்து இன்றைய நிலையில் எம்மக்களும் புலிகளும் உலகமயமாதலினால் பாதிக்கப்பட்டிக்கிறோம் இதை இலங்கை அரசு வெட்டுகாயாகப் பாவித்திருக்கிறது என்பது யதார்த்தமே. இதை இல்லை என்கிறீர்களா? சரி இனி வருங்காலத்தில் இந்த உலகமயமாதல் பற்றி அலசி ஆராய்வதற்கு இக்கட்டுரை ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கட்டுமே.
Kulan
அநோனிமஸ்!
//‘உலகமயமாதலின் எழுத்தின் சிகரமே இதுதான்.’ என்ற குறிப்பிற்கு பதில் சொல்லுங்கள்//
என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள். உலகமயமாதலின் எழுத்தின் சிகரமே இதுதான் என்று யார் சொன்னது? நான் சொன்னேனா? எங்கே உள்ளது நீங்கள் குறிப்பிடும் அந்தக்குறிப்பு.
பல்லி
சாத்திரியார் ஒரு கட்டுரை மூலகதைபோல்தான்; அதன் திரைகதை பின்னோட்டங்களால் தான் நிவர்த்தியாகும்; இது இதே தேசத்தில் எமது அனுபவம், செந்தில் வாழப்பழகணக்கு மாதியே தங்கள் பின்னோட்டம் எனக்குபடுகிறது, உலகமயமாதல் பற்றி குலன் எழுதியது தவறாயின், அதை சுட்டி காட்டுங்கள் அதைவிட்டு கட்டுரை சிகரமே என தாங்கள் பின்னோட்ட மாவியாவாக செயல்படுவது நியாயமா?
குலன் சொன்னது போல் 30 வருட போரை ஒரு சிலமாதங்களில் அரசு முடிவுக்கு கொண்டுவர அவர்களது உலகமயமாதலுக்கான நேர்த்தியான அணுகுமுறயே காரனம்; அதே உலகத்தை புலிகொடியை காட்டியே மிரட்டிய நாம் அதுபற்றி பேசும்போது ஜம்புலங்களில் ஏதாவது ஒன்றையாவது பிரயோசின படுத்தினால் உன்மையில் புரியும்; ஈழ இறுதிபோரில் புலிகளின் நம்ப்பிக்கை ஓபாமா கப்பல் அனுப்புவார், இதை ஒரு வன்னி குடிமகனுக்கு சொன்னால் அவர் ஓபாமா என்ன தமிழ்செல்வனின் தம்பியா எனதானே கேப்பார்; ஆக நமக்கு பலவிடயம் தெரியாத காரணத்தாலேயே நாம் பலரை தப்பாய் புரிந்து பல ஆண்டுகளை செலவு செய்து விட்டோம்; உலகமயமாக்குதலுக்கு அமெரிக்காவும் சோவியத்தும்தான் இலங்கைக்கு வரவேண்டும் என்று இல்லை, எம்மவரே போதும்,
உதாரனத்துக்கு ஒரு விடயத்தை சொல்கிறேன் (இது சரியா என தெரியவில்லை ஆனால் பல்லி அப்படிதான் உலக தலையீட்டை பார்க்கிறேன்) இன்று வன்னியில் இருக்கும் முகாமில் இருந்து ஒருவரை விடுவிக்க ஏழு லட்ச்சம் வேண்டும், அப்படி பலர் வந்தும் உள்ளனர், அது இங்கு பிரச்சனை இல்லை, ஆனால் இந்த தொகையை வன்னியில் வாழும் ஒருவரால்(புலம் பெயர் உறவு இல்லாத) முடியுமா?
ஆக விடுதலை செய்யகூட தீர்மானம் புலம்பெயர் பணத்தின் மதிப்பீடுதானே நடக்கிறது, இது இன்று மருத்துவத்தில் இருந்து மரணசடங்கு வரை நடக்கிறதே, ஏன் உங்கள் நாடு கடந்த ஈழம் எதை மூலதனமாக வைத்து உருத்திரா தொடங்கினார், வழமான நாடோ அல்லது வல்லரசான நாடோ என்னொரு அதே மாதிரியானா நாட்டின் மீது ஆதிக்கத்தை(பலவழியில்) செலுத்த முடியாது, ஆனால் எமது நாடுமாதிரியானான சீரழிந்த நாடுகள் மக்கள் மீதுதான் அவை தமது பார்வையை செலுத்தும் என்பதுக்கு எமதுநாடு ஒரு அனுபவமே, இதை பல்லியின் பானியில் சொல்வதானால் புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழர் மீது யாரும் அரசியல் செய்யவோ சிவப்புசட்டை போடவோ முடியாது, ஆனால் வன்னிமக்கள் மீது படை எடுக்கும் எங்கள் வல்லரசுகள் எண்ணிக்கையை கடந்தகால தேசத்தின் கட்டுரைகளை வாசிக்கவும், அதன் பின் எழுதுங்கள் வாசிப்போம் நம் இன்றய நிலமை தேவை கருதி;
தொடரும் பல்லி;;
Kulan
அருமை பல்லி அருமை. இதைத்தான் நான் எதிர்பாத்தேன். ஒரு கட்டுரையாளன் எதை எதைத் தவறவிட்டானோ அதை எழுத்துக் கொடுத்து சரியான செய்திகளையும் சிந்தனைகளையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்பது கூட சமூகத்தொண்டும் அக்கறையும் என்றே சொல்லலாம். ஒருகட்டுரையாளனுக்கு இருக்கும் அதேயளவு சமூகப்பொறுப்பு பின்னோட்டக்காரர்களுக்கும் உண்டு. பின்நோட்டம் என்று பின்னுக்கு வைக்காது முன்நோக்கிபாக்கும் அவசியம் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனது எழுத்துக்களும் சிந்தனையும் தான் நாளைய சமூகம். நன்றி பல்லி …. தங்களிடம் இருந்து உலகமயமாதல் பற்றி இன்னும் எதிர்பார்க்கிறேன். இன்று உலகமயமாதல் என்பது ஒரு முக்கியதேவை இதை நாம் எம்மக்களுக்காக எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதுவே இன்று முக்கியமாக நாம் சிந்திக்க வேண்டியது.
Kulan
//புலம் பெயர் அறிவு கொழுந்துகள் (புலி இருந்து புல்லாங்குளல் வரை) எதுக்குள் அடங்குகிறார்கள்இ உலகமயமாகுதல் பற்றி பேசும்போது இவர்களே நாயகர்களாக பல்லிக்கு படுகிறது, தீர்வு திட்டங்கள் கூட எம்மைனத்தின் தேவைகருதி இல்லாமல் தாம்வாழுகின்ற படித்த கேள்விபட்ட நாடுகளை சாடியே இந்த கொழுந்துகள் தயாரிக்கினம்//
இது பல்லியின் கேள்வி. இராகவன் சொன்னது போல இந்த வல்லரசுகளுக்குச் சளைத்தவர்கள் அல்ல இந்த பணத்தை வைத்திருக்கும் தமிழர்களும் அறிவுக்கொழுந்துகளும். உ.ம். புலிகளும் அரசும் நோர்வே நடுமையில் பேச்சுவார்த்தை நடத்தும் போது புலம் பெயர் புலிகளே கொழும்பில் பல வீடுகள் வாங்கி விட்டதை நாம் நன்கறிவோம் அன்று குலன் கத்தினார் பாருங்கடா தமிழீழத்தில் இவங்களுக்கு நம்பிக்கை இல்லை கொழும்பிலை வாங்கி விடுகிறார்கள் என்று. இதேபோல் எதிர்காலத்தில் நாட்டு நிலமை கொஞ்சம் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள் ஊரில் கடையும் தொழிற்சாலை அல்லது ஏதோ ஒன்றைத் தயாரிக்கிறோம் என்று. அங்கு தயாரித்ததைக் கொண்டு வந்து இங்குள்ள தமிழர்கள் தலையில் கட்டுவார்கள். இதுவும் ஒரு உலகமயமாதல்தான். உலகமயமாதல் என்பது தனிய நேக்கரிவானது மட்டுமல்ல. எதிலும் நன்மை தீமை என்பன கலந்தே இருக்கும்.
Anonymous
குலன்!
உங்களோடு இருந்த பிரபாகரன் எதை வாசித்தார் அல்லது வாசித்திருப்பார் என்று எண்ணுகிறீர்கள்? அல்லது அப்போது எங்கே பார்த்துக் கொண்டிருந்திர்கள்?
“ஆரம்பகாலங்களில் அதாவது 70ன் கடசிப்பகுதிகளிலும் 80ன் ஆரம்பத்திலும் இவர்களுடன் ஒன்றாக இருந்தவன் என்பதால் இங்கே சிலவிடயங்களைக் கூறுகிறேன்.”
“போதித்ததும் இடதுசாரித்துவப் புத்தகங்களே. அவைதான் வழிகாட்டியாக இருந்தன. பிரபாகரனும் இடதுசாரிப் புத்தகங்களை வாசித்ததுண்டு”
“பிரபாகரன் அம்புலிமாமா தான் வாசித்திருப்பார் என்று எண்ணுகிறேன். ”
நன்கு அறிந்த விடயத்தை மறைத்தது ஏன்? அல்லது அப்போது எங்கே பார்த்துக் கொண்டிருந்திர்கள்?
“வெளிப்பார்வைக்கு புலிகளை இடதுசாரிகள் என்று குறிப்பிட்டேன். அவர்கள் என்றும் இடதுசாரிகளாக இருந்தது இல்லை; நடந்ததும் இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.”
தனி மனிதனோடு புத்தகங்களும் எரிக்கப்பட்டதா? எரித்தது புலிகளா, புளொட்டா? அல்லது அப்போது எங்கே பார்த்துக் கொண்டிருந்திர்கள்?
“புளொட் பிரிந்து போகும் போது துப்பாக்கிகளுடன் பலபுத்தகங்களை மூட்டை கட்டி எடுத்துச் சென்றார்கள். என்று புளொட் பிரிந்து சுந்தரம் சுடப்பட்டாரோ அன்றே இடதுசாரிப் புத்தகங்களும் எரிக்கப்பட்டன.”
துரையப்பா தாழ்த்தப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவரா? தாழ்த்தப்பட்ட வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதற்காக தம்பி சுட்டாரோ?
“சின்ன உதாரணம் ஒரு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தில் இருந்து வந்தவர்தான் துரையப்பா. ஏழைமக்கள் உயரப் பாடுபட்டவரும் கூட இவரைப் போட்டது தம்பி. இவர் எப்படி ஏழைகளின் தோழனாகவும் பாட்டாளியின் கூட்டாளியாகவும் இருக்க முடியும்”
முதலில் உங்கள் எழுத்துகளில் உள்ள உண்மையை, நேர்மையை, முரண்பாடற்ற தன்மையை, ஆய்வுத்திறனை வெளிப்படுத்துங்கள்.
உலகமயமாகல் என்பது மனிதனும் மதமும் பின்னிப் பிணைந்த காலத்திலிருந்து வருகிறது. உங்கள் கட்டுரை தொடக்கப் புள்ளி என்று கூறி நிர்வாணமாக அலைய முற்படாதீர்கள்.
Anonymous
கொண்டோடிச் சாமியார் சாத்திரம் சொன்ன மாதிரி எழுதிப்போட்டியள். சாமியாராய் நான் சொல்லுறன். கேளுங்கோ…
பெரிய சண்டியர்மார் (அமெரிக்கா, ருஷ்யா) பிரச்சனையில பிறந்தது கொசொவொ. இனிச் சிறிய சண்டியர்மார் (இந்தியா, சைனா) பிரச்சனையில் பிறக்கிறது தமிழிழம்.”/”Anonymous on October 27, 2009 5:31 pm
இப்ப நாட்டு வைத்தியராகச் சொல்லுறன். கீழ உள்ள இந்த இரண்டு மூலிகைகளை அரைச்சு வாசியுங்கோ.
http://www.marketoracle.co.uk/Article14327.html
http://www.marketoracle.co.uk/Article14477.html
சாமி சொன்னதின்ர உண்மையும் விளங்கும்
Kulan
/எங்குபார்த்துக் கொண்டு இருந்தீர்/ வெள்ளி பார்த்துக் கொண்டு நாம் இருக்கவில்லை. வெள்ளி பார்த்து வந்ததுதான் முள்ளிவாய்காலும் நந்திக்கடலும். உம்மைமாதிரி எமக்கும் பின்நோட்டம் எழுதமுடியும். துரையப்பா கொல்லப்பட்டதன் பின்னணி தனி அரசில் மட்டுமல்ல. சாதிப்பின்னணியும் காரணம். தம்பி அம்பே தவிர எய்தவன் யாரோ.
//உலகமயமாதல் என்பது மனிதனும் மதமும் பின்னிப் பிணைந்த காலத்திலிருந்து வருகிறது// இது உமது ஆய்வா? அல்லது அறுப்பா? மனிதப்பரம்பல் வேறு இன்று உலகமே பேசும் உலகமயமாதல் வேறு. மதத்தை உருவாக்கியவனே மனிதன்தான். மதத்துக்கு முன்னரே மனிதனுக்கு வால் விழுந்து விட்டது. விழவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும். மதம் என்பது உருவாக முன்னரே மனிதப்பரம்பல் உருவானது. கட்டுரையைச் சரியாக வாசியும். கட்டுரை பனிகாலத்தில் இருந்து ஆரமாகிறது. இப்பதான் புரிகிறது இன்னும் உறைந்த பனி கரையவில்லை என்று. நான் எழுதியது இன்று அநேகமானோர் பேசுகின்ற கருகின்ற உலகமயமாதல் ஆதி குரங்கு மரத்தில் இருந்து இறங்கி நிலத்துக்கு நிலம் திரிந்ததை நீர் உலகமயமாதல் என்று சொன்னால் அதையும் ஒரு கட்டுரையாக எழுதும். நீர் கட்டுரையையோ கருத்தையோ பரிமாற வரவில்லை என்பதை பின்னோட்டங்களை வாசித்தவர்கள் அறிவர்.
//உங்களோடு இருந்த பிரபாகரன் எதை வாசித்தார் அல்லது வாசித்திருப்பார் என்று எண்ணுகிறீர்கள்? அல்லது அப்போது எங்கே பார்த்துக் கொண்டிருந்திர்கள்?// ஒன்றுக்கும் உதவாமல் விடுப்புப்பாப்பதுதான் எமக்குத் தொழிலா?
சில சுகவீனங்களுக்கு மருந்தே இல்லை அதை தனிமைப்படுத்தி அப்படியே விட்டால் வியாதி அவருடனே மட்டும் நின்றுவிடும் உமக்கு பதிலளித்துத் தொடர்ந்து என்நேரத்தை கெடுக்க விரும்பவில்லை.
palli
எடுப்பே பிழை அதில் என்ன கடுப்பு வேண்டி இருக்கு, துரையப்பாவை சுட்டது யார்? பிரபாவா? யார் சொன்னது? அப்ப கிருபா யாரை சுட்டார் ?
துரையப்பாவின் நிழலையா?? இப்ப புரியுமே ஏன் நாம் தேசத்தில் மல்லு கட்டுகிறோம் என, பல உன்மைகள் பொய்யானதால் சில பொய்கள் கூட உன்மையாய் வலம் வருகிறது,
மாயா
// பிரபாகரன் அம்புலிமாமா தான் வாசித்திருப்பார் என்று எண்ணுகிறேன். //
1985களில் பிரபாகரன் தென் இந்திய பத்திரிகையொன்றில் பேட்டி கொடுக்கும் போது, ஆனந்தவிகடன் , குமுதம் படித்துதான் போராட இறங்கினேன் என சொல்லியிருந்ததை பார்த்து , பலர் வாய் விட்டு சிரித்தார்கள்.
Kusumbo
பல்லி! யார் அந்தக் கிருபா? துரையப்பர் கொலைவளக்கு தொடர்பாக பிரபா; சந்ததி தேடப்பட்டதை அனைவரும் அறிந்திருப்பார்கள். துரையப்பா கொலைவளக்கில் சம்பந்தம் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் தேடப்பட்டார்கள் என்பது அறிந்ததே. கிருபா பற்றி அறிய ஆவலாக இருக்கிறது தயவு செய்து பல்லி கொஞ்சம் விளக்கமாகச் சொலுங்களேன்
Kulan
துரையப்பா கொலை; தியாகர் கொலைமுயற்சியில் சம்பந்தப்பட்டவர்களும்; அதை நன்கு தெரிந்தவர்களும் ஐரோப்பாவில் இன்னும் மெளனமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தயவுசெய்து இதுபற்றி மேலும் என்னைக் கிளறாதீர்கள்
Anonymous
நண்பரே குலன்!
வெள்ளி பார்த்துக் கொண்டு நாம் இருக்கவில்லை.–இது உங்கள் நேர்மை.
துரையப்பா கொல்லப்பட்டதன் பின்னணி தனி அரசில் மட்டுமல்ல. சாதிப்பின்னணியும் காரணம்.– இது உங்கள் ஆய்வுத்திறமை.
உமக்கு பதிலளித்துத் தொடர்ந்து என்நேரத்தை கெடுக்க விரும்பவில்லை.–இது உங்கள் முரண்பாடற்ற தன்மை.
(Anonymous on October 30, 2009 5:49 pm என் குறிப்பை மீண்டும் படித்து பாருங்கள்.)
BC
//யார் அந்தக் கிருபா?//
இருபாலை கிருபாகரன் துரையப்பாவை பிரபாகரனுடன் சேர்ந்து சுட்டவராம்.
santhanam
இவர் பொட்டரின் ஊர் புஷ்பராஐ எழுதிய போரட்டத்தின் சாட்சியத்தின் பதிவில் உள்ளது இவர் மேற்கத்தியநாட்டில் வசிக்கிறார் பிரபாவின் தலைமறைவு வாழக்கை காலத்தில் இவரது வீட்டில்தான் ……….
கோப்பாய் பரமேஷ்வரனின் பதிவும் யாரும் தெரிந்தால் எழுதவும் அவர் முதல் முதல் இலங்கை பொலிஷ்சாரால் 1982 காலப்பகுதியில் பிடித்து கொண்டுசென்று சுடப்பட்டு பூதர்மடத்தடி ரோட்டில் போட்டுவிட்டு சென்றவர்கள் இவரும் போரட்டத்தின் ஆரம்ப அரசியலின் முக்கிய……….
palli
கிருபா இருபாலைதான்; மிக துனிச்சல் மிக்கவர்; தற்ப்போது பாரிஸில் இருக்கிறார், ஆனால் இவர் எந்த அமைப்பிலும் இருக்கவில்லை; கிருபாவும் பிரபாவுமே துரையப்பாவை குறி வைத்தனர், ஆனால் கிருபா முதலில் சுட்டதால் பிரபாவுக்கு அந்த வாய்ப்பு இருக்கவில்லை, இது அன்று பலர் பேசினார்கள்; கிருபாவை இயக்கமே போட்டுதள்ளி விட்டது எனகூட பேசினார்கள்; ஆனால் அவரோ அந்த சம்பவத்துடன் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார், இன்றுவரை எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் பரிஸ்சில் இருக்கிறார், பல்லி ஒருதடவை ஜேர்மனில் அவரை பார்த்து பேசினேன்; இதில் வேடிக்கை கிருபா அன்றே சொந்தமாக பிஸ்ரல் வைத்திருந்தாராம், இதை நம்பாதவர்கள், பாரிஸ் நண்பர்களை கேட்டு தெரிந்து கொள்ளவும், பொட்டர் அரியாலை. கிருபாவின் ஊரல்ல;
Kulan
நான் துரையப்பா கொலைவழக்கைப்பற்றி அதிகம் எழுத விரும்பவில்லை. சுருங்கச் சொல்லின் சூத்திரதாரி பிரபாகரனே.அவர் தனிப் போகவில்லை. அவ்வளவுதான்.
//நன்கு அறிந்த விடயத்தை மறைத்தது ஏன்? அல்லது அப்போது எங்கே பார்த்துக் கொண்டிருந்திர்கள்?// மறைக்க வேண்டியது காலத்தின் தேவை.
//என்று புளொட் பிரிந்து சுந்தரம் சுடப்பட்டாரோ அன்றே இடதுசாரிப் புத்தகங்களும் எரிக்கப்பட்டன.”// யார் சொன்னது? உமது கற்பனை வாதமா?
உலகமயமாதல் என்பதைப்பற்றி நான் தான் முதலில் எழுதினேன் என்று யார் பட்டயம் கட்டியது. இதைப்பற்றி பலர் பல அரசுகளே சர்ச்சைப்பட்டுள்ளன. ஆனால் இந்த உலகமாதல் என்பது எமது நாட்டில் எம்மக்களிடையே வறிய நாடுகளில் எப்படி ஊடுருவலை; பங்களிப்பைச் செய்தது என்பது தான் கட்டுரை. சாமி ஆடுபவர்களை எங்கேயாவது கோயிலில் விட்டுக் குழையடிப்பதே சரியானது. முன்னின் தொடர்வில்லாமல் கதைப்பவர்களுக்கு என்று பல கட்டிடங்களும் மருத்துவ சேவையும் உண்டு: தேசம் இப்படி ஒரு சேவையைச் செய்வதாக நான் அறியவில்லை.
//வெள்ளி பார்த்துக் கொண்டு நாம் இருக்கவில்லை.–இது உங்கள் நேர்மை.
துரையப்பா கொல்லப்பட்டதன் பின்னணி தனி அரசில் மட்டுமல்ல. சாதிப்பின்னணியும் காரணம்.– இது உங்கள் ஆய்வுத்திறமை.
உமக்கு பதிலளித்துத் தொடர்ந்து என்நேரத்தை கெடுக்க விரும்பவில்லை.–இது உங்கள் முரண்பாடற்ற தன்மை.// நக்கலுக்கு நன்றி.
கட்டுரை எங்கோ இருக்க சொட்டுரையும் sorryயுரையும்சொல்கிறார் சாமியார். வேப்பிலை இருந்தால் யாராவது அடியுங்கள்
பார்த்திபன்
//எடுப்பே பிழை அதில் என்ன கடுப்பு வேண்டி இருக்கு, துரையப்பாவை சுட்டது யார்? பிரபாவா? யார் சொன்னது? அப்ப கிருபா யாரை சுட்டார் ?
துரையப்பாவின் நிழலையா?? இப்ப புரியுமே ஏன் நாம் தேசத்தில் மல்லு கட்டுகிறோம் என, பல உன்மைகள் பொய்யானதால் சில பொய்கள் கூட உன்மையாய் வலம் வருகிறது,//
பல்லி
பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் பிரபாகரனுடனிருந்த ஆரம்பகால உறுப்பினரான ராகவன், சில மாதங்களுக்கு முன் பிரபாகரன் பற்றிய ஒரு தொடரை குமுதத்தில் எழுதினார். அதில் அவர் எப்படி துரையப்பா கொலை நடந்தது, பிரபாகரன் எப்படிச் சுட்டாரென்பதையும் விபரமாக எழுதியிருக்கின்றார். உண்மையில் பிரபாகரனுக்கு துரையப்பாவை சரியாகத் தெரியாது. பிரபாகரனுடன் வந்த நண்பர்களிலொருவர் துரையப்பா கோவிலுக்கு வந்து காரால் இறங்கியதும், அவரிடம் வந்து கதை கொடுத்து அவர் தான் துரையப்பா என அடையாளம் காட்ட பிரபாகரன் சுட்டுத் தள்ளினார். துரையப்பாவுடன் கதை கொடுத்து அவரை அடையாளம் காட்டியது, ஒருவேளை கிருபாவாக இருக்கலாம்…..
Kulan
பல்லியின் தரவுகள் சரியானவையே. யாரின் சூடு பட்டது என்ற துல்லிதமான விபரம் நான் அறிந்திருக்கவில்லை. 70களின் முற்பகுதியில் ஆயுதம் இயக்கம் என்று கூடியது மிக்குறைவே. அன்று பலர் தனிநபர் தீவீரவாதிகளாக இருந்தார்கள். 70ன் நடுப்பகுதிகளிலும் பிற்பகுதியிலுமே ஆயுதப்போராட்டம் அமைப்பு வடிவம் பெறத் தொடங்கியது. பல்லி எனக்கு கிருபா எங்கோ உயிருடன் இருக்கிறார் என்பது மட்டும் தெரிந்திருந்தது எங்கிருக்கிறார் என்ற விபரம் தெரிந்திருக்க வில்லை. உயிருடன் இருப்பவரை தேசத்தில் இழுப்பது அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் என்றே அவரது பெயரை உச்சரிக்காது இருந்தேன். முடிந்தால் குகேந்தியைத் தெரியுமா என்று கேட்கவும். இதைப்பற்றி மேலும் விசாரிக்க வேண்டாம். அக்காலகட்டத்தில் ஆயுதம் கொண்டு திரிந்தவர்கள் பலர் இன்று ஐரொப்பாவிலும் ஸ்கன்டி நேவியாவிலும் கனடாவிலும் உள்ளார்கள். இவர்களில் பலர் அடக்கமாகவும் அமைதியாகவும் பந்தாக்கள் இன்றி வாழ்ந்து கொண்டிக்கிறார்கள்.
சில உள்நாட்டுச் சட்டப்படி 10வருடங்களுக்கு மேற்பட்ட விடயங்கள் வழக்குக்கு எடுப்பதில்லை சில சிறப்புச்சட்டங்களின் படி பல 25வருடங்களுக்கு பின்னும் துப்புத்துலக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதை அறிகிறேன். இன்று உயிருடன் இருப்பவர்கள் பெயர் ஊரை குறித்து உரையாடுவது சரியா தவறா என்று எனக்குப் புரிவில்லை. தேசத்தில் நாம் எழுதும் விடயங்கள் தனிப்பட்ட மனிதனின் வாழ்வைப் பாதிக்காது இருப்பது அவசியம்.
Kulan
பார்த்தீபன்! இராகவன் எப்போ பிரபாகனுடன் இணைந்தார்? கட்டுவன் புன்னாலைக்கட்டுவனின் பிரபா அசையும் காலங்களில்தான். துரையாப்பா கொலை எப்ப நடந்தது? அப்போ பிரபாரை இராகவனுக்குத் தெரியுமா? நம்பக்கூடியதாக இல்லை. உண்மையும் இல்லை. பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரி இராகவனால் சொல்ல முடியாது. அப்படி அவர் சொன்னால் அது முழுப்பொய். கூடுதலாக பிரபா உரும்பிராய் கே.கே.ஸ் ரோட் கிராமங்களில் வதியும் பழகும் காலங்கில்தான் துரையப்பா போடப்பட்டார்.
Kusumbo
//1985களில் பிரபாகரன் தென் இந்திய பத்திரிகையொன்றில் பேட்டி கொடுக்கும் போதுஇ ஆனந்தவிகடன் இ குமுதம் படித்துதான் போராட இறங்கினேன்// இதுமட்டுமல்ல சாண்டிலியன் கதைகளால் தனக்கு வீரம் வந்தது என்றும் பேட்டி கொடுத்த தலைவனை நம்பித்தானே இவ்வளவு சனம் தேசியத்தலைவர் என்று கொண்டாடியது. கதைபடித்து படங்காட்டி தேசியம் எப்படிப் போனது என்று பார்த்தீர்கள் தானே
BC
//பார்த்திபன் – துரையப்பாவுடன் கதை கொடுத்து அவரை அடையாளம் காட்டியது ஒருவேளை கிருபாவாக இருக்கலாம்…..//
இந்த அனுமானம் உண்மையானது அல்ல.
//அக்காலகட்டத்தில் ஆயுதம் கொண்டு திரிந்தவர்கள் பலர் இன்று ஐரொப்பாவிலும் ஸ்கன்டி நேவியாவிலும் கனடாவிலும் உள்ளார்கள். இவர்களில் பலர் அடக்கமாகவும் அமைதியாகவும் பந்தாக்கள் இன்றி வாழ்ந்து கொண்டிக்கிறார்கள்.
நாம் எழுதும் விடயங்கள் தனிப்பட்ட மனிதனின் வாழ்வைப் பாதிக்காது இருப்பது அவசியம்.//
சரியாக சொனனீர்கள் குலன்.
Kulan
நன்றி பி.சி. இன்னுமொருவிடயம். தனிநபர் தீவீரவாதிகளை உருவாக்கி: இள இரத்தங்களை முறுக்கேற்றி> உசுப்பி உலாவவிட்டு தன்சுயநலங்களுக்குப் பாவித்த வக்கிரவாதிகள் தமிழ் அரசுக்கட்சி> கூட்டணி> தமிழ்காங்கிரஸ் என்பதை யாரும் மறக்கக்கூடாது. யாழ்மேயராக இருந்த துரையப்பாவை துரோகியாகக் காட்டி அரசியல் இலாபம் கொண்ட தலைவர்கள் துரையப்பா செய்த நன்மைகளை ஏன் எடுத்துக் கூறவில்லை? துரையப்பாவுக்கு முன்போ பின்போ என்று யாழ்நகர் துப்பரவாக இருந்தது. பேயுடன் சேர்ந்தால் தான் எம்மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றால் அப்படிக் கூட்டுச் சேர்வது தப்பல்ல.
Anonymous
நண்பரே குலன்!
வளர்நதிக்கு நிங்கள் எழுதியதை மீண்டும் படித்துப் பாருங்கள். Kulan on October 28, 2009 10:48 pm.
“ஆரம்பகாலங்களில் அதாவது 70ன் கடசிப்பகுதிகளிலும் 80ன் ஆரம்பத்திலும் இவர்களுடன் ஒன்றாக இருந்தவன் என்பதால் இங்கே சிலவிடயங்களைக் கூறுகிறேன்” இது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் உங்களுடன் இருந்தவர்கள் எந்தக் கொள்கையுடன் இருந்தார்கள் எனத் உங்களுக்கே தெரியவில்லை.
//என்று புளொட் பிரிந்து சுந்தரம் சுடப்பட்டாரோ அன்றே இடதுசாரிப் புத்தகங்களும் எரிக்கப்பட்டன.”// யார் சொன்னது? உமது கற்பனை வாதமா?
எழுதியது உங்களுக்கே புரிகிறதா?
வளர்நதிக்கு நிங்கள் எழுதியதை மீண்டும் படித்துப் பாருங்கள். Kulan on October 28, 2009 10:48 pm.
‘சின்ன உதாரணம் ஒரு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தில் இருந்து வந்தவர்தான் துரையப்பா. ஏழைமக்கள் உயரப் பாடுபட்டவரும் கூட இவரைப் போட்டது தம்பி”
நான் அறைந்து சொல்கிறேன். துரையப்பா ஒரு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தில் இருந்து வந்தவர் அல்ல.
“துரையப்பா கொல்லப்பட்டதன் பின்னணி தனி அரசில் மட்டுமல்ல. சாதிப்பின்னணியும் காரணம்.”
இதில் எந்த உண்மையும் இல்லை.
“துரையாப்பா கொலை எப்ப நடந்தது? அப்போ பிரபாரை இராகவனுக்குத் தெரியுமா? நம்பக்கூடியதாக இல்லை. உண்மையும் இல்லை. பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரி இராகவனால் சொல்ல முடியாது. அப்படி அவர் சொன்னால் அது முழுப்பொய்.”
இது தான் உங்கள் எழுத்துகளிலும் இருக்கிறது.
ஒரு உள்ளூர் விடையங்களில் கோட்டை விட்டு விட்டு உலகமயமாதலில் என்ன அவியல் வேண்டியிருக்கிறது.
“தமிழீழம் மலர்ந்தால் திதோ போல் ஒரு செக்கோசிலவேக்கியா அன்றைய பல்கான் போல் ஒருஇடதுசாரி நாடாகத்தான் இருக்கும் என்று கூறினார். பிரசாரங்களிலும் கியூபா; திதோ தான் விளக்கத்துக்குரிய பதில்களாக இருந்தன.”
இதில் திதோ,செக்கோசிலவேக்கியா,பல்கான் என்றால் என்ன? ஒருஇடதுசாரி நாடா?
எழுதியது உங்களுக்கே புரிகிறதா?
“இன்று வட்டுக்கோட்டைத்தீர்மானம் சரியானதா என்று மீழாய்வு செய்வதே பரிமாணத் திரிபாக்கம் தானே.” Kulan on October 29, 2009 9:54 pm
அதென்ன பரிமாணத் திரிபாக்கம்? எழுதியது உங்களுக்கே புரிகிறதா?
“சரி இனி வருங்காலத்தில் இந்த உலகமயமாதல் பற்றி அலசி ஆராய்வதற்கு இக்கட்டுரை ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கட்டுமே”
எழுதியது உங்களுக்கே புரிகிறதா?
கேள்விச் செவியர்களாக இருந்து கொண்டு வரலாறு படைக்க முற்படாதிர்கள்.
நிங்கள் எழுதியதை மறுதலிப்பதும்,சப்பை காரணங்கள் சொல்வதும் ஒரு வளர்ச்சியின் வாதமல்ல.
palli
துரையப்பா ஏன் கொல்லபட்டார் என்பதும் பல்லிக்கு ஓர் அளவு தெரியும்; அதுதான் ஏற்க்கனவே பல பின்னோட்டத்தில் சொல்லிவிட்டேனே; பல்லி விடுப்பு பார்ப்பதில் கெட்டிகாரன், அதுவே பலரை இன்று முகம் காட்ட பல்லிக்கு உதவுகிறது; இருப்பினும் இந்த ராகவனை இதுக்குள் கொண்டு வர வேண்டாம், அவர் செயத பெரிய காரியமே பாண்டி பஜார்தான், மற்றபடி வெடிகள் குண்டுகள் செய்வதில் ஆர்வமும் திறமையும் உள்ளவர்தான், ஆனால் இயக்கங்களில் அவர் ஒரு நாயகனல்ல, அவரும் தேசத்தை தாக்குவதில் குறியாய் இருந்தவர்தான்; காரனம் தமது தத்துவங்கழும் தங்கசெயல்கழும் வெளிவர போகிறது தெரிந்தே தேசத்தின் தடாவுக்கு தலமை வகித்தார், இருப்பினும் குலனின் சொல்லில் ஓர் நியாம் இருப்பதால்(சிலவிடயங்களை சட்ட விதி முறைக்காக வெளியிடுவது சரியானதல்ல, ஆகவே துரையப்பாவை இத்துடன் தூங்க வைப்போம், மீண்டும் தேவையேற்படும் போது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் தட்டி எழுப்புவோம்; பிரபாகரன் குறி பார்த்து சுடும் அளவுக்கு திறமைசாலியல்ல;
palli
//பல்லி! நீங்கள் எழுதிய கடசிப்பின்னோட்டத்தை வாசித்து வாசித்துச் சிரித்தேன். //
சிரிக்க ஆவது பல்லியின் பின்னோட்டம் உதவட்டுமே;
இறப்புகள் கூட இன்று சிரிப்பாகி விட்டதே,
Thaksan
துரோகி எனத் தீர்த்து அன்றொருநாள் சுட்ட வெடி…. சுட்டவனை சுட்டது….கூடவே சும்மா நின்றவனையுஞ் சுட்டது. (சிவசேகரம் 1988ல் இந்த கவிதையை எழுதும் போது கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார்.பின்னர் அவர் தடம்மாறிய கதை வேறு)
BC
//தனிநபர் தீவீரவாதிகளை உருவாக்கி: இள இரத்தங்களை முறுக்கேற்றி உசுப்பி உலாவவிட்டு தன்சுயநலங்களுக்குப் பாவித்த வக்கிரவாதிகள் தமிழ் அரசுக்கட்சி கூட்டணி தமிழ்காங்கிரஸ்……..//
குலன், உங்கள் இந்த கருத்தோடு முழுவதுமாக ஒத்துப்போகிறேன்.
maran
துரையப்பாவின் கொலையின் பிண்ணனியில் சாதி இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. துரையப்பாவுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இருந்த முரண்பாடும் துரையப்பாவின் மேலோங்கிய நிலையும் தூண்டுதல்களாக இருந்திருக்கும். புலிகளின் வெள்ளாள கோஸ்டி சாதியின் பெயரால் பல கொலைகளை செய்துள்ளார்கள் என்பது மறுக்கமுடியாது. செங்கதிரின் கொலையின் பிண்ணனி சாதியே.
குலனின் கட்டுரையின் முக்கிய விடயம் 9/11 ன் பி்ன்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை புலிகள் கருத்திற் கொள்ளவில்லை. புலியின் “அரசியல் அண்ணா” பாலசிங்கம் கூட நித்திரை கொண்டுவிட்டார். புலிகளின் வெளிநாட்டு பிரதிநிதிகள் காசு சேர்ப்பதில் காட்டிய அக்கறை மற்றெந்த விடயத்திலும் காட்டவில்லை. அதே கோஷ்டி இப்போ Trans National Govt. என்ற மந்திரத்தை உச்சரிக்கின்றார்கள். பாவம் ஊர் வாழ் மக்கள்.
Kulan
அனோனிமஸ்சின் அறிவு இவ்வளவுதான். விளங்கக்கூடியவனுக்குத்தான் விளங்கப்படுத்தலாம்.
//“ஆரம்பகாலங்களில் அதாவது 70ன் கடசிப்பகுதிகளிலும் 80ன் ஆரம்பத்திலும் இவர்களுடன் ஒன்றாக இருந்தவன் என்பதால் இங்கே சிலவிடயங்களைக் கூறுகிறேன்” இது ஒரு அப்பட்டமான பொய்// இருந்தது நான் என்னைப்பற்றியே தெரியா நீர் பொய் என்று எப்படிச் சொல்லுவீர்.
//நான் அறைந்து சொல்கிறேன். துரையப்பா ஒரு தாழ்த்தப்பட்ட வர்க்கத்தில் இருந்து வந்தவர் அல்ல.// இதில் இருந்து தெரிகிறது உமது அறிவு. உமக்குத் தெரியாதது எல்லாம் பொய் என்றால் உலகில் எல்லாமே பொய்தான்.
//இதில் திதோ செக்கோசிலவேக்கியா பல்கான் என்றால் என்ன? ஒருஇடதுசாரி நாடா// திதோவைப்பற்றித் தெரியாமல் யுகோசிலாவியாவைப் பற்றி கதைக்க வந்துவிட்டால் அன்றைய பல்கான் யு வலதுசாரி நாடாகவா இருந்தது.
//பரிமாணத் திரிபாக்கம்? எழுதியது // தெரியாவிட்டால் தமிழ் படித்துவிட்டு வாருங்கள். இங்கே யாரும் தமிழ்படிப்பிப்பதாக இல்லை
//கேள்விச் செவியர்களாக இருந்து கொண்டு வரலாறு படைக்க முற்படாதிர்கள்// யார் சொன்னது வரலாறு படைப்பதாக…. உம்முடைய பாட்டில் ஏதே நீரே சொல்லிக் கொண்டு போகிறீர். என்னைப்பற்றி என்பின்னணியறியாத நீர் என்னைச் சப்பைக்காரணம் என்கிறீர். தயவு செய்து எமது நேரத்தை வீணடிக்கவேண்டாம். வேறு உலகத்தில் வாழ்பவருக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை.
Kulan
/தேவையேற்படும் போது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் தட்டி எழுப்புவோம்/சரியாகச் சொன்னீர்கள் பல்லி.. .
//பிரபாகரன் குறி பார்த்து சுடும் அளவுக்கு திறமைசாலியல்ல// தம்பி பற்குணத்தை டம்பண்ணுவதற்கு இதுவுமொரு காரணம் என்று அறிந்தேன்.
Pirabakaran
i reads lots of Kumutham and Anantha vikadan . now ragavan also writting in the kumutham. we genetically related peoples.
Ram
Kiruba , He is from Ariyali
Kulan
நன்றி மாறன். //துரையப்பாவுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இருந்த முரண்பாடும் துரையப்பாவின் மேலோங்கிய நிலையும் தூண்டுதல்களாக இருந்திருக்கும்// இது முழு உண்மை. நான் அறிந்தவரை துரையப்பாவின் மனைவி உயர்சாதியைச் சேர்ந்துவர் என்றும் பிரபல வழக்கறிஞ்ஞர் பொன்னம்பலத்தின் நெருங்கின சொந்தக்காரர் என்றும் (நான் நினைக்கிறேன் சகோதரியின் மகள்)அறிந்திருந்தேன். ஆனால் துரையப்பா பொன்னம்பலத்தின் சாதியல்ல. துரையப்பாவின் வளர்ச்சி முக்கிய காரணமாக இருந்தாலும் சாதியும் இதற்குக் காரணம் என்று மிக மிக நம்பகமானவர்களால் அறிந்தேன். தேசத்தின் பின்னோட்டத்திலும் இது பற்றிப் பேசப்பட்டது. துரையப்பா கொலை அரசியல் பழிவாங்கல் என்பது தவிர்க்க முடியாதது.
vinothan
காவலாம் வேலியே பயிர்களை மேயும்
மோஷமும் வேஷமும் மணிமுடி சூடும்
படித்தவர், பண்டிதர் பசியால் துடிப்பர்
பஞ்ஞமா பாதகர் பால் பழம் குடிப்பர்
ஆலையம் பெரும்பாலும் பாழாய் கிடக்கும்
எங்குமே என்கின்ற வாகனம் நிறையும்
பிள்ளைகள் பெற்றோரை தெருவிலே வீசுவர்
குலம் மாதர் பண்பாடோ வேடிக்கை ஆகும்
மரம் செடி கொடி எல்லாம் நகரங்கள் சாயும்
தானியம் குறையும் தரித்திரம் குடும்
தளை கனி காய் எல்லாம் விஷமாய் விளையும்.
இதைத்தான் குலனண்ணா நீட்டி முழக்கி பின்னோட்டக்காறர்களுக்கு கொம்பு சீவி விட்டாரோ. ஆனால் உலகமயமாக்கல் போய், பழம் பெருச்சாளிகளின் சுயபுராணமல்லவா பாடப்படுகின்றது. தலையங்கம் உலகமயமாக்கல். அது போய் துரையப்பா எந்த அப்பனுக்கு பிறந்தவன் என்பதிலல்லவா உலகமயமாக்கல் போகின்றது.
paranthaman
பார்த்தீபன் குமுதம் இதழில் பிரபாகரன் வாழ்வும்….. எழுதும் ராகவன் சென்னையில் உள்ளார். அவருக்கும் பிரித்தானியாவில் வசிக்கும் ராகவனுக்கும் எதுவித சம்பங்தமும் இல்லை. குழம்பிக்கொள்ள வேண்டாம்.
Anonymous
நண்பரே குலன்!
ஆடுங்கள் நன்றாக. பார்ப்பதற்கு ஒரு தேசமே தவம் கிடக்கும். அதில் நான் இல்லை. விடை பெற்று கொள்கிறேன்.
chandran.raja
விநோதன் குறைநினைக்காதீர் எமது சமூகத்திற்கு குறைபாடு இதுவே. தனக்கு மூக்கறுபட்டாலும் மற்றவனுக்கு சகுனம் பிழைக்க வேண்டுமென்று நினைப்பது. இதில்லிருந்து வெளியேறும் போதுதான் எம்சமூகம் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்க முடியும், குலனை சிறுமைப்படுத்துவதிலே கவனமாக இருக்கிறார்களே ஒழிய அவர் கொடுத்த துருப்பை பயன்படுத்தி முற்போக்கான வழியில் எடுத்துச் செல்வோம் என கருதவில்லை. எனக்கும் தான் கவலையளிக்கிறது.
chandran.raja
சென்ற ஆறுமாதங்களாக பலதுறைகளிலும் வரப்போகும் முன்னேற்றங்களை பார்த்தோம் செய்திதொடர்பு மருத்துவம் விண்வெளிபயணம் என்று அதிகம் தொடர்ச்சி இல்லாவிடினும் ஆராய்ந்தோம். ஒரு துறையை பற்றிமட்டும் சொல்லாமல் விட்டோம். நம் மனிதத்தன்மையில் மானிடத்தில் அடுத்த நூற்றாண்டில் எவற்றில் முன்னேற்றம் நிகழும்?. மனிதன் போராடுவதை நிறுத்தி விடுவானா? சின்ன சின்ன விஷயங்களுக்காக மதத்திற்காக மதத்தின் உட்பிரிவுக்காக ஜாதிக்காக ஜாதியின் நுட்பங்களுக்காக மொழிக்காக மொழியின் கிளைமொழிக்காக… நகரங்களின் தெருக்களில் ரத்தம் சிந்துவதை- துப்பாக்கி சுடுவதை கண்ணீர்புகை வெடிப்பதை -அடிப்பதை துடிப்பதை- நடிப்பதை நிறுத்திவிடுவானா? தன் அழகான குழந்தைகளை நிர்வாணமாக தெருவில் உலவ விடுவானா?.
ஏழைகளை ஏழைகளாக வைத்திருந்து பணக்காரர்கள் இன்னும் சீர்பெற்று உலகின் பெற்றோல் அனைத்தையும் குடித்து அதன் அலுமனியம் துத்தநாகம் ஈயம் போன்ற அனைத்துப் பொருள்களையும் நூற்றாண்டின் முதல் பகுதியிலே காலியாக்கி தன்கடலில் பிளாஸ்டிக் எண்ணைக்கழிவு பொருள்கள்களை நிரப்பி பறவைகளையும் மிருகங்களையும் வாழவிடாமல் செய்து பணத்தில் சீர்பெற்று மனத்தில் சீர்ரழிந்து ஓர் அபத்திரமான சந்தேகத்திற்கு இடமாக குற்ற உணர்வுள்ள சுபிட்சம் பெற போகிறானா?
இந்த கேள்விக்கு……!!!!????.
-அடுத்த நூற்றாண்டில் சுஜாதா
palli
வினோதன் அண்ணா அவர்களே உங்கள் கவி பறப்பதெல்லாம் ஊர்வனவாகவும் ஊர்வனவெல்லாம் பறப்பனவாகவும் மாற்றம் அடையும். அதனாலே அவனவன் பகுத்தறிவாளன் ஆவான் அப்படிதானே; இது நல்ல விடயம்தானே வரவேற்க்கபட வேண்டுமே தவிர இப்படி வில்லதனத்துடன் வந்து குலனோடு சேர்த்து எங்களையும் மிரட்டுவது கூட பகுத்தறிவுதானோ;
சரி வன்னிமக்கள் பிரச்சனக்காகவும்: தேசியம் விட்டோடிய தொடர்கதையான ஈழ பெரும்சுவரை கட்ட நாடு கடந்த வெள்ளம் ஊற்றெடுக்கும் போது: அதே உலகத்தை எம்மின பிரச்சனையுடன் குலன் சேர்த்து பார்ப்பதாலோ அல்லது அதன்கேடு பற்றி நாம் கிறுக்குவதாலோ தங்கள் நிலை ஏன் பாதிக்கபடுகிறது, ஓஒ நீங்கள் அவர்களா? இருப்பினும் உங்கள் கவிதைபடி கூட உலக வல்லரசுகளை வன்னிமக்கள் மிரட்ட கூடும் அல்லவா?
கடுப்புடன் வாங்க விடுப்புடன் நாம் ரெடி,
தொடரவே பல்லி விருப்பம்;
Kulan
வினோதன்; சந்திரன் இராஜா தலைவணங்குகிறேன். உங்களைப்போன்றோர் உண்மைகளைத் தேடுவதால் மானிடம் மட்டுமல்ல மனிதமும் வாழும். பணத்தை மட்டும் கருத்தில் கொண்டு பறக்கும் போது மனித்தைத் தொலைத்து விடுகிறோம் அன்றேல் மறந்து விடுகிறோம். மனிதத்துவத்துக்கு அமைப்பு வைத்திருந்தவர்களே எம்நாட்டில் நடந்த மனித அவலத்தைத் துடைக்க மறந்து விட்டார்கள். மனிதனின் அடிப்படைத்தேவை உணவு> உடை> உறையும் என்கிறார்கள். என்கருத்துப்படி நல்ல காற்று> நல்ல உணவுமே அடிப்படைக்காரணி என்பேன். உலகமயமாதலில் பொருளாதாரச் சமநிலை ஏற்படுமாயின் மகிழ்ச்சிக்குரியது தான். ஆனால் அதனடியில் அமிழ்து போவது மனிதமாக இருக்ககூடாது. எமது தாயகத்தில் நடந்தது ஒன்றா இரண்டா? பூமியின் சமநிலை. இயற்கை என்றும் மனிதனுக்குக் குறிகாட்டும். சுனாமி வந்து கூட நாம் ஒற்றுமைப்படவில்லையே. இனி எப்போ? விவசாயமும் விளைச்சலும் குறைய வில்லைத்தயாரிப்பும் நோய்களும் அல்லவா உலகை ஆழத்தொடங்கிறது. சந்திரன் இராஜா கேட்ட கேள்விகளுக்கு யார் சரியான பதில் செல்லப்போகிறார்கள். வளி> வானம்> நிலம் இரசாயணக் கழிவறைகளாகும் போது மனிதவாழ்வு?? போர்கள் நிறுத்தப்பட்டலாம் காற்றைச் சுவாசித்தே மனிதன் சாகப்போகிறானே இந்தப் பணப்படையெடுப்பால் அன்றேல் முதலீடுகளின் மூலதன அழிவால்…இரசாயணக் கழிவாக்கங்களால்…?? சந்திரன் ராஜா விநோதனுக்கு மீண்டும் என் நன்றிகள்.
பார்த்திபன்
துரையப்பா அவர்கள் சுடப்பட்ட போது பிரபாகரனாலேயே சுடப்பட்டதாகவே செய்திகள் வெளியாகின. சில மாதங்களுக்கு முன் நான் பார்த்த பிரபாகரனின் பேட்டியாக வந்த ஒரு ஒளிபரப்பிலும், தான் எப்படி துரையப்பாவை சுட்டதாக பிரபாகரன் சொல்லியிருந்தார். தான் துரையப்பாவை சுடும்போது “கிருஷ்ண பரமாத்மா கூறிய அநியாயங்களை அழிக்க நான் அவதாரம் எடுப்பேன்” என்ற வார்த்தைகள் தான் தனக்கு ஞாபகம் வந்தததாகவும் கூறியுள்ளார். இந்த ஒளிப்பதிவில் பிரபாகரன் பொய் சொல்லியுள்ளதாக எவரும் எதிர்க் கருத்து வெளியிட்டதாகவும் நான் இதுவரை அறியவுமில்லை. குமுதத்தில் ராகவனின் பிரபாகரன் பற்றிய கட்டுரை ஆரம்பித்த போது கட்டுரையாசிரியர் பிரித்தானியாவிலிருந்து எழுதுவதாக குறிப்பிடப்பட்டதாகவே எனக்கு ஞாபகம். துரையப்பா சுடப்பட்டதை ஒரு மனிதனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. காரணம் இன்று வரை யாழ்ப்பாணத்தைப் பற்றி குறிப்பிட முடிந்தால்; துரையப்பாவிற்கு முன், துரையப்பபாவிற்குப் பின் என்றே குறிப்பிட முடியும். யாழ்ப்பாண அபிவிருத்தியில் துரையப்பா காட்டிய அக்கறை போல் எவரும் இதுவரை காட்டியதில்லை.
Kulan
//குலனோடு சேர்த்து எங்களையும் மிரட்டுவது கூட பகுத்தறிவுதானோ;//நான் வில்லத்தனம் கொள்ளவுமில்லை மிரட்டவுமில்லை. விநோதனும் அப்படி எழுதவில்லையே. கட்டுரை எங்கோ இருக்க நாம் எங்கோ போகிறோம் என்றுதான் விநோதன் சொன்னார். தயவுசெய்து தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
பல்லி! வினோதனின் கவிதை அவலங்களையும் எதிர்காலத்தையும் அல்லவா சொல்கிறது.மீண்டுமொருமுறை வாசித்துப் பார்க்கிறீர்களா எமக்காக. //உலகத்தை எம்மின பிரச்சனையுடன் குலன் சேர்த்து பார்ப்பதாலோ அல்லது அதன்கேடு பற்றி நாம் கிறுக்குவதாலோ தங்கள் நிலை ஏன் பாதிக்கபடுகிறதுஇ ஓஒ நீங்கள் அவர்களா? // அந்த நாடுகடந்த தமிழ்ஈழம் என்பது நாடுகடத்தப்பட்ட தமிழீழம் மாகலாம். பல நாடுகடந்த தமிழீழத்தார் புலிகளால் நாடு கடத்தப்பட்ட ஈழத்தாராக இருந்தார்கள் என்பதை நோர்வேயில் நான் நின்ற போது கண்டேன். நாடுகடந்த தமிழீழமும் நாடு கடத்தப்படும்.
//துரையப்பா காட்டிய அக்கறை போல் எவரும் இதுவரை காட்டியதில்லை.// பார்த்தீபனுடைய இந்தக் கூற்றை யாரும் மறுக்க இயலாது. அதுமட்டுமல்ல கரையூர் மக்களுக்கும் கழிவகங்களைச் சுத்தம் செய்வோருக்கும் துரையாப்பா தன்னாலியன்ற உதவிகளைச் செய்தவர் என்பதையும் அறிந்தேன்.
vinothan
விலை பேசப்படாத கல்வி
விற்கப்படாத அறிவு
அடகு வைக்கப்படாத ஓட்டுரிமை
உள்ளதை செய்யும் ஆட்சியோர்
நல்லதை செய்யும் ஆளத்துடிப்போர்.
கறை வேலிக்குப் படியாத சட்டம்
காசுக்குப் பணியாத நீதி
அன்னியனிடம் கையேந்தாத அரசு
புகழ்ச்சிக்காக புலமை விடுத்து
தமிழ் வளர்ச்சிக்கா புலமை.
உலகமயமாதல் இப்படித்தான் முடியவேண்டும் என நான் சொல்ல வந்தேன். நிச்சயம் இப்படித்தான் முடியும். கற்காலம், வேடர்கள், அப்புறம் கூர்ப்பு விதி, அப்புறம் மனிதன், அப்புறம் உணவு தேடி அலைதல், பண்டமாற்று, பணப்பரிமாற்றம், ஊர்வன எனல்லாம் (வண்டில்மாடு) பறப்பனவாகி (விமானம்), மக்களெல்லாம் நாடோடிகளாகி, நாடு கடந்து, எதையோ எதிர்பார்த்து, இப்போ எதிலோ தொங்கி, மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கே வந்து பண்டமாற்றில் (சைனாவில் இருந்து பிளாஸ்ரிக் பொருள் இறக்குமதி செய்யும் இந்தோனேசியா அதற்குப் பதிலாக றப்பர் பாலை அனுப்புகின்றது) வந்து நிற்க்கிறது.
யுரோப்பியன் எல்லாம் அமைதி தேடி ஆபிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் படை எடுக்கின்றான், கந்தக வாசனை அற்ற பூமியை தரிசிக்க நினைக்கின்றான். குலன் கொஞ்சம் பயமுறுத்தி பார்க்க நினைக்கின்றார். பயந்து விடாதீர்கள். உலகம் உருண்டை. எங்கே சுத்தினாலும் சுப்பர்ர கொல்லையில்தான் வந்து முடியும்.
S.R
அரசியல் உலகின் சூதுவாது தெரியாத விசித்திரமான ஒரு வி.ஐ.பி அவர். சில சமயங்களில் யாழ்ப்பாணத் தெருக்களில் மக்களுடன் மக்களாக கால் நடையாக செல்லும்போது எதிரில் வரும் ஒருவரைப் பார்த்து. ‘என்ன வேல்முருகு போன கிழமை பார்த்த போது அப்பாவுக்கு சுகமில்லை எண்டு சொன்னனீ இப்ப அவர் எப்படி இருக்கிறார்?’ என்று உரிமையோடு அவரை பெயர் சொல்லி அழைத்து குசலம் விசாரித்து விட்டுப் போகும் வினயமான மனிதர்.அவர்.. சில வேளைகளில் யாழ் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள முஸ்லீம் வாலிபரின் ரெய்லர் கடையிலுள்ள மேஜையின் விளிம்பில் அமர்ந்தபடி அங்கே வரும் சாதாரண வாடிக்கையாளருடன் அளவளாவிக் கொண்டே வீதியில் செல்லும் அறிமுமானவர்களுக்கும் புன்சிரிப்புடன் கையசைப்பார். அந்த அளவுக்கு அனைவரையும் சமமாக நடத்தும் மனப்பக்குவம் அவருக்கு இருந்தது. ஆம் அந்த நாட்களில் யாழ் மக்கள் மட்டுமல்லாமல் இலங்கை மக்கள் பலராலும் நேசிக்கப்பட்ட ஒரு தேசத்தின் நண்பர் அவர்.. அவர்தான் யாழ் மேயராக இருந்து பிரபாகரனின் துப்பாக்கிக்கு முதல் இரையாக்கப்பட்டு பலியாகிப் போன யாழப்பாணத் தமிழர்களால் நேசிக்கப்பட்ட அல்பிரட் துரையப்பா அவர்கள்.
அவர் யாழ் மேயராக இருந்த காலப் பகுதியை யாழ்ப்பாணத்தின் புனரமைப்புக் காலம் என்று கூடக் கூறலாம்…ஏனெனில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக குண்டும் குழியுமாக இருந்த பல புறநகர்த் தெருக்களெல்லாம் திருத்தி செப்பனிடப்பட்டு செம்மையாகக் காட்சியளித்த போது குச்சு ஒழுங்கைகளில் கூட மின்விளக்குகள் பிரகாசமாக பளிச்சிட்டன. அந்த நாட்களில் யாழ் நகரச் சுற்றாடல் குப்பை கூளங்களின்றி தூய்மையாகக் காட்சியளித்தது என்றால் அதற்குரிய முக்கிய காரணம் அவைகள் நேரத்திற்கு அகற்றப்படுகிறதா? என்பதில் துரையப்பாவின் நேரடிக் கண்காணிப்பு இருந்தது என்றுதான் அர்த்தம்.
அது மட்டுமல்ல தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை வாசிகள் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கும் யாழ் நவீன சந்தை கட்டடம் முதல் பச்சைப் புல்வெளியில் பரந்து விரிந்திருக்கும் துரையப்பா ஸ்டேடியம் வரை அவரது முயற்சியால் கொண்டு வரப்பட்டவை தான். மேலும் இத்திட்டங்கள் மூலம் பல நூற்றுக்கணக்கான கல்வித் தகைமை, மற்றும் பணவசதிகள் குறைந்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தன அதனால் அவர்கள் வீடுகளில் வேளாவேளைக்கு அடுப்புகள் எரியும்படியும் செய்தார் அவர் .
1960 ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், யூலை மாதத்திலும் இரண்டு தடவைகள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அவருக்கு எதிராக போட்டியிட்ட 59வயது நிறைந்த இலங்கை தமிழ் காங்கிரசை சேர்ந்த முதிர்ந்த அரசியல் அனுபவமுள்ள பெரும்புள்ளியான ஜி.ஜி. பொன்னம்பலத்திற்கு எதிராக போட்டியிட்ட அரசியல் கற்றுக்குட்டியான துரையப்பாவிற்கோ அப்போது வயது என்னவோ 33 தான். துடிப்புள்ள இளைஞரான அவர் மக்கள் முன் வைத்த தேர்தல் வாக்குறுதிகள் தமிழர்களுக்கு தனிஆட்சி, தனி நாடு, அது இது என்று நிறைவேற்ற முடியாத கற்பனை கதைகளைச் சொல்லி தமிழர்களுக்கு றீல் விடும் முயற்சியில் இறங்காமல் வேலை வாய்ப்புகள், விவசாயம், உற்பத்திப் பெருக்கம், வசதியில்லாத மக்களுக்கும் வளமான வாழ்க்கை போன்ற சாதாரண மனிதர்களின் அபிலாசைகளையும் அத்தியாவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்வதை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே அவைகள் அமைந்திருந்தன. மக்கள் எதிர்பார்த்தபடி துரையப்பா தேர்தலில் வெற்றியீட்டினார். அப்படியே அவர் அளித்த பல வாக்குறுதிகளையும் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் நிறைவேற்றவும் செய்தார் அவர்.
சிறிமாவின் ஆட்சியில் தமிழர்களுக்கு குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கை வளம்பெறவும், சமூதாயத்தில் பொருளாதாராம் குறைந்தவர்களின் வாழ்க்கை மேம்படவும் அவர் மேற்கொண்ட வழிவகைகளை யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றுமே மறக்க முடியாதவைகளாகும். ‘உன் எதிராளியை நீ வெற்றி கொள்ள வேண்டுமாயின் அவனை உன் நண்பனாக்கிக் கொள்’ என்ற தத்துவத்தை முறையாக கையாண்டவர் அல்பிரட் துரையப்பா என்றால் அது மிகையாகாது. அவ்ருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கென்று விரோதிகள் என்று எவருமே இருந்ததில்லை. மேலும் அரசியலில் பிரதமர் சிறீமாவுடன் அவருக்கு இருந்த நல்லுறவை அவர் யாழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தினார். இதற்கு கை கொடுத்தது சிறிமாவின் வெளிநாட்டு இறக்குமதிகளை தடை செய்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் திட்டம். இதனால் மிளகாய், வெண்காயம், போன்ற விளைபொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டு உள்நாட்டு உற்பத்திப் பெருக்கத்திற்கு உற்சாகமளிக்கப்பட்டது. இது யாழ் விவசாயிகளைப் பொறுத்தவரை மிகவும் சிறந்த ஒரு வாய்ப்பாகவே அமைந்திருந்தது.
யாழ் விவசாயிகளின் பெரும்பான்மையான விவசாய உற்பத்திப் பொருட்கள் தென்னிலங்கைக்கு முதன் முதலாக லொறிகளில் சாரி சாரியாக அனுப்பத் தொடங்கியது சிறிமாவின் அரசாங்கத்துடன் துரையப்பா அவர்கள் சேர்ந்தியங்கிய காலப் பகுதியாகும். வழமையாக தென்னிலங்கை மக்களின் மிளகாய் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவின் கொச்சின் போன்ற பகுதிகளில் இருந்தே மிளகாய் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இறக்குமதி தடை செய்யப்பட்ட பின்னர் தென்னிலங்கைவாசிகளின் அநத தேவையை யாழ்ப்பாண விவசாயிகள் நிறைவு செய்வதற்கு பின்னணியாக இருந்து இயக்கியவர் துரையப்பா அவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
அந்த நாட்களில் கல்விப் பயிர் வளர்க்கும் ஆசிரியர்கள் கூட அந்த வேலையைத் தூக்கி கடாசிவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உற்சாகமாக விசில் அடித்தபடி மிளகாய் பயிருக்கு பாத்தி கட்டச் சென்றார்கள் என்றால் அதற்குக் காரணம் மிளகாய் செய்கை குறுகிய காலத்தில் கொழுத்த லாபத்தை ஈட்டித் தரும் பயிர்ச் செய்கையாக கருதப்பட்டது தான். இதனால் முன்னாளில் விவசாயக் கடனையே அடைக்க வழியற்றிருந்த பல விவசாயிகள் இன்நாளில் கல்வீடு கட்டி கார் வாங்கும் நிலமைக்கு உயர்த்தப்பட்டார்கள். மேலும் தமிழரசுக் கட்சியினர் வெறும் பேச்சளவில் மட்டுமே தமிழ் மக்களை பேய்க்காட்டிக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் துரையப்பா அவர்கள் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி தனக்குத் தெரிந்த அரசாங்க மந்திரிகளின் மூலம் பல யாழ் இளைஞர்களுக்கு அந்த மந்திரிகளின் இலாகாக்களிலேயே தகுந்த வேலைகளையும் பெற்றுக் கொடுத்தார்.
துரையப்பாவை பற்றி யாழ் மக்கள் மனதில் படிப்படியாக உயர்ந்து வியாபித்து ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கும் மதிப்பையும் நல்லெண்ணத்தையும் பார்த்து வெறுத்துப் போன தமிழரசுக் கட்சியினர் அவைகளை குலைப்பதற்காகவே அவரை தமிழினத் துரோகியாக சித்தரிக்க முற்பட்டார்கள் .இதற்காக அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த காரணம் அவர் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தடையாக சிறீமாவின் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்குகிறார் என்பதேயாகும்.
அவர்களைப் போல் கொழும்பில் வீடு வாசல் வசதிகளுடன் வாழ்ந்து கொண்டும் அரசாங்கம் வழங்கிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டும் தங்கள் சுகபோக வாழக்கை இடையில் பறிபோய்விடக் கூடாது என்பதற்காக அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து அரசியல் வியாபாரம் நடத்தி மக்கள் மனதில் தாங்கள் விதைத்த இனத் துவேசம் என்ற நச்சுவிதை பட்டுப் போகாமல் மேடைப் பேச்சுககளில் தண்ணீர் ஊற்றி விட்டுப் போனவரல்ல துரையப்பா. தான் பிறந்து, வளர்ந்து, கல்வி பயின்று, பின்னர் சட்டத்தரணியாக தொழில் புரிந்த காலம் முதல் அவர் மக்களுடன் மக்களாக வாழ்ந்து அவர்களுக்கு தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்து விட்டு அந்த மண்ணிலேயே மறைந்து போன மண்ணின் மைந்தர் அவர்..
சுதந்திரமடைந்த இலங்கை அரசாங்கத்தில் தலைமைப் பீடம் ஏறுபவர்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனை பெரும்பான்மை இனத்தவரை திருப்திப்படுத்தும் அதேவேளையில் சிறுபான்மை இனத்தவரையும் அனுசரித்தும் போகவேண்டிய ஒரு இக்கட்டான நிலமையாகும். அப்படி இருக்கா விட்டால்அவர்கள் தலமைப் பதவிக்கு ஆபத்து வந்து விடும் இதன் காரணமாகவே பண்டாரநாயக்கா அரசாங்கம்கூட ஒரு நேரத்தில் தமிழர்களை அனுசரித்துப் போகவேண்டிய நிலமைக்குள் தள்ளப்பட்டதின் பிரதிபலிப்பே அவர் செல்வாவுடன் ஒப்பந்தம் செய்ய ஒப்புக் கொண்ட நிகழ்வாகும்…
அதே சமயம் அவரது எதிராளியான ஜே.ஆர் ஜெயவர்த்தனா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பண்டாவை ஓரம்கட்டி விட்டு பெரும்பான்மையினரை தன் பக்கம் இழுத்து தலைமைப் பதவியை அபகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட நாடகமே கண்டிக்கு அவர் பாத யாத்திரை போன நிகழ்ச்சியாக்கும். இதனால் தனது பதவி பறிபோவதை விரும்பாத பண்டாரநாயக்கா அந்த ஒப்பந்தததை வேண்டா வெறுப்பாக கிழித்தெறிய வேண்டிய நிலமையும் ஏற்பட்டது. இதுவெல்லாம் அரசியல் சூதாட்டத்தில் சகஜமான நிகழ்சிகளாகும்.
அதுபோலவே சிறீமாவின் ஆட்சிக் காலத்திலும் துரையப்பாவின் மூலம் அசுர வளர்ச்சி கண்டு கொண்டிருந்த சிறுபான்மையினர் வாழும் யாழ்ப்பாணம் எதிர்கட்சியினரின் கண்களை உறுத்தி தனது தலமைப் பதவி பறிபோவதை விரும்பாத சிறீமா பெரும்பான்மையினரை தயவுபண்ண கல்வி தரப்படுத்துதலை அமுலுக்கு கொண்டு வந்தார். இதனால் பல யாழ் மாணவர்கள் வெறுப்பின் எல்லைக்கே சென்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அந்தச் சட்டம் பின்னர் திருத்தியமைக்கப்பட்டு மாகாண ரீதியாக பல்கலைக் கழகத்திற்கு மாணவர்களை தெரிவு செய்யும் சட்டம் அமுலாகிய போது அதனால் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் உயர்மட்டக குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே பல்கலைக் கழகம் செல்லும் நிலமை உருமாறி வடக்கில் பின்தங்கிய பிரதேசங்களாக கணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்களும், கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பின் தங்கிய கிராமத்து மாணவர்ககள் கூட முதல்முறையாக பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்புகளும் கிட்டியது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த அர்சியல் சூதாட்டங்கள் எதிலுமே ஈடுபடாத அல்பிரட் துரையப்பா என்ற நிரபராதியை தமிழரசுக் கட்சியினர் தங்கள் நீதியின் முன் நிறுத்தி துரோகியாக அவர் தீர்க்கப்பட்டு தமிழர்கள் மத்தியில் தனக்கும் ஒரு இடத்தை நிர்மாணிக்கும் முயற்சியாக இவர்களுடன் இணைந்து செயல்பட்ட பிரபாகரன் என்ற கொலைகாரனால் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டார் கொலைக்கான காரணம் தமிழாராச்சி மகாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு துரையப்பா தான் சூத்திரதாரி என்று கூறப்பட்டது.
இலையுதிர் காலத்து இலைகள் போல் 83ம் ஆண்டில் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் உதிர்வதற்கு காரணமாயிருந்த பிரபாகரன் அதை நடத்தி வைக்க ஒருயூலை மாதத்தை தெரிவு செய்தது போல் ஒரு தேச மைந்தனின் இன்னுயிரை உதிர்க்க தெரிவு செய்யப்பட்ட நாளும் ஒரு யூலை மாதத்தின் நாளாகிய 27 யூலை 1975 ஆகும். இந்த யூலை மாதமே பிரபாகரன் பங்குபற்றிய முதல் தாக்குதலாகும் அதுபோல 83 யூலை மாதமே பிரபாகரன் இறுதியாக பங்கு பற்றிய தாக்குதலுமாகும். இதனால் பிரபாகரனின் டைரியில் யூலை மாதம் ஒரு கொலையுதிர் காலமாக எழுதப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது
chandran.raja
குண்டெறிவது குண்டுவைப்பது போன்ற உரும்பிராய் சிவகுமாரனின் முயற்சி தோல்வி அடைய இரத்தத்மட்டும் காணத்துடித்த விரக்தியுற்ற வாலிபகளால் பொன்னாலை வரதப்பெருமாள் கோவில் வைத்து அல்பரட் துரையப்பா கொலை செய்யப்பட்டார்.நான்கு ஐந்து இளையர்கள் சம்பந்ப்பட்டிருந்தார்கள். சுட்டவர் பிரபாகரன் சாமிகும்பிட்டு திரும்பும் போது. ஐயா நாங்கள் உங்களை கும்பிடுகிறோம் என்று சொல்லி வெடி தீர்கப்பட்டது.
துரையப்பாவை நான் அடிக்கடி சந்தித்துகொண்ட இடம் கொட்டடிசந்தி அன்னசத்திரமாகிய இடங்கள். மூட்டைதூக்குபவர்கள் ஏழைகள் சிறுசிறு வியாபாரிகள் அவருடன் சுமூகமாக கலந்துரையாடுவதைக் காணலாம். இவர் கொலைசெய்யப்பட்ட நேரம் இவர் மணைவி போர்ணியோவில் இருந்தார். இவர் அடித்தட்டு மக்களுக்கு நண்பராக இருந்தார் என்றால் மறுப்பதற்கு இல்லை. அவர் ஏன் குற்றவாளியானர் ஏன் துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டது என்றால் சிங்களகட்சியுடன் தன்னை இணைத்து கொண்டு தமிழ்மக்களுக்கு சேவை செய்ய புறப்பட்டதே!
Kulan
//யுரோப்பியன் எல்லாம் அமைதி தேடி ஆபிரிக்காவுக்கும்இ ஆசியாவுக்கும் படை எடுக்கின்றான்இ கந்தக வாசனை அற்ற பூமியை தரிசிக்க நினைக்கின்றான். குலனண்ணா கொஞ்சம் பயமுறுத்தி பார்க்க நினைக்கின்றார்.// கந்தகக்காற்றும் கரியமிலவாயுவும் எமது நாட்டில் போதும். உலகெங்கும் நுரையீரல் கறுத்துத் துருப்பிடித்துப் போயிருக்கிறது. பொருளாதார நெருக்கடி வளர்ச்சி என்று பொருட்களின் விலை ஐரொப்பிய விலைக்குச் சமனாக இருந்த போதிலும் ஊதியம் சமனாக இல்லையே. நடுத்தர வர்க்கமோ பணக்காரர்களோ அன்றி வெளிநாடுகளில் பிள்ளைகளைக் கொண்டவர்கள் மட்டும் வாழக்கூடிய நாடுகளைத்தானே உருவாக்குகிறார்கள். உலகம் உருண்டைதான். சமனிலையில்லையே. சுற்றிவந்தாலும் சுப்பற்றை கொல்லைதான் பணக்காரனும் பணம் கொண்டு திரிபவனும் தொடர்ந்து பணக்காரனாகவே தானே இருக்கிறான். பணம் பணத்துடன் சேர்கிறது. வரிகிடைக்கிறதே என்று அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது. குறுகிய கால இலாபத்துக்காக பூமிப்பந்தையல்லவா அண்டவெளியில் தொலைத்து விடுகிறோம்.
மாலைதீவின் ஆயுள் 75வருமாம் இலங்கையின் ஆயுள்??? எப்போ சுனாமி. ஐரொப்பில் ஏற்படும் வழியசுத்தத்தால் பனிகரைய மாலைதீவை கடல் மூடும். இதுவும் உலகமயமாதல்தான். மூடிய மாலைதீவு மீண்டும் வருமோ? நச்சில்லா உணவும் நல்ல காற்றும் போதும் உயிர்கள் வாழ. தொழிற்சாலைகளை உண்ண முடியுமோ? இன்றும் இலங்கையில் குறுகியகால இலாபத்துக்காக பழங்களை பழபழப்பாக வைப்பதற்கு மருந்தடிக்கிறார்கள் அப்பழங்களைச் சாப்பிட முடியவில்லை சுவை செத்துவிட்டுது சாப்பிட்டால் தொண்டை கடிக்கிறது. இதுவுமொரு இரசாயணக்கழிவே. வாழைப் பொத்திக்குள்ளே யூரியாத் திணிக்கிறார்களால் விரைவாக பெரிதாக ஆகுவதற்கு. நஞ்சைச் சாப்பிடத் தொடங்கியிடங்கியிருக்கிறது எம்மானிடம்.
அன்று ஐரொப்பியியரதும் பிராந்திய பெருவரசுகளின் படையெடுப்பு இருந்தது எம் மண்ணை நோக்கி நாம் அடிமையாக்கப்பட்டோம். எம்மூலவளங்கள் எம்முன்னே சூறையாடப்பட்டன வாழாதிருந்தோம் வலுவில்லை. இன்றும் அதேபடையெடுப்புத்தான் எம்மூலவளங்களையும் எம்மூளைவளங்களையும் சூறையாட வாழாதிருப்போமா?த உலகம் உருண்டைதான் ஒரேபக்கமாகத்தானே உருள்கிறது. பொருளாதாரப் பெருக்கம் நோக்கிய புதியகாலணித்துவமே.
Kulan
//துரையப்பா சுடப்பட்டதை ஒரு மனிதனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை// துரையப்பா கொலையின் விரிவாக்கம் தான் அமிர்தலிங்கம் கொலை தொடர்ந்து நந்திக்கடல் குதிப்பு
ragavan
எந்த ஒரு தனி மனித கொலைகளையும் ஏற்க முடியாது. துரையப்பாவும் இதற்கு விதி விலக்கல்ல. எமது கடந்த காலங்களில் “மாட்டுக் கள்ளன்” என்ற பட்டத்திலேயே பலரை சுட்டுக் கொன்றுள்ளோம். உலகின் எந்த ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் இவ்வாறு நடைபெற்வில்லை. துரையப்பா கொலையை அமிர்தலிங்கம் எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. அமிர் ஒன்றும் புனிதரல்ல. பல்லாயிரம் மக்கள் இறப்புக்கு அமிரும் ஒரு காரணம். தாங்கள் தேர்தலில் வெல்லவேண்டும் என்பதற்காகவும் தான் விடுதலைப் போர்வையை போர்த்தவர்கள் த.வி.கூ கோஸ்டி.
குகபிரசாதம்
நீங்கள் மறந்து விடக்கூடாத சில சம்பவங்கள்;
1956 இனகலவரத்தை அடுத்து கல்முனையில் இராணுவத்தினர் மீது 11 தமிழர் 7 ரைபிள்கள் கொண்டு தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
1961 சத்தியாகிரகத்தின் போது இராணுவத்தினர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடை பெற்றது. ஆனால் இராணுவத்தினர் பாதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 12, 1961 கோணேஸ்வரம் கோவிலில் கொழும்பில் இருந்து வந்த தங்களை புலிப்ப்படை என பெயரிட்டு அழைத்த. 20 தமிழ் இளைஞர் தமிழ் ஈழம் காண்பது என்று சத்தியம் செய்தனர். புலிப்ப்டையினருக்கு அமிர்தலிங்கமும் வீஎன் நவரத்தினமும் உதவி செய்தனர்.
1965ல் தமிழரசு கட்சியினர் யூஎன்பீ அரசை ஆதரிக்க புலி படையினர் குழம்பி மெல்ல மெல்ல ஒவ்வொருவராக விலகினர். கடைசியாக மிஞ்சியவர்களில் எ ராஜரத்தினம் சென்னையில் 1975ல் ஆஸ்மாவினால் மரணமானார். சிவஞானசுந்தரம் EPRLFனால் 1988ல் கொல்லப்பட்டார் .
1969ல் பருத்தித்துறையில் உள்ள ஆசிரியர் வீட்டில் கூடிய குட்டிமணி, தங்கதுரை, பெரிய சோதி, சின்ன சோதி, ரேடியோ மெக்கானிக் கண்ணாடி, ஸ்ரீ சபாரத்தினம், பிரபாகரன் ஆகியோர் சந்தித்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர்.
இவர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட உரும்பிராய் சிவகுமாரன் இவர்களைவிட்டு கழன்று சுயமாக இயங்க ஆரம்பித்தார்.
ஏப்ரல் 1971 தொண்டமானாறில் உள்ள பள்ளிக்கூடத்தில் குண்டு செய்ய தங்கதுரை முற்படுகையில் குண்டு வெடித்து சின்ன சோதி படுகாயமடைந்தார்
vinothan
ஒத்துக்கொள்கின்றோம் குலன். ஆனால் நீங்கள் மகியங்கனைக்கு போகவில்லை போல் இருக்கின்றது. மகியங்கனையிலிருந்து 4மைல் தொலைவில் அதாவது ரன்தெனிகலை ரோட்டில், ஒரு சிங்கள சகோதரர் மூலிகையிலிருந்து பெற்றள், எண்ணை, எரிபொருள் தயாரிக்கின்றார். எவ்வித விஞ்ஞான கலப்படமும் இல்லை. ஒரு கிராமமே ஒளிர்கின்றது. விரைவில் சந்தைக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்.
4-11-2009 ஜுனியர் விகடன் பாருங்கள் ராமர் பிள்ளை மீண்டும் பீல்டுக்கு வருகின்றார். அவரது மூலிகை எண்ணைக்கு அமரிக்க காப்புரிமை கிடைக்க போகின்றது. டேனிஷ் அரசு ஏற்கனவே அவருடன் ஒப்பந்தம் செய்து விட்டது.
என்ன மண்ணாங்கட்டி உலகமயமாதல். எல்லாம் மீண்டும் கல்லோடு கல்லை உரசி, தடியோடு தடி உரசித்தான் முடியப் போகின்றது.
நீங்கள்தான் செப்பு சல்பேற்று, கந்தகவீரொட்சைட்டு, பொட்டாசியம், புரோத்தன், இலத்திரன் பற்றி கவலைப்படுகின்றீர்கள். நாங்கள் இன்னும் அதேமாதிரித்தான் இருக்கின்றோம். அதுதான் படிக்காதவர்கள்.
தலைவலிக்கு கடுகை மைபோல் அரைத்து பூசிக்கொண்டும், பல்வலிக்கு கிராம்பை பல்லிடுக்கில் சொருகிக் கொண்டும், வயிற்றுக் கோளாறுக்கு அசமதாக தண்ணியை ( ஓமத்திராவகம்) குடித்துக் கொண்டும், நகச்சுத்திக்கு எலுமிச்சம் பழத்தை வெள்ளைத்துணியால் கட்டிக் கொண்டும், தடுமலுக்கு கருஞ்சீரகத்தை துணியில் கட்டி முகர்ந்து கொண்டும்,கண் நோய்க்கு கற்றாளை மடலை வகுந்து தடவிக் கொண்டும், கை,கால் வீக்கத்துக்கு பச்சைமஞ்சளை உரலில் போட்டு குத்தி கட்டிக் கொண்டும், இருமலுக்கு பனங்கல்கண்டு,தலைபாரத்துக்கு தேயிலைச்சாயம் பிளஸ் நொச்சி இலை, வயிற்றோட்டத்துக்கு எலுமிச்சை சாற்றுடன் உப்பு மிக்சர், அம்மைக்கு வேப்பிலை, பேய், பிசாசுக்கு சித்தாமட்டி வேர்,குங்குலியம்,ஆடாதோடை, பாம்புக்கடிக்கு விசம் நீக்கும் கல் என ஜாலியாகத்தான் வாழ்கின்றோம். வாழ்வோம்.
இந்த உலகமயமாதல் முற்றும் கற்றவர்களுக்குத்தான் பூதம். முற்றும் துறந்தவர்களுக்கு ஜுஜுபி. மக்கள் வன்னியில் இப்போது முற்றும் துறந்து விட்டார்கள். உலகமும் இறுதியில் அதில்தான் முடியும். அப்போது மீண்டும் ஒருவர் பரிணாம தத்துவம் வரைவார்.
10,000 வருடங்களுக்கு முன் மனிதன் அதுவாக இருந்தான், இப்போ இதுவாகி கூர்ப்பு விதி எழுதுவார்கள்.வெயிட் அன்ட் சீ.
பார்த்திபன்
// அரசியல் உலகின் சூதுவாது தெரியாத விசித்திரமான ஒரு வி.ஐ.பி அவர். – S.R //
துரையப்பா அவர்கள் பற்றிய உங்கள் குறிப்புகள், இனனும் அவர் பற்றிய பல விடயங்களை அறிய வைத்துள்ளன. மிக்க நன்றிகள்.
palli
குலன் பல்லி தவறு விடுவது சகசம் தானே; இதுக்கெல்லாம் தாங்கள் அலட்டிக்க வேண்டாம்; ஆனால் பழமைவாதிகள் போல் கிராமவாசிகளுக்கு புரியாத எந்த சிந்தனையும் தேவையில்லை என்பதே என்கருத்து; அமிர்தலிங்கம்தான் அரசியல் பேசவேண்டும் பிரபாகரன் தான் சுட்டு பளக வேண்டும் என்னும் மாயை விலகி இன்று பலருக்கு பலவிடயம் தெரிகிறது; அதே போல் உலகமயமாக்கல் என்பது அமெரிக்காவும் சோவியத்துமா முடிவெடுப்பது? இல்லை என்பது உங்கள் கட்டுரை, அதை உங்கள் பாணியில் சொல்லுகிற போது கிராமவாசிகளுக்கு (பல்லிபோல்) புரிவதில்லை அதனால் பல்லி என் பாணியில் சொல்லுகிறேன்,
தாங்கள் கோலாவின் கெடுதலை சொல்லுகிறீர்கள்; பல்லி தண்ணியின் (அந்த தண்ணியல்ல) அருமை பற்றி சொல்லுகிறேன்; இதில் துரையப்பா எப்படி வந்தார் என்பது எனக்கு தெரியாது, ஆனால் அவர் உயிருடன் இருந்திருந்தால் உலகமயமாக்கலின் மிகபெரிய மேதையாகி இருப்பார், ஆக சில விடயங்களை பேசுகிறபோது நாம் தொலைத்து விட்ட எமது முன்னோரை நினைவு படுத்தல் அவசியமாகி விடுகிறது, நானும் வினோதனின் கட்டுரையை எதிர்க்க வில்லை; ஆனால் அவரது எண்ணத்தை என்னை போன்ற மக்களுக்கு விளங்க செய்கிறேன், அதை விட்டு நாம் எதை சொன்னாலும் அதை அனைவரும் புரிய சொல்லவேண்டும் என்பதுதான் எனது ஆசை,
யோசித்து பாருங்கள் துரையப்பாவை எத்தனை பேருக்கு தெரியும்; ஆனால் பொட்டரை தெரியாத தமிழரே கிடையாது; ஆகயால்தான் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் முடிந்த மட்டும் எம்மின முன்னோர்கள் அழிவை சுட்டிகாட்ட பல்லி முயல்கிறேன்; அதைவிட நான் எந்த ஒரு கட்டுரையையும் திசைமாறி கொண்டு செல்ல மாட்டேன், அது என் வேலையும் அல்ல, இது பலபொருள் அங்காடி போல் பலதையும் பயம் இன்றி பேசகூடிய தளம்;
இந்த சந்தர்ப்பத்தை நான் என்னால் முடிந்த மட்டும் குலன் போலோ அல்லது வினோதன்போல் உலக அரசியல் தெரிய முடியாவிட்டாலும் பல்லி போல் எமது நாட்டின் கடந்தகால கறைகளை உங்களின் நிழலில் நின்று புரியவைக்க முயல்கிறேன்; அது சரியோ தவறோ எனக்கு தெரியவில்லை; காரனம் நான் பல்லி: தொடர முயல்கிறேன்
chandran.raja
உலகமயமாதலின் விளைவு பாதிப்பு கொக்கோகோலா வினால் மட்டும் பாதிப்பு அல்லது தண்ணீரை தனியார் நிறுவனங்களும் கையளிக்கும் முயற்சி மட்டும் என்று நினைத்தால் அது முழுமையைக் காணத சிறு உண்மை. செவ்விந்திய இனம் அழிக்கப்பட்டதிலிருந்து ஐரோப்பியர் அமெரிக்காவுக்கு குடிபெயர்தல் பாரம்பரிய தென்அமெரிக்க காடுகள் அழிக்கப்படுதல் (உலகத்திற்கு நாற்பது வீத பிராணவாய்வை வழங்குவதாக விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள்) தங்கம் வைரம் கனிவழங்களை கொண்ட ஆபிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளை ஏற்றுமதி செய்தது வரை ஆரம்பகால உலகமயமாதலே!
நைஜீரியா பயாப்பிர இனம் போராடிப்போராடி அழிந்து போனதும் இன்றும் அமைதியை காணது தம்மில் அடிபட்டு செத்துமடிகிற ஆபிரிக்க இனகுழுக்களுக்கான போராட்டங்கள். ஒரு கோழியைவிட குறைவான விலையில் ஏ.கே.47 சோமாலியாவில் வாங்கக் கூடியதாக இருப்பதற்கும் இலங்கையில் முப்பது வருடப்போர் இழுபட்டு போனதும் இதன் வெளிப்பாடே!
இனிவரும் பின்னோட்டங்கள் மிகுதியையும் புரியவைக்குமென்று நினைக்கிறேன்.
chandran.raja
முதாலிளித்துவ வர்கத்தின் உற்பத்திபொருள்களுக்கு தொடர்ந்து மேலும்மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியம். இந்த அவசியம் முதலாளிவர்கத்தை புவிப்பரப்பு முழுவதும் செல்லும்படி விரட்டுகிறது. அது எல்லா இடங்களிலும் சென்று ஒட்டிக்கொள்ள வேணடியதுதாகிறது. எல்லா இடங்களிலும் குடியேற வேண்டியதாகிறது. எல்லா இடங்களிலும் தொடர்புளை நிறுவிக்கொள்ள வேண்டியதாகிறது.
அனைத்துலக சந்தையை பயன்படுத்தி செயல்படுவதின்மூலம் முதாலிளித்துவ வர்கம் ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியையும் நுகர்வையும் அனைத்துலகத் பெறசெய்திருக்கிறது. பிற்போகர்கள் கடும்கோபம் கொள்ளும் படி தொழிகல்களது காலுக்கு அடியிருந்து அவரின் தேசிய அடிநிலத்தை அகற்றியுள்ளது. நெடுங் காலமாக நாட்டில்லுள்ள தொழில்கள் யாவும் அழிக்கப்பட்டு விட்டன. அல்லது நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. புதிய தொழில்களால் அவை அப்புறபடுத்துத்ப் படுகின்றன. இந்த புதிய தொழில்களைத் தோன்றச் செய்வது நாரீகநாடுகள் யாவற்றிக்கும் ஜீவமரண பிரச்சணையாகி விடுகிறது. முன்பிருந்தவற்றை போல் இந்த புதிய தொழில்கள் உள்நாட்டுமூலப் பொருள்களை மட்டும் உயோகிப்பவையல்ல தொலைதூர பிரதேசங்களிலிருந்து தருவிக்கப்படும் மூலப்பொருள்களை உபயோகிப்பவை.
இவற்றின் உற்பத்திபொருள்கள் தாய்நாட்டில் மட்டுமன்றி உலகமெங்கும் எடுத்துச் செல்லப்பட்டு எல்லா பகுதியிலும் நுகரப்படுகின்றன. தாய்நாட்டு உற்பத்திப் பொருள்களால் பூர்த்திசெய்யப்பட்ட பழைய தேவைகளுக்களுக்கு பதில் தொலைதூர நாடுகள் மண்டடலங்களது உற்பத்தி பொருள்களினால் பூர்த்தி செய்யப்படும் புதிய தேவைகள் எழுகின்றன. வட்டாரங்கள் நாடுகள் இவற்றின் பழைய ஒதுக்க நிலைக்கும் தன்நிறைவுக்கும் பதில் எல்லா திசையிலுமான நெருக்கிய தொடர்பும் உலகயளவில் நாடுகளுக்கான சார்புபுடைமையும் ஏற்படுகின்றனஇ பொருள் உற்பத்தியில் எப்படியோ அப்படியேதான் அறிவுத்துறை உற்பத்தியிலும். தனிதனிநாடுகளுடைய அறிவுத்துறை படைப்புகள் எல்லாநாடுகளுக்கம் பொது சொத்தாகின்றன. தேசிய ஒருதலை பட்சப்பார்வையும் குறுகிய மனப்பாங்கும் மேலும்மேலும் இயலாதனவாகின்றன. நாட்டளவிலும் மண்டல அளவிலும்மான எத்தனையோ பல இலக்கியங்களிலிருந்து ஒர் அனைத்துலக இலக்கியம் உருவாகின்றன. (கம்யூனிஸ்கட்சி அறிக்கையில் இருந்து) .
Kulan
எஸ்.ஆர்!
பின்னோட்டம் என்ற போரில் ஒரு உண்மைச் சரித்திரத்தையே எழுதி விட்டீர்கள். துரைப்பாகால் யாழ்பஸ்தரிப்பில் ஒரு கடதாதிக் குப்பை காண இயலாது. துரையப்பா இருந்திருந்தால் யாழ்பாணம் சிலவேளை சிங்கப்பூராகவே மாறியிருக்கும். துரையப்பா கொலையில் போதியளவு அரசியல் காழ்புணர்வுகள் உண்டு. முக்கியமாக தமிழரசுக்கட்சி துரும்பாகப் பாவித்து பிரபாகரன் போன்றோரை உசுப்பேத்தி விடயம் முத்தவெளியில் நடந்து தமிழாராட்சி மகாநாடு. இராணுவம் அல்லது பொலிஸ் மின்கம்பிகளை துட்டுவிட்ட அந்த மின்னகம்பிகள் விழுந்து சிலரைப்பலி கொண்டது. இது துரையப்பாவின் தலையிலேயே போடப்பட்டது. சிறுவர்களாக இருந்தபோம் நாமும் துள்ளினோம். துரையப்பா ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் ஒவ்வொரு ஞாயிறும் புன்னாலை கிருஸ்ணன் கோவிலுக்கு போவார். முக்கியமாக மூழாயிலுள்ள அமிர்தலிங்கம் வீட்டில் இருந்து நேரே சைக்களில் போனால் புன்னாலைக் கோவில்வரும். மீதியை உங்கள் கையில் விட்டுவிடுகிறேன்.
Kulan
//அவர் ஏன் குற்றவாளியானர் ஏன் துரோகிப்பட்டம் கொடுக்கப்பட்டது என்றால் சிங்களகட்சியுடன் தன்னை இணைத்து கொண்டு தமிழ்மக்களுக்கு சேவை செய்ய புறப்பட்டதே// இது முற்றிலும் உண்மை. இப்ப புரிகிறதா துரோகிப்பட்டங்களின் தொடங்கம் எங்கு இருந்து ஆரம்பமானது என்று. ஆனால் துரோகிப்பட்டம் கொடுத்தவர்களே துரோகியாக்கப்பட்டு வளர்த்த கடாவே பாய்ந்த நிலையானது. நன்றி சந்திரன் ராஜா
அன்பான குகப்பிரகாசம் அவர்களே! //1956 இனகலவரத்தை அடுத்து கல்முனையில் இராணுவத்தினர் மீது 11 தமிழர் 7 ரைபிள்கள் கொண்டு தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர். 1961 சத்தியாகிரகத்தின் போது இராணுவத்தினர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடை பெற்றது. ஆனால் இராணுவத்தினர் பாதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 12, 1961 கோணேஸ்வரம் கோவிலில் கொழும்பில் இருந்து வந்த தங்களை புலிப்ப்படை என பெயரிட்டு அழைத்த. 20 தமிழ் இளைஞர் தமிழ் ஈழம் காண்பது என்று சத்தியம் செய்தனர். // நாம் பிறப்பதற்கு முன்பு நடந்த விடயங்களைத் துல்லிதமாக வைக்கிறீர்கள். ஏன் இதை ஒரு கட்டுரையாக ஒருபதிவாக வைக்கக்கூடாது. இவை மறைக்கப்படக் கூடாதவையே. தயவுசெய்து இதுபற்றிச் சிந்திப்பீர்களா? முக்கியமாக புலிபடையைப் பற்றிக் கேள்விப்பட்டேன் உண்மை பொய் தெரியாது அல்லாடினேன். அதுபற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறோம்.
//1969ல் பருத்தித்துறையில் உள்ள ஆசிரியர் வீட்டில் கூடிய குட்டிமணி தங்கதுரை பெரிய சோதி சின்ன சோதி ரேடியோ மெக்கானிக் கண்ணாடி ஸ்ரீ சபாரத்தினம் பிரபாகரன் ஆகியோர் சந்தித்து ஒரு இயக்கத்தை ஆரம்பித்தனர்// ஈழவிடுதலை இயக்கம் என்று எண்ணுகிறேன்.
வினோதன்! பின்னோட்டம் என்று ஒரு மருத்துவக்குறிப்பே தந்து விட்டீர்கள். நீங்கள் கூறும் இந்த விடயங்கள் அதாவது எம்ஜீவநாடிகள் அழியக்கூடாது என்பதுதான் உலகமயமாதலைப்பற்றி எழுதினேன். இன்றும் ஐரோப்பாவில் ஆல்ரநட்விவ் , விதி மருத்துவம் என்று ஓடித்திரிகிறார்கள். எம்கீழத்தேய மூலவளங்கள் அழியகூடாது என்பதில் மிக அக்கறையாக உள்ளேன். விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்கவில்லை வெறுக்கவில்லை பொருளாதாரம் எனும் பாணியில் புதிய காலணித்துவம் வேண்டாம்.
Kulan
பல்லி! நீங்கள் என்னைப்பற்றிப் பெரியவார்த்தைகள் பாவிக்கிறீர்கள். ஏதோ என்சிற்றறிவுக்கு எட்டிய சிந்தனைகளை தேசம் நேசமாக இருப்பதால் எழுதுகிறேன். யாருக்காவது பயன்படட்டுமே என்ற அற்ப ஆசைதான். அதற்காக நான் எழுதுவது தான் சரி என்று அடம்பிடிப்பது கிடையாது. அதனால்தான் பின்நோட்டுக்காரர்கள் தொடர்வார்கள் என்று விட்டேன் காரணம் ஒவ்வொரு மனிதனது மூளையும் அபரீதமானது. அதனால்தான் மற்றவர்களைத் தொடரச்சொன்னேன் காரணம் எனக்குத் தெரியாத எத்தனையோ விடயங்கள் உலகில் உண்டல்லவா. இதைப்புரியாது நான்தான் உலகமயமாதலில் தந்தை அற்றேல் குரு என்று சிலர் நினைக்கிறார்கள். அது தப்பானதே. இக்கட்டுரையை நான் எழுதினாலும் படித்தது உங்களிடம் இருந்தும் சமூதாயத்திடம் இருந்தும் தானே. கட்டுரை உலகமயமாதலாக இருந்தாலும் எத்தனையோ மறைக்கப்பட்ட அழிந்து ஒழிந்து கொண்ட விடயங்கள் சந்திக்கு வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சிதான். பின்நோட்டம் என்று ஒரு சிறப்பான கட்டுரையே வந்துள்ளது மகிழ்ச்சிக்குரியதே
Kulan
சந்திரன் ராஜா ஏன் நிறுத்தி விட்டீர்கள் தொடர்ந்து எழுதுங்கள். எதிர்பாத்த விடயத்தைக் கொண்டு வருகிறீர்கள் இன்னும் உங்களிடம் இருந்து படிக்க ஆசைப்படுகிறேன் தொடர்ந்து தாருங்கள். உலகமயமாதல் இனி மிக மிக வேகமாக இருக்கும். எம்மக்களை இதற்குத் தயார்படுத்த அரசியலும் பின்னணியில் நிற்கவேண்டும். புலிகளின் அழிவுக்குப் பின்பு புதிய யுகம் ஒன்று உருவாகியுள்ளது. இதைச் இராஜதந்திர ரீதியில் எம்மக்களின் உண்மையான விசுவாசத்துடன் எம் அரசியல்வாதிகள் நடப்பார்களே ஆனால் தமிழ்மக்கள் மிக மிக உயரிய நிலைக்கு வெகுவிரைவில் வந்துவிடலாம் என்பது என் எண்ணம். மொழிகூடச் சர்வதேசமயப்படுத்தப் படும்போது இலகுவான மொழிகள் பெரும்பான்மையான மொழிகளுளே வாழும்: இங்கே மொழி இலகுவாக்கமும் மொழியாய்வும் கூட முக்கியமாகிறது. தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
ragavan
வணிகர்களின் தோற்றததுடன் உலகமயமாதல் தோன்றிவிட்டது. வணிகப் போட்டி உலகின் பல இடங்களை அவற்றின் வளங்களை தேடி நகர்வு என விரிகின்றது. ஆதி இலங்கையின் மீது இந்திய படையெடுப்புக்கள் இந்தியா மீதான வெவ்வேறு சக்கரவர்த்திகளின் படையெடுப்பு இவற்றன் தொடர்வாக போ-ஒ-ஆங்கிலேயர் இலங்கை-இந்திய ஆக்கிரமிப்பு, வருகை என விரிகின்றது. இனறைய உலகமயமாதலின் காவிகளாக புலம் பெயர் தமிழர்கள் உள்ளோம்.
chandran.raja
இந்த காவிகள் பிரபாகரனுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளமாட்டார்கள். வட்டுக்கோட்டை தீர்மானம் ஈழம்இல்லதா நாட்டில் தமிழீழம் இவர்களுக்கு துணைபோக தமிழகத்தில் பரவலான வை.கோ நெடுமாறன் ராமதாஸ் தொல்திருமால்வளவன் இவர்களை இயக்கி உசார் கொடுப்பதற்கு காத்திருக்கும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள். என்ன விலைகொடுத்தும் ஆட்சியைப் பிடிக்க தயாராகிக்கிக் கொண்டிருக்கும் ஐக்கியதேசியகட்சி (நாட்டுமக்களில் எந்தவித கருசரணையில்லாது) போன்றவை புது அழிவை ஏற்படுத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா மலேசிய உளவுப்படையின் உதவியுனே கே.பி கைது செய்யப்பட்டார்
இந்திய சீன மோதல்களுக்கு புதுவடிவம் கொடுக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள் என செய்திகள் கூறுகின்றன. இந்த காவிகளில் ஒரு கே.பி போனால் இன்னும் எத்தனையோ…..? கவனம் செலுத்துவோம்.
chandran.raja
உற்பத்தி கருவிகள் அனைத்தின் அதிவேக அபிவிருத்தியின் மூலம் போக்குவரத்துச் சாதனங்களின் பிரமாதமான மேம்பாட்டின் மூலமும் முதலாளித்துவம் எல்லா தேசங்களையும் மிகவும் அநாகரீக கட்டத்தில் இருக்கும் தேசங்களையும் கூட நகரீக வட்டத்திற்குள் இழுக்கிறது. தனது பண்டங்களின் மலிவான விலைகளை அது சக்தி வாய்ந்த பீரங்கிகளாகக் கொண்டு சீனமதிலை ஒத்த எல்லா தடைமதில்களையும் தகர்த்திடுகிறது. அநாகீக கட்டத்தில் இருப்போருக்கு அந்நியர்பால் உள்ள முரட்டு பிடிவாத வெறுப்பைப் பணியவைக்கிறது. ஏற்காவிடில் அழியவே நேருமென்ற நீர்ப்பந்தத்தின் மூலம் அது எல்லா தேசங்களையும் முதாலித்துவப் பொருள்உற்பத்தி முறையை ஏற்கச்செய்கிறது நாகரீகம் என்பதாய்தான் கூறிக்கொள்வதை தழுவும்படி அதாவது முதாலிளித்தவமாகும்படி எல்லா தேசங்களையும் பலவந்தம் செய்கிறது. சுருங்கக்கூறுமிடத்து அப்படியே தன்னை உரித்து வைத்தாற் போன்றதோர் உலகத்தை படைத்திடுகிறது அது.
முதாலிளித்துவ வர்க்கம் நாட்டுபுறத்தை நகரங்களது ஆட்சிக்கு கீழ்படச் செய்துள்ளது. மாபெரும் நகரங்களை அது உதித்தெழ வைத்திருக்கிறது. கிராமமக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் நகரமக்கள் தொகையை வெகுவாய் அதிகரிக்கச் செய்திருக்கிறது. இவ்விதம் மக்களில் ஒரு கணிசமான பகுதியோரை கிராம வாழ்கையின் மடமையில்லிருந்து மீட்டிருக்கிறது. எப்படி அது நாட்டுப்புறத்தை நகரங்களை சார்ந்திருக்க செய்துள்ளதோ அதுபோல
அநாரீக நிலையிலும் குறைநாகரீக நிலையிலுமுள்ள நாடுகளை நாரீகநாடுகளை யும் விவசாயிகளது நாடுகளை முதாளிகளுடைய நாடுகளையும் கிழக்குநாடுகளை மேற்கு நாடுகளையும் சார்ந்திருக்க செய்திருக்கிறது.
Suresh
Kulan on November 2, 2009 9:56 am “இது துரையப்பாவின் தலையிலேயே போடப்பட்டது. சிறுவர்களாக இருந்தபோம் நாமும் துள்ளினோம்.” /
குலன் துரையப்பாவின் தலையிலேயே போடப்பட்ட பொது நிங்கள் சிறுவன் என்றால், நீங்கள் எப்படி சுந்தரத்துடன் தொடர்பில் இருந்திர்கள்??
Kulan on October 31, 2009 12:56 am “துரையப்பா கொலை; தியாகர் கொலைமுயற்சியில் சம்பந்தப்பட்டவர்களும்; அதை நன்கு தெரிந்தவர்களும் ஐரோப்பாவில் இன்னும் மெளனமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தயவுசெய்து இதுபற்றி மேலும் என்னைக் கிளறாதீர்கள்”/
Kulan on October 31, 2009 12:09 pm “பக்கத்தில் இருந்து பார்த்தமாதிரி இராகவனால் சொல்ல முடியாது. அப்படி அவர் சொன்னால் அது முழுப்பொய். கூடுதலாக பிரபா உரும்பிராய் கே.கே.ஸ் ரோட் கிராமங்களில் வதியும் பழகும் காலங்கில்தான் துரையப்பா போடப்பட்டார்.”/
குலன்,
நீங்கள் புஷ்பரசவின் புத்தகதை வாசித்துவிட்டு, அதை உமது அனுபவங்களா இங்கு ரீல் வுடுகிரிர். எல்லாத்துக்கும் அளவு உள்ளது. வாசகர் எங்களுக்கும் கொஞ்சம் அறிவு உள்ளது .
நன்றி
chandran.raja
மக்கள் தொகை உற்பத்திசாதனங்கள் சொத்து இவற்றின் இவற்றின் சிதறுண்ட நிலைக்கு முதலாளித்துவ வர்கம் மேலும்மேலும் முடிவுகட்டிவருகிறது. மக்கள் தொகையை அது அடர்ந்து திரட்சி பெற செய்திருக்கிறது. உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தியிருக்கிறது. சொத்துக்களை ஒரு சிலர் கையில் குவிய வைத்திருக்கிறது. இதன் தவிர்கவொண்ணாத விளைவு என்னவெனில் அரசியல் அதிகாரம் மையப்படுத்தப் பட்டது. தனித்தனி நலன்களும் சட்டங்களும் அரசாங்களும் வரிவிதிப்பு முறைகளும் கொண்டனவாய்ச் சுயேச்சையாகவோ அல்லது தளர்ந்த இணைப்புடனோ மாநிலங்கள் ஒரே அரசாங்கத்தையும் ஒரே சட்டத்தொகுப்பையும் தேச அளவினலான ஒரே வர்கநலன்களையும் ஒரே தேச எல்லையையும் ஒரே சுங்க வரியையும் கொண்ட ஒரே தேசமாய் ஒருசேர இணைக்கப்பட்டன.
முதாலாளித்துவ வர்கம் ஒரு நுhற்றாண்டுகூட நிறைவுறாத அதன் ஆட்சிகாலத்தில் இதற்கு முந்திய எல்லா தலைமுறையாச் சேர்ந்து உருவாகியதை காட்டிலும் மலைப்பு தட்டும்படியான பிரமாண்ட உற்பத்திசக்திகளை படைத்தமைத்திருக்கிறது. இயற்கை சக்திகளை மனிதனுக்கு அடிபணியபச் செய்தல் தொழில்துறையிலும் விவசாயத்திலும் இரசாயணத்தை பயன் படுத்தல் நீராவிக்கப்பல் ரயில்பாதைகள் மின்விசைதந்தி முழுகண்டத்தையும் திருத்தி சாகுபடிக்கு செப்பனிடுதல் ஆறுகளை கப்பல்போக்குவரத்திற்கு ஏற்றனவாய் ஒழுங்கு செய்தல் மனிதன் அடியெடுத்து வைத்திராத இடங்களில் மாயவித்தை புரிந்தாற் போல் பெரும்பெரும் தொகுதியிலான மக்களைக குடியேற்றுதல்-இப்படியான பொருள்ளுற்பத்தி சத்திகள் சமூகஉழைப்பின் மடியில் சயனம் புரியுமென இதற்கு முந்திய எந்த நுhற்றாண்டிலாவது கனவிலும் நினைத்திருக்குமா?.
ஆக நாம் காண்பது என்னவெனில்; முதாலிளித்துவ வர்கம் உருபெற்று எழுவதற்கு அடிப்படையாய்யிருந்த பொருளுற்பத்தி பரிவர்தனைசாதனங்கள் பிரபுத்துவ சமுதாயத்தில் ஜனித்தவை.முதாலித்துவ பொருள்உற்பத்தி பரிவர்த்தனைஉறவுகள் ………………..
இந்த நெருக்கடிகளின் போது இதற்கு முந்திய எல்லா சகாப்தத்திலும் அடி முட்டாள்தனமானய் தோன்றியிருக்கும் படியான ஒரு கொள்ளைநோய்- அமித உற்பத்தி என்னும் கொள்ளைநோய் மூண்டுவிடுகிறது. திடுமென சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்பட்டு சிறிதுகாலத்திற்கு காட்டுமிராண்டி நிலையில் விடப்பட காண்கிறோம். பெரும்பஞ்சம் சர்வநாசமுழுநிறைப் போர் ஏற்பட்டு வாழ்கை பொருள்கள் எதுவும் கிடைக்காதுபடி செய்தவிட்டால் போல்லாகிறது. தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டதாய் தோன்றுகிறது. ஏன் இப்படி? எனென்றால் நாகரீகம் மிதமிஞ்சிவிட்டது. வாழ்க்கை தேவைப் பொருள்கள் அளவுக்கு மீறிவிட்டன.தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன.
palli
//நிங்கள் சிறுவன் என்றால், நீங்கள் எப்படி சுந்தரத்துடன் தொடர்பில் இருந்திர்கள்?//
சுரேஸ், குலன் சிறுவனா அல்லது கிழவனா என பல்லிக்கு தெரியவில்லை: ஆனால் இந்த பல்லிக்கு வயது பதினாறு, அதனால்தான் அன்று என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை, சுந்தரத்தின் வயது தெரியாது அவரது செயல்பாடுகள் ஏதோ இன்று பலர் லெனின் கஸ்ரோ பற்றி பேசுவது போல் ஒரு மங்கலான நிகழ்வாக பல்லிக்கு தெரியும்; அன்று கேக்க வயதும் பயமும் தடுத்தது இன்று வயதும் அனுபவமும் தேசத்கின் நிழலும் எமக்கு ஒரு புதுதென்பை தருகிறது, சரி அதை விடுவோம், நீங்கள் தேசத்துக்கு புதிசா. அன்றய சிறியதுகளான நாங்கள் தான் அன்றய சிக்கு புக்கு ரயிலை மிக நிதானமாக ஓட்டுகிறோம்;
//துரையப்பா கொலை; தியாகர் கொலைமுயற்சியில் சம்பந்தப்பட்டவர்களும்; அதை நன்கு தெரிந்தவர்களும் ஐரோப்பாவில் இன்னும் மெளனமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தயவுசெய்து இதுபற்றி மேலும் என்னைக் கிளறாதீர்கள்”//
இது குலன் பல்லியை வைத்து எழுதிய கருத்து என நினைக்கிறேன், இது மதம் பிடித்த செயல்அல்ல; ஆனால் பலரை இனம்காட்ட பல்லி பலவகையில் முயற்சிக்கிறென்; இது தேச நிர்வாகமும் அறியும்; ஆனாலும் சில விடயங்களை தற்ப்போதைக்கு தாமதிக்கிறோம், உங்களுக்கு ஏதும் வேண்டுமாயின் புள்ளியை நீங்கள் வையுங்கள் கோலம் எப்படி வருகிறது என பாருங்கள்; நாமெல்லாம் அன்று மூன்று வடை ஒரு ரூபா என வித்தவர்கள் அல்ல என்பதை சுரேஸ் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்;
//இராகவனால் சொல்ல முடியாது//
இது ராகவனையும் அம்பலபடுத்தும் என்பது கூடவா குலனுக்கு தெரியாது;
//புஷ்பரசவின் புத்தகதை வாசித்துவிட்டு, அதை உமது அனுபவங்களா இங்கு ரீல் வுடுகிரிர் //
ஜயோ ஜயோ அந்த சாட்ச்சியே மிகவிரைவில் விமர்சனத்துக்கு உள்ளாக போவது புரியாமல் தாங்கள் தடுமாறுவது பரபரப்புதான், இந்த புத்தக வெளியீட்டில் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்ட பிரமுகர் இருவர்??? பட்டங்களை இறுதிநேரத்தில் தவற விட்ட சேரன், மற்றவர் மாமனிதரான சிறிராம்; பல்லியின் அடுத்த புள்ளி புரிகிறதா சுரேஸ்;
தொடரும் பல்லி
Kulan
இராகவன்//வணிகர்களின் தோற்றததுடன் உலகமயமாதல் தோன்றிவிட்டது. வணிகப் போட்டி உலகின் பல இடங்களை அவற்றின் வளங்களை தேடி நகர்வு என // ஆம் தோற்றுவாய் வணிகம் தான் ஆனால் பரிமாணங்கள் மாறிக்கொண்டே இருக்கிறன்றன. அரசாகி> ஆயுதமாகி> முதலீடுகளாய் வந்து நிற்கிறது. எது எப்படி இருந்தாலும் எம்நாடுகளை உயரவிட்டார்களா இந்த ஐரோப்பிய பணமுதலைகள்?
சுரேசு! // “இது துரையப்பாவின் தலையிலேயே போடப்பட்டது. சிறுவர்களாக இருந்தபோம் நாமும் துள்ளினோம்.”
குலன் துரையப்பாவின் தலையிலேயே போடப்பட்ட பொது நிங்கள் சிறுவன் என்றால், நீங்கள் எப்படி சுந்தரத்துடன் தொடர்பில் இருந்திர்கள்??//
அந்தக் காலப்பகுதியில் நான் சுந்தரத்துடன் தொடர்புடையவன் என்று எங்காவது குறிப்பிட்டேனா? நான் சுந்தரத்தை அறிந்தகாலம் புளொட்பிரியும் போது. சிறுவன் என்றால் பாலகன் என்று அர்த்தமாகாது. துரையப்பா துரோகி என்பது மட்டும்தான் எங்கள் காதுகளின் அன்று விழுந்தது. ஒரு நண்பர் மூலம்தான் அதுவும் புலம்பெயர் நாட்டில் சிறிது காலத்துக்கு முன்புதான் அறிந்தேன் துரையப்பாவின் அருமை பெருமைகளை. என்குடும்பத்தில் தமிழரசுக்கட்சியில் வழிவந்தவர்கள். எம்மைவிட மூத்த பிரபாகரன் கூட அன்றிருந்து அரசியல்வாதிகளால் தலைகழுவப் பட்டிருக்கலாம்.
//நீங்கள் புஷ்பரசவின் புத்தகதை வாசித்துவிட்டு அதை உமது அனுபவங்களா இங்கு ரீல் வுடுகிரிர். எல்லாத்துக்கும் அளவு உள்ளது . வாசகர் எங்களுக்கும் கொஞ்சம் அறிவு உள்ளது // . நான் புஸ்பராஜாவின் புத்தகத்தை வாசித்தேன் என்று உம்மால் எப்படிச் செல்லமுடியும்? அப்புத்தகத்தை நான் கையிலே தொடவே இல்லை. நானும் புஸ்பராசாவும் ஒரே அமைப்பில் இருந்தோம் அதற்காக நான் புஸ்பராசாவின் வயதுடையவான இருக்க வேண்டிய அவசியம் இல்லை: உமது கதையைப்பார்த்தால் பிரபாகனைத் தெரிந்தவர்கள் பிரபாகரனின் வயதுடையவர்களாகத்தான் இருக்கவேண்டும் போல் இருக்கிறது. நான் அமிர்தலிங்கம் வீட்டை போய்கூடப் பழகியிருக்கிறேன் அப்படியாயின் எனக்கு அமிரின் வயதா? ஒருவனுக்கு ஒருவயதுதான் ஒருநேரத்தில் இருக்கமுடியும்.
இராகவன் பிரபாவுடன் இருந்த காலங்கள் எனக்கு மட்டுமல்ல பலருக்குத் தெரியும். உமக்குத் தெரியாது என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை. அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம்.
நன்றி பல்லி! கிருபாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் அறிந்திலேன். தியாகர் பலதடவை சுடப்பட்டு தப்பியவர். இது தொடர்பானவர்கள் ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் இருக்கிறார்கள். எமக்கு மூத்தோர் பித்தல்களால் நாம் ஒவ்வொருவருடனும் பழகும் போது பயோ டேற்றாவைக் கேட்டுக் கொண்டுதான் பழகவேணும் போல் இருக்கிறது. பல்லி! சுரேசுக்கு தாங்கள் கொடுத்த பதிலுக்கு நன்றி
Kulan
சந்திரன் ராஜா //ஆக நாம் காண்பது என்னவெனில்; முதாலிளித்துவ வர்கம் உருபெற்று எழுவதற்கு அடிப்படையாய்யிருந்த பொருளுற்பத்தி பரிவர்தனைசாதனங்கள் பிரபுத்துவ சமுதாயத்தில் ஜனித்தவை.முதாலித்துவ பொருள்உற்பத்தி பரிவர்த்தனைஉறவுகள் ………………..
இந்த நெருக்கடிகளின் போது இதற்கு முந்திய எல்லா சகாப்தத்திலும் அடி முட்டாள்தனமானய் தோன்றியிருக்கும் படியான ஒரு கொள்ளைநோய்- அமித உற்பத்தி என்னும் கொள்ளைநோய் மூண்டுவிடுகிறது. திடுமென சமுதாயம் பின்னோக்கி இழுக்கப்பட்டு சிறிதுகாலத்திற்கு காட்டுமிராண்டி நிலையில் விடப்பட காண்கிறோம். பெரும்பஞ்சம் சர்வநாசமுழுநிறைப் போர் ஏற்பட்டு வாழ்கை பொருள்கள் எதுவும் கிடைக்காதுபடி செய்தவிட்டால் போல்லாகிறது. தொழிலும் வாணிபமும் அழித்தொழிக்கப்பட்டதாய் தோன்றுகிறது. ஏன் இப்படி? எனென்றால் நாகரீகம் மிதமிஞ்சிவிட்டது. வாழ்க்கை தேவைப் பொருள்கள் அளவுக்கு மீறிவிட்டன.தொழிலும் வாணிபமும் எல்லை கடந்துவிட்டன.//
அருமை அருமை.. வாழ்கையின் தேவைகளையும் துரித செயற்பாடுகளையும் ஏற்படுத்துவதூடாக முதலாளித்துவம் தன்கால்களை உறுதியாகப் பதித்துக் கொள்கிறது. கூட்டுவாழ்க்கை குலைக்கப்பட்டு தனிமனிதனாக்கப் படும்போது உழைப்பை உறுஞ்சும் வீதம் இலகுவாகும். போராட்டம் தொழிற்சங்கங்கள் பயனிழக்கும். மனித வாழ்வியல் நலன்களை விட பணம் முதலின் நலன்கள் மட்டுமே முன்னுரிமை பெறும். இவற்றின் ஒருவடிவத்தைதான் ஐரோப்பாவில் பார்க்கிறோமே. ஐரொப்பாவில் சோசியல் அமைப்பு இறுக்கமாகவும் சட்டரீதியாக ஒழுங்கா இயங்குவதால் முதலாளித்துவ ஆக்கம் தனிமனிதர்களை அளவுக்கு மிஞ்சிப்பாதிக்க வில்லை. ஆனால் 3ம் உலகநாடுகளில் சரியான சோசல் கட்டமைப்பு இல்லாதபோது கீழ்தட்டு மக்களின் வாழ்க்கை எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது….சந்திரன் ராஜா தொடருங்கள்.
valarnathy
குலன் நீங்கள் அமெரிக்காவை விட்டு விட்டீர்கள். அமெரிக்காவில் சட்டரீதியாக இடது சாரிக் கட்சிகள் இயங்கமுடியாது. தொழிற்சங்க போராட்டங்களை நசுக்க சட்டங்கள் உண்டு. வங்கிகள் வங்குரோத்து நிலையடந்தால் மக்களின் வரிப் பணம் வங்கிகளின் கல்லாப் பெடடியை நிரப்புகின்றன. சாதாரண மக்களுக்கும் பண முதலைகளுக்குமான விகிதம் மிக மிக அதிகம். அமெரிக்காவின் பல பகுதிகள் மூன்றாம் உலக நாடுகளை விட மோசம். மொத்த சனத் தொகையில் ஒரு வீதம் ஜெயிலில். இதில் கறுப்பின மக்களின் சனத் தொகையில் ஆறு வீதம் ஜெயிலில். முதலாளித்துவம் எப்படியெல்லாம் சாதாரண மக்களை உறுஞசலாமோ அப்படியெல்லாம் உறுஞ்சுகின்றது.
Kulan
வளர்நதி! நீங்கள் கூறுவது சரியே. இடதுசாரித்துவத்தை அடியோடு அழிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு பொருளாதாரம் ஜனநாயம் என்று அலைவது அமெரிக்கா என்பதாலும் அமெரிக்கரின் கூத்து அனைவரும் அறிந்து என்பதால் விட்டுவிட்டேன். அவர்களின் பணியை பிராந்திய வல்லரசுகள் தொடர்வது எம்போன்ற நாடுகளுக்கு அதி ஆபத்தானதே. இந்தியா சீனா போன்ற பிராந்திய வல்லரசுகள் தொழில்நுட்பம்> சிறுவரிக்காக பணமுதளைகளை அனுமதித்து பேரழிவுகளை ஏற்படுத்தும் வேளை இலங்கை போன்ற நாடுகளில் வல்லரசுகளும் பிராந்திய வல்லரசுகளும் இணைந்து குப்பை கொட்டும் போது பாதிப்பு அதிகம் எமக்கே. இலங்கையின் வாழ்வியலை மையப்படுத்தாது போரை மட்டும் கருந்தில் கொண்டு இலங்கை வல்லரசுகளுக்கம் பிராந்திய வல்லரசுகளுக்கும் ஏலம்போட்டு விற்கப்பட்டுள்ளது. வளர்நதி கூறியதுபோல் அமெரிக்காவை விட மிக மிக மோசமான நிலையில் எமது நாடு வந்து நிற்கப்போகிறதே என்பது வேதனைக்குரியதே. இலங்கை அரசு புலிகளை அழிக்கிறோம் என்று தம்மக்களுக்கும் தலையில் வாரி மண்ணையள்ளிப் போட்டிருக்கிறது.
Kulan
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா உத்தரவாதம் என்று ஒழுதப்பட்ட ஜேஆர் இன் உடன்படிக்கை இருந்தும் இலங்கை அரசு சீனாவை நாடியதற்கான காரணம் என்ன? இந்தியா மீதிருந்த நம்பகத்தன்மை? தென்னிந்தியத்தமிழர்களின் ஆதிக்கம் மத்திய அரசில் இருக்கும் என்பதை இராஜபக்ச உணர்ந்திருந்ததால் இந்தியாவுக்கு வைக்கப்பட்ட செக் சீனாவும் பாக்கிஸ்தாரும். காஸ்மீர் இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் கொடுக்கும் தலையிடி. இன்று தலிபான்கள் பாக்கிஸ்தான் மீதான தாக்குதல்கள் இந்திய அமெரிக்கப்பின்னணியில் பாக்கிஸ்தானுக்க வைத்த செக். சீனாவுக்கு தாய்வான் பின்னால் பிலிப்பைந்து தீவுகள். இப்படி இப்படி செக் வைத்து செக்குமாடாய் சாவது ஒன்றுமறியா அப்பாவி மக்களே
BC
Valarnathy பிரபாகரனுடைய கொள்கைகளை நிறைவேற்றி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் ஓரு நாட்டை, மனிதர்கள் போற்றி வணங்க தக்க நாட்டை பற்றி நீங்கள் இப்படி எழுதலாமா?
valarnathy
புலிகளின் கற்பனை வாதத்திற்கு அளவேயேயில்லை. மக்களை காப்பாற்றுவதற்கு குரல் கொடுக்காமல் புலிக் கொடியுடன் போராடி இறுதியில் முள்ளுக் கம்பிக்குள் மக்களை அடைத்துவிட்டார்கள். இன்றும் கூட அமெரிக்கன் எம்பசி முன் தவம் கிடக்கின்றார்கள். அமெரிக்கா மிக மோசமான நாடு. பிள்ளையையும் கொல்லும் மனைவியையும் கொல்லும்.
Kulan
அமெரிக்கா ஏன் உலகப்படத்தில் மேற்கே அமைந்திருக்கிறது தெரியுமா? சூரியன் உதிப்பது கிழக்கே மறைவது மேற்கே. உலகின் மறைவும் இருளும் மேற்கிலிருந்து தான்.
BC
Valarnathy, தொடருங்கள். வாழ்த்துக்கள்.
chandran.raja
விட்ட தவறுகளை திரும்பமும் நாம் விடமுடியாது. அமெரிக்கா என்பது எது? அமெரிக்கர் என்பவர் யார்? ஐரோப்பாவில் இருந்தது குடிபெயர்ந்தவர்கள் தானே! செவ்விந்தியர்களின் சுகந்திரத்தை குலைத்து ஓடவிரட்டி விட்டவர்கள் யானினும் உலகத்திற்கு ஒரு ஜனநாயகப் பாதையை வரைந்தவர்கள் என்பதை யாரும் மறுதலித்து விடமுடியாது. மனிதகுலத்திற்கு அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியே உள்ளார்கள்.
விதவிதமான மனிதர்கள் விசித்திரமாக புதியபுதிய மதங்கள் புதுமாதிரியாக எது இருந்தாலும் பெறுமதியாக்கக் கூடியதும் அமெரிக்கா என்ற நாடே!இன்னொரு பக்கத்தில் உனது அடிப்படைத் தேவைக்கு என்னால் ஒன்றும் செய்யமுடியாது ஏதாவது புதுமையாக இருந்தால் கொண்டுவா! என்பதும் அமெரிக்காவே!! முன்னூற்றி அறுபதுமில்லியன் மக்களும் எதிர்பையும் துவேஷத்தைப் பிரயோகிப்பது தவறானது. பணமுதலைக்கு சொந்தமானது இல்லை அமெரிக்கா. அமெரிக்க மக்களுக்கே அமெரிக்கா சொந்தமானது என மாற்றி எழுதுவார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் வரலாற்றின் விளிம்பிற்கே அவர்களை கொண்டு வந்திருக்கிறது.
Kulan
நன்மை தீமை இரண்டையும் சீர்தூக்கிப் பாக்கவேண்டியது முக்கியமானது. சந்திரன் ராஜா நீங்கள் சொன்னது சரியானதே. ஜனநாயகம் என்பதை முற்றிலும் எதிர்மறையாகப் புரிந்து கொண்டவர்கள் நாம். ஜனநாயகம் என்பது மனிதனுக்கும் மனிதத்தன்மை கொண்டவர்களுக்குமே. அதாவர் சிறுபான்மை இனங்களின் தேவைகளைச் சீர்தூக்கிப்பார்க்கும் ஜனநாயகம் எம்நாட்டில் இல்லை. அங்கு ஜனநாயகம் என்று பெரும்பான்மை சர்வாதிகாரமே அரங்கேறி வருகிறது. ஜனநாயக வழியில் சிறுபான்மையிரின் குரல்கள் கேட்பதற்கும் சாத்தியம் உண்டு. இருப்பினும் அமெரிக்காவின் வெளிவிவகாரங்கள் முதலாளித்துவத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. உபாமாவின் அரசியல் போக்கு இடதுசாரித்துவத் தன்மைகள் இளையோடுவது வரவேற்கத்தக்கதே.
valarnathy
ஜனநாயகம் என்று எதைக் கூறுகின்றீர்கள்? ஒரு இனத்தையே அழித்து இன்று அந்த இனத்தின் சுவடுகள் இன்றி செய்தமையையா? அங்குள்ள பிரசைகள் சாதாரண மனிதர்களை விட கேவலமாக நடத்தப்டபடுவதையா? யப்பான் மீது அணு குண்டு வீசப்பட்ட முன்னரே போர் முடிந்து விட்டது. பல்லாயிரக் கணக்கான உயிர்களை கொன்றொழித்தார்களே? அதையா? இன்று அதை விட மிக மோசமாக ஈராக்கில் கொலை செய்கிறார்கள். அதையா? யூனியன் காபைட் கொலைகள் போபாலில்…. என தொடரும் வன்முறைகளையா? அமெரிக்க அரசு இயந்திரத்தை தான் குறை கூறுகின்றோம். அங்கு வாழ் மக்களையல்ல.
குகபிரசாதம்
சந்திரிகா ஜனாதிபதியானதும் ஜேஆர் நாடு ஒரு பள்ளிக்கூடம் போகிற சிறுமியால் நிர்வகிக்கப்படுவதாக சந்திரிகாவின் அனுபவமின்மையை ஏளனம் செய்தார். சந்திரிகாவோ ஒரு “பகூபூத” அரசியலமைப்பு சட்டத்தை ஜேஆர் உருவாக்கி நாட்டை பாழாக்கி விட்டார் என்று குறைகூறினார்.
கத்தியால் மனிதர்களுக்கு பிரயோசனமாகவும் நிறைய செய்யலாம். மனிதர்களை பிணமும் ஆக்கலாம். கத்தியை பாவிப்பவனின் நோக்கத்தில் தான் அது தங்கியுள்ளதே தவிர கத்தியில் அல்ல. அந்த கத்தியை போலத்தான் இலங்கை அரசியல் அமைப்பு சட்டமும்.
ஜேஆர் தான் கொண்டுவந்த அரசியலமைப்பு மூலம் என்னவெல்லாம் செய்யலாம் எனக் கனவு கண்டாரோ அதையே மஹிந்த ஜனாதிபதியானதும் நடைமுறையில் செய்து காட்டுகிறார். ஜேஆர் கொண்டுவந்த அரசிலமைப்பையே வைத்து இன்று மஹிந்த யூஎன்பீயை தேர்தல்கள் மூலம் மக்களிடமிருந்து ஓரம்கட்டி வருகிறார்.
ஜனநாயக நாடுகளில் உள்ள எதிர்கட்சிகளுக்கெல்லாம் தேர்தல் என்றால் வெகு சந்தோசம். ஆனால் இலங்கையில் மட்டும்தான் மகிந்தவின் ஆட்சியில் தேர்தல் என்றால் எதிர்க் கட்சிகளுக்கு குலை நடுக்கம்.
இலங்கையின் அரசியல் வரலாற்றை பின்னோக்கி பார்பவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்.
கொழும்பை சேர்ந்த சில மிகப்பணக்கார குடும்பங்கள் அரசியலில் கொழும்பை சேர்ந்த ஆங்கிலம் பேசும் இடதுசாரிகளின் ஆதரவோடு கிராமப்புற மக்களின் வாழ்க்கையையோ அடிப்படை ஜனநாயகத்திலேயோ எள்ளளவும் அக்கறை இல்லாத உயர்மட்ட அரசஅதிகாரிகளின் ஆதரவோடு பாராளுமன்றத்தை பாவித்து இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டங்களை ஒவ்வொன்றாக நீக்கினர் டொனமூர், சோல்பரி ஆணைக் குழுக்கள் கூட கிராமப்புற மக்களும் சிறுபான்மை மக்களும் ஒதுக்கப்பட்டால் இலங்கையில் மோசமான நிகழ்வுகள் நடைபெறுவது தடுக்க முடியாது என்று அன்றே ஆரூடம் சொல்லியிருந்ததை நாம் மறக்க முடியாது.
இலங்கை சுதந்திரம் அடைந்த போது இலங்கையில் இரண்டு விதமான இலங்கையர் இருந்தனர்.
(1)கொழும்பை சேர்ந்த ஆங்கிலம் பேசும் மேற்கு நாட்டு கலாச்சாரத்தை விரும்பும் மேற்கு நாட்டவருக்கு வால் பிடிக்கும் இலங்கையர்.
(2)கிராமப் புறத்தில் வாழ்ந்த தமிழ் சிங்கள் முஸ்லீம் இலங்கையர்.
ஜேவீபியினரின் 1971 முதலாவது கிளர்ச்சியில் இருந்து இந்த அரசியல் அதிகாரம் குவிந்திருந்த குடும்பங்கள் எதையும் கற்று கொள்ளவில்லை.
இலங்கை சுதந்திரம் அடைந்த போது இருந்த அரசியல்யாப்பில் இலங்கையர் அனைவரும் சந்தோஷமாக வாழவும் பொருளாதார ரீதியில் முன்னேறவும் எதுவாக அனைத்து சட்டமுறைகளும் உரிமைகளும் இருந்தன. அரசியல்யாப்பில் 29(2) சரத்து பாராளுமன்றம் மக்களின் சுதந்திரங்களை பறிக்க முடியாதவாறு இருந்தது..1947 இந்தியாவும் 1971 மலேசியாவும் கொண்டு வந்த இதையொத்த சட்டங்கள் மூலம்தான் இன்றுவரை பின்தங்கிய கிராமப்புற மக்களை ஓரளவேனும் பாதுகாக்க கூடியதாக இருந்துவருகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்த முதல் இந்த சட்டங்கள் ஓவ்வொன்றாக மாற்றப்பட்டு வந்தன. சிறிமாவோ கொண்டு வந்த இலங்கை குடியரசுக்கான அரசியல்யாப்பில் நிறைய தவறுகள் இருந்தன. ஜேஆர் கொண்டுவந்த அரசியல்யாப்பு மிகவும் மோசமானது. பிரதேச ரீதியான ஜனநாய உரிமைகளும் அதிகார பகிர்வுகளும் ஜேஆர்இனால் இல்லாமல் ஒழிக்கப்பட்டன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற பதவி நாட்டை ஆழ உருவாக்கப்பட்டது
தங்கள் பதவிகளையும் தங்கள சார்ந்தவர்களின் நலனையும் காப்பாற்ற எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் பிறகு அவர்களுக்கெதிராகவே வருமென ஆட்சியில் அதிகார மாயையில் இருப்பவர்களுக்கு புரிவதில்லை.
ஜேஆர், சிறிமாவோ, லலித், காமினி, அனுரா, பிரேமதாசா, சந்திரிகா, ரணில் போன்ற கொழும்பு வாழ்வில் ஊறிய அரசியல் தலைமைகளுக்கு தென்இலங்கையிலிருந்து கிராமத்துகாரன் ஜனாதிபதியாக வரலாம் வந்தால் என்னவெல்லாம் செய்வான் என்று என்றுமே எண்ணியது கிடையாது.
ஆட்சிக்கு வந்த மஹிந்த இதே ஜே ஆரின் அரசியல் அமைப்பு சட்டங்களை பயன்படுத்தி யூஎன்பீ, ஜேவீபீ போன்றவற்றை தேர்தல்கள் மூலம் ஓரங்கட்டியதோடு முப்பதுவருடமாக புரையோடிப் போயிருந்த பயங்கரவாதம் என்ற “பிச்சைக்காரன் புண்ணை”யும் சுகப்படுத்தி உள்ளார். .
யூஎன்பீ ஜேஆர் கொண்டு வந்த அரசியல்யாப்பை இத்தனை வருடமும் எதிர்க்காத ஜேவீபீயினரும் யூஎன்பியினரும் இன்று எதிர்க்க முயல்வது அவர்களின் அரசியல் வங்குரோத்துதனத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுகின்றன.
வரப்போகும் தேர்தலில் தங்கள் பதவிக்காகவும் நலனுக்காகவும் நாட்டை சீரழித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
குகபிரசாதம்
அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கு முன்னரே 1973இல அனுராதபுரம் சிறையில் இருந்து தப்பிய செட்டி பூநகரியில் வைத்து கண்ணாடியை கொலை செய்ததுதான் முதன்முதலாக நடந்த உட்கட்சி கொலையாகும்.
புலிகளின் முதாலாவது உத்தியோக நோட்டீஸ் அமிர்தலிங்கத்தின் பாராளுமன்ற அலுவலக தட்டச்சு இயந்திரத்தில் ஊர்மிளாவால் உருவாக்கப்பட்டது. இது பஸ்தியாம்பிள்ளையின் கொலையை அடுத்து 9 தமிழ்பொலிசாரின் கொலையையும் பொலிசுக்கு தகவல் வழங்கியதின் பேரில் கொல்லப்பட்ட தமிழரின் கொலைக்கும் உரிமைகோரி வெளியிடப்பட்டது.
அமிர்தலிங்கமோ இது பொய் இப்படி ஒருத்தரும் புலி என்று உண்மையில் இல்லை என உடன் பேட்டி கொடுத்தார்
Kulan
ஜேஆர் கொண்டுவந்த அரசியல் அமைப்புச்சட்டத்தை சரியாகப் பயன்படுத்தியது மகிந்த என்றாலும் எனக்கு ஜேஆர் கொண்டவந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் சந்தேகமே இருந்தது. ஒரு தனிமனிதனுக்கு அபரீதமான அதிகாரம் என்பது சரியான ஜனநாயக முறைக்கு எதிரானதே. மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும் உண்மையில் பிறசிடன் சிஸ்டம் (ஜனாதிபதி முறைமை) சரியான நேர்மையான ஜனநாயகம் எனப்படவில்லை. இப்பதவி அதிகாரத்தை வைத்து இனவழிப்பைச் செய்வதும். மற்றக்கட்சிகளை ஓரங்கட்டச் செய்வதும் என தான் நினைத்தபடி அதிகாரங்களை கையில் எழுப்பதும் ஒரு சகசமானதாக அமைகிறது. முக்கியமாக ஜனநாயகம் என்பது செக் அன்ட் பலன்ஸ் (check and balance) ஆக இருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் கத்திதானே அரசியல். சிறீமாவின் பிரஜா உரிமையை பறிக்கும் அளவிற்கு அதிகாரம் கொண்டதாவல்வா அந்தக் கொடுங்கத்தி இருந்தது.
Kulan
//அல்பிரட் துரையப்பாவின் கொலைக்கு முன்னரே 1973இல அனுராதபுரம் சிறையில் இருந்து தப்பிய செட்டி பூநகரியில் வைத்து கண்ணாடியை கொலை செய்ததுதான் முதன்முதலாக நடந்த உட்கட்சி கொலையாகும்//
செட்டி எக்கட்சியைச் சேர்ந்தவர்? கண்ணாடியை ஏன் கொலை செய்யவேண்டும்? இந்தச் செட்டிதான் சுதுமலை பற்குணமா? தயவுசெய்து பதில் தருவீர்களா? அமிர்தலிங்கம் கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடித்தவரா.
BC
குகபிரசாதம் வரலாற்று பொக்கிசத்தையே வைத்திருக்கிறார். அவற்றில் இருந்து விடயங்களை அறிய நானும் ஆவலாக உள்ளேன்.
குலன் சுதுமலை பற்குணம் வேறு கள்ளியங்காடு செட்டி வேறு ஆனால் இருவருக்கும் களவு தான் தொழில் என அறிந்தேன்.
Kusumbo
பற்குணம் சிறுவயதிலேயே துப்பாக்கி தூக்கியவர். இவரைக் கொன்று தாட்டது பிரபாகரன் என்பது புளொட் பிரிந்து வந்தபின்பு தான் அறிவித்திருந்தார்கள். புலிகள் என்றும் தமக்குப் பிடிக்காதவர்களைப் போடுவதற்கு பயன்படுத்தும் சொற்கள் துரோகிகள்; கள்வர்; கற்பழித்தார்கள் என்பதே. அதற்காக மற்றைய இயக்கங்கள் திறம் என்று ஆகாது.
chandran.raja
கண்ணாடி பத்மநாதனை தடியால் அடித்து கொன்றது கல்வியங்காட்டை சேர்ந்த செட்டி இது கேரதீவுப்பகுதியில் நடந்ததாக சொல்லுகிறார்கள். ஆரம்பகால இயக்கமான ரெலோவில் இவர்கள் உதவியாளர்களாக இருந்தார்கள். ஓரளவு தங்கத்துரை தவிர யாரும் அரசியல் விளங்கியவர்களாக இருக்கவில்லை. ஏதாவது ஒருவகையில் சிங்கள அரசை பழிதீர்க்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தார்கள்.
குட்டிமணி ஊர் சண்டியன். கடைசி வரைக்கும் தங்கத்துரைக்கு கட்டுப்பட்டவனாக இருந்தான். மற்றவர்கள் எல்லோரும் சைக்கிள் களவில் இருந்து வங்கிக்கொள்ளை வரை ஈடுபட்டவர்களே. கண்ணாடி பத்மநாதனை ஆரம்பகாலத்தில் தங்கத்துரை ஆலோசகராகவும் திட்டம் தீட்டுபவராகவும் கருதியிருந்தார். கண்ணாடி பத்மநாதன் செட்டியால் தான் கொலை செயப்பட்டார் என்பதை அறிந்ததும். கல்வியங்காட்டு சந்தையில் தனது ஒருமாத குழந்தையின் துடக்கு கழிவிற்காக மரக்கறி வாங்கிக்கொண்டு நின்ற செட்டியை ஓலைப்பையுடன் வந்த குட்டிமணி கதைப்பதாக முன்ஒழுங்கையில் கூட்டிச்சென்று வெடிவைத்தார். இந்த சம்பவத்திற்கு குட்டிமணி எந்த வாகனத்தையும் பாவிக்கவில்லை வல்வெட்டித்துறையில் இருந்து பஸ் வந்து பஸ்சில் போனதாகத்தான் சொல்லுகிறார்கள்.செட்டி இறந்தபின் பொலீஸ்சாரின் தேடுதலில் கிணத்தடியில் உள்ள சலவைக்கல்லுக்கு கீழ் பல தாலிக்கொடிகள் கண்டெடுக்கப் பட்டதாகச் சொல்லுகிறார்கள். பத்மநாதனின் கொலைக்கு பிறகு உரும்பிராய் கல்வியங்காடுதான் தேசியத்தலைவரின் மறைவிடங்களாக இருந்தது. தங்கத்துரை குடிமணியை விட பெரும் விசுவாசத்தை செட்டியில் வைத்திருந்தார் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
BC
//சந்திரன் ராஜா- தங்கத்துரை குட்டிமணியை விட பெரும் விசுவாசத்தை செட்டியில் வைத்திருந்தார் வேலுப்பிள்ளை பிரபாகரன்.//
அந்த காலகட்டத்தில் தான் செட்டியின் தொழில் (களவு)ரீதியான பங்காளியான சுதுமலை பற்குணம் பிரபாகரனுக்கு அறிமுகமானார்.செட்டி- பிரபாகரனுக்கு பிரிவு தொடங்கியபோது பற்குணம் செட்டியை கட்பண்ணி விட்டார். அப்போது இயக்கத்தில் ஆர்வமாக இருந்த இளஞர்கள் செட்டி, பற்குணம் பற்றி மற்றவர்களுக்கு கூறும் போது “மனம் திருந்திய சமூகவிரோதிகள்“ என்பார்களாம் .
Kusumbo
சந்திரன் ராசா பிசி போன்றோரால் பல பழைய உண்மைகள் வெளிவந்துள்ளன. இனியாவது உண்மைகள் வரட்டுமே.
palli
குலன் இது உள் கட்ச்சி கொலையல்ல; பத்மநாதன் மிக நிதானமான தொழில்நுட்ப்பவாதி, இவரை தங்கதுரை இனம்கண்டு தமக்கு சாதகமாக பிரயோசனபடுத்தியதாக சொல்லுகிறார்கள், கண்ணாடி கொடிகாமத்தை சேர்ந்தவர், இலங்கை வானொலியை சில நிமிடங்கள் தனது திறமையால் நிறுத்தினாராம் இதுவும் உன்மைதான் என பல நண்பர்கள் சொன்னார்கள்,
ஆனால் செட்டி மிக கொடூரமான கொள்ளைகாரன் மட்டுமல்ல ரவுடியும் கூட, ஆனால் அது பற்றி இங்கு பிரச்சனையல்ல, கண்ணாடியிடம் ஒரு குணம் உண்டாம். கணக்குவழக்கில் கண்டிப்பானவராம்; அதனால் தான் செட்டியுடன் சிறை முடிந்து வரும்போது கண்ணாடி சில கணக்குகளை கேட்டாராம்; கணக்கே தெரியாத செட்டியால் அவரை கொலை செய்வதை தவிர வேறுவிதமான முடிவுகள் தோன்றவில்லை; இதில் வேடிக்கை இந்த செட்டி பிரபாவிம் வித்தகரான செல்லகிளியின் அண்ணன்; செல்லகிளி புலி, செட்டி ரெலோவின் அடியாள்; ஆக ரெலோவுக்கும் புலிக்கும் செட்டியின் வீட்டிலேயே கசமுசா ஆரம்பித்து விட்டது பலருக்கு தேசமூலம்தான் தெரிய போகுது,
ஏன் தம்பி செல்லகிளியை தின்னவேலியில் கம்பத்தில் ஏறியதுகூட சிலவேளை ரத்த பாசம் தனக்கு எதிராக திரும்பி விடுமா என பயத்தில்தான் என பல்லி சொன்னால் ராகவன் மறுக்கவா முடியும்; புதையல் தேடி தொடருவோம்;
palli
குலன் உலக தமிழர் பலருக்கு பல உன்மைகள் தெரிவதால் இதுகூட உலகமயமாக்குதல்தான், ஆகவே தாங்கள் உங்கள் கட்டுரை திசை மாறி போகிறது என கவலை வேண்டாம், குலன் பல்லியின் பலன்படி பல இன்றய இயக்க தலமைகளுக்குகூட தெரியாத உன்மைகளை எமது பின்னோட்ட நபர்கள் தருவது உன்மைகள் தூக்கத்தில் இருந்து எழுகின்றன என்பதுக்கு ஒரு எடுத்து காட்டே, இவை மட்டுமல்ல பல அமைப்புகளின் பெயர்களை நான் சுட்டிகாட்டினேன், அவையும் பலருக்கு தெரியும், அவையும் இதே தேசத்தில் வரும்; அங்கேயும் பல்லியும் ஊரும்;
Kulan
பல்லி பழையதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள். செட்டி பற்றிக் கதை சிலவேளைகளில் என்காதுகளில் விழுந்தன. கேப்பை மாட்டை பிடித்துக் கொண்டுபோய் களவாகவிற்று துவக்கு வாங்கியர்கள் இவர்களா? நீங்கள் சொல்வது போல் மறைவிலுள்ள உண்மைகள் சபைக்குத் துணிகரமாக வருவது ஒருவகையில் உலகமயமாதல் தான். இனி தேசத்தினூடாக இவை உலகமயமாகுமே.
குகபிரசாதம்
1971 ஆண்டு இந்திய உபகண்டத்தில் நடந்த இரு நிகழ்வுகள்தான் நாங்களும் தனி ஈழம் இலகுவாக அடையலாம் என அன்றைய தமிழ் வாலிபரை எண்ண வைத்தது.
(1)1971 ஆண்டு இந்தோ பாகிஸ்தான் யுத்தத்தின் இறுதியில் பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவாகியது.
(2)1971 ஆண்டு வெறும் வெடி குண்டுகள் மூலம் ஜேவீபீயினர் தென்இலங்கையையும் கொழும்பு அரசையும் ஒரு கலக்கு கலக்கியது.
1971ல் சிறிமாவோ D.M.K திராவிட முன்னேற்ற கழகத்தின் செயற்பாடுகளை இலங்கையில் தடைசெய்ததை நாங்கள் மறக்கமுடியாது
செல்லகிளி பஸ்தியாம்பிள்ளையின் மெசின்கண்ணை பறித்து சுட்டிருக்காவிடில் இந்த இயக்க விளையாட்டெல்லாம் முளையிலேயே கிள்ளப்பட்டிருக்கும். செள்ளகிளியை தின்னவேலியில் பிரபா போட்டதுக்கு காரணம் சீலனை மீசாலையில் செல்லகிளி கொன்றதுக்கு சொன்ன கதையை பிரபா நம்பாததுதான்.
Kusumbo
//செல்லகிளி பஸ்தியாம்பிள்ளையின் மெசின்கண்ணை பறித்து சுட்டிருக்காவிடில்// இது எங்கே எப்போ நடந்தது. செல்லக்கிளி களத்தில் சாகவில்லை அவரை சாரத்துடன் காரில் கொண்டு திரிந்தார்கள். அவரைக் காப்பாற்றக் கூடிய நிலைமை இருந்ததாம்
palli
தேசத்தில் ஆரம்பத்தில் ரதன், ரகு, சாமி; நெருப்பு, அரிசந்திரன், இவர்களுடன் தேச நிர்வாகிகள் இன்னும் சிலர் கடந்தகால வரலாறு (அப்படிதானே சொல்லுவினம்)அதில் செட்டி கொலை செய்யபட முன்பே செல்லகிளிக்கு தெரியும் என சொன்னார்கள், அதேபோல் செல்லகிளி கமபத்தில் வயர் கொடுக்க சென்றே இறந்ததா சொன்னார்கள், இதில் குட்டிமணி செட்டியை போட்டுதள்ளியதாய் சொல்வது சரியானதா?
குட்டிமணி ஒரு ஓட்டி என்பதாய்தான் நான் கேள்விபட்டேன், ஏன் அவர் குடும்பம் வஸ்த்தியாம் பிள்ளையால் அசிங்கபடுத்த படும்வரை அவர் இயக்கத்தில் ஒரு உதவியாளராகதான் இருந்தாராம், இதில் குட்டிமணீ எம்ஜிஆர் ரசிகர் அவருடன் என்னும் பல ரசிகர் அவருடன் இருப்பார்களாம், அவருடன் இந்தியாவில் சாலி கிராமத்தில் அவரது உறவுகளுடன் பேசும்போது அவர் மிகமோசமான ஒருவர் இல்லைபோல் உள்ளது, இருந்தாலும் பலரது தரவுகளே சிலரது உன்மை முகங்களை கட்டட்டும், செட்டி உயிருடன் இருந்திருந்தால் டெலோவுக்கு என்னொருதாஸாக இருந்திருப்பார் என நினைக்கிறேன், அப்படி இருந்திருந்தால் புலி டெலோவை அழிக்க சிரமபட்டிருக்கும் என நினைக்கிறேன்; சீலன் மீசாலையில் கொல்லபட்டதுக்கு மீசாலையை சேர்ந்த ஒரு பொலிசார் கேடியால்(புலி) தலை வெட்டபட்ட சம்பவம் அன்று பிரபல்யம்;
santhanam
கொலை செய்யபட்ட செள்ளக்கிளியை நீர்வேலி கண்ணாடி தொலிற்சாலைக்கு பின்தான் புதைத்தார்கள் இதை கிட்டு நீர்வேலியில் ரெலோவை துவம்சம் செய்துவிட்டு மக்கள் முன் சொன்னவர்.
chandran.raja
இது நடந்தது அடம்பன் காட்டுப் பகுதியில் அதாவது ஒரு ஆசிரியருக்கு சொந்த ஐம்பது ஏக்கர் வயல்காணி பராமரிப்பில்லாமல் காடுபட்டு போய் இருந்தது. அதை தான் தமது ஆரம்ப பயிற்சிக் களமாப் பாவித்தார்கள்.
அக்காலத்தில் எந்தவித தொலைத் தொடர்பு சாதனமும் இருக்கவில்லை. வஸ்தியாம் பிள்ளையின் காரில்மட்டும் வயிலஸ் தொடர்பு இருந்தது. பஸ்தியாம்பிள்ளை போன நேரம் சாப்பாட்டுநேரம் பன்னிரெண்டு மணியல்ல. அதில் யாரோ ஒருவர் “அமைதியாய் இருப்பம் என்று இங்கை வந்தால் இங்கையும் வந்து விட்டியள்” சரி சரி சாப்பிடுங்கோ சாப்பிட்டு வாங்கோ என்றிருக்கிறார். அந்த நேரத்தில் உண்மையிலே தண்ணீர் முடிந்துவிட்டது. தண்ணீர் எடுக்க பஸ்தியாம்பிள்ளை தோண்டல் கிணற்றடிக்கு வந்த ஒரு பொலீசையும் அனுப்பியிருக்கிறார். பாணை போட்டுவிட்டு பொலீஸ் பிடித்துக் கொண்டு இழுபறிபட்டு கிணற்றுக்குள் விழ இங்கை எல்லாம் கப்சிப். வீரம் அங்கே தான் விளைந்தது. யாரும் இதை கேட்டு பூரிப்படையாதவர் இருக்கமுடியாது. நான் உட்பட. அந்த வீரம் இவ்வளவு விபரீதங்களையும் ஏற்படுத்துமாக இருந்தால் அந்த வீரம்தான் எதற்கு? பிரபாகரனும் அங்குதான் இருந்திருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில் கடைத்தெருவுக்கு வந்துவிட்டார்.
வழியில் பஸ்தியாம்பிள்ளை காரைக் கண்டிருக்கிறார். செய்தி குடுக்க வழியில்லை. பஸ்தியாம்பிள்ளையின் எரியூட்டபட்ட பென்ஸ் கார் கிளிநொச்சி
பொலீஸ் நிலையத்தில் கொண்டுவந்து விடப்பட்டதை நான் கண்டேன்.
குகபிரசாதம்
பஸ்தியாம்பிள்ளை போன கார் பேஜோ 404.
kosombo
நானறிந்தவரை குட்டிமணி நல்ல ஓட்டிமட்டுமல்ல நல்ல விசுவாசி என்றும். அடிக்கடி துவக்கு வைத்திருப்பார் என்றும் அறிந்தேன். இவருடன் சிறையில் இருந்தவர்களின் தகவல்படி இவர் பஸ்தியாம் பின்ளையைக் கண்டதுமே கூயோ மாயோ என்று கத்தத் தொடங்குவாராம் அரியண்டம் தாங்காமல் உவனை அங்காலை கொண்டு போங்கோ என்று பஸ்தியாம்பிள்ளை கூற இவரை அவ்வரிசையில் இருந்து அப்புறப் படுத்துவார்களாம். இப்படி அடிஉதை சித்திரவதைகளில் இருந்து தப்புவதற்கு குட்டிமணி செய்யும் தந்திரங்களைச் சொல்லிச் சிரித்தார்கள்.
குகபிரசாதம்
கதிர்காமபிள்ளை நல்லைநாதன் (உமா, முகுந்தன்) , செல்லப்பா நாகராஜா, இருவரும் மரத்தில் மேல் சென்றிக்கு நின்றவர்கள். சதாசிவம் செல்வநாயகம்(செல்லகிளி)தான் மிசின்கண்ணை டக்கென்று எடுத்து திடீர் தாக்குகள் செய்தவர். இன்ஸ்பெக்டர் பேரம்பலம் கிணத்தடியில் வைத்து கொல்லப்பட்டார் கார் சாரதி தப்பி ஓடும்போது தெருவில் வைத்து கொல்லப்பட்டார்.
பஸ்தியாம்பிள்ளை எதுவித துப்பும்மிலாமல் அந்த இடத்துக்கு வந்தே இருக்க முடியாது என்பது அந்த பிரதேசத்தை நன்கு தெரிந்தவர்கள் தெளிவாக புரிவார்கள். பிரபாகரன் பஸ்தியாம்பிள்ளை வர முன்னரே அன்று காலை வெளியில் போய் விட்டார்.
இதே மாதிரி தங்கதுரை குட்டிமணி தேவன் ஆகியோருக்கு மணல்காட்டில் இந்த இடத்தில் இத்தனை மணிக்கு காத்திருங்கள் இந்தியா போக வள்ளத்துடன் வாறன் என்று சொன்ன பிரபாகரன் வள்ளமும் அனுப்பவில்லை தானும் வரவில்லை போலீஸ்தான் கால்நடையாக வந்து மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அநியாயம் செய்தவர்கள் எல்லாம் எம் கண் முன்னே அவலமாக செத்ததை காண்கிறோம்
குறிப்பு: செட்டியும் பிரபாகரனும் தெல்லிபளை யூனியனில் 91,000ரூபா கொள்ளையிட்டத்தை இங்கு நாம் மறந்து விடலாகாது
சதாசிவம் தனபாலசிங்கத்தை (செட்டி) கொலை செய்ய குட்டிமணியும் பிரபாகரனும் பஸ்ஸில் வந்து செட்டி ரிவோவரை எடுக்க முதல் சட்டென்று வெடிவைத்தனர்.
kosombo
சந்தானம்- புலிகள் வளமையில் எரிப்பார்கள் ஏன் செல்லக்கிளியைப் புதைத்தார்கள்?
சந்திரன் ராஜா குகப்பிரசம் நீங்கள் இருவரும் இவ்வளவு செய்திகளை வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் ஏன் நீங்கள் உங்களுக்குத் தெரிந்தவற்றை கட்டரையாக்கக் கூடாது. சந்திரன் ராஜா உங்களுக்கு வீபூதிப்பூச்சைத் தெரியுமா? பஸ்தியாம்பிள்ளை கொலைமுடிந்து யாழ்பாணம் வரும்போது புதிய புலிகள் என நோட்டீஸ் அடித்து ஒட்டியிருந்தார்கள். இதுயார் செய்தது? தெரியுமா?
Kusumbo
குகப்பிரகாசம்! பஸ்தியாம்பிள்ளையை சர்வசாதாரணமாகச் சந்திக்க இயலாது. அவரை தகவல் கொடுத்தே அழைக்கப்பட்டார். அன்று சொட்கண்கள் பல தயாராக இருந்தது. பிரகாகரன் பொலிசுக்குத் தகவல் கொடுப்பதில் மிகவல்லவர் என்று யாருக்காவது தெரியுமா? புளொட்டின் ஆயுதங்கள் கிளிநொச்சிப்பணத்தில் வந்து இறங்கியபோது இந்திய இலங்கை பொலிசுக்கு தகவல் கொடுத்தது யாரென்று தெரியுமா? தான் தலைவனாவதற்கு தம்பி செய்த சூழ்ச்சிகள் தெரியுமா? இன்றும் நாகராஜா உயிருடன் இருப்பதாகத்தான் அறிகிறேன். உண்மை பொய் தெரியாது.
குகபிரசாதம்
செல்லகிளிக்கு கரண்டு ஒன்றும் அடிக்கவில்லை துப்பாக்கி சன்னம் பாய்ந்து புண் ஏற்பாக்கி செத்து போனவர்.
குகபிரசாதம்
வங்கி கொள்ளைக்கு உதவியவர் என்பதால் பொலிசாரினால் கைதாகி இயக்கத்துக்கு வந்த முன்னாள் ஈரோஸ் பின்னாள் புலி பாலகுமாரை சுதந்திர மனிதனாக நடமாட இலங்கை அரசு அனுமதித்திருப்பது பாலாவினால் இனி எதுவும் ஆகாது என்ற பலத்த நம்பிக்கையின் பேரில் போலும் அல்லது பாலகுமார் ஒரு செல்லாக்காசு என்று கண்டு படித்ததால் போலும்.
Kusumbo
//செல்லகிளிக்கு கரண்டு ஒன்றும் அடிக்கவில்லை துப்பாக்கி சன்னம் பாய்ந்து புண் ஏற்பாக்கி செத்து போனவர்// குறுக்குச் சுடுபாட்டில் சன்னம் பட்டது என்பது உண்மைதான். ஏற்பாக்கிச் செத்தார் என்றால் 83தாக்குதலின் பின் பலநாட்கள் உயிருடன் இருந்திருக்க வேண்டுமே. அதுவரையும் ஏன் செல்லக்கிளியை என்ன செய்தார்கள். ஏன் ஊரில் வைத்திருந்தார்கள். சென்றல் நேசிங் கோமில் வேலை செய்தபல டாக்டர்கள் தாதிகள் அப்போது பிரபாகரனுக்குப் பழக்கமாகவும் அவ்வீடுகளில் உண்டும் உறங்கியும் இருக்கிறாரே. ஏன் செல்லக்கிளிக்கு உடனடிச் சிகிட்சை கொடுக்கவில்லை. செல்லக்கிளி பற்றிக் கேட்ட போது அவர் உடனடியாக இறந்து விட்டதாகத்தானே பதில் கொன்னார்கள். பிரபாகரனின் பேட்டிகளில் சத்தியநாதன் எடுக்கும் இடத்தை செல்லக்கிளி எடுத்ததில்லை ஏன் என்று தெரியுமா?
Kulan
அருமையான விடயம் தான் மறைக்கப்பட்ட ஒழிக்கப்பட்ட விடயங்கள் பல்லி சொன்னது போல் உலகமயமாகிறது துரையப்பாவில் இருந்த பஸ்தியாம்பிள்ளையாகி செல்லக்கிளிவரை வந்துள்ளது. இவை சமூகத்திற்கு வெளிக்கெணரப்பட வேண்டியவையே. பல இளம்பராயத்துப் புலம் பெயர்ந்தவர்களுக்கு இவைபற்றி எதுவும் தெரியாதல்லவா. தொடருங்கள்.
santhanam
//மீசாலையை சேர்ந்த ஒரு பொலிசார் கேடியால்(புலி) தலை வெட்டபட்ட சம்பவம் அன்று பிரபல்யம்//அண்மையில் இந்த கொலை சம்பந்தமாக சாவகச்சேரியில் வேலைசெய்த பொலிசார் ஒருவருடன் கதைத்தபோது கழுத்தறுக்கப்பட்ட பொலிசாருக்கும் சீலனின் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று அழுத்தமாக சொன்னார் அது இராணுவமும் அவர்களது உளவுக்கும் உள்ள தொடர்பு பொலிசாரிற்கு சம்பந்தமே இல்லையென்று மற்றது அவர் ஒரு சாதுவானவர் என்றும் பிழையான தகவலும் புனைகதையும் தான் அவரை கேடி கொலை செய்யகாரணம் இப்படி எவ்வளவு தமிழர்.
palli
குலன் நீங்கள் இதுவரை ஏழு கட்டுரை எழுதியுள்ளீர்கள்; அத்தனையிலும் பல்லியும் பின்னோட்டம் விட்டேனா தெரியவில்லை; ஆனால் உங்கள் கட்டுரையில் வரிசையாக 61;33;32;28;21:41:129 இப்படிதான் பின்னோட்ட தொகை கூடியுள்ளது ஆனால் இறுதியாக தாங்கள் தொடுத்த உலகமாக்குதலில் பல உலக தமிழருக்கு பல உன்மைகள் தெரியவருகிறது; அதனால் இது இத்துடன் நிற்க்க போவதில்லை தொடரும் தொலைந்து போன மர்மங்கள்; ஆனால் இப்படியான அருவருப்பான சம்பவங்களில் சம்பந்தபட்டவர்கள் தலித்தியம், பெண்ணியம், பொருளாதாரம்; பொன்னாடை, தண்ணியம் இப்படி தங்களை முகமூடி போட்டு மறைப்பது மட்டுமல்லாமல் இடைக்கிடை சிலரை புலிசாயலில் மிரட்டவும் முனைகின்றனர், அவர்கள் சந்திக்கு வரவும் இதே கட்டுரையில் பல்லி புள்ளி வைக்கிறேன், குலன் பாராட்டுக்கள் ஜதார்த்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை
கட்டுரையாக தாருங்கள் போராடவோ அல்லது சதிராடவோ புறப்பட்ட நாயகர்கள் யார் என்பது எமது மக்கள் அறியவேண்டும், பிரபாகரனே போராட பிறந்தவர் என்னும் மாயை விலக வேண்டும்; பல்லியை பொறுத்த மட்டில் ஈழ போராட்டத்தில் அன்றே விலக்கபட வேண்டியவர்தான் பிரபாகரன்; இவர்தானே ஒப்றாய் தேவனையும் போட்டு தள்ளியது ஏன் சொல்லுங்க சந்திரா ;
palli
சுந்தரத்தை கொலை செய்தவர் யார்? இறைகுமரன் உமாகுமரன் கொலை யார்? பாண்டி பஜாரில் என்னதான் நடந்தது? யார் சுட்டது? யார் மோட்டாரை ஓட்டியது? சொல்லுங்கப்பா? மாயா உங்களுக்கு கண்டிப்பாக இது தெரிய வேண்டுமே? சுழிபுரத்தில் ஆறு வாலிபர் கொல்லபட்டு மணலில் புதைக்கபட்டனர் கேள்விபட்டோம்; இது யாரால்? எதுக்காக? அவர்கள் யார்?? அத்துடன் முதல் பெண்போராளி ஊர்மளாவுக்கு என்னதான் நடந்தது? தெரியவில்லையா? தெரிந்து கொள்ளுங்கள் இவரை கேட்டு; பேராசிரியை அவரேதான், குடும்பத்துக்குள் பல ரகசியம் உள்ளது யாராவது கேட்டு சொல்லுங்கப்பா;;
சாந்தன்
‘….அண்மையில் இந்த கொலை சம்பந்தமாக சாவகச்சேரியில் வேலைசெய்த பொலிசார் ஒருவருடன் கதைத்தபோது கழுத்தறுக்கப்பட்ட பொலிசாருக்கும் சீலனின் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று அழுத்தமாக சொன்னார் …..’
ஆனால் அன்று புலிகள் சாட்சியத்துடன் நோட்டீஸ் வெளியிட்டனர்.
சாவகச்சேரியில் இருக்கும் ஒரு தபால்பெட்டியை உடைத்து அங்கிருந்து அந்த பொலிஸ்காரர் சீலனை காட்டிக்கொடுத்ததற்கு தனக்குரிய பதவி உயர்வோ அன்றி சன்மானமோ வழங்கப்படவில்லை என குறைப்பட்டு அரசுக்கு எழுதிய கடிதமே அச்சாட்சியம்!
Kulan
நன்றி பல்லி இக்கட்டுரையை விடப் பின்நோட்டங்கள் மக்களுக்கு தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. வரலாற்றை அறிய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இங்கே வந்த பின்நோட்டங்களை தொகுத்து மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்கள் எனும் பொழுது பின்நோட்டங்களின் கருத்தும் பலமும் முக்கியமாகிறது அல்லவா. உங்களது கோரிக்கைப்படி என்னால் இயன்றவரை என்சிற்றறிவுக்கு எட்டியவரை நல்ல கட்டுரைகளைத் தரமுயல்கிறேன்.
மாயா
//பஜாரில் என்னதான் நடந்தது? யார் சுட்டது? மாயா உங்களுக்கு கண்டிப்பாக இது தெரிய வேண்டுமே? சுழிபுரத்தில் ஆறு வாலிபர் கொல்லபட்டு மணலில் புதைக்கபட்டனர் கேள்விபட்டோம்; இது யாரால்? எதுக்காக? அவர்கள் யார்?? – palli on November 5, 2009 10:40 pm //
பல்லி கேட்பது, பாண்டி பஜார் சூடு குறித்து என நினைக்கிறேன். ஏன் சுட்டுக் கொண்டார்கள் என்பது தெரியாது. அது ஏன் என உமா கூட சொல்லவில்லை. அது குறித்து ஒரு முறை நான் கேட்ட போது சிரித்து விட்டு இருந்து விட்டார். அதன் பின்னர் புளொட் படைத்துறைச் செயலர் கண்ணன் கடத்தப்பட்டு மீட்கப்பட்டார். கண்ணன் மீட்கப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், எனக்கு மலேசியாவில் இருந்து எனது உறவினரால் அனுப்பப்பட்ட ஒரு பார்சலை வாங்க அடையாறில் உள்ள ஒரு இடத்துக்கு போன போது, அது புலிகளது காரியாலயமாக இருந்தது. உள்ளே போகும் வரை எனக்கோ, என்னோடு சேர்ந்து சென்றவருக்கோ தெரிந்திருக்கவில்லை. நாங்கள் சென்ற புளட் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே போன போதுதான், அது புலிகளது இடம் என உணர முடிந்தது. என்னோடு போனவர் “அண்ண , தப்பான இடத்துக்குள்ள வந்திட்டம்” என்றதும் , “சும்மா இரு” என்று சொல்லி விட்டு என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டபோது “உங்கட அக்கா இதை உங்களிட்ட கொடுக்கச் சொல்லித் தந்தவ” என என்னிடம் தந்து விட்டு பார்சலை தந்தவர் “தேத்தண்ணி ஏதாவது குடிக்கிறீங்களே?” என்றார். “இல்லை. போக வேணும்” என வெளியேறி விட்டோம்.
நான் இதை அக்காவிடம் சொன்ன போது “நீயும் புலியிலதானே இருக்கிறாய். நான் பார்சலை கொடுக்கும் போது, உன்னைப் பற்றி சொல்லித்தான் கொடுத்தன். பிரச்சனையில்லை என்றுதான் வாங்கிக் கொண்டு போனாங்கள். அவர்களுக்கு பல உதவிகள் செய்யிறன்.நீ அவங்களோடு இல்லையா?” என்று கேட்டாள். அதன் பின்னரே நான் பிரச்சனையை தெளிவுபடுத்தினேன். அதன் பின்னரும் அவள் அவர்களுக்கு உதவினாள். நான் தடுக்கவில்லை. இதனால் நான் புளொட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஒருமுறை பிரபாகரனை சந்திக்க வேண்டி வந்தது. புலிகளில் இணைந்து வேலை செய்ய விருப்பமா? என்று கேட்டார். இல்லை. நான் இனி ஒதுங்கியே இருக்கப் போறன் என்றேன். அதற்கான காரணத்தையும் சொன்னேன். உங்கட கருத்து சரி என்றார். எனக்கு அதனால் சென்னையில் இருந்த போது புலிகளால் பிரச்சனை வரவில்லை. புலத்தில் புலிகள் என்னை எதிரியாக பார்த்ததுண்டு. நடந்து கொண்டதும் உண்டு. ஆனால் பிரபாகரனுக்கு என்னைத் தெரியும் என்பதை சமாதான காலத்தில் வந்தவர்களால் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போது சற்று அடக்கிக் கொண்டனர். அப்போதும் என்னை வன்னிக்கு வந்து விட்டு போகுமாறு அழைப்பு விடுத்திருந்தார் பிரபாகரன். அது புலத்தில் உள்ள புலிகளுக்கு தெரியும். அப்போதும் நான் ” இல்லை வரும் சூழலில் இல்லை ” என்றேன். புலிகள் இப்படியான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது என்றனர். நான் சிரித்துவிட்டு இருந்து விட்டேன். தமிழீழம் மாநில ஆட்சியாகவாவது கிடைத்தால் அது பிரபாகரன் காலத்தில்தான். இல்லையென்றால் அது இல்லை என்பது என் கருத்தாக இருந்தது. இதற்காக உமா சொன்ன சுவிஸ் போன்ற மாநில முறை குறித்து சொல்லி, அத்தோடு கிடைத்ததை தட்டிக் கழிப்பது குறித்து வருந்த வேண்டி வரும் என பல முறை தெரிவித்தும் இருந்தேன். அது நடந்து விட்டது.
புளொட்டால் பல முறை கடத்தப்பட இருந்தேன். நான் இருந்த வீடுகளை சுற்றி வளைத்தும் இருந்தனர். அதற்காக ஈடுபட்டவர்களில் எனக்கு தெரிந்த ஒருவரைத் தவிர, எவரும் இன்று உயிரோடு இல்லை. அவரும் கனடாவில் இருக்கிறார். குறிப்பாக மாணிக்கதாஸன் மற்றும் சங்கிலி கந்தசாமி. சாதாரணமாக இயக்கத்தை விட்டு வெளியேறும் எவரையும் விட்டு வைக்கும் மனநிலை இவர்களிடமும் இருக்கவில்லை. நான் ஒடவில்லை. பெரியவரிடம் சொல்லி விட்டே வந்தேன். பெரியவர் (உமா) நான் வெளியேறும் போது “கவனம். என் கடிதம் இல்லாமல் யார் கூப்பிட்டாலு்ம் வராதே அவர்கள் ஏதாவது செய்வார்கள் என சிலரை அடையாளப்படுத்தினார். இதனால் எனக்குள் உமா – பிரபா தவறுகளை விட தனிப்பட அவர்களிடம் ஏதோ நேசம் உண்டு. பொது வாழ்வில் தவறிழைத்ததாக குற்றச் சாட்டும் உண்டு.
சுழிபுரத்துக் கொலைகள் சங்கிலி (கந்தசாமி) குழுவால் நடத்தப்பட்டது. இது ஒரு புளொட் செய்த மோசமான கொலை என்றே கருதுகிறேன். புலிகளது நோட்டீஸ்களை ஒட்ட வந்த சில இளைஞர்களை சங்கிலியும், அவரோடு இருந்தவர்களும் கொன்று அவர்களது ஆண் உறுப்புகளை வெட்டி வாயில் வைத்து புதைத்து வீரர்களானார்கள். அதற்காக சொல்லப்பட்ட காரணம் பெரியவரை போட்டுத் தள்ள வந்தார்கள் என்பதேயாகும். இது போன்ற முட்டாள் தனங்களை சங்கிலி தொடர்ந்து நடத்தியுள்ளார். ஒரு தவறை பெரியவர் ஏற்றுக் கொண்டதால் அந்த பவீனத்தை வைத்து பல தவறுகள் நடந்தன. பெரியவர், தனக்கு சார்பானதை கண்டு கொள்ளாமையால் புளொட்டின் அழிவு புளொட்டாலேயே வந்தது. இப்போதும் சித்தார்த்தரது தந்தையாரின் அரசியல் பின்னணி காரணமாக புளொட் இருக்கிறதே தவிர, இல்லாது விட்டால் புளொட்டும் அழிந்திருக்கும். அல்லது கருணா குழு போன்று இறந்த மோகன் போன்றவர்கள் ஆட் கடத்தல்களையும், கொலைகளையும் செய்து கொண்டுடிருந்திருப்பார்கள் புலி அழியும் வரை. அதன் பின்னர் அவர்களும் ஏதோ விதத்தில் அழிக்கப்படலாம். அது விபத்தாகக் கூட வரலாம்.
accu
சாந்தன் //ஆனால் அன்று புலிகள் சாட்சியத்துடன் நோட்டீஸ் வெளியிட்டனர்.//
இதை எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா சாந்தன்?
santhanam
இப்படி செப்படி வித்தையானவரை வைத்துதான் இவ்வளவுகாலம் புலி உயிர் வாழ்ந்ததது. இன்னொரு விடயம் 1984ல் ஆவரங்காலில் பண்டிதரின் முகாமை சுற்றிவழைத்து பெருந்தொகையான நவீனஆயுதத்தையும் போரளிகளையும் சுட்டு கொன்ற இராணுவம் அதைகாட்டி கொடுத்தவர் பண்டிதருடன் சேர்ந்த புலி உறுப்பினர். ஆனால் துரோகியாக சுடப்பட்டவர்கள் ஒரு சிங்கள மில் தொழிழாளியும், வயதான தமிழரும் நீர்வேலியில் தூணில் கட்டி மரணதண்டனை.
Kusumbo
மாயா” வடலியடைப்பில் உங்கள் பங்களிப்பு என்ன? பரந்தன் ராஜன் புளொட்டுடன் இயங்கினார். இயக்கப் பொடியளை டம்பண்ணுவதற்கு சித்திரவதை செய்வதற்கும் பொறுப்பாக இருந்தாராமே உண்மையா?
Kulan
//பாண்டி பஜார் சூடு குறித்து என நினைக்கிறேன். ஏன் சுட்டுக் கொண்டார்கள் என்பது தெரியாது//புளொட் பிரிவதற்கு முன் புதிய புலிகள் உமாவுடன் சேர்த்துக் கொண்ட கொள்கை;-இயக்கத்திலுள்ளவர்கள் கல்யாணம் கட்டக்கூடாது;காதலிக்கக் கூடாது; இயக்கத்தை விட்டுப் போகக் கூடாது என்தாகும். இதை மீறியவர் உமா என்பதின் வன்மமே பாண்டி பஜார். உமாவுக்குச் சுட்ட சூடே குறிதவறிக் கண்ணனுக்குப்பட்டது.
//சுந்தரத்தை கொலை செய்தவர் யார்? இறைகுமரன் உமாகுமரன் கொலை யார்? பாண்டி பஜாரில் என்னதான் நடந்தது? யார் சுட்டது? யார் மோட்டாரை ஓட்டியது?//
மோட்டார் ஓட்டியது ராகவன்; சுட்டது தம்பி: சுடுபட்டது கண்ணன் (சோதீஸ்வரன்) சுந்தரத்தைத் தம்பி குறிவைத்தற்குக் காரணம்:- புளொட் பிரிந்து வந்ததும் புலிகள் ஆடத்தொடங்கி விட்டனர். பிரபா மனச் சோர்வுற்றிருந்த வேளை அவரை ஆறுதல் சொல்லித் தேற்றியவர் சாள்ஸ் அன்ரனி. பிரிந்து வந்த புளொட் அடங்கும் என்று பிரபாகரன் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக வளரத் தொடங்கியதுடன் உமா முக்கியமாகப் பாதுகாக்கப்பட்டார். காரணம் பொலிசாலும் உமா தேடப்பட்டிருந்தார். ஆனால் சுந்தரம் சுதந்திரமாகவே இருந்தார் காரணம் பிரபாவின் குறி உமாவை நோக்கியே இருந்தது. இதனால் சுதந்திரமாகத் திரிந்த சுந்தரத்தைச் சுடுவதும் சுந்தரத்தை அழிப்பதனூடு புளொட்டை ஆட்டம் காணப் பண்ணலாம் என்பதும் தம்பியின் ஒரு எண்ணமாக இருந்தது. சுந்தரைத்தைப் போட்ட பின் பிரபாகரன் சொன்ன வார்த்தை என்காதிற்கு வந்தது. “சுந்தரத்தான் இருந்தால் புளொட் வளரும் அதானலை தான் போட்டனான்”.
தார்மீக ரீதியாகவும் தர்கரீதியாகவும் புளொட்டை வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதில் முன்னின்றவர்களில் சுந்தரம் ஒருவர். பிரபா எதிர்பார்ததை விட சுந்தரம் இறந்தபின்பும் புளொட்டின் பெயர் புகழ் பரவலாக இருந்ததை பிரபாகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பிரிந்து போன புளொட்டை ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர் இறைகுமாரன். இது தொடர்பான் சந்திப்புக்கள் கோண்டாவில் குமணன் வீட்டடியில் நடந்தன.
புளொட் வெளியில் வந்தவுடன் உடனடியாக ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தை அடித்து துப்பாக்கிகளை பண்ணாகத்தில் ஒருபகுதியையும் மற்றயவற்றை வேறு இடங்களிலும் பதுக்கினார்கள். அதைத்தொடர்ந்து கிளிநொச்சி வங்கி. இதன் தொகையை இன்னும் எதுவும் தாண்டவில்லை. அன்றே அது ஒரு மிகப்பெரிய தொகை. இது பிரபாவுக்குப் புண்ணில் புளிப்பத்தியதாக இருந்தது. இக்காலகட்டத்திலேயே இறை இவர்களை இணைக்க ஓடித்திரிந்தார். சந்திப்புக்கள் குமணன் வீட்டடியில் அடிக்கடி நடக்கும். குமணன் உயிருடன் இருக்கிறாரோ இல்லையோ என எனக்குத் தெரியாது. அங்கிருந்துதான் புதியபாதை எழுதி வெளிவந்தது. அதை பதிப்பதற்கு சுந்தரம் யாழ்பாணம் வருவதும் பஸ்ராண்ட் அருகிலுள்ள தேனீர்கடையில் தேனீர் அருந்துவதும் அவதானிக்கப்பட்டிருந்தது. இதை இறைகுமாரன் தான் தம்பிக்குத் தகவல் கொடுத்தார் என்று புளொட் நம்பியது இதன் விளைவே இறையின் கொலை. ஆனால் உண்மை அதுவல்ல இறை இருபக்கமும் தொடர்வு வைத்திருந்தார். இவர்களை மீண்டும் இணைத்து விடவேண்டும் என்பதிலும் ஆர்வமாக இருந்தார். அன்று பெருவெற்றிகளைக் கண்ட புளொட் அதை ஏற்கவில்லை.
Kulan
புளொட் பிரிந்து வந்ததும் உமாவைப் பாதுகாக்க என இனம் குணம் தெரியாதவர்கள் வகை தொகையின்றிச் சேர்க்கப்பட்டனர். கட்டுப்பாடு களன்றது. இதுவே புளொட்டின் முக்கிய தோல்வியாகும். சுந்தரம் விட்ட பிழை என்னவெனில் குறிப்பிட்ட கடைக்கு தேனீரருந்துப் போதுதான். ஒரு கெறில்லாவாக இருப்பவன் தொடர்ச்சியாக ஒரே நேரம் ஒரே இடத்துக்குப் போகக்கூடாது என்பது பொது விதி. இதுவே சுந்தரத்துக்கு இயமனாக வந்தது. சுந்தரத்தில் ஒரு பண்புண்டு. கண்ட நிண்டவடி வாதாடமாட்டார். இதனால் எதிரிகள் என்று பலர் இருக்கவில்லை. இதனால் தனக்கு எதுவும் நடக்காது என்ற எண்ணத்தில் சுதந்திரமாக இருந்தார். உமாவை வெருட்டச் சுந்தரத்தைப் போடுவதும் சுலபமாக இருந்தது. இதில் தேவையின்றி போனது பாவம் இறையும் உமையுமே. அவர்களைக் கொன்றது யார் என்பதை புளொட்தான் சொல்ல வேண்டும். சிலர் சந்ததி என்றனர் சிலர் பாலமோட்டை சிவம் என்றனர். சந்ததிக்கும் இறைக்கும் இளைஞர் பேரவைக்குள் கருந்து வேறுபாடுகள் தர்க்கங்கள் அரசியல் பற்றி இருந்தபோதிலும் ஆரோக்கியமான புரிந்துணர்வு இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.
மாயா! சுழிபுரம் கொலைகளில் மென்டிசின் பங்களிப்பு என்ன? //இதனால் எனக்குள் உமா – பிரபா தவறுகளை விட தனிப்பட அவர்களிடம் ஏதோ நேசம் உண்டு. பொது வாழ்வில் தவறிழைத்ததாக குற்றச் சாட்டும் உண்டு.// இதை மாயா மட்டுமல்ல பெரிசுடன் கடைசியாக இருந்த சிலர் எனக்கும் சொன்னார்கள். தம்பியைப் போடக்கூடிய நிலை புளொட்டுக்கு இருந்தும் பெரிசு பலமுறை தடுத்ததாம். பாண்டி பசார் பிரச்சனையின் பின் புளொட்டை அழிக்க வேண்டும் என்ற கர்வியம் பிரபாவிடம் இருக்கவில்லை என்பதைக் கவனித்தீர்களா? ரெலோ ஈபிஆர்எல்எவ் என்று போனதே தவிர புளொட்டுடன் பெரிதாக புலி தனகவில்லை.
சாந்தன்
அக்கு,/‘…இதை எழுதும்போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா சாந்தன்?….
உங்களிடம் அதற்கு எதிரான விவாதங்கள் இருந்தால் வையுங்கள்.
அந்த நோட்டீசை அடித்த போட்டோஸ்ரற் மெசினை வெலிங்டன் சந்தியில் உள்ள கடையில் இருந்தே புலிகள் எடுத்து சென்றனர். மினோல்ற்றா மெசின் என நினைக்கிறேன். அப்போது நான் எனது சேட்டிஃபிக்கேற் ஒன்றை போட்டோஸ்ரற் எடுக்க ( விலை ஸ்ரீலங்காக்காசு ஒரு ரூபா அப்போது) நின்றிருந்தேன். மெசின் பின்னேரம் கடைக்காரரின் கைக்கு வரும் எனச்சொல்லி எடுத்து சென்றனர். பின்னேரம் என்கைக்கு வந்தது நோட்டீஸ். முன்பக்கத்தில் புலிகளின் அறிவிப்பும் அதன் பின்பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதிய மூன்று அல்லது நான்கு கடிதங்களின் பிரதியும் அச்சிடப்பட்டிருந்தது. புலிகள் சொன்னது போல போட்டொஸ்ரற் மெசின் மீண்டும் கடைக்கு சென்றது. அதன் பின்னரும் அக்கடையில் பல போட்டோஸ்ரற் கொப்பி எடுத்திருக்கிறேன்.
Kulan
சந்தானம்//ஆனால் துரோகியாக சுடப்பட்டவர்கள் ஒரு சிங்கள மில் தொழிழாளியும், வயதான தமிழரும் நீர்வேலியில் தூணில் கட்டி மரணதண்டனை.// புலிமட்டுமில்லை மற்ற இயக்களும்தான் உ.ம் உமா இறை கொலை? எமது இயக்கங்களில் உள்ள குறைபாடு என்ன என்றால் எடுத்தவுடன் சுட்டுத் தூக்குவது. பின் துரோகியாக்குவது. உயிர்போனால் வராது என்பது மட்டுமல்ல யாரைச் சுட்டார்கள் தமிழனைத்தானே? என்ன ஆதாரங்களை வைத்துச் சுட்டார்கள்? பொலிஸ் பேரின்பநாயகத்தைச் சுட்டார்களே. அந்த அப்பாவி செய்த பாவம் என்ன. பஸ்தியாம்பிள்ளையுடன் வந்ததா? வயிற்றுப்பிளைப்பையா பாவம். சிங்களவனைச் சுட்டார்கள் என்றீர்களே காரணம் என்ன? நிச்சயம் அவர் ஒரு சிங்களவர் என்பதுதான். தனக்குப் பிரச்னை> சந்தேகப்படுவார்கள் என்பதால் அவர் காட்டிக் கொடுக்காமல் இருந்தாலும் சுட்டிருப்பார்கள். சிங்களவர்களைக் கலைத்தபின்பு காட்டிக் கொடுப்பு நின்றதா? பின்பு எப்படி நடேசனின் மனைவியை புலிப்பகுதியில் வைத்திருந்தீர்கள். சந்தானம்! இவங்கள் எல்லோரும் எங்கடை மக்களிலைதான் சுட்டுப் பழகினவர்கள். வளர்த்து விட்டதும் எங்கள் சமூகம்தான் வஞ்சிக்கப்பட்டதும் எம்சமூகம் தான்.
BC
//பின்பு எப்படி நடேசனின் மனைவியை புலிப்பகுதியில் வைத்திருந்தீர்கள். //
அவர்கள் மட்டும் எல்லாம் செய்த தகுதியுடையவர்கள் என்ற நினைப்பு. அந்தளவுக்கு மக்களோடு நெருக்கம். இவர்கள் இராணுவத்தோடு பல்லிளித்து கதைக்கலாம். மற்றவன் செய்தால் தமிழின துரோகி. இவர்களை குலன் சொன்ன மாதிரி வளர்த்து விட்டதும் எங்கள் சமூகம்தான் வஞ்சிக்கப்பட்டதும் எம்சமூகம் தான்.
chandran.raja
ஆயுதத்தால் வளர்ந்த இயக்கங்கள் ஆயுதத்தால் அழியும். சின்னவயதில் சையிக்கிளை பழகிப்போட்டு வீட்டில் சைக்கிளை வைத்துக் கொண்டு சும்மா இருப்பமா? புலம்பெயர்ந்த நாட்டில் காரை பழகிப்போட்டு காரை கராஜ்குள் விட்டுவிட்டு வீட்டில் படுத்திருப்பமா? ஆயுதபழக்கமும் அப்படித்தான்.
அப்ப நீங்கள் ஒரு கேள்வியை கேட்கலாம் மற்றைய நாடுகளில்?
அங்கு கட்சியிருந்தது கொள்கையிருந்தது. சித்தாந்தத்தை புரிந்தவர்கள் தலைமை தாங்கினார்கள். ஆயுதமும் ஆயுதத் தலைமையும் அவர்கள் கையில் இருந்தது. மடியிலை துவக்கை செருகிக்கொண்டு தோளில் ஏ.கே.47 மாட்டிவிட்டு சைக்கிள் ஓடினால் யாரையும் போட்டுத்தள்ளாமல் இருந்தால் என்ன பயன்?.வரும்காலச்சந்ததிக்கு இந்த அனுபவத்தை பொண் எழுத்துக்களால் எழுதி வைத்துவிட்டு போவோம்.
T Sothilingam
பல்லி//கண்ணாடி பத்மநாதன் மிக நிதானமான தொழில்நுட்ப்பவாதி, இவரை தங்கதுரை இனம்கண்டு தமக்கு சாதகமாக பிரயோசனபடுத்தியதாக சொல்லுகிறார்கள் கண்ணாடி பத்மநாதன் கொடிகாமத்தை சேர்ந்தவர், இலங்கை வானொலியை சில நிமிடங்கள் தனது திறமையால் நிறுத்தினாராம் இதுவும் உன்மைதான் என பல நண்பர்கள் சொன்னார்கள்//
இதுபற்றி சிறீசபா ஒருமுறை சொன்னதை நான் கேட்டுள்ளேன். கண்ணாடி பத்மநாதனும் சிறீசபாவும் பரந்தன் ராஜனும் (ஈஎன்டிஎல்எப்) ஒன்றாக அநுராதபுரம் சிறையில் இருந்தவர்கள். இருவரும் சேர்ந்து குண்டு தயாரித்ததே காரணம் இங்கே தான் முதல் முறையாக குட்டிமணியை இவர்கள் சந்திக்கிறார்கள். இதுதான் சிறீசபா ரெலோ உறவு தொடக்கம்
//யாழ்பாணம் வரும்போது புதிய புலிகள் என நோட்டீஸ் அடித்து ஒட்டியிருந்தார்கள். இதுயார் செய்தது? தெரியுமா?//குசும்போ
செட்டிதான் இதை செய்தார் குசும்போ நீங்கள் ஏன் செட்டியையும் தனபாலசிங்கத்தையும் இரண்டாக்குகிறீர்கள் இரண்டுபேரும் ஒன்று தான் (செட்டி தனபாலசிங்கம் தான் பெயர்)
//இன்னொரு விடயம் 1984ல் ஆவரங்காலில் பண்டிதரின் முகாமை சுற்றிவழைத்து பெருந்தொகையான நவீனஆயுதத்தையும் போரளிகளையும் சுட்டு கொன்ற இராணுவம் அதைகாட்டி கொடுத்தவர் பண்டிதருடன் சேர்ந்த புலி உறுப்பினர். ஆனால் துரோகியாக சுடப்பட்டவர்கள் ஒரு சிங்கள மில் தொழிழாளியும், வயதான தமிழரும் நீர்வேலியில் தூணில் கட்டி மரணதண்டனை.//சந்தானம்
இது 1985ல் தைமாதம் 9ம்திகதி 1984ல் அல்ல. இந்த தாக்குதலிலிருந்து தப்ப ரெலோ புலிக்கு உதவியது இராணுவத்திற்கு வெளியே இருந்து தாக்குதல் செய்ததால் ஒரு பகுதி இடம் திறக்கப்பட்டு மீதமுள்ளவர்கள் தப்பி ஓடினர் அடுத்தநாள் ஈழநாடு பத்திரிகையில் கிட்டு ரெலோவின் உதவிக்கு நன்றி என செய்தியை வெளிவர வைத்தவர்.
மேயர் துரையப்பாவின் கொலைக்கு இதுதான் காரணம் என நான் அறிந்தது
மேயர் துரையப்பாவின் முதலாவது தொழில் ஜி ஜி பொன்னம்பலத்திற்கு கார் ட்ரைவர். அங்கே துரையப்பா ஜி ஜி பொன்னம்பலத்தின் அக்கா மகளை காதலிக்கிறார். எனது அக்கா மகளை எனது ட்ரைவர் காதலிப்பதா? இதுதான் பிரச்சினையின் ஆரம்பம். ஜி ஜி துரையப்பாவை வேலையிலிருந்து கலைத்தார் ஆனால் காதல் தொடர்ந்தது என்றும் இதன்பின்னர் துரையப்பா தான் சுதந்திரக்கட்ச்சியில் இணைந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் வந்தாரோ இல்லையோ ஜி ஜிக்கு எதிராக ஒரு அணி சேர்கிறார். அவருக்கு பாதுகாப்பான அணி சுதந்திரக்கட்சியாகும் பின்னர் மக்களின் சேவையால் மேயர் துரையப்பா மிளிர்கிறார். ஜி ஜி கூட்டணியில் எதிர்க்கட்சியாகிறார். ஆனால் ஜி ஜி மூட்டிய துரோகி தீ வளர்கிறது பின்னர் 4வது தமிழாராட்சி மாநாடு தவறுதலாக பொலீசாரின் சூடு மின்கம்பிகளை அறுக்கிறது 11 பேர் சாகிறார்கள் ஜிஜிக்கு சந்தர்ப்பம் பின்னர் கூட்டணிக்கு சந்தர்ப்பம். துரோகியாகிறார் மேயர் துரையப்பா. பின்னர் புலிக்கு சந்தர்ப்பம். ஒருவனை சுட்டு தன்னை பெரியாளாகுகிறார்கள்.
இதுதான் போராட்டத்திற்கு வித்திட்ட தனிமனித கோபங்களும், துரோகிப் பட்டங்களும், பின்னர் கொலையும், தங்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு இதை பாவித்ததும்.
எனது கருத்து தவறாக இருந்தால் திருத்தவும்.– த சோதிலிங்கம்
குகபிரசாதம்
சூரிய தேவன் என்று தூக்கி கொண்டாடி வழிபட்ட தலைவன் இறந்து விட்டான் என்பதை பகிரங்கமாக அறிவிக்க கூட இயலாத அவலத்தின் சூத்திரதாரிகள் நாங்களே என்று புரியாமல் இருக்கிறோம்.துரோகிகள் கொல்லப்படும்போது முன்பக்க செய்தி போட்டு உசுப்பேத்திய நாங்கள் தலைவன் இறந்ததுக்கு ஒரு பெட்டிசெய்தியாவது போட முடியாமல் நாதியற்று நிற்கிறோம்
எல்லாள தாக்குதல் சிங்கள் இராணுவ பூதத்தின் தலையில் ஆப்பாக இறங்கி இருக்கு என்று உரை நிகழ்த்தியவன் தலையில் ஆப்பு இறங்கியதை கண்கூடாக கண்டும் நாங்கள் திருந்தவில்லை. இந்தளவும் நடந்த பிறகாவது எங்களுக்கு பகுத்தறிவு வருமா?
மற்றவர்களின் உயிரிழப்பில் கொண்டாட்டம் நடத்திய எங்களுக்கு ஒரு உயிரின் மதிப்பும் அதன் பிரிவு தரும் வேதனையும் இப்போதாவது புரியுமா?
எங்கள் கைகளாலேயே எங்கள் கண்களை குத்தி கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் எங்களுக்கு இப்போதாவது ஒரு உயிரின் மதிப்பு புரிகிறதா? னித நாகரீகமே வெட்கப்படும் காடுமிராண்டித்தனமான கொலைவெறியில் எங்களுக்கு நாங்களே புத்தி குழியை தோண்டினோம்.
ஊரெல்லாம் அவலகுரலுக்கு காரணமான நாங்கள் எங்கள் அவலக் குரலுக்கு ஓடிவர யாருமே இன்றி அவலமாய் அழிந்து போனோம்.
santhanam
புளட் அனைத்து உட்கட்சி போரட்டத்தில் கொலைகளிற்கு முக்கியகாரணி கந்தசாமி சுழிபுரகொலை தொடக்கம் இந்தியாவரை புளட்டின் உளவுக்கு கந்தசாமிதான் பொறுப்பு ஆனால் அவ்வளவு கொலைகளையும் மத்தியகுழுவில் அவரால் நியாயபடுத்தபட்டிருக்கிறது. புளட்டின் தளமாநாட்டுடன் தான் புளட் உடைவு தளத்தில் அம்பலமாகியது இதில் சிவராமிற்கு (தராகி) ஒரு சிலர் அடிக்க போய்விட்டார்கள்.
kusumbo
//குசும்போ செட்டிதான் இதை செய்தார் குசும்போ நீங்கள் ஏன் செட்டியையும் தனபாலசிங்கத்தையும் இரண்டாக்குகிறீர்கள் இரண்டுபேரும் ஒன்று தான் (செட்டி தனபாலசிங்கம் தான் பெயர்)// சோதிலிங்கம்
இயக்கத்துக்குள் இதிலிருந்து சில முரண்பாடுகள் எழுந்தன பிரபாதான் அதைச் செய்ததாக. காரணம் பிரபாகரன் சொன்னதைச் சொன்னபடி செய்வதில்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்தது. தம்பிக்கு இரண்டு முகங்கள் ஒன்று நேர்மை கடமை மறுமுகம் வஞ்சம் தீர்த்தல் போகவிட்டுக் குத்துதல் பஸ்தியாம்பிள்ளை கொலைதொடர்பாக மட்டுமல்ல பலதடவை தன்னைக்காப்பதில் முக்கியமாகவும் பல இடங்களில் மயிரிழையிலும் தப்பியதாக அறிந்தேன்.
palli
பல்லி வைத்த ஒரு புள்ளிக்கே இந்தனை விடயங்கள் கசியும்போது சரியான முறையில் குலன் உங்கள் கட்டுரை வருமாயின் நாம் கடந்த காலத்தை அறிய புத்தகங்கள் தேட வேண்டியதில்லை, பல்லியின் நண்பர் ஒருவர் ஏன் பல்லி என்னிடம் கழகம் பற்றி கேக்கவில்லை என கோபபட்டார், அத்துடன் சில தகவலும் தந்தார், அது சரியோ தவறோ பல்லிக்கு தெரியாது தவறாயின் சுட்டிகாட்டுங்கள்; தரவுகளை நாம் தவறாக கொடுக்க கூடாது அல்லவா,
கழகத்தின் செயற்குழு உறுப்பினர்;
முகுந்தன்;
கண்ணன்;
வசந்தன்; (சந்ததி)
காந்தன்;
சீசர்;
பொன்னர்;
ராஜன்;
மாணிக்க தாஜன்;
சங்கிலி;
செந்தில்;
முரளி;
சந்திரன் (கண்ணாடி)
மாதவன்;
கண்ண முத்து;
செந்தில்;
டேவிட் ஜயா,
ஆதவன்;
பாபுஜி;
கேசவன்;
சேகர்;
ஈஸ்வரன்
நிறைவேற்று குழு;
முகுந்தன்;
கேசவன்;
கண்ணன்;
காந்தன்;
செயலதிபர்; முகுந்தன்:
அரசியல்; வசந்தன் பின்பு வாசு:
படைதுறை, கண்ணன்;
இயக்க நடத்துனர்கள்; காந்தன் ராஜன்,
கலை, சீசர்;
நிதி, மாதவன்;
தொலை தொடர்பு, கணபதி;
கடல்துறை; பாண்டி;
உளவுதுறை; சங்கிலி;
வெளியுறவு; டேவிட் ஜயா;
பயிற்ச்சி;சேகர்;
இவை இந்தியாவில்;
தளத்தில்;
சுந்தரம்; காத்தான்;
பார்த்தன் ;சந்திரன்;
றமணன்; அமுதன்;
பொன்னர்; ஈஸ்வரன்;
அகிலன் ;செலவன்;
நந்தன் கோண்;
மெண்டிஸ்; காண்டிபன்;
நியாஸ்;நடேசர்;
இவர்களுக்கு பின்(மகாநாட்டுக்கு)
அனைத்தும் அடங்கிய தள பொறுப்பு;
பி எல் ஒ ரஜீவ்;
கழகத்தின் நாயகர்கள்;
முகுந்தன்;
காந்தன்;
ராஜன்;
மாணிக்கதாஜன்;
நடேசர்,
சின்ன மெண்டிஸ்;
நியாஸ்,
பார்த்தன்;
அற்ப்புதம்;
இவர்களுடன் ஜெயிலர் பிரகாஸ்.
மிகுதி கேட்டறிந்து தொடரும் பல்லி;
(இதில் இருக்கும் தவறுகளுக்கு பல்லி பொறுப்பல்ல)
palli
//இதில் சிவராமிற்கு (தராகி) ஒரு சிலர் அடிக்க போய்விட்டார்கள்.//
அப்படியாயின் சந்தானம் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டீர்களா??
மகாநாட்டில் என்னதான் பேசினார்கள், இந்த மகா நாட்டுக்கும் ரெலோ பாதுகாப்பு கொடுத்திச்சாமே; உன்மையா சோதி;சிவராமை அமைப்பினர் அடிக்க போகும் அழவுக்கு அவர் என்ன செய்தார், அவர் ஏதும் பொறுப்பில் இருந்தாரா?? அவரை மகான் எனதானே புலிகள் புலம்பினார்கள்; மாமனிதன் பட்டமும் கொடுத்தார்களே;
Kulan
குகப்பிரகாசம்//சூரிய தேவன் என்று தூக்கி கொண்டாடி வழிபட்ட தலைவன் இறந்து விட்டான் என்பதை பகிரங்கமாக அறிவிக்க கூட இயலாத அவலத்தின் சூத்திரதாரிகள் நாங்களே என்று புரியாமல் இருக்கிறோம்.// முதன் முதலில் தேசம் நெட்தான் பிரபாகரனுக்கு அஞ்சலி செய்தது மட்டுமல்ல ஒவ்வொருவரினது மனச்சாட்சியையும் தட்டி எழுப்பிவிட்டது. அதை எழுதியவரும் குலன்.
http://thesamnet.co.uk/?p=12042
//மற்றவர்களின் உயிரிழப்பில் கொண்டாட்டம் நடத்திய எங்களுக்கு ஒரு உயிரின் மதிப்பும் அதன் பிரிவு தரும் வேதனையும் இப்போதாவது புரியுமா?// அருமையான வரிகள். நாம் பிணங்களை எண்ணித்தானே வெற்றியை நிர்ணயித்தோம். சாவுகளின் தொகைதானே பிரபாகரனை சரித்திர நாயகனாக்கியது. சரி சகஇயக்கத்தில் ஒருவன் சுடப்படும்போதாவது குரல் கொடுக்க வக்கில்லாமல்தானே இருந்தோம். ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து எம்மையே கடித்தது புலி. புலியை மட்டும் குறைசொல்வதை விட நாம் நானும் சேர்ந்துதான் இப்பிழைகளை விட்டோம். இனியாவது தயவு செய்து இனியாவது சொந்தமூளையில் சிந்திப்போம்.
Kulan
நல்லது பல்லி நடக்கட்டும் நடக்கட்டும் கல்லறைகளைத் திறந்தே உலகமயமாக்கப்படுகிறது. இது இன்றைய தேவை என்றே கருதுகிறேன். இவ்வளவு காலமும் புலிப்பாடல்களையும் அதற்கு ஆமாப்போட்ட வில்லுப்பாட்டையும் கேட்டவர்கள் மறைக்கப்பட்ட உண்மைகளை அறியட்டுமே. தொடருங்கள் என்பங்குக்கு எனக்குத் தெரிந்ததைத் தருகிறேன்.
Kusumpu
பல்லியின் பட்டியல் கழகத்தில் முன்னணியில் இருந்தவர்கள். இப்பட்டியல் காலத்துக்குக் காலம் மாறியிருந்திருக்கும். நானறிந்தவரை ஆரம்பகாலங்களில் கிட்டத்தட்ட பிரிந்து வந்த காலப்பகுதியில் இவ்வளவு பேர் இருக்கவில்லை இவர்களை இணைக்கக் கூடிய வசதிகளும் இருக்கவில்லை. ஆரம்பகால உறுப்பினர்களாக கண்ணன்; வசந்தன் (சந்ததி); சுந்தரம்: டேவிட் ஐயா: தேவன்: பரந்தன் ராஜன்: வாசுதேவா: அரபாத் குமணன் எனச்சிறுவட்டமே இருந்தது. பின் சங்கிலி ….. மாணிக்கதாசன் …. இப்படி அப்படி என்று குவியத் தொடங்கினார்கள். சுந்தரம் இறப்பதற்கு முன் இப்படி ஒரு பெரியபட்டியல் இருந்ததாகத் தெரியவில்லை.
குகபிரசாதம்
எங்களயெல்லாம் வெளியில் விட்டுட்டாங்கள் என்று ஈரோஸ் வேலுபிள்ளை பாலகுமாரின் மனைவி தொலைபேசியில் சொன்னவுடன் பாலகுமாரையும் விடுதலை செய்து விட்டார்கள் என்று நினைத்தேன்.
இன்று மீண்டும் தொலைபேசியில் கதைத்த போதுதான் தெரியும் இன்னும் பாலகுமாரை விடவில்லை, ஆனால் குடும்பத்தவர் அனைவரயும் விட்டு விட்டார்கள் என்று
குகபிரசாதம்
பல்லியின் PLOT லிஸ்ட் ரொம்ப சரியானது Almost correct
பின்னாலை பார்த்து கார் ஓட முடியாது.
இனி நடக்கிற அலுவலை பார்ப்போம்
குகபிரசாதம்
எனக்கு சரியாகத் தெரிந்ததால் சொல்கிறேன்
அல்பிரட் துரையப்பா கிறிஸ்தவராக இருப்பினும் மிக உயர்ந்த வெள்ளாள குலத்தை சேர்ந்தவர். அத்துடன் அவர் ஒருபோதும் பொன்னம்பலத்துக்கு கார் ஓடவில்லை. பணக்கார குடும்பத்தை சேர்ந்த துரையப்பா சட்டம் படித்து சிறுவதிலேயே சட்டத்தரணி ஆகியவர்.
பொன்னம்பலத்தின் மனைவியின் நெருங்கிய உறவினர். துரையப்பா. துரையப்பா கலியாணம் செய்ததும் அவரின் உறவுக்கார பெண்ணைத்தான்.
போஸ்ட் மாஸ்டர் காங்கேசரின் மகன் பொன்னம்பலமோ மிக ஏழையான குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு புலைமைபரிசு கிடைத்து லண்டனுக்கு இயற்கை விஞ்ஞானம் படிக்க போனவர். படிக்க லண்டனுக்கு போறதுக்கு கொழும்பில் இருந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் பணத்தில்தான் போனார். அங்கே இருக்கும் போதும் இடைக்கிடை பணம் அனுப்ப சொல்லி பணம் பெற்றவர். படித்து முடித்து வந்து அந்த வர்த்தகரின் மகளை கலியாணம் செய்வதாகவும் உறுதி கொடுத்திருந்தார். இயற்கை விஞ்ஞானம் படித்துவிட்டு பின்னர் சட்டம் பயின்று சட்டவல்லுனராக கப்பலில் கொழும்பு திரும்பிய பொன்னம்பலத்தை வரவேற்க அந்த வர்த்தகர் குடும்பத்தோடு துறைமுகத்துக்கு போனால் கூடவே ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் பொன்னம்பலம் வந்திறங்கினார் அன்றிரவே வர்த்தகரின் மகள் தற்கொலை செய்து கொண்டாள். இதனால் அடுத்த கப்பலில் அந்த வெள்ளைகார பெண்ணை பொன்னம்பலம் திருப்பி அனுப்பினார்.
பின்னர் பெருமளவு சீதனத்துக்காக துரையப்பாவின் உறவுக்காரரான மலேசியாவில் ரப்பர் தோட்டங்கள் வைத்திருந்த ஒரு கிறீஸ்தவ வெள்ளாள பெண்ணை பொன்னம்பலம் கலியாணம் முடித்தார். துரையப்பாவின் குடும்பமும் பொன்னம்பலத்தின் குடும்பமும் மலேசியாவில்தான் இருந்தனர்.
Kandaswamy
பல்லி,
இன்றை வரை தேசத்தில் கூட பின்னூட்டம் இட்ட பெருமை உங்களை தான் சாரும். தொடர்ந்து பழசை கிழறி கொண்டிருக்ரீர்கள்? உங்களது நோக்கம் என்ன? எல்லாருக்கும் பிரச்சணை/வரலாறு தெரியும் – விடை தெரியாமல் இருக்கிறோம். நீங்கள் கழகம் என்று சொல்லி இட்ட பெயர்கள் எல்லாம் என்னையும், உங்களையும் போல தனிபட்ட சாதரன நபர்கள் தான். உலக மயமாதலால் மாற்றபட்டார்களோ தெரியாது. இந்த வரலாற்றிலிருந்து மனிதனுக்கு என்ன கற்று கொடுக்க போறீர்கள்.
naane
30,40 வருடங்களுக்கு முன்னைய விடயங்களை மீளாய்வு செய்யவேண்டிய தேவை தலைவர் போனதும் பலருக்கு வந்திருக்கின்றது.காரணம் நமது போராட்டமே அடிப்படையில் பிழையோ என்ற ஒரு எண்ணப்பாடு இப்போது வந்திருக்கின்றது. உண்மையும் அதுதான்.
தனிய புளோட்டின் வரலாற்றை ஆய்வு படுத்தாமல் சகல இயக்கங்களுக்குமான மீள் ஆய்வு முக்கியம்.
அதைவிட புளோட்டை பற்றியே பல முரண்பட்ட தகவல்களை பலரும் எழுதுகின்றார்கள்.தயவு செய்து சம்பந்தப்பட யாராவது இதை நிவர்த்திசெய்வார்களாக.
பின் குறிப்பு– சிலரின் கேள்விகளுக்கு பதில்.
நாகராசா உயிருடன் பழைய எம் ல் ஏ யின் மகளை கல்யாண்ணம் செய்து திருவான்மியூரில் இருக்கின்றார்.
குமணன் இயக்கத்தை விட்டு வெளியேறி தமிழ் நாட்டில் இருந்து போதைவஸ்த்திற்கு அடிமையாகி பின் இலங்கை சென்று தலைவர் எனது நண்பர் என்ற கதைகள் கதைக்க புலிகளால் போடப்பட்டார்.
பல்லியின் புளொட்டின் முக்கிய நபர்கள் வரிசை சரிதான். ஆனால் இது ஒரு குறுகியகாலத்துடன் முடிவு பெற்று விட்டது. 83 கலவரத்துடன் நிலமைகள் முற்றாக மாறி விட்டது.
chandran.raja
அல்பிரட்துரையப்பா தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும் முஸ்லீமக்களிடையும் ஒரு உண்மையான தோழனாக உலவி வந்தார். குகப்பிரசாதத்தின் அறிமுகமே சரியானவை. குகப்பிரசாதத்தின் நினைவாற்றல் என்னை பிரமிப்படைய வைக்கிறது. பாராட்டுக்கள். முடிந்தால் உங்களைப்பற்றி கொஞ்சம் தெரியப்படுத்துங்களேன். தனிப்பட்ட வாழ்கையைப் பற்றியல்ல அரசியல் வாழ்கையை பற்றி. நிச்சியம் நீங்கள் புலியாகவோ புலி ஆதரவாளராகவோ இருக்க முடியாது என்பது என் எண்ணம்.
chandran.raja
ஜோதிடத்தில் நம்பிக்கையில்லா விட்டாலும் தனக்கு அட்டமத்தில் சனியன் என்று சொன்னதால் பல்லியின் போக்கைப் பார்த்து நம்பவேண்டியாதக உள்ளது. எதற்கும் ஒரு எல்லையுண்டு முடிவுவர உலகமயமாக்கலைப் பற்றி தொடரலாம் தானே! குலனும் அதற்காகத்தான் காத்திருக்கிறார் கந்தசாமி அவர்களே!.
palli
கந்தசாமி அண்ணை பலஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உலக புரட்ச்சிகள் பற்றி குப்பற கிடந்து துப்பும் தாங்கள் எமது மண்ணில் எம் கண்முன்னே தாமே புரட்ச்சியாளர் என கும்மாளம் போட்டு இன்று நாட்டை சீரழித்த சிலரை அறிமுகம்செய்ய கசக்குதோ, புலி எப்படி சதிராடி நாட்டை கெடுத்துதோ; அதேபோல் கழகம் அத்தனை பேரையும் வைத்து கொண்டு இந்தியாவில் வீணாகி போனதால் எமது மக்களின் தலைவிதியை புலி கையில் எடுத்தது என்பதை ஏற்றுகொள்ள ஏன் தயக்கம்;
//உங்களது நோக்கம் என்ன?//
இனி வருஙாலங்களில் எந்த கிறுக்கனும் தமிழ் மக்களை ஏமாற்ற கூடாது; எமது இனம் நாம் ஏன் இன்று அனாதை ஆனோம் என்பதை புரிய வேண்டும்;
//எல்லாருக்கும் பிரச்சணை /வரலாறு தெரியும் //
உங்களுக்கு தெரியும் ஆனால் எலோருக்கும் என்பது தவறு, எனக்கு இந்த தேசத்தில் வந்த பின்புதான் அந்த தேசத்தில் நடந்த பலசீர்கேடு தெரியும், ஆகவே அதை பலரும் அறியட்டுமே, உதாரனம் இதில் பின்னோட்டம் இடும் பலர் பல விடயங்கள் தெரிந்தவர்கள், ஆனால் துரையப்பாவின் விடயத்தில் எந்தனை கருத்து முரன்பாடுகள், ஆக எந்த ஒரு விடயமும் விவாதத்தின் போது தெளிவு பெறும்;
//நீங்கள் கழகம் என்று சொல்லி இட்ட பெயர்கள் எல்லாம் என்னையும், உங்களையும் போல தனிபட்ட சாதரன நபர்கள் தான். //
இது உங்கள் கருத்து; ஆனால் அவர்கள் அப்படி நினைக்கவில்லையே; தாங்கள் ஏதோ லெனினின் சித்தப்பா பிள்ளைகள் போல் அல்லவா தம்பட்டம் அடித்தனர், அது இன்றுவரை தொடர்கிறது சாமி;
//உலக மயமாதலால் மாற்றபட்டார்களோ தெரியாது//
கந்தசாமி பல்லி ஏற்க்கனவே சொல்லிவிட்டேன் எனக்கு படிப்பறிவு கம்மி; ஆனால் உலகமயமாக்குதல் எனில் என்ன ஈழத்தில் விளையும் மரவெள்ளி கிழங்கை அமெரிக்காவில் கொண்டுபோய் விற்றுவிட்டு; அமெரிக்காவில் செய்யும் ஏவுகணையை எடுத்து வந்து பாகிஸ்ரானில் கொடுப்பதா? இந்த புரியாத அரசியல் பல்லிக்கு தெரியாது, உலக நடப்புகள் அனைத்தும் எம்மவருக்கு குறைந்த பட்ச்சம் தெரியவேண்டும் என குலன் ஆதங்கத்தோடு எம்மின குளறுபடிகளும் உலக தமிழருக்கு தெரியவேண்டும் என நினைக்கிறேன்; காரனம் இயக்கங்களை கண்மூடிதனமாய் வளர்த்த பெருமை உலகமய தமிழரை சாரும் என்பது பல்லியின் கருத்து;
//எதற்கும் ஒரு எல்லையுண்டு முடிவுவர உலகமயமாக்கலைப் பற்றி தொடரலாம் தானே! குலனும் அதற்காகத்தான் காத்திருக்கிறார் //
சந்திரா நீங்கள் அந்த வழியில் எழுதுங்கள் நான் இந்த வழியால் வருகிறேன், இருவரும் சந்திப்பது இறுதியில் மக்கள் வாழ்விலாய் இருக்கட்டும், அதைதான் குலனும் எதிர்பார்ப்பார்,
//பின்னாலை பார்த்து கார் ஓட முடியாது.//
உன்மதான் ஆனால் அதே காரை ஒரு சரியான தரிப்பிடத்தில் நிறுத்துவதானால் கண்டிப்பாக பின்னால் கவனமாக பார்த்துதானே நிற்பாட்ட வேண்டும்,அதே போல் இந்த தறுதலைதனமான விடுதலை போக்கை நிறுத்த பின்னால் பார்க்க வேண்டிய அவசியம் உண்டு என பல்லி நினைக்கிறேன்;
//தனிய புளோட்டின் வரலாற்றை ஆய்வு படுத்தாமல் சகல இயக்கங்களுக்குமான மீள் ஆய்வு முக்கியம்./
உன்மைதான் இது ஆரம்பமே அதுக்காகதானே 39 அமைப்பின் பெயர்களையும் எழுதி அது பற்றி விபரம் கேட்டேன்; முடிந்தவரை அனைவரையும் இனம் காட்டுவோம், இனிவரும் காலங்களில் மனிதரை மட்டும் அரசியல் செய்ய அனுமதிக்க இது ஒரு உதவியாக இருக்கும்;
//அட்டமத்தில் சனியன் //
சந்திரா பல்லியின் முதல் பின்னோட்டமே தேசத்தில் பல்லிக்கு அட்டமத்துசனி என பலர் சொன்னதை கவனிக்கவில்லையா? தாங்களும்தான், இப்போ அது மாறி மேட்டுல வியாளனாமே;
aat
தங்கள் இயக்க தலைவன் சபாரட்ணம் சுட்டு பிறகு பிரதேத்தை காரில் கட்டி இழுத்து தெரிந்த புலி அமைப்புடன் இவ்வளவு காலமும் ஜல்சா பண்ணி MP பதவியி அனுபவித்து வந்த ஸ்ரீகந்தாவிற்கு புதுக்க ஒட்டுவதற்கு ஒரு அமைப்பு தேவைபடுகிறது. அவர் UNP இளுடன் ஒட்டலாம். அதே TBC இல் அவர் வேறு ஒரு கருத்தும் கூறிஇருந்தார். தாங்கள் புலிகளை மக்களை விடச் சொல்லி இருந்தால் புலம் பெயர் போராடதித்கு ஒரு அவமரியாதை வந்து விடும் என்று. அதாவது தங்களை தெரிவு செய்த மக்கள் அங்கு உயிருக்காக போராடிகொண்டிருகும் பொது அவர்களின் உயிர் முக்கியமில்லை. புலம் பெயர் மக்களுக்கு அவமரியாதை வந்து விடும் இதுதான் முக்கியம்!! இந்த MP கல் வெளிநாட்டு தமிழ் மக்களிடம் ஒரு பேச்சு!! தாங்கள் ஏமாற்றி உழைக்கும் ஏழை மக்களிடம் ஒரு பேச்சு!!இலங்கை அரசாங்கத்திடம் வேறு ஒரு பேச்சு!! 60 வருடமாக மக்களை ஏமாற்றி உழைத்து காணாதா??பச்சோந்தி போல் வாழ்கை தேவையா?? தலைவர் பிரபகாரனின் ரத்தம் கூட உறையவில்லை அதற்குள் இப்படி ஒரு பல்டி இது உங்களுகே கொஞ்சம் ஓவர் ஆக தெரியவில்லை… நேற்று இதே ஸ்ரீகந்தா பசில் ராஜபக்க்ஷ விற்கு நன்றி சொன்னாராம் மக்களை விடுவிததட்காக. யாரய் ஏமாறுகிறீர்கள் எதோ நீங்கள் சொல்லி அவர் விடுவித்து விட்டாராம். 3 லட்சம் மக்களை ஒரு CAMP குள் வைத்து எவ்வளவு காலம் தள்ள முட்யும். பொது அறிவு உள்ள எவனுக்குமே அவர்களை விடுவிப்பார்கள் என்று தெரியும். ஆனால் நீங்களோ அதை அரசியல் ஆக்கி வாக்கு சம்பாதிக்க அத்திவாரம் போட்டு விட்டீர்கள். நாளை உங்கள் வாயல TBC இல் சொன்னீர்கள் அந்த மக்களுக்கு கொழும்பு என்றால் என்ன என்று தெரியாது பாமர மக்கள் என்று உங்களுக்கு வாய்ப்பாக போய்விட்டது நாளை நீங்கள் அவர்களிடம் சொல்வீர்கள் தமிழ் தேசிய கூடமைபால்தான் உங்களை வெளில் விட்டார்கள் எங்கட ரத்தம் நீங்கள் ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு ஏமாற்றி வோட்டு எடுங்கோ நாளைக்கு நாட்டில் மழை பெய்தால் அதற்கும் நன்றீ சொல்லுங்கோ எனென்றால் பாமர மக்களிடம் போய் தமிழ் தேசிய கூடமைபால்தான் நாட்டில் மழை பெய்கிறது என்று சொல்லலாம்!!! அந்த மக்களை ஏமாற்றி அழித்தது காணும் விட்டு விட்டுங்கள்!! வாழ்க தமிழ் வளர்க!! உங்கள் அந்தர் பல்டீ!!
chandran.raja
பல்லி கொஞ்சம் கோபமா பின்னோட்டம் விட்டுருக்கிறார் போல இருக்கிறது. களத்தில் நிற்கிறோம் அதாவது அறிவு என்ற ஆயுதத்தை கையில் எடுத்தபடி. வெல்லப்போவது அறிவாய்யுதமாகமாகயிருந்தால் பெருமைப் படவேண்டியது தானே!
பல்லியை என்றுமே நான் ஒரு சின்னமனிதனாகக் கணித்தது இல்லை. தனது இனத்திற்கு இழப்பு வரும்போது தூக்கிக் கொண்டிருப்பவன் அல்லது மெளனாக இருப்பது என்னால் மனிதனாக கருதமுடியாது. பல்லி அந்த வழியில்லை பத்தைக்கு கல்லெறிந்து முயல்களைக் கிழப்பி விட்டிருக்கிறது. இனி……..!?.
Kusumbo
//பல்லியின் Plot லிஸ்ட் ரொம்ப சரியானது almost correct. பின்னாலை பார்த்து கார் ஓட முடியாது. இனி நடக்கிற அலுவலை பார்ப்போம் // குகபிரசாதம்
உங்களுக்குக் கார் ஓட்டத்தெரியாது போல் இருக்கிறது. செட் எடுக்கும் போது பின்கண்ணாடி முக்கியம் என்பதை அறியமாட்டீர்களோ? நாம் செட் எடுத்துக் கொண்டு வெட்டி ஓடவே விரும்புகிறோம். எமக்குப் பின்கண்ணாடி முக்கியம். பின்னாலே பக்கவாட்டிலோ வந்து யாரும் அடித்துவிடக் கூடாது. பிரபாகரன் என்றும் குறுக்காலை ஒடின ஆள்தானே. 30 வருடமாய் சைட்கண்ணாடியில் தானே ஒடினார். பிழைகளை அறிவதும் கொலைகளைப் துப்புத்துலக்குவதும் அப்பிழைகளில் இருந்து திருந்தி மக்களைச் சரியான பாதையில் கொண்டு செல்வதும் அவசியம். சரி என்ன ஒரு கொலைதான் என்று எங்கும் நாம் விட்டு விட்டுப்போவதில்லை. கோடு கச்சேரி பொலிஸ் என்று ஏன் அலைகிறார்கள். பல்லி நீங்கள் சரியாய் தான் ஓடுகிறீர்கள் எல்லாக் கண்ணாடியையும் பார்த்து ஓடுங்கோ. யாரும் அடிபடக்கூடாது.
Kusumbo
//இந்த வரலாற்றிலிருந்து மனிதனுக்கு என்ன கற்று கொடுக்க போறீர்கள்.// கற்றுக்கொள்ள வேண்டியது கனக்க இருக்கிறது. நினைத்த நினைத்தமாதிரி சுட்டுவிட்டுப்போகலாம் எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்கிறீர்களா? இக்கொலைகளை செய்தவர்கள் யார் இன்னும் உயிருடன் இருந்தால் மீழ்வளக்கத்தாக்கல் கூடச்செய்யலாம். வரலாற்றில் பல பொய் முகங்கள் கிழித்துக் காட்டப்படவேண்டி இருக்கிறன. சுந்தரம் என்று ஒருவன் கொலைப்படாலும் பிரபாகன் என்ற ஒருவன் அன்றே போடப்பட்டும் இருந்தால் இன்று சரித்திரம் வேறு திசையை நோக்கிப்போயிருக்கும். போடுவதற்குச் சந்தர்பம் கிடைத்தும் மனிதன் மனிதம் என்று பார்த்தவர் தான் சுந்தரம் கண்ணன் நேசன் குமணன்…. உமா கூட ஒருகாலத்தில். இலத்திரனியல் படிக்க இந்தியா சென்று மாக்ஸ்சிமும் மக்களிசமும் படித்துப் படைக்க முயன்ற மனிதன் சுந்தரத்தை நடுரோட்டில் சுட்டுப்போட்டு பின் 30வருடங்களா எம்மினத்தை அழித்தவனின் முகத்தை இன்னும் பாதுகாக்கச் சொல்கிறீர்களா? பல்லி தொடருங்கள். நான் பக்கபலமாக நிற்கிறேன். அனியாயம் செய்தவன் செத்தாலும் கிளறி எடுத்து நீதி கேட்போம். தூக்குங்கள் நீதியின் வாளை மக்களை வாழவைப்பதற்காக
Kusumbo
//குமணன் இயக்கத்தை விட்டு வெளியேறி தமிழ் நாட்டில் இருந்து போதைவஸ்த்திற்கு அடிமையாகி பின் இலங்கை சென்று தலைவர் எனது நண்பர் என்ற கதைகள் கதைக்க புலிகளால் போடப்பட்டார்//
அட படுபாவிகளே நீங்கள் யாரையும் விடவில்லையா? குமணனுக்கு தம்பியை நன்கு தெரியும். தாய் சுகவீனமுற்று பலகாலம் இருந்தவர். குமணன்தான் பாதுகாத்து வந்தார். இதைக் கேட்டத்துக்குப் பின்பு …… எத்தனை குடும்பளையடா படுவாவிகள் உக்கப்பண்ணினீர்கள். பல்லி எல்லாரையும் தெருவிலை போட்டுக் கிழியப்பா. முடிந்தால் நானும் வருகிறேன். அப்படி ஒரு தாயை வைத்துக் கொண்டும் எம்போன்றோருக்கு அடைக்கலம் தந்தவன் குமணன். சுந்தரம், எமது படுக்கையும் பாதுகாப்பும் அவர் வீட்டில்தான்….போங்கடா …. புலிகளும் ஒருமனிதர் இதற்குள் விடுதலை….மிருகங்கள் பெயர்களைக் கொண்டவர்கள் மிருகங்களாகவே வாழ்திருக்கிறார்கள் மனிதவடிவத்தில்.
Kusumbo
குகப்பிரகாசம் உங்கள் தகவலில் இருந்து நான் அறிவது பொன்னரும் ஒரே சுத்துமாத்துத்தான். ஏன் அரசியல்வாதிகளே ஒரே சுத்துமாத்துப்போலும். நான அந்தத் தகவல்களைத் தெரிந்த உங்களை நிச்சயமாக எனக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். குமணன் பற்றிக்கேட்டதும் இரத்தம் கொதித்தது. நான் எல்லாவற்றையும் போட்டுவிட்டு வந்து குற்றஉணர்வுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். பிரபா புலி எனும் மிருகங்களின் துரொகச் செயல்களுக்கு தண்டனை அனுபவித்து உக்குபவர்கள். நீங்கள் நினைக்கிறீர்களா பல்லி சும்மா சும்மா எழுதி விளையாடுகிறது என்று. இல்லை. அடிமனதில் ஏதோ ஒரு ஆளமான காயம் அல்லது தன்னால் இயலாமல் போனதே என்ற குற்ற உணர்வு… நாம் எங்வளவு குற்ற உணர்வுகளைச் சுமந்து கொண்டம் அதற்கான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டுமல்லவா இருக்கிறோம்.
Kandaswamy
பல்லி,//இனி வருஙாலங்களில் எந்த கிறுக்கனும் தமிழ் மக்களை ஏமாற்ற கூடாது; //
ஏற்று கொள்கிறேன். நானும் மனிதன் என்று ஒர் இனம் எழுந்து வந்து அதிகாரத்தை கைப்பற்றும் என்று விரும்புகிறேன்.
எனது ஆதங்கம் அதற்கு உலக மயமாதல் ஒரு தடையோ தெரியவில்லை.நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் உள்ளூர் கள்ளர்கள். இவர்களுக்கு பின்னால்/முன்னால் பெரிய கள்ளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தான் உலக சமாதானம்/மனித உரிமை/பரிசுகள் எல்லாம் கிடைக்கும்.
chandran.raja
வரலாறு அரங்கில் முதாலித்துவ வர்க்கம் மிகவும் புரட்சிகரமான பங்கு ஆற்றியிருக்கிறது. எங்கெல்லாம் முதலாளிவர்க்கம் ஆதிக்கநிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தைவழி சமுதாய உறவுகளுக்கும் கிராமாந்தர பாராம்பரிய உறவுகளுக்கும் முடிவுகட்டியது. மனிதனை “இயற்கையாகவே மேலானேனாருக்கு” கீழுப்படுத்தி கட்டிப் போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்மின்றி அறுத்தெறிந்துவிட்டு மனிதனுக்கும் மனிதனுக்கும் அப்பட்டமான தன் தன்நலத்தை தவிர பரிவு உணர்ச்சியில்லாப் “பணப்பட்டுவடா” வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாகிற்று.
சமயத்துறைப் பத்திபரவசம் பேராண்மையின் வீராவேசம் சிறுமதியோரது உணர்ச்சி பசப்பு ஆகிய புனித பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனி குளிர் நீரில் மூழ்கடித்துள்ளது. மனிதனது மாண்பிணை பரிவர்தனை மதிப்பாய் மாற்றியுள்ளது. சாசனங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலிடங்காத சுகந்திரத்திற்கு பதிலாக வெட்கங்கெட்ட வாணிப சுகந்திரமெனும் ஒரேயொரு சுகந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தியிருக்கிறது. சுருங்கச்சொன்வதானால் சமயத்துறை பிரமைகளினாலும் அரசியல் பிரமைகளினாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்கு பதிலாய் முதலாளித்து வர்க்கம் வெட்க உணர்சியற்ற அம்மணமான நேரடியான மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியுள்ளது.
இதுகாறும் போற்றிப்பாராட்டுபட்டு பணிவுக்கும் பக்திக்கும்முரியதாய் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையையும் முதலாளிவர்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறியரையும் சமக்குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டிருக்கிறது. குடும்பத்திலிருந்து முதலாளிவர்க்கம் அதன் உணர்ச்சிநய முகத்திரையை கிழித்துதெறிந்து குடும்ப உறவை வெறும் காசுபண உறவாய் சிறுமையுறச் செய்துவிட்டது.
palli
//நீங்கள் நினைக்கிறீர்களா பல்லி சும்மா சும்மா எழுதி விளையாடுகிறது என்று. இல்லை. அடிமனதில் ஏதோ ஒரு ஆளமான காயம் அல்லது தன்னால் இயலாமல் போனதே என்ற குற்ற உணர்வு//
குசும்பு என் மன சாட்ச்சியாகவே உங்கள் இந்த பின்னோட்டம், நன்றி,,
ஆக என எழுத்து பலருக்கு புரிகிறது, ஆகவே நான் போகும் பாதை தப்பில்லை என நினைத்து தொடர்வேன் என் நிலையை, சந்திரா கோபமல்ல ஆதங்கம் ஆதங்கம், அது உங்கள் மீது அல்ல என்மீது எமது சமூகம்மீது எமது இனத்தின் மீது;;;
Kulan
நான் முன்பு கூறியதுபோல் இதுவும் ஒரு வகை உலகமயமாதலோ. அன்று மறைக்கப்பட்டு ஒழிக்கப்பட்ட விடயங்கள் உலகம் முழுவதும் உலாவுகிறது என்றால் இதுவும் உலகமயமாதலே. உலகமயமாதலை சரியாக நல்லமுறையில் பயன்படுத்துவதும் விடுவதும் எங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதை சரியாகப்பாவித்தது அரசு; பிடிவாதம் பிடித்துக் கவிண்டு கொண்டது பிரபாகரனும் புலிகளும். காலத்துக்கேற்ற வளைந்து கொடுப்புக்கள் மனிதனுக்குத் தேவை. இங்கே பல்லி புள்ளிபோட்டு விட்ட விடயம் எங்கள் முன் அரங்கேறி உலகமயமாகிறது. இது வரவேற்கப்பட வேண்டியதே. தேசம் எனும் நெற்றில் உலகம் முழுவதும் இணைந்து தமது கருத்துக்களையும் உண்மைகளையும் மனக்கிடக்கைகளையும் சொல்வது ஒரு சிறந்த உலகமயமாதலே. அப்படி ஒவ்வொரு விடயத்தையும் உலகமயமாதலுக்குள் ஆராயலாம். நான் கட்டுரை மட்டும் தான் எழுதினேன் நீங்கள் நடத்தியே காட்டுகிறீர்கள்.
santhanam
பல்லி ஏன் மாத்தயாவை துரோகியாக்கியவர்கள்.
palli
சந்தானம் மாத்தையாவயும் கரும்புலியாய் தான் அமைதிபடையிடம் தலை அனுப்பியது; ஆனால் தலையின் திருகுமுறை மாத்தையாவுக்கு தெரிந்ததால் அவர் துரோகி என்னும் மேல்நிலை பட்டத்தை வென்றெடுத்தார், அல்லது போனால் திலீபனுக்கு பக்கத்தில் சிரித்தபடி தியாகிகள் வரிசையில் போட்டியின்றி முதல் இடம் வகித்திருப்பார், இதுக்கு ஒரு எடுத்துகாட்டே குமரப்பா புலேந்திரன் குழுவினரின் பால் பழ மறைவு;
சந்தானம் தமிழர் வாழ்வில் மிக உன்னதமான பட்டமே துரோகிதான், இந்த பட்டம் பெற்றவர்கள் சார்பாய் பல்லி ஒரு கட்டுரை எழுதபோகிறேன்; அதை சந்தானம் உங்கள் செலவில் தேசத்தில் வெளியிடுங்கள்.
santhanam
அதை நிட்சயம் பல்லி எழுதும் நான் செலவை ஏற்கிறேன். மென்டிஷ் ரெலோவிற்கு உதவிதான் தன்னுயிரை கிட்டன் பறித்தான் பொபியை பாதுகாப்பாக அனுப்பி வைத்ததது மென்டிஷ் ஆனால் சபாரத்தினத்தை காப்பாற்றியிருப்பார்கள் ஏதோ காலம் பிழைத்து விட்டது.
palli
//அதை நிட்சயம் பல்லி எழுதும் நான் செலவை ஏற்கிறேன். மென்டிஷ் ரெலோவிற்கு உதவிதான் தன்னுயிரை கிட்டன் பறித்தான் பொபியை பாதுகாப்பாக அனுப்பி வைத்ததது மென்டிஷ்//
365 வீத உன்மை சந்தானம் பலர் சொல்லி பல்லி கேட்டிருக்கிறேன்;ஆனால் எழுத தருணம் கிடைக்கவில்லை; சந்தானம் தயவு செய்து உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள்; அது உங்களுக்கு சின்ன விடயம்போல் தோன்றினாலும் என்னைபோல் இயக்க அறிவு இல்லாத சிலருக்காவது தெரியட்டுமே:
palli
கழகத்தின் பிந்தளம்;;
முகாம்களின் பொறுப்புகள்;;
தடியன் ரவி;
குட்லக்நாதன்;;
சாந்தன்;;
முருகன்;
டேவிஸ்;
கண்ணாடி ரவி(பெண்கள்)
ரஜீவ்;
செந்தில்;;
சிவராஜா,
கணபதி;
பேபி;
ரமணன்;
காளித்;
மாணிக்கம்தாஜன்;
இன்னும் சிலர்;;
அனைத்து முகாம் பொறுப்பு;
ராஜன்;
கந்தசாமி;
செந்தில்;
சுபாஸ்;
செல்வராஜா,
காளித்,
ஆனந்தன்;
இன்னும் சிலர்;
பின்தளநாயகர்கள்;
வாமன்;
ராஜன்,
மாணிக்கம்தாஜன்,
சுனில்;
சங்கிலி;
ராஜா;
ரஜீவ்;
செந்தில்;
காந்தன்;
பாபுஜி;
இன்னும் சிலர்;;;
கொலை முகாமின் மன்னர்கள்;;
சங்கிலி,
மூர்த்தி;
குகன்;
இடியமீன்;
வளவன்;
ஆர் ஆர்;
ரவி;
சாந்தன்;
ரன்ஜித்;
சங்கர்;
இன்னும் சிலர் இருக்கலாம்:
நிதி,,,
மாதவன்;
மாசிலாமணி,
டைக்கற்றர் சிறி;
குகதாசன்;;
டேவிட்;
றொபேட்;
விஜயன்;
Kusumpu
சந்திரன் ராஜா முதலாளித்துவம் பற்றி எழுதிய பின்நோட்டம் மிக நல்லாக இருக்கிறது. இதை புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் போட்டுப் பார்க்கலாம். இந்த உலகமயமாதல் முதலாளித்துவத்துக்குப் பாதை திறந்து விடுகிறதா இல்லையா என்பது தானே குலனின் கேள்வி?
chandran.raja
குசும்பு! இதில் எந்த ஒரு வார்த்தையும் என்னுடையது அல்ல. அவை மாக்ஸ் எங்கஸ்களின் மேதாவிதனத்திற்கும் உழைப்புக்கும் மானிடத்தில் மேல் கொண்ட காதலுக்கும் எடுத்துக் காட்டாக அழியாப்புகழாக விளங்கும் “கம்யூனிஸ்கட்சியின் அறிக்கை” உள்ள சிறு பகுதியே இது. உலகமயமாதல் என்பது மூலதனத்தின் செயல்பாடு இல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்?. முதாலிளித்துவம் தனக்கு சவக்குழி தோண்றுவோரை தான் தோற்றிவிக்கிறது என்கிறது அறிக்கை. மிகுதியை…….?
குலன் வாசகர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை இருந்து பார்ப்போம்.
chandran.raja
பிற்போக்கர்கள் போற்றிப் பாராட்டுகிறார்களே மத்தியகாலத்து பேராண்மையின் முரட்டுகூத்து அது எவ்வளவு மூடத்தனமான செயலின்மையை தனது உற்ற துணையாய்க் கொண்டிருந்தது என்பதை முதலாளிவர்கம் நிதர்சனமாக்கியிருக்கிறது. மனித செயல்செயல்பாடு என்னவெல்லாம் செய்ய வல்லது என்பதை முதன்முதலாய் தெரியப்படுத்தியது முதாலாளிவர்கம்தான். எகிப்திய பிரமீடுகளையும் ரோமனிய கட்டுகால்வாய்களையும் கோதிக்தேவாலயங்களையும் மிஞ்சிய மாபெரும் அதியங்களை அது சாதித்திருக்கிறது; முற்காலத்து குடிபெயர்சிப் பயணங்களும் சிலுவைபோர் பயணங்களும் அற்பகாரியங்களாய் தோன்றும்படியான தீரப்பயணங்களை நடத்தியிருக்கிறது.
முதலாளித்துவ வர்கத்தால் ஒயாது ஒழியாது உற்பத்திகருவிகளிலும் இதன்மூலம் உற்பத்திஉறவுகளிலும் இவற்றின்கூடவே சமூகஉறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் வாழமுடியாது.ஆனால் இதற்கு முந்திய தொழில் வர்கங்களுக்கு எல்லாம் பழைய உற்பத்தி உறவுகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வது தான் வாழ்வதற்குரிய முதலாவது நிபந்தனையாய் இருந்தது. ஓயாதுஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகரமாற்றங்களும் சமூகஉறவுகள் யாவும் இடையறா அமைதி குலைதலும் முடிவேயில்லாத நிச்சியமற்ற நிலைமையும் கொந்தளிப்பும் முதாலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தியம எல்லாச் சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்தி காட்டுகின்றன. நிலையான இறுகிக்கெட்டி பிடித்துப்போன எல்லாஉறவுகளும் அவற்றுடன் இணைந்த பழங்கால தப்பெண்ணங்களும் கருத்துக்களும் துடைத்தெறிப்படுகின்றன. புதிதாய் உருவாக்கியவை எல்லாம் இறுகிகெட்டியாவதற்கு முன்பே பழமைப்பட்டுவிடுகின்றன. கெட்டியானவையெல்லாம் கரைந்து காற்றில் கலக்கின்றன. புனிதமானவை யாவும் புனிதம் இழக்கின்றன. முடிவில் மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது மெய்யான நிலைமைகளையும் தனது சக மனிததுகளுடனும் தனக்குள்ள உறவுகளையும் நேர்நின்று உற்றுநோக்க வேண்டியதாகிறது.
Kulan
உலகமயமாதல் என்பது நன்மை கேடு இரண்டும் நிறைந்ததே. அதைச் சரியாகப்பயன்படுத்த வேண்டியது எம்கடமை: திறமை. முதலாளித்துவம் தமக்குத்தானே குழிபறிப்பது மட்டுமல்ல முதலீடுகளூடு அதிக இலாபம் பெறும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழில் நுட்பங்களை இங்கே ஐரோப்பா அமெரிக்காவில் கண்டு பிடிப்பதும் எம்நாட்டையும் நாட்டு மக்களையும் செக்கு மாடுகளாக்கி அவர்கள் உழைப்பை உறிஞ்சவும் வளிவகுக்கும் அல்லவா. எனக்கு ஏற்படும் பயம் என்னவென்றால் சமூகத்திலுள்ள வகுப்பு இடைவெளி அதிகரிக்கப் போகிறது என்பதுதான். அன்று வந்தார்கள் காலணித்துவம் என்று இன்று வருகிறார்கள் இன்று வருகிறார்கள் கால் அணி துவேசத்துடன். பனிப்போரின் பின் பிராந்திய வல்லாதிக்கம் அதிகரித்திருப்பதால் பயன்களும் பாதிப்புக்களும் அதிவேகமாகவே இருக்கிறது இருக்கும். இதுதான் இலங்கையில் நடந்தது. பிரபாகனுடன் வீரதீரயுகம் முடிந்துவிட்டது. இனிப்புத்தி யுகம்தான். இதை எப்படி எம்மக்கள் சரியாகப் பயன்படுத்தப்போகிறார்கள் என்பது தான் எம்எதிர்காலம். இலங்கை ஒருவகையில் கூறுபோட்டு அதாவது பங்கு போட்டு விற்றாயிற்று. இனி எம்மக்களில் வாழ்வியல் இலங்கையரசிடமா வல்லாதிக்கங்களிடமா. முக்கியமாகப் பொருளாதாரம் தானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.
Kusumpo
சந்திரன் ராஜா- உலகமயமாதல் என்பது முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமாகத் தெரியவில்லையா. நாடுகளில் தனி முதலாளிகள் உருவானார்கள். இன்று நாடுகள் முதலாளிகளாக உருவாகியிருக்கிறது. அண்டை நாடுகள் பெரு முதலாளியாக உருவானதால் உள்நாட்டு ஜனநாயகம் பணம் கொடுத்து வாங்கப்படுமல்லவா?
chandran.raja
//உலகமயமாதல் என்பது முதாலிளித்துவதின் உச்சக்கட்டமாக தெரியவில்லையா?//
யார்? இதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். உள்நாட்டு ஜனநாயகம் என்று எதை சொல்லுகிறீர்கள் குசும்பு.அதை கொஞ்சம் புரியவைக்க முடியுமா?
para
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உமாமகேஸ்வரன் இணைந்தார். கட்சி மாறிய தமிழ் ‘எம்.பி’ கனகரத்தினத்தை பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் சுட்டுக் கொன்றனர். தங்கதுரை, பிரபாகரன் போன்ற போராளிகளை அமிர்தலிங்கம் அடிக்கடி சந்திப்பது வழக்கம். 1977-ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஒரு சந்திப்பின்போது, உமா மகேஸ்வரனை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு அமிர்தலிங்கம் கேட்டுக்கொண்டார்………………..
விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு கொழும்பு சென்ற உமா மகேஸ்வரன், ……….
ularuvaayan.blogspot.com
குகபிரசாதம்
புதியபாதை அழைக்கிறது தோழா! நாம் புரட்சி வெல்ல உழைத்திடணும் தோழா! பகுத்தறிவை வளர்த்திடணும் தோழா! மூடப் பழமைகளைக் களைந்திடணும் தோழா!. என்று மக்களைத் தோழமையுடன் வழிநடத்திய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தம்மிடம் நம்பிவந்த தமது இயக்கப் போராளிகளை எப்படியெல்லாம் கொலை செய்தது என்பதை வரலாறு மறந்து விடவில்லை. ஈழவிடுதலைக்காக செயற்ப்பட்ட இயக்கங்களில் வர்க்க விடுதலை பற்றியும் சமூகவிடுதலை பற்றியும் மக்களிடத்தில் புரிந்துணர்வை ஏற்படுத்திய இயக்கங்களில் புளொட் இயக்கத்தினரும் முக்கியமானவர்கள். அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்று கோசம் இட்டவர்கள் அவர்கள். ஒரு புரட்சிகர இயக்கத்தை இராணுவரீதியாக வளர்ப்பதை விட மக்களை அரசியல் மயப்படுத்துவதே முக்கியமானது என்று கருதிச் செயற்பட்டவர்கள். இவ்வாறு மிகப்பெரிய திட்டமிடலுடன் கிளம்பிய புளொட் தனது அழிவை எவ்வாறு ஏற்படுத்தியது என்பது முக்கியமான விடயம்.
சந்ததியாரைக் 10. 09. 1985 இல் புளொட் தலைமையால் கடத்திக் கொலை செய்யப்பட்டதை டேவிட்ஐயா கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும் என்ற சிறு நூல் மூலம் அம்பலப்படுத்தியிருந்தார். உடுவிலைச் சேர்ந்த சிவனேஸ்வரன் முகுந்தனின் பல கொலைகளது நேரடிச்சாட்சியம் என்றபடியால் அவரை அடித்துச் சித்திரவதை செய்து கொன்றதாக அவரது சகோதரி எழுதிய கடிதத்தையும் பிரசுரித்த டேவிட்ஐயா அதுவரை புளொட் அமைப்பு 286 கொலைகள் செய்திருப்பதாக அம்பலப்படுத்தியிருந்தார்.
புளொட் இயக்கத்தினராலேயே முகுந்தன் இலங்கையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு கொலைகார இயக்கத்தை அதன் உறுப்பினர்களே செயலிழக்கப்பண்ணியது முதல் முறையாக நடந்தது இங்கேதான்!!!!
Kusumpu
//உள்நாட்டு ஜனநாயகம் என்று எதை சொல்லுகிறீர்கள் குசும்பு//
நாட்டில் நடக்கும் அரசியல் ஜனநாயகம் என்று தானே கருதப்படுகிறது. உள்நாட்டு அரசியல் பிராத்திய வல்லரசுகளின் ஆதிக்கத்துகள்குள் போய்விடும் என்று கருதினேன். குட்டி அமெரிக்காவாக இந்தியா மாறிவிடும். உலகமாயமாதலில் மட்டுமல்ல- ஈராக் போரினால் மட்டுமல்ல- புலிகளின் போரினாலும் உழைத்தது இந்தியாதான். புலன்பெயர்ந்த தமிழர்களின் மண்வாசனைக்காக இந்தியாவில் இருந்துதானே எல்லாம் இறக்கப்பட்டது. ஒரு அரங்கேற்றம் நடக்கமாயின் காட்டில் இருந்து கூறைவரை இந்தியாவில் இருந்துதானே வருகிறது. எந்தவழிலும் சில்லறையில் இருந்து சினிமா வரை ஈழத்தமிழர்கள் தானே கொட்டிக் கொடுக்கிறார்கள்.
குகபிரசாதம்
விடுதலைப்புலிகள் என்ற பாசிசத்தை எதிர்த்து நின்ற புளட் உள்ளுக்குள்ளே மிகப்பெரிய பாசிசத்தை ஒளித்து வைத்திருந்தார்கள். முகுந்தன், சங்கிலிகந்தசாமி, மாணிக்கதாசன் போன்றவர்களின் மிகவும் குறுகிய நலன்களுக்காகவும் முட்டாள்தனங்களுடனும் நடாத்திமுடிக்கப்பட்ட கோரக்கொலைகள் புளட்டின் வரலாறு எங்கும் பரவிக்கிடக்க அவர்களை வீரமக்கள் என்று புளட் மக்களிடம் அஞ்சலி செய்யச் சொல்லிக் கேட்பது எப்படி நியாயம்?
சுழிபுரத்தில் புலிகளுக்கு துண்டுப்பிரசுரம் ஒட்டவந்த ஆறு இளைஞர்களது ஆணுறுப்பையும் வெட்டி அவர்களது வாயில் வைத்து தலைதெரிய புதைத்தவனல்லவா சங்கிலி கந்தசாமி? அதே மக்களிடம் அவனை மாவீரன் என்று சொல்லி வீரமக்கள் தினம் கொண்டாடச் சொல்கிறார்கள் புளட்காரர்கள்.. புலிகளின் கொலைவெறி கொண்ட பொட்டனுக்கும் சங்கிலி கந்தசாமிக்கும் என்ன வித்தியாசம்?. “கொலைகார முகுந்தனும் கூட்டாளி வாசுதேவாவும்” என்று புளட்டின் கொலைவெறி பற்றி எழுதிய டேவிட்ஐயா இந்தியாவில் இன்னும் வாழ்கிறார் அவரிடம் கேளுங்கள் சந்ததியார் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை வீரமக்கள் என கொண்டாடினால் ஒருபோதும் நாங்கள் மக்களிடத்தில் நிலைத்து நிற்கப்போவதில்லை.
Chinnavan
பரா://விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உமாமகேஸ்வரன் இணைந்தார்// என்பதை விட தனிநபர் தீவீரவாதிகளாகவும் கள்வர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் இணைந்தவர்கள் இணைந்து புலிகளானார்கள் என்பதே உண்மை
chandran.raja
குசும்பு உங்களுக்கு என்னபதிலை சொல்வது என்று தெரியவில்லை. இரண்டாம் உலகமாக யுத்தத்திற்கு பிறகு ஏற்பட்ட ஒழுங்குமுறையில் இன்றுவரை உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது. உற்பத்திசாதனங்களும் உற்பத்திசக்திகளும் கணக்கில்லா வையாக அழிக்கப்பட்டு அதன் அழிவில்லிருந்து திரும்பவும் முதாலிளித்துவம் மேற்பரப்புக்கு வந்தது. டொலர் உலகநாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்று அதன் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றது.
வாணிபநெருக்கடி..உதாரணமாக பெரும்பகுதி எண்ணை வர்த்தகத்தை தன்கையில் வைத்திருக்கும் அமெரிக்கா தன்கட்டுப்பாடு மீறுமென்றால் அல்லது புதியகட்டுப்பாடை விதிக்குமென்றால் என்னநிலையை உலகத்திற்கு உணர்த்துமென்று கற்பனை செய்ய முடியாதபடி பயங்கரமாகவே இருக்கும்.1960 ல் ஒரு பீப்பா எண்ணை இரண்டு டொலர் கூட இருக்கவில்லை. இன்றுவரை 100 -135 டொலர் வரை தாண்டிப் போனதையும் பார்த்தோம்.யார் இந்த நிலையில்லாத ஏற்றஇறக்கத்தை நிர்ணயித்தவர்கள்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உலகத் தொழிலாளவர்க்கம் அல்லவா?
கம்யூனிஸ்கட்சி அறிக்கை இதைதான் கூறுகிறது. இதை தடுத்துநிறுத்துவதும் மாற்றத்தை ஏற்படுத்துவதும் சமூகசக்தியான தொழிலாளவர்கத்தால் உலகத் தொழிலாளவர்கத்தால் தான் முடியும் என்பதை பிரகடனப்படுத்துகிறது. முதாலிளித்துவத்தின் லாபவெறிபோக்கு உலகத்தை தன்காலடியில் மண்டியிடப் பண்ணுகிறது. இது உலகமயமாதல் இல்லாமல் வேறு என்ன?இந்த உலகமயமாதல் முதலாளித்துவத்தின் லாபவெறிக்கல்லாமல் உலகப்பாட்டாளி மக்களுக்காக மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதையே கம்யூனிஸ்கட்சி அறிக்கை வலியுறுத்துகிறது. இந்தியா இலங்கை பற்றியோ அரங்கேற்றம் கூறைக்சோலை பற்றியோ எதுவும் சொல்லப் படவில்லை. உள்ளதெல்லாம் முதலாளிவர்கத்திற்கும்-தொழிலாளிவர்கத்
திற்கும் இருக்கும் உறவு பற்றியே!.
Chinnavan
சரியாகக் கணக்டகெடுப்பீர்களானால் விடுதலை இயக்கம் என்று தொடங்கி பொறுப்புகளை வகித்த எவனும் வீரமக்களோ மறவர்களோ கிடையாது. இவர்களை நம்பி இயக்கத்துக்குப் போன பொடியள்தான் பாவங்கள் உண்மையான வீர மறவர்கள். / புலிகளின் கொலைவெறி கொண்ட பொட்டனுக்கும் சங்கிலி கந்தசாமிக்கும் என்ன வித்தியாசம்/ பொட்டனுக்கு மட்டுமல்ல பிரபாகரனுக்குமே மாவீருர வணக்கமோ வீரமறவர் வணக்கமோ செய்யக்கூடாதது என்பத என்கருந்து. புளொட் புலிகளில் தலைமைகளிகளில் பலர் கை கூசாமல் காரணமின்றிக் கொலை செய்தவர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வணக்கம் செலுத்துவது என்பது கொலைக்கலாச்சாரத்தை ஆதரிப்பதாகும். பிரபாரன் பொட்டர் கந்தசாமி வரிசையிலுள்ளவர்களெல்லாம் அத்தனை பேரும் தமிழர் வரலாற்றில் கரும்புலிகளல்ல கரும்புள்ளிகள்…கரும்புள்ளிகள். மனிதத்தைச் சாகடித்த மடையர்கள். மண்டை களண்ட விசுக்கோத்துக்கள். கொலைகாரர்களை உருவாக்கி கொலைக்கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்தியவர்களுக்கு என்ன வேண்டியிருக்கிறது மாவீரர்தினம். யார் மாவீரர்கள்? புலிகளில் இருந்து 80 வீதத்துக்கு மேற்பட்டவர்கள் வெறும் கொலைகாரர்களே இதற்குள் புளொட்டும் அடங்கும். புலி புளொட் என்பது இரண்டல்ல என்கண்களில் இரண்டும் ஒன்றே. இனி மாவீரர் தினம் என்பது கொலைக்கலாச்சாரத்தின் பிம்பமே. இந்த மாவீரர் தினத்துக்குப் போபவர்கள் இரத்தக்கறைபடிந்த கைகளைக் கொண்டவர்களே. தமது பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள் வேண்டுமானால் தம்வீட்டில் வைத்துக் கொண்டாடட்டும். இப்படி ஒரு அசிங்மான மனித அவலத்தின் அவதாரங்கள் எம்சரித்திரத்தை நினைவுறுத்த வேண்டாம். எம்பிள்ளைகளுக்கு ஒரு அசுரனும் அவன்படைகளும் அழிந்ததாகவே இருக்கட்டும்.
Kulan
சந்திரன் ராஜா! அருமையோ அருமை /முதாலிளித்துவத்தின் லாபவெறிபோக்கு உலகத்தை தன்காலடியில் மண்டியிடப் பண்ணுகிறது. இது உலகமயமாதல் இல்லாமல் வேறு என்ன?/ அருமையான வரிகள். அமெரிக்காவின் சுவடுகளைப் பின்பற்றி இன்று பிராந்திய வல்லரசுகள் தம்பயணத்தைத் தொடர்கின்றன. இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்துக்கடவுளைக் கொண்ட பொங்கல்காட்டின் விலையை விட ஒருகம்யூனிஸ்டு நாடான சீனாவில் இருந்து இறக்குமதியாக்கி விற்கப்படும் கடவுள்களைக் கொண்ட காட் மலிகாக இருக்கிறது. இந்தமலிவுக்குக் காரணம் சீனத்தொழிலாளருக்கு சரியாகக் கொடுக்கப்படாத ஊதியமே. உலகமயமாதலின் உச்சக்கட்டமாக பணப்பெறுமதிகள் ஒன்றானாலும் உழைப்பின் பெறுமதி உளக்கப்படும். மலிவான உற்பத்திப்பொருட்களை பாவனையாளர்கள் பெறுவதற்காக உற்பத்தியாளர்களின் உதிரம் உறிஞ்சப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. அதில் முதலே இல்லாத இடைத்தரகர்கள் பெருகுவார்கள். இவர்கள் உற்பத்தியாளகளை போதியளவு பிழிந்தே பொருட்களைச் சந்தைப்படுத்துவார்கள். இங்கே பணமுள்ளவனுக்கு மட்டுமல்ல முதலைக்கொண்ட முதலாளித்துவ நாடுகள் உலகமயமாதலூடு தமது இலாபத்தைப் பன்மடங்காக்கும். ஏழை வறிய மக்கள் என்றும் ஏழை வறிய நாடுகள் என்றும் பெரிய இடைவெளி உண்டாவதை யாரும் தடுக்க இயலாது. சுருங்கச் சொல்லின் உலகமயமாதலின் சிறுவடிவமே ஐரோப்பிய ஒன்றியம். இதனால் வறிய ஐரொப்பிய நாடுகளில் இருந்து வருபவர்களை வைத்து அதிக பணம் சம்பாதிக்கம் மேற்கு ஐரோப்பியர்கள் உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைத்தார்களா? இல்லையே. அதேவேளை இந்தச் சிறுதொகை வறியநாடுகளில் பெருந்தொகை. அப்பணத்தை அங்கு கொண்டு சென்று அங்கே பணவீக்கத்தை அதிகரிப்பதனால் வறிய ஐரோப்பிய நாடுகளில் பொட்களின் விலை மேற்கு ஐரொப்பிய விலைக்கு நிகராகிறது. பணவீக்கம் அதிகரிக்கும் அதற்கு ஈடுகொடுக்க தொழிலாளர் வர்க்கத்தால் இயலாது போகும். உ.ம்: இலங்கைத் தமிழர்களால் தமிழ்நாட்டில் வீட்டின் விலைகள் வானத்தை தொடுகிறது. அவ்விலை கொடுத்து அங்குள்ள மக்களால் வாங்க முடியுமா? இல்லையே. அந்த நிலையைச் சமாளிக்க இந்தியர்கள் வெளிநாடு வரவேண்டிய நிலை ஏற்படுகிறது. பின் இவர்கள் என்ன செய்வார்கள் இலங்கைத்தமிழர்கள் செய்த அதே வேலையைப் பன்மடங்காக்கு வார்கள். இந்த உலகமயமாதல் என்பது உலகிலுள்ள் ஒவ்வொரு மனிதனையும் தொடும் என்பதில் சந்தேகமே இல்லை.
accu
சரியாகச் சொன்னீர்கள் சின்னவன். பேய்களுக்கு படையல் செய்வதை மறுக்கவேண்டும்.
BC
சின்னவன், கொலைகார கூட்டத்துக்கு அஞ்சலி செலுத்துவது பற்றி உங்கள் கருத்து மிகவும் சரியானது. ஏற்றுக் கொள்கிறேன்.
Kusumpu
தலைமை செய்து பிழைகளுக்காக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள் என்ன செய்வார்கள். இறந்தவர்களுக்கு மரியாதை கொடுப்பது பிழை என்று எண்ணுகிறீர்களா?
chandran.raja
சற்றும் மனம்தளராத வேதாளம் தூக்கிய பிணத்தை தோளில் சுமந்தபடி மீண்டும்….
இதுகாறும் சமூக அமைப்பு ஒவ்வொன்றும் ஏற்கவே நாம் கண்ணுற்றது போல் ஒடுக்கும் வர்கத்திற்கும் ஒடுக்கப்படும் வர்கத்திற்கும் இடையிலான பகைமையே அடிப்படியாக கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்கி வைக்கவேண்டுமாயின் அந்த வர்கத்தை தொடர்ந்து தனது அடிமை நிலையிலாவது நீடிப்பதற்கு அவசியமான குறிப்பிட்ட நிலைமைகளை அதற்கு உத்தரவாதம் செய்து தந்தாக வேண்டும்.
பண்ணையடிமை முறை நிலைவிய காலத்தில் பண்ணைஅடிமை தன்னை நகர சமுதாய உறுப்பினாய் உயர்த்திக் கொள்ள முடிந்தது. அதேபோல் பிரத்துவ ஏதேச்ச அதிகாரத்தின் ஒடுக்குமுறையில் குட்டி முதாலிளித்துவ பிரிவினர் முதலாளியாய் வளர முடிந்தது. ஆனால் நவீனகாலத்து தொழிலாளி இதற்கு மாறாய் தொழில் முன்னேற்றத்தில் கூடவே உயர்ந்து செல்வதற்கு பதில் தனது வர்க்கம் நிலவுதற்கு அவசியமான நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து செல்லுகிறான். அவன்ஒட்டாண்டியாகி ஏதும் இல்லாதவன் ஆகிறான்; மக்கள் தொகையும் செல்வத்தைக் காட்டிலும் இல்லாமை அதிவேகத்தில் அதிகரிக்கிறது.
ஆகவே இப்ப தெட்டத்தெளிவாகத் தெரிகிறது-முதாலிளிவர்கம் சமுதாயத்தின் ஆளும் வர்கமாக இருக்க தகுதியற்றது. தான் நீடித்து நிலவுவதற்கு வேண்டிய யாவற்றிக்கும் மேலான சட்டவிதியாய் இனியும் சமுதாயத்தின் மீது பலவந்தமாக இருக்க தகுதியற்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது அது ஆளதகுதியற்றதாகிறது-ஏனெனில் அதன்அடிமை அவனது அடிமை நிலையில் தொடர்ந்து வாழ்வதற்கு அதனால் வகை செய்ய முடியவில்லை;அவன் அதற்கு உண்டி அளிப்பதற்கு பதில் அதுஅவனுக்கு உண்டி அளிப்பதற்கு வேண்டிய தாழ்ந்து செல்வதை அதனால் தடுக்க முடியவில்லை சமுதாயம் இனி இந்த முதாலிளிவாகத்திற்கு பயந்து வாழ முடியாது. அதாவது முதலாளிவர்கம் இனியும் தொடர்ந்து நீடிப்பது சமுதாயத்திற்கு ஒவ்வாததாகிவிட்டது
மூலதனம்உருவாதலும் பெருகிச்செல்லுதலும் தான் முதலாளிவர்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் புரிவதற்கும் அத்தியாவச நிபந்தனை. கூலி உழைப்புதான் இந்த அத்தியாவசிய நிபந்தனையாய் அமைகிறது. கூலிஉழைப்பானது தொழிலாளர்கள்களுக்கிடையிலான போட்டியே ஆதாரமாய் கொண்டிருக்கிறது. முதலாளிவர்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஊக்கிவிக்க வேண்டியிருக்கும் தொழில் முன்னேற்றமானது தொழிலாளர் இடையே போட்டியின் விளைவாக தனிப்ப்பாட்டை நீக்கி ஒற்றுமைமையின் விளைவாக புரட்சிகர இணைவை உண்டாக்குகிறது. இவ்விதம் நவீனபெருவீத தொழிலின் வளர்ச்சியானது எந்த அடிப்படையில் முதலாளிவர்கம் பொருள்களை உற்பத்தி செய்தும் சுவீகரித்தும்வருகிறதோ அதன் அடிப்படைக்கே உலைவைக்கிறது.ஆகவே முதலாளிவர்கம் தனக்கு சவக்குளி தோண்டுவோரையோ அனைத்திற்கும் மேலாய் உற்பத்தி செய்கிறது. இவ்வர்கத்தின் வீழ்சியும் பாட்டாளிவர்க்கத்தின் வெற்றியும் தவிர்கவொண்ணாதவை.
palli
உமா மகேஸ்வரன் கொல்லபட்டார் கொழும்பில்; அவரை கொன்றதாய் ரொபின் கொல்லபட்டார் சுவிஸ்சில்;(குடும்பத்துடன்) ரொபின் குடும்பத்தை கொன்றதாக சொல்லபடும் பிரபா தற்கொலை செய்தார் பரிஸில்; இதுக்கு சுவிஸ்; லண்டன்; ஜேர்மன்; டென்மார்க்; நோர்வே, கனடா ; போன்ற நாடுகளில் இருந்து வருகிறார்கள் கண்ணீரில் கருத்து மழை பொழிய, இதைவிடவா ஒரு உலகமயமாக்கல் வேண்டும்; உலகத்தில் பாதி நாட்டையே கொலைக்காக தொடர் பாதை அமைத்த தமிழனல்லவா நாங்கள்,
palli
இது தேனியில் இருந்து எடுத்தது; பல்லி;
//தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளருமான தோழர்.பிரபா அவர்கள், 30.10.2009 அன்று அகால மரணமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் ராஐமனோகரன் பரமேஸ்வரி ஆகியோரின் புதல்வரும். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வாழ்விடமாகவும் கொண்ட இராஜமனோகரன் பிரபாகரன் என்கிற இயற்பெயரைக் கொண்ட தோழர், நண்பர்களாலும், கழகத் தோழர்களாலும் பிரபா என அன்புடன் அழைக்கப்பட்டு வந்தார். தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் 84களில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர் பிரபா அவர்கள், கழகத்தில் பல்வேறு பயிற்சிகளையும் பெற்றதுடன், கழகம் முன்னெடுத்த மக்கள் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் களத்தில் 1987ம் ஆண்டு வரை செயலாற்றி வந்தார்.
ஒரு சிறந்த மக்கள் போராளியாகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், மனிதாபிமானம் மிக்கவராகவும் பணியாற்றி வந்த தோழர் பிரபா, தமிழ் மக்களின் விடியலில் அதீத அக்கறை கொண்டிருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தையடுத்து 1987ல் புலம்பெயர்ந்த தோழர் பிரபா, சுவிஸ் நாட்டில் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளை உறுப்பினராக செயற்பட்டு வந்தார். சுவிஸ் கிளையில் உறுப்பினராக செயற்பட்ட வேளைகளில் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாது மனந்தளராது துணிச்சலுடன் கழக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்.
பின்பு பிரான்ஸ் நாட்டிற்குச் வந்து இங்கு வசித்து வந்த பிரபா, கழகத்தின் பிரான்ஸ் கிளையின் செயற்பாட்டுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு பிரான்ஸ் கிளையின் அமைப்பாளராக தனது இறுதி மூச்சுவரை செயற்பட்டு வந்தார். புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் கழக அங்கத்தவர்களையும், ஆதரவாளர்களையும் ஒருங்கிணைக்கும் பாரிய பொறுப்பினை ஏற்று அதனை செவ்வனே செய்து வந்ததுடன், அண்மையில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பி, இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகள் சென்றடைவதற்கான வேலைத் திட்டங்களிலும், அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தார்.
இவருடைய திடீர் மறைவானது கழகத்திற்கும் அல்லல்பட்டு நிற்கும் மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்ற அதேவேளை, அவர் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர்ந்து முன்னெடுப்போம் என உறுதிபூண்டு எமது இதய அஞ்சலிகளை சமர்ப்பிக்கின்றோம்.
பார்வைக்கு வைக்கும் இடம்: 12.11.2009 வியாழக்கிழமை அன்று காலை 11.00 – 11.30
Institut Médico Légal de Paris 2, Place Mazas, 75012 PARIS, Métro : Quai de la Râpée
தகனம் செய்யுமிடம் : 12.11.2009 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 14.10 – 15.10
Place Gambetta 71, rue des Rondetta, 75020 PARIS, Métro : Gambetta
தெடர்புகளிற்கு: சகோதரன்.. (0033) 06 66 28 96 03 (0033) 06 66 28 96 03 , தோழர்கள்.. (0033) 06 28 70 48 59 (0033) 06 28 70 48 59 // (0033) 06 50 27 24 72 (0033) 06 50 27 24 72
kusumbo
தேனியில் இருந்து எடுத்துப்போட்ட மரணஅறிவித்தல் ஒரு கெட்டவனை நல்லவானாகக் காட்டுகிறது. அவர்களின் முகங்களை கிழித்துக் காட்டவேண்டியது அவசியம்தான். இவனின் மரணம் எங்கு நடந்தால் தான் என்ன. போடப்பா பல்லி போடு அடியப்பா பல்லி கெட்டவரில் தலைகளை சிதறுதேங்காயாக. முடியுமானால் பிரபாவைப்பற்றி கொஞ்சம் எழுதுங்கள் நானும் குசும்படிக்காமல் வாசிக்க.
குகபிரசாதம்
உமாமகேஸ்வரனை கொன்ற அச்சுவேலி ரொபின்சனும் அவரது மனைவியும் வயிற்றில் இருந்த பிள்ளையும் கொல்லப்பட்டதுக்கு மாணிக்கதாசனே காரணம்.
தான் உமாவின் கொலையில் சம்பந்தப்பட்டதை றொபின்சன் வெளியே சொல்லிவிடலாம் என்ற பயத்தினால்தான் ரொபின்சனும் மனைவியும் சுவிஸ்சில் கொல்லப்பட்டனர்.
இதே மாதிரித்தான் ஆச்சிராசனும் சாம் முருகேசுவும் கொல்லப்பட்டனர்
Kulan
பல்லி//இதைவிடவா ஒரு உலகமயமாக்கல் வேண்டும்// பயங்கரவாதமும் கொலைக்கலாச்சாரமும் ஐரோப்பியருக்கு இறக்குமதிப் பொருள் ஆகப்போகிறது. இதற்காகவே முதலைக் கொண்ட அல்லது முதலைப்போட்ட நாடுகள் கீழத்தேய நாட்டு அரசுடன் மிக இறுக்கமான தொடர்பை வைத்திருக்கும். இடம்பெயர்வுகள் அதிகமானாலும் கூட அது பணமுள்ளவனுக்கே என்றாகிவிடும். கலை கலாச்சாரம் காசாகிப்போகும். மரமேறத் தெரியாதவர்கள் கலைஞர்கள் பிறதேசங்களில் இலைபிடுங்கிக் காட்டுவார்கள். நன்மை தீமைகளுடனான ஒரு உலகமயமாதலில் எம்மினத்தை நாம் எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்பது தான் இன்றை கேள்வி? பல்லி சொல்வலும் இக்கட்டுரையின் கலந்துரையாடல் போலும் பலவிடயங்கள் உலகமயாகும். இது உண்மையில் வரவேற்கத்தக்கதே.
Kusumpu
அடபாவிங்களா குலனின் உலகமயமாதலை ஒரு மரணஅறிவித்தல் களமாக்கி விட்டீங்களே. //சுவிஸ் கிளையில் உறுப்பினராக செயற்பட்ட வேளைகளில் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இடையூறுகளை எதிர்கொண்ட போதிலும் அவற்றை பொருட்படுத்தாது மனந்தளராது துணிச்சலுடன் கழக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார்/ சுவீசில் மற்றய இயக்கங்களை சார்ந்திருப்பது என்பது சரயான கஸ்டமான ஒன்றே. இனி என்ன என்னத்தை யெல்லாம் இங்கே உலகமயமாக்கப் போறீங்ளோ எனக்குத் தெரியாது பல்லி.
Kusumpu
/உமாமகேஸ்வரனை கொன்ற அச்சுவேலி ரொபின்சனும் அவரது மனைவியும் வயிற்றில் இருந்த பிள்ளையும் கொல்லப்பட்டதுக்கு மாணிக்கதாசனே காரணம்.
தான் உமாவின் கொலையில் சம்பந்தப்பட்டதை றொபின்சன் வெளியே சொல்லிவிடலாம் என்ற பயத்தினால்தான் ரொபின்சனும் மனைவியும் சுவிஸ்சில் கொல்லப்பட்டனர்/
குகப்பிரகாசம் உங்கள் கருத்துப்படி உமாமகேசனைக் கொன்றது மாணிக்கதாசனா? ஏன் கொன்றார்? எதற்காகக் கொன்றார்? தகவல் தரமுடியுமா?
/உமா மகேஸ்வரன் கொல்லபட்டார் கொழும்பில்; அவரை கொன்றதாய் ரொபின் கொல்லபட்டார் சுவிஸ்சில்;(குடும்பத்துடன்) ரொபின் குடும்பத்தை கொன்றதாக சொல்லபடும் பிரபா தற்கொலை செய்தார் பரிஸில்/-
குகப்பிரகாசம் ஒன்று சொல்கிறார். அதையே நீங்கள் வேறு ஒன்றாகச் சொல்கிறீர்கள். உண்மை என்ன? உமாவைக் கொன்றது யார்? மாணிக்கதாசனுக்கும் ரொபீனுக்கும் உள்ள தொடர்பென்று. ஒகே ரொபினைக் கொன்றது யார் என்றாவது சொல்லங்க? பிரபா தற்கொலை செய்ததற்கு இக்கொலைகள் தான் காரணமா? உலகமயமாகி விட்டீர்கள் இதற்குள் என்ன ஒழிவு மறைவு.
palli
குலன் உங்கள் உலகமாயமாக்குதல் கட்டுரையின் 195 பின்னோட்டங்களுக்கு அடிபடை காரணமே இதுதான்; ஆனால் யாரும் அதை செய்ய முன் வரமாட்டார்கள்; அதனால்தான் பல்லி பல கிடப்பில் உள்ள பிரச்சனையை தோண்டுகிறென்; அதிலாவது சிலரது மனங்களாவது அவர்களை நினைவு கூரட்டும், எனது அடுத்த புள்ளி, யார் யார் விடுதலைக்கு சென்று தறுதலைகளால் கொல்லபட்டனர் என்பதே, இதுக்காக கட்டுரைக்கு காத்திருக்க மாட்டேன், சரியோ தவறோ எங்கு இந்த பிரச்சனையை புகுத்தலாமோ அதில் புகுத்தி விடுவேன்; இருப்பினும் குலனின் கட்டுரையில் உரிமையுடன் எனது ஆதங்கங்களை வெளிப்படுத்துவேன், கோபித்தாலும் ஏற்று கொள்ளும் குணம் எம் குலனுக்கு உண்டு; ஆனாலும் கட்டுரையின் திசைமாறாமலே எனது பின்னோட்டங்கள் யதார்த்த உன்மைகளை கொண்டுவர முயற்ச்சிக்கிறேன்;
palli
குசும்பு பல்லியும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பற்றியும்; ரசியாவின் பொருளாதார வீட்ச்சி பற்றியோ அல்லது கொரியாவின் அத்துமீறிய அணுஆயுத செருக்கு பற்றியோ ஏன் ஈரானின் இன்றய சண்டிதனம் பின்லாடனின் பயங்கரவாதம் சோமாலியாவின் வறுமை இந்தினோசியாவின் அழிவு இப்படி பல விடயங்களை எழுத முடியும்; ஆனால் அது என்னை போன்றோருக்கு தற்ப்போது தேவையும் இல்லை; உங்களை போன்றோருக்கு பல்லிக்கு இது தேவையா என தோன்றும்;
ஆகவேதான் நாம் இன்று உலக அரங்கில் என்ன கிழிச்சிட்டு இருக்கோம் என்பதை சொல்ல முயல்கிறேன்; உலகம் பூரா ரோட்டை மறித்து தேர் இழுக்கும் நாம் எமது இனம் அங்கு வாழ வழிதெரியாமல் இருக்குதே அதுக்காக என்ன செய்தோம்; (புலி விடவில்லை உன்மைதான்) அதையும் மீறி இன்று தேசம் சிறு சிறு உதவி கரம் நீட்டுகிறதே, ஆக நாம் எம்மையும் உலகத்தையும் ஏமாற்றுகிறோம்; அதனால் தான் செய்ய வேண்டியதை விட்டு என்ன செய்கின்றனர் என்பதை சுட்டி காட்டுகிறேன்;
மரண அறிவித்தல் தான்; ஆனால் யார் மரணமானார், மூன்று உயிர்களை அவர்கள் வீட்டிலேயே மதிய உணவை உன்று சகசமாக பழகிய பின் கயித்தால் கழுத்தை நெரித்து கொன்ற ஒருவர் இன்று தன் கழுத்தை கயிற்றால் இறுக்கி இறந்துள்ளார் என்பது இந்த உலக தமிழர் தெரிய வேண்டாமா? புலி செய்தால் கொலை மற்றவர்கள் செய்தால் கொழுக்கட்டை என எழுத எனக்கு தெரியாது, ஆகவே உலகத்தில் நடக்கும் சீர்கேடுகளை சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு இது; இது உங்களுக்கு ஒரு மரண அறிவித்தல், எனக்கோ ஒரு கொடூர கொலையின் குற்றவாழியை இனம்கானல்; இதில் என்ன லாபம்: இறந்த அந்த பெண்ணின் குடும்பத்தில் இருந்து பாருங்கள் புரியும்;
பல்லி இவரின் இறப்பில் மகிழ்ச்சி அடையவில்லை, ஆனால் அந்த பெண்ணின் அந்த குழந்தையின் வலியில் உங்களையும் பங்குகொள்ள இதை எழுதினேன்,
Kulan
பல்லி: //அதிலாவது சிலரது மனங்களாவது அவர்களை நினைவு கூரட்டும்// மனிதர்களுக்காகவும் மனிதத்துக்காகவும் எழுதும் நாங்கள் என்றுமே மற்றவர்களின் மனங்களைப் புரிவதும் தேவைகளைத் தெரிந்து புலப்படுத்துவதுமே ஒரு பேனாப் போராளியின் கடமை. இதில் பின்நோட்டக்காரர்களும் அடங்குவர். நான் கட்டுரை மட்டும் தான் எழுதினேன் நீங்கள் அதை நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டீர்கள். இக்கட்டுரையில் எனக்கோ தேசத்துக்கோ இருக்கும் உரிமையை விட உங்களுக்கு அதிகமாகவே உண்டு. உங்கள் எழுத்துக்களையும் நான் நன்கு ரசிப்பேன் பல்லி. உங்கள் எழுத்தில் இருக்கும் உணர்வுகளும் நகைச்சுவையும் ஏராளம். என்ன ஒரு கவலை பல்லியை யார் என்றுதான் தெரியவில்லை. எனக்கு என்னவோ புரியவில்லை எங்கோ அன்று என்னருகால் பல்லி போனமாதிரி ஒரு உணர்வு. எது நல்ல விடயங்களைச் சொல்வதற்கோ எழுதுவதற்கோ பெயரோ அன்றி ஆளையோ அறிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாதே. உண்மையும் அடிப்படை மனிதநேயமும் நேர்மையும் இருந்தால் போதுமே.
Kulan
//ஆனாலும் கட்டுரையின் திசைமாறாமலே எனது பின்னோட்டங்கள் யதார்த்த உன்மைகளை கொண்டுவர முயற்ச்சிக்கிறேன்;//இக்கட்டுரையை திசைமாறவில்லை. மக்களுக்காகத் துப்பாக்கி தூக்கியவர்கள் மக்களின் மனங்களை உணர்வுகளை மதிக்கவில்லை சிலவேளை நானும் இதற்குள் அடங்குவேன். குறைந்தபட்சம் பேனை தூக்கிய நாமாவது மக்களின் நன்மையையும் மக்களின் மனங்களையும் மதிக்கப் பழகுவோமே. பல்லி நீங்கள் செய்தது சரியே. எந்தக் குற்ற உணர்வும் உங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் சரியான பாதையில்தான் பின்நோட்டத்தைக் கொண்ட சென்றிருக்கிறீர்கள். பல உண்மைகள் உலகமயமாக்கப்பட்டிருக்கிறது. நன்றி சொல்ல வேண்டியவன் நான் தான். உங்கள் பணி தொடரட்டும்.
T Sothilingam
//இன்னொரு விடயம் 1984ல் ஆவரங்காலில் பண்டிதரின் முகாமை சுற்றிவழைத்து பெருந்தொகையான நவீனஆயுதத்தையும் போரளிகளையும் சுட்டு கொன்ற இராணுவம் அதைகாட்டி கொடுத்தவர் பண்டிதருடன் சேர்ந்த புலி உறுப்பினர். ஆனால் துரோகியாக சுடப்பட்டவர்கள் ஒரு சிங்கள மில் தொழிழாளியும், வயதான தமிழரும் நீர்வேலியில் தூணில் கட்டி மரணதண்டனை.//சந்தானம்
பண்டிதருடன் அதே முகாமிக்கு போய்வந்து கொண்டிருந்தவர் அன்ரன் அல்லது முஸ்தபா என்றழைக்கப்படும் விஜயசிங்க என்ற சிங்கள இளைஞர். இவர் புலிகளின் உறுப்பினர் இவருடன் யாழ் பாசையூரின் மிகமுக்கிய உறுப்பினரான(அவரது பெயர் உடனடியாக ஞாபகம் இல்லை) இவருடன் சேர்ந்து மோட்டார் சயிக்கிளில் வரும்போது இராணுவம் தடுத்து நிறுத்த நிற்காமல் ஓடினர். இராணுவம் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தது சயிக்கிளை ஓடிக்கொண்டிருந்த முக்கிய புலி உறுப்பினரின் இடுப்பில் பிஸ்டல் இருந்ததை இராணுவத்தினர் தெரிந்திருந்தனர். இவர் மீது துப்பாக்கி ரவவைகள் பாயும்போது இவரது பிஸ்டலின் அடிப்பாகத்தில் (பிஸ்டலின் அடிப்பாகம் இடுப்பில் மேலேதான் இருக்கும்)உள்ள பிளேட்டில் சன்னம் பட்டு இந்த பிளேட் பறக்கும்போது இவரது வயிற்றை கிழித்து இவரது முழு குடல்ப்பகுதியும் வெளியே விழுந்தது. பின்னர் இராணுவம் இவர்கள் இருவரையும் விசாரிக்கும்போதே இவர்களின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பண்டிதர் முகாம் அழித்தொழிக்கப்பட்டது இதற்குள் இவர்கள் யாரையோ கொலைசெய்து தமது பழிவாங்கல்களை அப்பாவிகள் மீது தீர்த்துக்கொண்டனர்
இந்த இரண்டு உறுப்பினர்களும் சயனைட் சாப்பிட்டு சாக விரும்பவில்லை. இதை இந்த சிங்களப்புலி உறுப்பினர் என்னிடம் தெரிவித்தார் தனக்கு சயனைட் சாப்பிடுவதில் உடன்பாடு இல்லை என்றும் புலிகள் இந்த விடயத்தில் விசரன்கள் என்றார். இந்த சிங்கள புலி உறுப்பினர் மட்டுமே காயங்கள் ஏதும் இல்லாமல் உயிர் தப்பினார் மற்றவர் குடல் வெளியேறியதால் மரணமானார்.
இந்த சிங்கள புலி உறுப்பினர் தற்போது இலங்கை இராணுவத்தின் ஆட்டிலறி பிரிவின் மிக முக்கியமானவர். கப்டன் அல்லது மேயர் போன்ற பதவி வகிப்பதாக அறிந்துள்ளேன். நன்றாகவே தமிழ் சிங்களம் எழுத வாசிக்கத் தெரிந்த மனிதாபிமானம் கொண்டவராகவே நான் அவரை அவதானித்துள்ளேன்.
யாரையும் நம்பலாம் புலிகளை அல்ல என்பதும் புலிகள் மற்ற இயக்கத்தவர்களை அழித்தே தீருவார்கள் என்றும் இந்த சிங்களப்புலி 1985ம் ஆண்டு தை/மாசி மாதத்திலேலே சொன்னார். இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து சிங்கள மாகாவித்தியாலயத்தில் படித்தவர் சிங்களப் பிரதேசத்திற்கு தமது உறவினர்களைப் பார்க்க சிலவேளைகளில் பாதுக்கை பிரதேசத்திற்கு போய்வந்துள்ளார்
Kandaswamy
பண்டிதருடன் ஒன்றாக இருந்தவர்கள்(இங்கிலாந்து, கனடா) யாராவது சோதிலிங்கம் சொல்வதை ஏற்று கொள்வார்களோ தெரியாது?
palli
//என்ன ஒரு கவலை பல்லியை யார் என்றுதான் தெரியவில்லை. எனக்கு என்னவோ புரியவில்லை எங்கோ அன்று என்னருகால் பல்லி போனமாதிரி ஒரு உணர்வு//
அதில் என்ன சந்தேகம்; ஆனாலும் தெரிந்தும் தெரியாததுபோல் இருப்பது மிககொடுமை, சந்திரன்போல் எனக்கும் கண்ணீரை வீணடிக்க தெரியாது, ஆனால் என்னையும் அறியாமல் ஒரு நட்புடன் கண்ணாம்பூச்சி ஆடுவது நினைக்கும்போது என்கண்கள் கலங்கதான் செய்கிறது; குலன் பல்லியை இரண்டாவது முறையும் கலங்க செய்துவிட்டீர்கள்; இருப்பினும் எனது நிலை தாங்கள் புரியாததா என்ன; பல்லியை கேட்டே தேசத்துக்கு பல நெருக்கடிகள், இதில் பல்லி தன் வாழ்வை தானே கெடுக்க தற்சமயம் முன்வருவது கடினம், இருப்பினும் பல நட்ப்புகளை இளந்த நாம் கண்டிப்பாக சில நட்ப்புகளாவது ஒன்று சேருவோம் என்னும் நம்பிக்கையில் தொடர்வோம் எமது இன்றய பணியை, இது குலனுக்கு மட்டுமல்ல மாயா, சந்திரா ஜெயபாலன்; சோதி, குசும்பு, இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும், மக்கள் நின்மதியாக வாழ வழிகிடைத்தால் நாம் கட்டிபிடிப்போம்; இல்லையேல் முடிந்த மட்டும் அவர்களுக்காக எட்டியே தொலைப்போம்:
santhanam
/சிங்களப் பிரதேசத்திற்கு தமது உறவினர்களைப் பார்க்க சிலவேளைகளில் பாதுக்கை பிரதேசத்திற்கு / சோதிலிங்கம் இது உண்மை அவரின் பெயர் ரோகான்
பண்டிதர் ஒரு அஷ்மா வருத்தமுள்ளவர் அதனால் சைக்கிலில் வைத்து இவர்தான் ஓட்டுவார். இவர் ஏதோ அலுவலாக வீட்டுக்கு போய்வரும் போது பிடிபட்டுவிட்டார் ஆனால் பண்டிதரிற்கு மிகநம்பிக்கைக்குரியவர் பண்டிதர் அதற்குள்ளிருந்து தப்பியிருக்கலாம் தனது பிழையால் ஏற்பட்டதால் கடசிவரையிருந்து போரடிமடிந்தார்.
Chinnavan
பின்னர் இராணுவம் இவர்கள் இருவரையும் விசாரிக்கும்போதே இவர்களின் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த பண்டிதர் முகாம் அழித்தொழிக்கப்பட்டது இதற்குள் இவர்கள் யாரையோ கொலைசெய்து தமது பழிவாங்கல்களை அப்பாவிகள் மீது தீர்த்துக்கொண்டனர்/ சோதிலிங்கம்- புலிகள் என்று சரியான துரொகிகளைச் சுட்டார்கள் அப்படி அவர்கள் சரியாகச் சுடவேண்டும் என்றால் தம்மைத் தாமே சுட்டிருக்க வேண்டும்: எங்களுக்கு ஒன்றுமாய் தெரியவில்லை. புலி சிங்கள அரசையும் சிங்கள மக்களையும் எதிர்த்தது சுட்டுத்தள்ளியது. ஆனால் சிங்களவரை இயகத்தில் சேர்த்து வைத்திருக்கிறது. புலிகள் மற்றவர்களைப் பார்த்து கைக்கூலிகள் என்றார்கள் நான் நினைக்கிறேன் புலிகளின் எல்லா நடவடிக்கைகளையும் நினைத்துப்பார்த்தால் புலிகள்தான் சிங்களஅரசின் கைக்கூலி என்று
Kulan
பல்லி//சந்திரன்போல் எனக்கும் கண்ணீரை வீணடிக்க தெரியாதுஇ ஆனால் என்னையும் அறியாமல் ஒரு நட்புடன் கண்ணாம்பூச்சி ஆடுவது நினைக்கும்போது என்கண்கள் கலங்கதான் செய்கிறது//
யாரந்தச் சந்திரன்? பலதடவை நீங்கள் எழுதிய விடயங்கள் பக்கத்தில் இருந்தது போல் இருந்தது. நான் நினைக்கிறேன் பல்லிக்கு என்னைத்தெரியும் என்று. ஆனால் எனக்குத்தான் பல்லி யாரென்று தெரியவில்லை. மறைந்து நின்று எழுதுவதில் பல நன்மைகள் உண்டு. சுயமாக எழுதும் போது எழுதியவரையும் அவரின் பின்னணியையும் பார்க்கும் மனிதர்கள் கட்டுரையை உன்னிப்பா அவதானிப்பதில்லை. முகம் தெரியாது இருக்கும் போது சுயகெளரவம் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ என்ற பயம் இன்றி எழுதலாம். கருத்து முக்கியமே தவிர எழுதியவர் யாரென்பது அவசியமாற்றது. நான் பல்லியை தொந்தரவு செய்யவில்லை. ஏதோ நாம் போகும் பாதை சரியானது என்று எண்ணிக்கொண்டு செல்கிறேன். பிழையிருந்தால் யாரும் சுட்டிக்காட்டலாம். பல்லி நீங்கள் மறைந்து நின்றாலும் நல்ல விடயத்தைத்தானே செய்கிறீர்கள். பணி தொடரட்டும்.
குகபிரசாதம்
1989 யூலை மாதம் 16ம் திகதி இரவு தெகிவளையில் உமாமகேஸ்வரன் தங்கியிருந்த வீட்டுக்குள் சிறிலங்கா இராணுவம் புகுந்தது. உமாமகேஸ்வரன் பின்பக்க மதிலால் ஏறிக் குதித்து தப்பி ஒடிவிட்டார். மற்றவர்களைப் போல் மனம் மாறாமல் உமாமகேஸ்வரன் மேல் நம்பிக்கையோடு இருந்த அவரது மெய்க்காப்பளர்களில் ஒருவரான சக்திவேலை மட்டும் இராணுவத்தினர் கைது செய்து சென்றுவிட்டனர். மதில் பாய்ந்து ஓடிய உமாமகேஸ்வரன் ஆச்சிராஜன் மற்றும் ராபின் துணையோடு பம்பலப்பிட்டி தொடர்மாடிக் கட்டிடத்திலிருந்த அவருக்கு வேண்டிய ஒருவர் வீட்டில் சென்று தங்கியிருந்தார்.
மறுநாள் 17ம் திகதி காலை தாங்கள் பாதுகாப்பு நிலைமைகளை அறிந்து வருவதாக சொல்லிவட்டு ஆச்சி ராஜனும், ராபினும் வெளியே சென்றனர்.
அன்று மதியம் ஆச்சி ராஜன் மட்டும் திரும்பி வந்து சாப்பிடப் போக வரும்படி உமாமகேஸ்வரனை அழைத்தான். அவர் அவனுடன் வெளியே வந்ததும் அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்பிருந்த காலிவீதியால் செல்வது ஆபத்தானது என்றும் பின்புறமாக கடற்கரையோரம் உள்ள வீதி வழியாக செல்லலாம் என்றும் சொல்லி அவரை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் அந்த வீதியில் சிறிது தூரம் சென்ற போது ராபின் உட்பட 5 பேர் அங்கே ஓரிடத்தில் இருந்தார்கள். அதைக்கண்ட உமாமகேஸ்வரன் இந்த சனியன்கள் இதில ஏன் நிற்குதுகள் உதுகளுக்குச் சொன்னாலும் விளங்காது என்று பேசிக் கொண்டு அவர்களைக் கடந்து அப்பால் சென்றார்.
ஒரு பத்து மீட்டர் தூரம் அவர் சென்றிருக்கமாட்டார் அதற்குள் முதல்வெடி அவரது முதுகைத் துளைத்தது. ஐயோ என்று அவர் அலற அடுத்தடுத்த வெடிகள் அவரது உடலைத் துளைத்தன. அவர் நிலத்தில் சுருண்டு வீழ்ந்தார். அந்த இடத்திலேயே அவர் கதை முடிந்தது.உமாமகேஸ்வரன் கொலை முடிந்த கையோடு சென்னை வடபழனி தேசிகர் தெருவில் உள்ள 11ம் இலக்க இல்லத்தில் ஒரு கூட்டம் நடந்ததாகவும் அதில் இன்றைய புளொட் தலைமை உட்பட இன்றைய புளொட் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உமாமகேஸ்வரனின் கொலையை நியாயப்படுத்தி அதற்கான காரணங்களை ஒரு ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்து இலங்கையில் எஞ்சியிருந்த புளொட் உறுப்பினர்களுக்குப் போட்டுக் கேட்க ஏற்பாடு செய்து அனுப்பியும் இருந்தார்கள். இந்த ஒலிப்பதிவு நாடா மற்றவர்களின் கையில் அகப்படாத வகையில் வவுனியாவில் வைத்து அதை மாணிக்கதாசன் தீயிட்டுக் கொளுத்தினான்.
உமாமகேஸ்வரன் கொலையுண்டவுடன் அவரது சடலத்தைப் பொறுப்பேற்க உடனடியாக யாரும் முன்வரவில்லை. உமாமகேஸ்வரன் கொல்லப்பட்டுவிட்டார், அதுவும் ஆச்சிராசன், ராபின் ஆகியோர் தான் அவரை அழைத்துச் சென்று கொலைசெய்தவர்கள் என்ற விடயத்தை மற்றவர்களுக்கு முதலில் சொன்னவர் சாம் முருகேசு என்பவர். இவர் தான் அத்துலத்முதலியின் உதவியுடன் பின்னர் உமாமகேஸ்வரனது சடலத்தைப் பொறுப்பேற்று வவுனியாவிற்கு கொண்டு சென்று அடக்கமும் செய்தார்.ஆனால் உமாமகேஸ்வரன் இறந்தவுடன் புளொட்டின் பொலிப் பீரோவோ, மத்திய குழுவோ கூட்டப்படவில்லை. மாறாக மாநாட்டில் இயக்கத்தின் சகல பொறுப்புக்களிலுமிருந்து இடை நிறுத்தி வைக்கபட்ட மாணிக்கதாசன் வவுனியாவில் வைத்து தனக்கு வேண்டிய சிலரின் உதவியோடு தானே அமைப்பின் தற்காலிக தலைவராக தன்னை தானே பிரகடனப்படுத்திக் கொண்டார்.
ஆச்சிராசன், ராபின் அகியோரே உமாமகேஸ்வரனை கொலை செய்ததாக சொன்ன சாம் முருகேசுவே உமாமகேஸ்வரனை கொலை செய்த ஆயதத்தை வைத்திருந்ததாகவும் பின்பு அவற்றை புளொட்டின் புதிய நிர்வாகம் அவரிடமிருந்து பெற்று மறைத்துவிட்டதாகவும்; சிலர் சொல்கிறார்கள். இதில் எந்தளவு துரம் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ஏனெனில் அதன் பின் சாம் முருகேசு நீண்ட காலம் உயிரோடு இருக்கவில்லை. திடீரென்று மர்மமான முறையில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். இதேபோல் உமாமகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட தினத்திற்கு முன் தினம் சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட உமாமகேஸ்வரனது நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாப்பாளரான சக்திவேல், உமாமகேஸ்வரனை கொன்றவர்களை பழிவாங்கியே தீருவேன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார். திடீரென்று அவரும் ஒரு நாள் கொலையுண்டு போனார். 1993ம் ஆண்டு சிறிலங்கா அரசின் தேவைக்காக ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்த மாணிக்கதாசன் முன்னாள் புளொட் உறுப்பினர்கள் பலருக்குத் தொலைபேசி எடுத்து உமாமகேஸ்வரனைக் கொலை செய்த ஆச்சிராசனை தாங்கள் கொன்றுவிட்டதாக அதாவது அவருக்கு தண்டனை கொடுத்துவிட்டதாக சொல்லியிருந்தார்.
இதைவிட சுவீசில் வசித்து வந்த ராபினும், அவரது மனைவியும், மனைவி வயிற்றிலிருந்த குழந்தையும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சுவீஸ் பொலிசார் அங்கேயிருந்த புளொட் உறுப்பினர்கள்தான் இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகள் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.
குகபிரசாதம்
//இன்னொரு விடயம் 1984ல் ஆவரங்காலில் பண்டிதரின் முகாமை சுற்றிவழைத்து பெருந்தொகையான நவீனஆயுதத்தையும் போரளிகளையும் சுட்டு கொன்ற இராணுவம் அதைகாட்டி கொடுத்தவர் பண்டிதருடன் சேர்ந்த புலி உறுப்பினர். ஆனால் துரோகியாக சுடப்பட்டவர்கள் ஒரு சிங்கள மில் தொழிழாளியும், வயதான தமிழரும் நீர்வேலியில் தூணில் கட்டி மரணதண்டனை.//சந்தானம்
தொய்வு நோயால் பீடிக்கப்பட்டிருந்த பண்டிதரின் (சின்னத்துரை ரவிந்திரன் வல்வெட்டிதுறை 25.12.1959) ஆவரங்கால் முகாம் 1984 இல அல்ல, ஜனவரி 09, 1985 இல படையினரால் சுற்றி வளைக்கப்பட்டபோது ரவி, சாமி, சிவா, தவம்,நேரு ஆகியோருடன் மரணமானார்.
palli
குலன் சந்திரன் ராஜாவைத்தான் சந்திரன் என எழுதினேன், எமது கண்ணீர் கூட கட்டியாகி விட்டது என சொன்னாரல்லவா?
chandran.raja
…இக் கிராமங்களை சூழவுள்ள பகுதிகள் வேலைசெய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு ஐந்து யூரோ வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்படுகிறது. ஆனால் இவர்களை பணிக்கமர்த்தும் முதலாளிகள் சம்பளத்தின் பெரும்பகுதியை போக்குவரத்து செலவுக்கென கழித்துக் கொள்ளுகிறார்கள். மேலும் பரிதாபகரமான நிலையில்லுள்ள கூடாரமுகாம்களில் வாழும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். இந்த அடிமை தொழிலாளர்கள் வெளியேறா வண்ணம் காவல்காரர்கள் வேட்டைநாய்களுடன் ரோந்து சுற்றுகிறார்கள்.
முகவர்களால் ஏமாற்றி அழைத்துவரப்படும் ஐரோப்பியாவை சேர்தவர்களும் அகதியாகவரும் ஆபிரிக்கர்களும் இவ்வாறு அடிமைகளாக சுரண்டப்படுகிறார்கள். இத்தாலியின் தக்காளித்தோட்டங்கள் உலகமயமாக்கப்பட்ட ஐரோப்பிய-முதலாளிகளின் சுரண்டலுக்கு சிறந்த உதாரணம். குறிப்பாக கானா நாட்டில்லிருந்து வரும் அடிமையுழைப்பில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள் கானாவுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. கானா சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாகும் இத்தாலி தக்காளிகள் கானாவின் உற்பத்தியை பாதிக்கின்றன. வாழ்வாதாரத்தை இழந்த கானா விவசாயிகள் உயிரைமட்டும் காப்பாற்றிக்கொண்டு அகதியாக இத்தாலிக்குள் நுழைகின்றனர். (இந்தியா இலங்கையிலும் இதேகதை தான்) நன்றி. “கலையகம்”
Kulan
சந்திரன் ராஜா//இத்தாலியின் தக்காளித்தோட்டங்கள் உலகமயமாக்கப்பட்ட ஐரோப்பிய-முதலாளிகளின் சுரண்டலுக்கு சிறந்த உதாரணம். குறிப்பாக கானா நாட்டில்லிருந்து வரும் அடிமையுழைப்பில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள் கானாவுக்கு ஏற்றுமதி செய்யபடுகின்றன. கானா சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனையாகும் இத்தாலி தக்காளிகள் கானாவின் உற்பத்தியை பாதிக்கின்றன. வாழ்வாதாரத்தை இழந்த கானா விவசாயிகள் உயிரைமட்டும் காப்பாற்றிக்கொண்டு அகதியாக இத்தாலிக்குள் நுழைகின்றனர். (இந்தியா இலங்கையிலும் இதேகதை தான்) நன்றி. “கலையகம்”// சரியான ஒரு உலகமயமாதலை தேடி எழுத்துவந்து தந்திருக்கிறீர்கள்.
ஐரோப்பாவில் எந்தநாட்டவனை வைத்து விளைவித்தானோ அந்த நாட்டவனை அழிப்பதற்கு அந்த ஏழையின் உதிரமே ஊற்றப்படுகிறது. எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமிது. ஏதோ தமிழ்ஈழம் இலங்கை மயமாகியிருக்கிறது. இலங்கை பிராந்திய மயமாதலினூடு உலக மயமாகியிருக்கிறது.
Kulan
பல்லி! எங்கெங்கோ இருந்து இன்றும் எம்மக்களுக்கா அவர்களை இன்றும் எண்ணியபடி இருக்கிறோமே. நாம் யாராத்தான் இருந்தால் என்ன. ஏதோ ஒரு நன்மை கருதி தேசம் எனும் பொதுத்தளத்தில் நான் முகம் தெரியாவிட்டாலும் செயற்படுகிறோம். ஆனால் இன்று நேற்று வந்த இளசுகள் கடல் கடந்ததும் நாட்டையும் ஊரையும் உறவுகளையும் மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழத் தொடங்கி விட்டார்கள். நன்றி பல்லி நாம் மனிதருக்காக மனித: புவியியல் நலன்களுக்காகப் போராடுவோம்:
Kusumpu
உமாவின் கொலையை இவ்வளவு துல்லிதமாகச் சொல்கிறீர்களே உங்கள் தகவல் எங்கிருந்து கிடைத்தன. கொலைக் குற்றங்களை கண்ட நிண்டபடி போடுவது கவனம்
palli
பண்டிதர் கூட கதைப்பார் கூடுதலாயும்(புளுகு) கதைப்பாராம்; அதுவே அவரையும் அவரது முகாமையும் அழித்ததாக அவருக்கு போட்டியாக உருவான அல்பேட்(ரூபன்) அச்சுவேலியை செர்ந்தவர் அடிக்கடி சொல்வதாக நண்பர் சொல்லுகிறர், உன்மையோ பல்லிக்கு தெரியாது,
palli
//சுவீஸ் பொலிசார் அங்கேயிருந்த புளொட் உறுப்பினர்கள்தான் இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகள் என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்திருக்கிறார்கள்.//
குகபிரசாதம் ஏன் நிறுத்தி விட்டியள்? தெரியவில்லையா? அல்லது தெரியகூடாதா?
T Sothilingam
//சோதிலிங்கம் இது உண்மை அவரின் பெயர் ரோகான், பண்டிதர் ஒரு அஷ்மா வருத்தமுள்ளவர் அதனால் சைக்கிலில் வைத்து இவர்தான் ஓட்டுவார். இவர் ஏதோ அலுவலாக வீட்டுக்கு போய்வரும் போது பிடிபட்டுவிட்டார் //சந்தானம்
நீங்கள் சொல்வது சரி அவர் ஒரு பெளத்தன் அவரது பெயர் அன்ரன் ஆக இருக்க முடியாது .அன்ரன் அவரின் இயக்கத்தின் மற்றுமொரு பெயர்தான், முஸ்தபா என்பதும் அவரின் பெயராக இருக்கலாம்.
புலிகள் இராணுவத்தோடு பேச்சுவார்த்தை செய்யும்போது 1987 ல் ஒரு சிங்கள யுவதி புலிகள் சார்பில் பேச்சுவார்த்ததைக்கு போனார் இவரைப்பற்றி தெரியுமா? இவர் இன்னுமொரு சிங்கள இளைஞன் காமினி, இவர் கைதிகள் பரிமாற்றததின் போது புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் ஜீவாவும் இந்த காமினியும் பரிமாற்றம் செய்ப்பட்டனர், இவரின் சகோதரியா இந்த பேச்சுவார்த்ததைக்கு போன சிங்கள பெண்மணி இந்த தகவலை உறுதிப்படுத்த முடியமா??
நன்றி சந்தானம்
santhanam
/ரவி சாமி சிவா தவம்நேரு //இவர்களில் சிவா மிகவும் கொடுரமான சித்திரவதைக்கு பின் கொலை செய்யபட்டார் இவரைதான் இராணுவம் முதல் வீட்டில் வைத்துபிடித்து மிகுதிதகவலை பெற்றது.
//அல்பேட்(ரூபன்) அச்சுவேலியை/ /இவர் ஒரு சிறந்த கெரிலாபோராளி அங்கே அப்படியான போட்டி அப்ப இருந்ததாக நான் அறியவில்லை பல்லி ஆனால் இது வாடிக்கையான புனைகதையாக இருக்கலாம் ஆனால் கிட்டன் யாழில்பிரபல்யம் ஆவதற்கு அல்பேட்தான் காரணம் அவரது யாழில் சிறந்தகெரிலாதாக்குதல் அணி ஆனால் சுதுமலையில் தான் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஏன் கொல்ல???
ஆனால் நான் அவரது செத்தவீட்டுக்கு போனேன் கிட்டன் வரவில்லை .
chandran.raja
நண்பர் குலன்; நாளை உலகம் எப்படி வரும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஓரளவு ஊகிக்கமுடியும். உலகமயமாக்கலில் நன்மையும் தீமையும் கலந்திருக்கிறது என்ற உங்கள் வாதத்தை நான் மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்ளுகிறேன். இதனால் பலபேரளிவுகளும் வந்து சேரும். இலங்கையை பாதுகாக்க வேண்டுமானால் நாம் ஏன் நிபந்தனையில்லாமல் சிறீலங்கா சுகந்திரக்கட்சியையும் மகிந்தாராஜபக்சாவையும் பாதுகாக்க வேண்டுமென்பதை நாளை அல்லது நாளை மறுநாள் புள்ளி விபரங்களுடன் தருகிறேன். அதுவரை காத்திருக்கவும். தாமதத்திற்கு கம்யூட்டர் பிரச்சனை தந்துகொண்டிருக்கிறது.
suban
நீங்கள் எல்லோரும் நேரங்களை அளவுக்கதிகமாகச் செலவு செய்கிறீர்கள்? ஏன் இந்தச்செலவு என்று அழுத்தமாக கேட்டுக்கொள்வது நல்லது.
கந்தசாமி குறிப்பிட்டது போல எங்கள் கதைமாந்தர்கள் ஒன்றும் திரும்பதிரும்ப படித்து மனப்பாடம் பண்ணவேண்டிய பிரகிருதிகள் அல்ல.
palli
// ஏன் கொல்ல???//
புனைகதைகள் இதுக்குள்தான் அடங்கி உள்ளது சந்தானம்; புலியில் ரூபன் சீலனுக்கு பின் மிக சிறந்த போராளி என்பதில் கருத்து முரன்பாடு கிடையாது; ஆனால் ரூபனும் சீலன்போல் தனது இறப்பை தவிர்த்து கொண்டிருக்கலாம்; இருவரையும் ராணுவம் சுலபமாக முடித்து விட்டது, இதில் ரூபன் வளர்ச்சி மிக விரைவானது, அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் இருந்து கழகத்துக்கு போனவர்களை சங்கிலி இவர்கள் புலியின் ஊடுருவல்(ரூபன் ஊர் என்பதுக்காகவே) என போட்டு தள்ளி விட்டாராம்; இவர்களே பிந்தளத்தில் சவுக்கம் காட்டுக்கு இரையாக்கபட்ட ஆரம்ப பிள்ளைகள் என அதே அச்சுவேலிக்கு பொறுப்பாய் இருந்த கழக ரூபன் பின்னாளில் சொல்லி கவலைப்பட்டாராம், இந்த ரூபன் இப்போதும் இந்தியாவில் வாழ்கிறார், தனது காதலியை ஒரு கொடிய மிருகம் கடத்தி கட்டாய திருமணம் செய்து அதுக்கு இரு குழந்தைகளும் பிறந்து, இன்று அந்த மிருகம் கொல்லபட்டும் விட்டது, அதன்பின் ஆதரவற்று நின்ற அந்த தனது பளய காதலியுடன் அன்புடன் அமைதியாய் ரூபன் வாழ்கிறார், கழகத்துக்கு தான் இனைத்து பின் பின்தளம் அனுப்பிய பலர் எதுவும் அறியாமல் கொல்லபட்டு விட்டார்களே என்னும் மனபாரம் இன்றும் அவரிடம் உண்டு;
santhanam
/அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் இருந்து கழகத்துக்கு போனவர்களை சங்கிலி இவர்கள் புலியின் ஊடுருவல்/ இது உண்மைதான் சங்கிலியின் உட்கொலைக்கு காரணம் ஊடுருவல் என்றசந்தேகம் இதை யாரும் எழுதுவார் என்று எதிர்பார்த்தேன் பல்லியே கோடு போட்டுள்ளீர்.அல்பேட்டின் துணிச்சலும் ஒரு போரளிக்கிருக்கவேண்டிய குணாம்சம் ஒரு சிறந்தவிளையாட்டு வீரன் இன்றும் என்னுடைய நண்பர்கள் அல்பேட்முகாமில் தாங்கள் இருந்ததை இப்பவும் பெருமையாக கதைப்பார்கள்.
palli
//நீங்கள் எல்லோரும் நேரங்களை அளவுக்கதிகமாகச் செலவு செய்கிறீர்கள்? //
அப்போ லெனினின் கிழக்கு பார்வையையும் மார்க்கோவின் கடலளவையும் என்னும் ஒரு நாலு தலமுறைக்கு மனபாடம் செய்யலாமா? ஒரு உதாரனம்; மச்சான் நீ அந்த லெனினின் கிழிந்த சட்டை என்னும் புத்தகத்தில் 396ம் பக்கத்தை கவனித்தாயா? அருமயாக சொல்லியிருக்கு மச்சான்; இப்படி பேரம் பேசுவதே இன்றய எமது அழிவு ஜீவிகளின் செயல்பாடாக இருக்கும்போது நாம் எம்முடன் வாழ்ந்த; வாள வேண்டிய ; காரணமே தெரியாது கொல்லபட்ட; தியாகிகள் என்னும் போர்வையுடன் செயல்பட்ட மாவியாக்கள் பற்றி நாம் பேசினால் உங்களுக்கு கசக்கதான் செய்யும், எமது நோக்கம் இவர்களை அசை போடுவதல்ல, நாம் வாழ்ந்த காலத்தில் நடந்த திருகூத்துகள் பலருக்கு தெரிய வேண்டும், இல்லையேல் இவர்கள் கூட சில சிவப்பு மட்டை புத்தகங்களை வருஙாலத்தில் அலங்கரிக்க கூடும்; தேசம் மிக பெரியது, அதில் நாம் ஒரு சிறு மூலையில் தான் ஒதுங்குகிறோம்; நீங்கள் ஏன் அதுக்குள் வருவான்; வேறு ஒரு மூலையில் உங்கள் கடையை திறவுங்கள், அதிலும் சிலர் வரட்டுமே, தவறு என்ன என்பதை உணராத வரை எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண்பது கடினம், இது குடும்ப வாழ்க்கையில் இருந்து மருத்துவம் வரை நாம் அனுபவமூலம் கண்ட உன்மை, இது உங்களுக்கு எதிர்பான பின்னோட்டம் அல்ல, அமது பின்னோட்டத்துக்கான காரணங்கள்; சங்கரியரிடம் ஒருமுறை காக்கா பற்றி கேட்டேன் அவர் சொன்னார் அவன் ரெலோவின் மிகபெரிய தூண் என, புரிந்தால் புரியுங்கள்,
Kusumbu
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. புலிகள் ஈழம் கேட்டுப் போராடினார்கள் சரி சிங்களவரை ஈழத்தை விட்டு விரட்ட வேண்டும் என்றார்கள் சரி பின்பு எப்படியப்பா இயக்கத்தில் சேர்த்து வைத்திருந்தார்கள். அனுராரபுரத்தில் அப்பாவிச் சிங்களவரைச் சுட்டார்கள் பின் எப்படி சிங்களவரை இயக்கத்துக்குள் வைத்திருந்தார்கள். இப்ப கூட மூளையறறுந்த புலிகளுக்கும் புலிப்புண்ணாக்குகளுக்கும் புலிகள் மாவியாதான் என்று இன்னும் புரியவில்லை என்றால் இவர்களை அழிந்து போக விடுவததைத் தவிர வேறு வழியில்லை.
//ஆனால் நான் அவரது செத்தவீட்டுக்கு போனேன் கிட்டன் வரவில்லை// ஏன் கிட்டன் வரவில்லை. பிடிபட்டு விடுவேன் என்றா? அல்லது பெயரும் புகழும் வரும்போது களத்தில் வைத்து போடும் கைமுறை கையாளப்பட்டதா?
Kulan
சந்திரன் ராஜா! நீங்கள் ஒருவிடயத்தை வெளிப்படையாகச் சொல்கிறீர்கள். என்னால் சொல்ல இயலாது. அப்படி ஒரு சூழ்நிலை. பிரபாகரனைக் வெற்றுவிட்டார் மகிந்த என்பதை மட்டுமே புலிகளும் புலிப்பினாமிகளும் யோசிக்கிறார்களே தவிர அங்குள்ள மக்களின் விருப்பு> நடந்த நன்மைகள்> எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் என்பதைப்பற்றி யாரும் புலிகளும் புலம்பெயர்ந்த புலிப்புண்ணாக்கு எண்ணியதாகத் தெரியவில்லை. யுஎன்பியும் சுதந்திரக்கட்சியும் பேய்கள் தான் ஆனால் இந்தப் பேய்களுக்குள் எது சிறந்த பேய் எமக்கு சிறிதாவது நன்மை செய்யக்கூடிய பேய் என்பது தான் எமது இன்றைய முடிவாக இருக்க வேண்டும். உலகமாயமாதல் நிலை வளர்ந்து கொண்டு இருக்கும் போது பிரித்தாளும் நிலை தளரும் கூட்டிவைத்துக் கும்மியடிக்கவே முயல்வார்கள். அந்தக் கூட்டுக்குடும்பத்துக்குள் எப்படி நாம் பிரச்சனையைத் தவிர்த்து எம்மக்களைப் பலமுள்ளவர்களாக்க மாற்றலாம் என்பதைத்தான் நாம் இன்று சிந்திக்க வேண்டுமே தவிர ஈழம் கடந்த ஈழம் கிடந்த ஈழம் என்பது மீண்டும் தமிழ்மக்களைப் பேய்க்காட்டவே உதவும்.
Kusumbu
//சங்கரியரிடம் ஒருமுறை காக்கா பற்றி கேட்டேன் அவர் சொன்னார் அவன் ரெலோவின் மிகபெரிய தூண் என புரிந்தால் புரியுங்கள்// எந்தச் சங்கரி? எந்தக்காக்கா? புளொட்டில் இருந்த சிவநேசன் எனும் காக்காவா? ஊரெங்கும் காக்காக்களாகப் பறக்கிறதே. எந்தக்காக்கா என்று தான் தெரியவில்லை
chandran.raja
// யு என்பியும் சுகந்திரகட்சியும் பேய்கள்தான் இந்த பேய்களுக்கள் சிறந்த பேய்…//குலன்.
என்னை விட திறமையாகவே மூலத்ததை புரிந்து வைத்திருக்கிறீர்கள் குலன். சிறந்த பேயை தற்சமயம் தேடமுடியாது. தேடவேண்டுமென்றால் எமது உள்ளுர் பேய்களை விரட்டியாக வேண்டும். கூரையை பிய்த்து நடுச்சாமத்தில் துன்பம் கொடுத்துக் கொண்டிருந்த பேய்கள் அநேகமாக விரட்டியடிக்கப் பட்டுவிட்டன. இந்த பேய்களின் நடமாட்டம் இருந்திருந்தால் யாழ்பாணம் அமைதி கண்டிருக்குமா?. வன்னிமக்கள் தான் ஒளியை நோக்கி பயணத்தை தொடங்கியிருக்க முடியுமா?
வேறு மரத்தில் குடியேறிய புலம்பெயர் பேய்கள் தமது ஆவேசம் கலைந்து அமைதியாகி விட்டது போல்தான் தோன்றுகிறது. பூசாரி கொடுக்கிற புக்கையுடன் தமது சாந்த நிலையடைந்து விட்டது. எந்தநேரம் என்நிலை மாறும் என்று சொல்லை முடியாது. ஏன்என்றால் அவர்கள் பேய்கள் தானே. நாம்தானே கூடி வாழ்வதைப்பற்றி முடிவெடுக்கவேண்டும்.
chandran.raja
உலகமயமாதலுக்கு முன்பே மூன்றாம் உலகநாடுகளின் மலிவான கூலிஉழைப்பு மூலவளம் எரிபொருள் சந்தை என்பவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் உலகமயமாதலின் விளைவாக மேற்கத்திய தொழில்நுட்பங்கள் நவீனதொழில் உற்பத்திமுறைகள் கீழைநாடுகளுக்கு பரவியுள்ளமையும் தமது உற்பத்தியாற்றலையும் தம்கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தையும் பெற்றமையும்….ஆசியாவில் சீனா இந்தியா வியட்நாம் இந்தோனீசியா மலேசியா என்று பலதொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத்தொடங்கி விட்டன.
உதாரணமாக: சீனாவானது 1978ல் உலகஏற்றுமதியில் 0.8 வீதம் கொண்டிருந்தது இது 2006ல் 20 வீதமாக வளர்ந்தது.2005ல் சீனாவின் பொருளாதாரம் பிரித்தானியா பிரான்ஸ் ஆகியநாடுகளின் பொருளாதாரத்தையும் தாண்டி வளர்ந்தது.
2008 இன்முடிவில் சீனாவின் பொருளாதார உற்பத்தியாற்றல் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளையும் முந்தி முதல்இடத்தை பெற்றுவிடும் என்று மேற்கத்திய பொருளாதார நிபுணர்களே ஒப்புக்கொள்ளுகிறார்கள். உலகமயமாதல் ஐம்பது நுhறு என தேவைப்படவில்லை. பிரித்தானியாவின் பொருளாதார வளர்சி இரண்டுமடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்க பொருள்ளாதரமானது இருமடங்காக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் சீனா பொருளாதரமானது 9வருடங்களுக்குள் இரண்டு மடங்காக வளர்ந்தது.
2000ம் ஆண்டில் எடுக்கபட்ட மதிப்பீட்டில் நான்குவருடங்களில் கிராமங்களில்லிருந்து கிராமங்களில்லிருந்து 70 மில்லியன் மக்கள் நகரங்களில்
குடியேறியுள்ளனர். 2005 ஆம் ஆண்டில் 147 மில்லியன்மக்கள் நகரங்களுக்கு வேலைதேடிவந்தனர். இப்பொழுது வருடாவருடம் 60 மில்லியன் மக்கள் வேலைதேடி சீனப்பெருநகரங்களுக்கு வருகிறார்கள். 2000ம் ஆண்டில் 562 ஆகயிருந்த சீனநகரங்களின் தொகை 2006ம் ஆண்டு 685 ஆக
அதிகரித்திருக்கிறது. சங்காய் பீக்கிங் கொங்கிங் போன்ற நகரங்கள் மேற்குலகின் லண்டன் பாரீஸ் பிராங்போட் நீயூயோக் போன்ற நகரங்களை சிறு பட்டணங்களாக மாற்றிவிட்டது. சீனக்கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் சீனாவின் பெருநகரங்களில் உலகின் மிகப்பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்திசெய்து விட்டார்கள். பெரிய பாட்டாளிவர்கம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலகமயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும்.
Kulan
பேக்கதை என்றாலும் உண்மையிருக்கிறது. புலிப்பேயைக் கலைத்தாயிற்று அது வந்து புலத்தில் தாவியிருக்கிறது. பணத்தை வைத்துக் கொண்டு தலைவிரித்தாடுகிறது. நான் நினைக்கவில்லை ஊரில் இனிப்புலிப்பேய் உலாவும் என்று. ஊரிலுள்ள மக்கள் புலியும் வேண்டாம் புலியின் வாலும் வேண்டாம் என்று இருக்க இன்று நோர்வேயில் தமிழீழம் கேட்டு நாடுகடந்த ஈழம் நாட்டுக்குள் ஈழம் என்று பிராந்தியத தேர்தல் சர்வதேசத் தேர்தல் என்று இரண்டு வாக்களிப்புகள் நடக்கிறதாம். இதற்க வோட் பண்ணி புலனில்லாத புலம் பெயர்ந்ததுகள் போகின்றனவாம். நாலுகாலில் போனால் கூட மன்னிக்கலாம் மூன்று காலுகளும் செல்கின்றனவாம். தேர்தலுக்கு ஒரு இடம் ஒழுங்கு செய்து முழுநாளும் வைத்திருப்பதற்கு ஒரு தொகை பணம் வேண்டும். பல மண்டபங்கள் நாடு பூராக ஒழுங்கு செய்திருக்கிறார்களாம். பணம் எங்கிருந்து வந்தது. பிரபாகரன் இருக்கும் போதே அடித்த பணம் அனுப்பியாற்று என்றார்கள். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? என்னுள் ஏற்பட்ட விரத்தியிலும் மனிதத்தை நேசிப்பதாலும் எழுதுகிறேன். விழுமியங்கள் கலை கலாச்சாரம் மொழி என்று மனிதம் அழிக்கப்பட்டது போதும். அங்குள்ள மக்கள் சிங்கத்தை படித்து சிங்களவராக மாறி ஒன்றுமையால் வாழ்ந்தால் போதும் என்ற கணக்குக்குள் வந்து நிற்கிறேன். அங்கே தமிழர் என்று இருந்தால் புலத்துப்பினாமிகள் வாழவிடமாட்டார்கள் ஐயா…. சொல்லிச் சொல்லி எழுதி எழுதிக் களைத்து விட்டோம். கேட்பார் யாருமில்லைப்போல் இருக்கிறது.
மாயா
உமாவின் கொலை குறித்து குகபிரசாதம் எழுதியுள்ள தகவல்கள் முழுமையாக தெரியாமல் இருந்தது. ஆனால் அது குறித்து சரியான தகவல்களை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் என்றே நம்புகிறேன். சாம் முருகேசுவை எனக்குத் தெரியும். அவர் டில்லியில் பயிற்சி பெற்றவர். சொந்த இடம் முருங்கன். நிக்கவெரட்டிய தாக்குதலுக்கும் சென்றவர். நிக்கவெரட்டிய தாக்குதல் குழுவில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த குழுவில் இவர் இருந்தார். சுவிஸில் கொல்லப்பட்ட ராபினின், கொலைக்காக வந்த மாணிக்கதாஸன் முதலில் ஜெர்மனிக்கு வந்து அங்கிருந்துதான் திட்டங்களை தீட்டியதாக கேள்விப்பட்டேன். தாஸனின் சகோதரி ஒருவர், ஜேர்மனியின் பிரேமனில் இருக்கிறார். இதற்கு உடந்தையாக இருந்தவர்களாக சந்தேகபட்டு சுவிஸ் போலீசாரால் புலிக்குட்டி ரன்ஜனும், பாரீஸில் இறந்த பிரபாவும் கைதாகி, பின்னர் விடுதலையானார்கள். அக் கொலைக்கு உடந்தையான ஒருவர் சுவிஸில் அகதியாக முன்னரே வந்து , பின்னர் திரும்பிச் சென்று யாழ் தீவொன்றில் வைத்துக் கொல்லப்பட்டார் என தோழர் ஒருவரால் அடையாளப்படுத்தப்பட்டார்.
அடுத்து பல்லி எழுதியுள்ள , புளொட் மத்திய குழு உறுப்பினர்கள் பட்டியல் பெரும்பாலும் சரியாகவே இருந்தது. அது பரந்தன் ராஜன் சென்னை கே.கே.நகர் , முதலாவது தெரு வீட்டில் பிரச்சனைப்பட்டு பிரியும் வரை……… பின்னர் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். புளொட்டின் புலனாய்வுத்துறைக்கு சங்கிலியனே பொறுப்பாக இருந்தான்.
இங்கே எழுதும் கருத்துகளை வரவேற்கிறேன். காரணம், பலருக்கு கடந்த காலம் தெரிய வேண்டும். ஒவ்வொரு இயக்கத்துக்குள்ளும் நடந்த உண்மைகள் வெளியே கொண்டு வரப்பட வேண்டும். அது தவறிழைத்தவர்களை கண்டு கொள்ளவும், இனி தவறிழைக்காது இருக்கவும் வழி வகுக்கும்.
palli
ரெலொ அழிப்பில் மிகவும் பிரபா பொட்டருக்கு சாதகமாய் செயல்பட்ட தளபதிகள்; கிட்டு; மாத்தையா; புலேந்திரன்; சலீம்; மூர்த்தி: இவர்கள் அனைவருமே புலி தலமையால் கொல்லபட்டனர் என்பதுதான் வேடிக்கை,
Kusumpu
பல்லி திருப்பிச் சொல்லுங்கோ புலியோ பிரபாகரனே என்று தமக்குள் போடாமல் விட்டார்கள். ஒன்றில் களத்தில் வைத்துப் போடுவார்கள் மாவீரர் ஆக்குவார்கள் இல்லையேன்றால் துரோகி என்று போடுவார்கள். ஏதோ ஒரு வழியில் போட்டால் சரி அவ்வளவுதான். புலேந்திரனைப்பற்றி சிறிது சொல்லமுடியுமா பல்லி?
chandran.raja
மேற்குலக வாகனதயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுக்கள் நுழைந்தபோது அதற்கான தொழில்நுட்பம் மூலதனம் இடமிடல் முழுஅதிகாரமும் பெற்றிருக்கவில்லை போட் பென்ஸ் பொல்ஸ்வாகன் என்பன சீனத்தொழில்சாலையில் உற்பத்தியாகி ஐரோப்பாவுக்கு வருகின்றன. ஜேர்மனியின் பயணிகள் பஸ்சின் விலை 350.000 யூரோ.இதே தரம்-மாதிரியில் சீன உற்பத்தியான “சொன்ட் ஏ9” 100.00 யூரோ விலையில் முழு ஆசிய ஆபிரிக்கா அரபுநாட்டுச் சந்தையில் நுழைந்துவிட்டன. மோட்டர்சைக்கிள் வானங்களும் இதோநிலையே. சீனவாகன உற்பத்தியால் மட்டும் ஜேர்மனிக்கு வருடாவருடம் முப்பது மில்லியன் யூரோநட்டம். ஜேர்மன் தயாரிக்கும் அதேபொருளை சீனா உற்பத்தி செய்ய தொடங்கியதின் காரணமாக 2006 இல் 70 ஆயிரம் வேலையாட்கள் வேலை இழக்கப்பட்டனர். இது 2005 ஐவிட ஐந்து மடங்கால் அதிகம்.
வாகனம் விமானம் எலக்ரோனிக் மருந்துப்பொருள் மருந்து உபகரணங்கள் விளையாட்டு தோல்பொருள்கள் ஆடையணிகள் என்பவற்றுடன் அணு மற்றும் உயிரணு தொழில்நுட்பங்கள் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியும் சீனாதான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றாகப் பெற சூரியஒளி காற்று நீர் கடலலை உயிரியல்வாவுகள் ஆகியவற்றை பயன்படுத்தும் துறைகளையும் வளர்ந்துள்ளன. 2006ல் 103 மில்லியாடன் யூரோக்களை புதியஆய்வு களுக்காக ஒதிக்கியிருக்கின்றன. நாடுமுழுவதும் பாதைகள் நெடும்தெருக்கள் பாலங்கள் ரெயில்பாதைகள் புதிய விமானநிலையங்கள் மக்கள் தொடர்பும் பரிவர்தனைகளும் அதிகரித்துள்ளன.
2005 தினசரி பத்திரிக்கைகள். 1926 சஞசிகைகள். 273 வானொலிகள். 302 தொலைகாட்சி நிறுவனங்கள் இருக்கின்றன. ஐரோப்பாநாடுகளின் சந்தைகளில் சீனப் பொருள்கள் நிரம்பியுள்ளன. ஜேர்மனியில் 40 வீதமான கொம்யூட்டர் எலக்ரோனிக் பொருள்கள் சீனஇறக்குமதியாகும். 2008ல் சீனாவின் ஜேர்மனிக்கான ஏற்றுமதி 2007 விட 20 வீதம் அதிகமாகும்.
கைதொலைபேசி கம்யூட்டர் தொலைக்காட்சி எலக்ரோனிக்பொருள்கள் தோல்பொருள்கள் பெரும்பகுதி சீனாவில்லிருந்தே ஜேர்மனிக்கு இறக்குமதியாகின்றன. பத்துவருடங்களுக்கு முன்பு இந்தப்பொருள்களில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யும்நாடு ஜேர்மனியாகவே இருந்தது. மேற்கலகநாடுகள் பொருள்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திசெலவு அதிகம் முலப்பொருள் இறக்குமதியால் தங்கியநாடுகள் இவைகள். சீனாவின் ஒருமணிநேர ஊதியம் 0.70 சென்களாகும் .இது ஜேர்மனியில் 27 யுரோ ஆகும். இதனால் உலகச்சந்தையில் மேற்குநாடுகள் போட்டிபோட முடியவில்லை.
chandran.raja
சீனாவின் இந்தியகூட்டு மட்டுமல்ல பாகிஸ்தான் பிலிப்பையின் இலங்கை தாய்வான் தாய்லாந்து மலேசியா இந்தோனீசியா வியட்நாம் கம்பூச்சியா என்பன ஒரேநிதி மற்றும் பொருளியல்கூட்டுக்குள் வந்துள்ளன. தென்சீனா நகரமான”குன்மிஸ்லில்” இருந்து லாவோஸ் கம்பூச்சியா துறைமுகமான சிக்கானுக்லிலே தொடர்புடன் தாய்லாந்து குடா கடல்கரை வரை 2000 கிலோமீற்றர் வரை பாதை அமைக்கிறது.இந்நாடுகளில் பெரும் முதலீடுகள் செய்கின்றது. பர்மா வடகொறியா சகல இடமும் சீனா மூலதனம் பரவுகிறது.
ஆசியநாடுகள் உலகவங்கி ஐஎம்எவ் இடம் பெற்ற காலங்கள் போய்விட்டது. சீனா மூலதனம் தொழில்துறைகள் இப்பகுதியைக் கட்டுப்படுத்த தொடங்கிவிட்டன. கம்பூச்சியாவுக்கு உலகவங்கி 70 மில்லியன் கடன்தருவதாக வாக்குறுதி கொடுத்து நிறுத்தியபோது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலரை கடனாகக் கொடுத்தது.சீனா ஆசியாவில் மட்டுமல்ல மூன்றாம்உலகநாடுகளின் வங்கியும்மாகி விட்டது. மேலும் சீனாவும் ரஸ்சியாவும் மத்தியஆசிய நாடுகள் இணைந்து கூட்டை உருவாக்கியுள்ளார்கள். இதை மேற்குநாடுகள் “கிழக்கின் நோட்டோகூட்டமைப்பு” என்று பெயரிட்டார்கள்.
2007ல் அமெரிக்க விமானப்படை கப்பல்படை என்பன சீன-ஐப்பான்-தாய்வான் கடல்பரப்பில் தனது நவீன விமானத்தாங்கி கப்பலான “கிற்றிநாவுக்” தலைமையில் 12போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகப்பல்களுடன் பயிற்சி நடந்துகொண்டிருந்த போது இப்பகுதியில் கீழ்ழாக சீனாவின் மிகநவீனநீர் மூழ்கிக்கப்பல் இவர்கள்யறியாதவாறு கடந்துசென்றுவிட்டது.அந்தமட்டத்திற்கு சீனஇராணுவத்துறையும் ஆற்றல்மிக்கதாகி விட்டது.
1957 இல் சோவியத்யூனியன் “ஸ்புட்னிக்” விண்வெளிகோள் ஏவப்பட்டபோது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சியே இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகங்கள் எழுதின.
BC
//சந்திரன் ராஜா- இது ஜேர்மனியில்(ஒருமணிநேர ஊதியம் ) 27 யுரோ ஆகும் //
சந்திரன், இந்த தகவல் சரியானதா?
மாயா
For example, their result for technical writers is:
•€2,000 to €2,700 per month for new starters
•€3,626 to €6,097 for experienced employees
http://www.toytowngermany.com/lofi/index.php/t46051.html
http://www.worldsalaries.org/germany.shtml
chandran.raja
ஆமாம். பி.சி ஒரு அடிமட்ட தொழிலாளியாக ஆறுவருட அனுபவத்தில்லிருந்த எனக்கே மணத்தியால சம்பளம் 12.98 சென்ஸ்சாக ஐந்து வருடத்திற்கு முன்பு இருந்தது. நத்தார் அன்பளிப்பு பதின்மூன்றாவது மாதச்சம்பளம். அதாவது 100 வீதம் வருடலீவுக்கான கொடுப்பனவு 100 வீதம். அடிமட்ட தொழிலாளிக்கே இந்தக் கொடுப்பனவு என்றால் மற்றபடிநிலையில் உள்ள உயர் அதிகாரி வரை?
உதாரணமாக: கார் உற்பத்திக்கு எத்தனை மணத்தியால உழைப்பு தேவைப்பட்டது என கணக்குப்பார்தால் மில்லியன் கணக்காக வருடஊதியத்தை வாங்கும் டைரக்டர்ரின் சம்பளத்தையும் சேர்த்து பார்த்து சராசரியாகவே மொத்த மணத்தியாலத்தையும் கணக்கெடுப்பார்கள். அப்படி பார்க்கும் போதுதான் உற்பத்திசெலவுக்கு எவ்வளவு மணத்தியாலகூலி தேவைப்பட்டது என்பதை அறியமுடியும். ஒருதொழிலாளி 27 யூரோபடி சம்பளத்தை வாங்கி பையில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு போகிறார் என நீங்கள் நினைத்தால் அது தவறான கணிப்பீடு. மற்றது. அதன்விபரம் “யுங்கவேல்ட்”என்ற வாராந்த பத்திரிக்கையில் வந்தது. என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல.
BC
//…மில்லியன் கணக்காக வருடஊதியத்தை வாங்கும் டைரக்டர்ரின் சம்பளத்தையும் சேர்த்து பார்த்து சராசரியாகவே….//
இப்போ விளக்கம் கிடைத்தது.நன்றி.
Kusumbu
சந்திரன் ராசா. //கடந்துசென்றுவிட்டது.அந்தமட்டத்திற்கு சீனஇராணுவத்துறையும் ஆற்றல்மிக்கதாகி விட்டது// அப்போ 3ம் உலகயுத்தம் ஆசியாவில் என்று சொல்கிறீர்கள்
//புளொட்டின் புலனாய்வுத்துறைக்கு சங்கிலியனே பொறுப்பாக இருந்தான்// மாயா- புலனே இல்லாத சங்கிலிக்கு புலனாய்வு வேறையா? புலன்களை ஆய்ந்த எடுத்து விட்டார்களே போங்கள்
//இங்கே எழுதும் கருத்துகளை வரவேற்கிறேன். காரணம் பலருக்கு கடந்த காலம் தெரிய வேண்டும். ஒவ்வொரு இயக்கத்துக்குள்ளும் நடந்த உண்மைகள் வெளியே கொண்டு வரப்பட வேண்டும். அது தவறிழைத்தவர்களை கண்டு கொள்ளவும் இனி தவறிழைக்காது இருக்கவும் வழி வகுக்கும்// இது நல்ல கருந்து. ஒரு இயக்கம் விட்டபிழையை விட மற்ற இயக்கும் அதிகபிழை விடவேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்தன இயங்கங்கள். முடிவில் இயக்கம் இயங்க சக்தி இல்லாது போயும் விடாட்டோம் என்ற கடந்த கடக்கா தமிழ்ஈழம் என்று திரிகிறாங்கள்.
palli
சின்ன மெண்டிஸை கொலை செய்து அவரது உடலை கூட தர மறுத்த கிட்ட புலம்பெயர் தேசம் வந்த போதுதான் தெரிந்து கொண்டாராம், தான் செய்த தவறு எத்தனை எதிரிகளை உருவாக்கி விட்டது என்பதை, நாலு பேர் கட்டிபிடிக்க அடித்து பழகிய கிட்டருக்கோ இந்த நாடுகளில் என்ன நடக்கும் என பயத்தில் விசா நிராகரிக்கபட்டது என்னும் சாக்கை சொல்லி நாடு திரும்பினார், ஆனால் அவர் நாடு வந்து சேர்ந்தாரா,,?? அவரது உடலாவது கண்டார்களா?
பலரை காவுகொண்ட மன்மதன் மீஙளுக்கு இரையாகிய செய்தி கேட்டு பலர் மகிழ்ச்சி அடையவில்லை என்றாலும் கவலை கொள்ளவில்லை என்பது உன்மைதானே; உலகத்தை சுற்ற புறப்பட்ட மொக்கு தளபதியை, நீச்சலடித்து செத்தான் வீர தளபதி என கொண்டாடும் சிலரும் இருக்கதான் செய்கிறார்கள், எனக்கு உலகத்தில் மிக கேவலமான மனிதர் என பார்த்தால் இந்த கிட்டனும் அந்த வரிசையில் போட்டி இன்றி முதலிடம் எடுப்பான்;
Kusumbu
மென்டிஸ்க்கு என்ன நடந்ததோ அப்படியெ கிட்டருக்கும் நடந்தது. கிறுத்தயத்துக்கு உலலோ காடாத்துக்குச் சாம்பலோ இல்லாது போனது. இதைத்தான் சொல்வது அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்று. இன்று தெய்வம் நின்றே கொல்கிறது.
chandran.raja
அழகான வெள்ளைச்சீலை கை கால் கழுத்து மூக்கு எந்தநகை நட்டும் பொண்னும் பொருளும் கிடையாது. காதுத்தூவாரம் தூர்ந்து போகாமல் இருக்க மெல்லிதாய் பேப்பரை சுருட்டி செருகியிருப்பாள் சோடாமூடி. ஆண்கள் பேசக்கூசும் தூசணம் பேசுவாள். வாய் கொடுப்பவர்களை நையாண்டி பண்ணுபவர்களை தூசணத்தில் கிழித்து நரகலாக்கி அனுப்பி வைப்பாள். அவள் ஆயுதக்குழுக்களினால் சுட்டுக்கொல்லப்படும் போது வயது போய் பற்கள் முழுவதும் கொட்டி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தளர்ந்து போய் காணப்பட்டாள். அவளை யாரும் தேடுவாரில்லை. அவளும் யாரையும் தேடுவதில்லை ஆஸ்பத்திரி முன்பு கடலையாவாரம் செய்து வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தாள். இரவில் ரோயல்டிஸ்பென்சரி முன்பு படுத்து எழும்புவாள். கடைசிக் காலத்தில் முதுமை நோயுற்று மனிதர்களால் கைவிடப்பட்டு தனியாக இருந்தவளை ஒரு இனம் இனம் காணப்பட முடியாத பொழுதில் தூயதமிழ் கற்பை ரட்சிக்கப்பிறந்த ஆயுதக்குழுகளால் சுட்டுக்கொல்லப்பட்டாள். புலம்பெயர் நாட்டில் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்து தூய்மையை தேடுபவர்கள் யார்? இந்த கொலைகாரர்கள். எது தூய்மை? என்பதும் இனம் காணப்படவேண்டும்.
(இதுநடந்தது என்பதுவின் முற்பகுதி புலிகளை குற்றம்சாட்டி யாரும் தப்பிவிக்க முடியாது)
Kusumpu
இவங்கள் யாரைத்தான் பிட்டார்கள்? பிச்சைக்காரிக்குக் கூட விடாமல் சுட்டவர்கள் தமிழ்தாய் மக்கள். சிங்களவன் இனவளிப்புச் செய்கிறான் செய்கிறான் என்று இனவழிப்பை ஓர்மமாகச் செய்தது நம்மவர்கள் தான். இனியாவது விடுவாங்களா? மிச்சம் மீதியாக இருக்கம் சனம் சிங்களத்தையும் படித்து புத்தமதத்துக்கு மாறிச் சந்தோசமாக இருக்கட்டும். வாழ்த்தி அனுப்பி விடுவோம்.
palli
சந்திரா என்னும் ஒரு பெண் 2000க்கு பின் வல்லையில் வைத்து கொல்லபட்டாள் அதே தேவதாசி பட்டத்துடன்; அன்று அவளுக்காய் என் கைகள் கிறுக்கிய வரியில் ஒன்று இது, இதனாலேயே எந்த ஊடகத்திலும் என் கிறுக்கல் வரமுடியவில்லை;
மாவீரர் பலரையும்;
மகிழ்விக்க அவள் மறுக்கவில்லை;
மண்டியிட்டு கேட்டும்;
மரணம் அவளை காக்கவில்லை;
வயித்து பசியினால்;
வா என போனேன்,
வந்து மகிழ்ந்து விட்டு,
தடயத்தை அழித்தனரே;
chandran.raja
வைரமாளிகை என்பது யாழ்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறை பின்புலமாகய் கொண்ட ஒருவரின் பெரிய நகைக்கடையின் பெயராகும். ஆனால் வைரமாளிகை என்பது அந்தநகை கடையைவிட ஒருமனிதனின் பெயராகவே யாழ்குடா எங்கும் அறிப்பட்டிருந்தது. வைரமாளிகை “டைமன்கவுஸ்”தனது ஆடைகளில் முன்னும் பின்னுமாக பொறிக்கப்பட்ட எழுத்துக்களுடன் “சுவிப்ரிக்கற்” பத்திரிக்கை என்பவற்றுடன் விளம்பரம் செய்யும் மனிதனான வைரமாளிகையே எமது பேசும் பொருள். உயர்ந்த கறுத்த தோற்றமுடைய 60 வயதுக்கு மேற்பட்ட வைரமாளிகை “22 கரட் தங்கநகைகள் நயம் நம்பிக்கை நிறைந்தது” என்ற உரத்த குரலோடு இவர் யாழ் பஸ்நிலையத்தை சுற்றிவந்தார். கஸ்தூரியார்வீதி ஸ்டாலிவீதி ஆஸ்பத்திரி என்று காணப்படுவரார்.கிட்டத்தட்ட 1960 முதல் 1887 வரையில் யாழ்மக்களுக்கு மட்டுமல்ல வன்னி உட்பட மற்றைய பிரதேசங்களிலிருந்தும் பஸ்நிலையத்தில் கட்டாயம் கண்டிருப்பார்கள்.
நல்லூர்திருவிழாவா சென்பற்றிரிக்ஸ் விசேஷமா அங்கெல்லாம் அந்த நீலநிறை வைரமாளிகைவிளம்பரம் எழுதப்பட்ட உடையுடன் எங்கும் தென் படுவார். பெரும்பகுதியாக வைரமாளிகை யாழ்பஸ்நிலையத்தையே சுற்றிவருவார் உரத்தகுரலில் திடுக்கிடும்படி பேசுவார்.சத்தம்மிட்டு சிரித்து பற்களை நறநற என்று சத்தம்வரும்படி நெருமி நிமிர்ந்து ஆமிக்காரரன் போல் நடப்பார் ஓடுவார். வெயில் மழைக்கு ஒதுங்கி ஓய்வெடுக்க சற்று குந்தியிருக்க ஒத்துக்கொள்ளாத இயக்கமுடையவர் வைரமாளிகை.
தன்னை வியப்புடனும்பயத்திடனும் பார்க்கும் குழைந்தைகளுக்கு அருகே சென்று வைரமாளிகை விளையாட்டுக்காட்டுவார். மேஜிக்காட்டி பொக்கற்றுக்குள்ளிருந்து இனிப்பை வரவழைத்துத் தருவார். நகரருக்கு புதியவர்களுக்கு போகவேண்டிய இடங்களை வழிகாட்டுவார். முதியவர் அங்கவீனர் பெண்களுக்கு உதவிசெய்து வழிகாட்டுவார். பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும்நேரம் இடம் திசை எந்தகிராமம் தெருக்கள் ஓடாகச்செல்லுகிறது என்பதையெல்லாம் விளக்கிச்சொல்லுவார்
பருத்தித்துறை 750 பஸ் வெளிக்கிடுகிறது 577 பஸ் தெல்லிப்பளை வெளிக்கிடுகிறது ஏறுபவர்கள் ஏறிக்கொள்ளலாம் என்றகுரல் யாரும் வேதனம் தராமலே ஒலிக்கும். பஸ்சுக்கு காத்திருக்கும் மக்களுக்கு சிறந்தபொழுதுபோக்கு. எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள் வைரமாளிகையை. அக்காலத்தில் தொலைக்காட்சிகள் வராதகாலம். ஒருபேப்பரை வாங்கி பலர்படிப்பார்கள். வாசிக்கும் பழக்கம் வளரத் தொடங்கியகாலம். ஊர்உலக நடப்புகளையும் தன்சொந்தங்களையும் ஒன்றுசேர மக்கள் தொடர்பாளர்ராக இருந்தார் என்பதையும் மீறிஇவர் மனிதர்களிடம் பேசவும் உரையாடவும் மக்களைபிரிந்து வாழ்ந்துவிட முடியாத பண்பு இருந்தது. தனது வியாபார விளம்பர விடங்களுக்கு வெளியேதான் அவர் அதிக விஷயங்களைப் பேசுவார். வேடிக்கை சிரிப்பு முரட்டுத்தனம் இடையாறாப் பேச்சுக்கொண்ட உணர்வு பூர்பமான தீவிரமான மனிதன் வைரமாளிகை. இரவுபடுக்க வைரமாளிகைக்கு செல்வார்.1980 களில் யாழ்பாணம் மாறத்தொடங்கிவிட்டது. பலர்வெளிநாட்டுக்கு போகத்தொடங்கி விட்டார்கள். பஸ்நிலையத்தில் மணிக்குரல் சேவை தொடங்கிவிட்டது. போர்வந்தபோது தன்பழைய வாழ்கையை தொடரமுடியவில்லை .நகைவாங்குவோர் குறைந்தவுடன் புலிகள் நகைக்கடைப் பொறுப்பாளர் முருகமூர்த்தியிடம் 50லட்சம் ரூபா வெருட்டிவாங்கி விட்டார்கள்.
எனவே வைரமாளிகைக்கு நகைக்கடை வையிரமாளிகைக்கு ஆதரவும் நெருக்கடியாகிவிட்டது. அவர் 1987 ம்ஆண்டில் இந்திய இராணுவத்திடம் உணவுப் பொருள்களை சிறியஅளவில் வாங்கி விற்பனை செய்து தனது வயிற்றுப்பாட்டை தீர்த்துக்கொள்ள முயன்றார் .இதனால் புலிகள் யாழ்ஆரியகுளசந்தியில் பொருட்கள் விற்பனை செய்துகொண்டிருந்த சமயம் பிடித்து சுட்டுக்கொன்றார்கள். வைரமாளிகை உள்ளொன்றுவைத்து புறம்ஒன்று பேசத்தெரியாத மனிதன்.அவரிடம் இரகசியங்கள் இருந்ததில்லை.மனிதர்களிடம் உறவாடி மனிதனாக வாழ்ந்தமனிதன் வைரமாளிகையை ஒருமனிதப்பெறுமானம் அறியாத ஒரு புலிகொலைஞன்….
வைரமாளிகை யாழ்பிரதேசமக்களின் விகடகவி.அவர்களின் தென்னாலிராமன். யாழ்மக்களின் நினைவுகளோடு கலந்தவர்.யாழ்நகரின் உயிருள்ள பொதுஅடயாளங்களில் ஒருவன். யாழ்பஸ்நிலையமும் நுhல்நிலையமும் திரும்பி வந்துவிட்டன. வைரமாளிகை என்ற மனிதனோ…..?
இதுவல்லவோ…கார்த்திகை இருபத்தி ஏழு??
தகவல்; “அகதி” இணையத்தளம்.
chola
சந்திரன்ராஜாவுக்கு என் மனம்நெகிழ்ந்த நன்றிகள்.
நெஞ்சு கனக்கிறது. வைரமாளிகை என்ற மனிதனை நினைக்கும்போது. அந்தமனிதனும் துரோகியா? ஓ! புலிகளே! நீங்கள் எப்போதான் விழித்துக் கொள்ளப் போகிறீர்கள்!
chandran.raja
இலட்சியமயப்படுத்தப்பட்ட கோட்பாடுகளைக் கொண்டிருந்த இயக்கங்களின் பரிணமாத் தோற்றத்தைப் பற்றி ரெஜி சிறிவர்த்தனாவும் ராதிகா குமாரசாமியும் தங்களது கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் போது…இலட்சியவாதிகளின் கலவை தங்களது சுயத்தையும் சரித்திரத்தையும் பற்றிய பெருமித உணர்வு இனத்திலும் சமயத்திலும் அடையாளம் கண்டுகொள்வதில் உறைந்திருக்கும். தீர்கதரிசன தோற்றங்கள் போன்ற தீவிரமான வெறித்தனத்திற்கே இட்டு செல்வதற்கே அனுசரனையானது. யதார்த்த நிலைமைகளை பற்றிய ஒரு தனிநபரின் பார்வை வெளிப்புற சூழ்நிலைமையில் இருந்து பாராதூரமாக வேறுபட்டு அமைந்தாலும் கூட சிற்சில நம்பிக்கைகளில் தாம் கொண்டுள்ள உணர்வெழுச்சி மிக்க பற்றுதல்கள் அந்தநபரை முன்னோக்கித் தள்ளும். ஒரு சூழ்நிலையிலேயே தீவிர வெறிவாதம் என்று பொதுவாக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு தோல்வியும் தனது நம்பிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்ய தூண்டுவதற்கு பதிலாக அதற்கு எதிர்மறையான விளைவகளையே உண்டுபண்ணுகிறது. அந்த தனிநபரை தியாகம் என்ற சூழ்நிலைக்கு தள்ளிவிடுகிறது. விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதற்கான சகலகூறுகளையும் இழந்துபோய் மற்றவர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கவோ மாறும்சூழ்நிலைகளுக்கு கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கோ இந்தவெறி கொண்ட இயக்கங்கள் யோக்கியயற்று இருக்கும் என்கின்றனர்.
புலிகளின் சமகாலச் சரித்திரத்தை இது மிகதெளிவாக விபரிக்கிறது. எதிர்கால விளைவுகளை பற்றி கிஞ்சித்தும் அக்கறை காட்டாமல் அப்பாவி சிங்களமக்களை மூர்கமான கோபாவேசத்தில் படுகொலைசெய்து இந்தியாவை இக்கட்டில் தள்ளிவிட்டதை பற்றி ஆச்சரியப்பட ஏதும்மில்லை. எனவே யதார்த்தத்தில் சமாதானத்திற்கு உத்தரவாதமளிப்பதில் இந்தியா பெரும் தவறு இழைத்தது என்பது மட்டுமல்ல இந்தவழியில் யுத்தத்தை திசைதிருப்பியது விடுதலைப் புலிகளினது தலைமையினது பெருந்தோல்வியாகும். புலிகளின் வரலாறு அவர்களது தத்துவவறுமை காத்திரமான அரசியல் பார்வையின்மை சகிப்பு தன்மையின்மை வெறித்தனமான அர்பணிப்பு போன்றனவே அவர்களின் சீரளிவுக்கும் இறுதிக் காரமாக அமையப் போகிறது. புலிகளின் காவியநாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீர்ரோடும் அவர்களின் ரத்தத்தால் அபிசேஷகம் செய்யப்பட்ட இதிகாசங்களுடன் அழிவையே நோக்கிச்செல்வர். இந்த சாம்பலில்லிருந்து புலிகள் எழுந்து வரப்போவதில்லை. இந்த முழு சரித்திரத்திலுமிருந்து பூரணமாக தம்மை விடுவித்துக் கொள்ளும் போது தான் விடுதலைக்கான புதியபாதை பிறக்கமுடியும்.
– “முறிந்த பனை” யில்லிருந்து-
palli
சந்திரா எனக்கு வாசிப்புதனம் குறைவு, அது எனது ஏலாதம்தான், ஆனால் எனது எழுத்தில் நகைசுவை இருப்பதாக பலர் சொன்னார்கள்; உன்மையில் நான் பின்பற்றி பேசுவதோ எழுதுவதோ வைரமாளிகையைதான், எமது காலத்து நகைசுவை புயல் அவர் மட்டுமே, உன்மையில் நான் அடிக்கடி நினைக்கும் மனிதர்களில் இவரும் ஒருவர், ஆனால் அவர் இப்படிதான் இறந்தார் என்னும் செய்தி இன்றுதான் தெரியும், அவர் அடிக்கடி சொல்வது போனால் வராது போனால் வராது எனதான்,
அவர் சொன்னது இந்த பரதேசிகளால் அளிய போகும் உயிர்கள் என்பது அன்று தெரியவில்லை, குடி, போதை, தவறான தொடர்புகள், கல்வி இப்படி பல விடயத்தை நகைசுவயாய் பரப்பிய மனிதனுக்கு மரமண்டைகள் கொடுத்த பரிசு மரனமா?
இன்னும் எத்தனை உன்மைகள் தூங்குகின்றனவோ??
chandran.raja
ஒரு சில வார்தைகளும் அவர்களின் வாழ்வுமுறைகளும் எமது மனச்சாட்சியை உலுப்பி எடுத்து விலங்கிட்டு சமூகத்தின் முன்கொண்டு வந்து நிறுத்துகிறது. அந்த வகையில்……..
யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாபதி அரங்கில் 1989 அக்டோபர் மாதம் 2ம் திகதி நடந்த ராஜணி திரணகமா ஞாபகார்த்த கூட்டத்தை முன்னிட்டு மனிதஉரிமைக்கான ஆசிரியர்குழுவின் சார்பில் ராஜன்கூல் ஆற்றிய உரையிலிருந்து…
மனித உரிமைக்கான பணியில் ராஜணியின் பங்களிப்பை நெறிப்படுத்திய அவரின் தரிசன ஆழத்தை இதுபோன்ற சிற்றுரையில் கொண்டுவந்து சேர்க்கும் கடினமான பணிநம்மிடம் உள்ளது. அவரின் தரிசனத்தை கோடிகாட்டும் ஒரு சுருக்கமான மேற்கோளை அவரது எழுத்துக்களில்லிருந்து காட்ட விரும்பினால் பின்வரும் மேற்கோள் பொருத்தமானதாக இருக்கும்.
” புறநிலைநோக்கும் சத்தியதேடலும் விமர்சனபூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்துவிளக்குவதும் எமது சமூகத்திற்கு இன்று அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறி போகலாம். இதணைவிட்டால் வேறு மார்க்கம் இல்லை என்ற ரீதியிலேயே நாம் இதைக் கைக்கொள்ளுகிறோம். தான் கொலை செய்யப்படுவதற்கு சிலவாரங்களுக்கு முன்பு முறிந்தபனை நுhலுக்காக அவர் எழுதிய பின்குறிப்பில்லிருந்தே இந்த மேற்கோள் எடுத்தாளப் பட்டிருக்கிறது. இந்த வார்தைகள் தீர்கதரிசனம் போல இருந்தாலும் அவர் தீர்கதரிசியாக இருக்கவிரும்பவில்லை. அவர் என்ன கருதினார்….
இத்தகைய சூழ்நிலைமைகளில் பாராய்முகமாய் இருப்பது என்பது ஒரு பல்கலைக் கழகத்திற்கு வெட்கக்கேடான அக்கறையின்மை என்பது மட்டுமல்ல இத்தகைய அலட்சியப்போக்கை ஒரு பல்ககைழகம் கொண்டிருந்தால் அது பல்கலைகழகமாக இருப்பதற்கே லாயக்கற்றது என்று ராஜணி நம்பினார்.
chandran.raja
வன்னிப்பகுதியில் பரவலான தொகையிலான சிங்களமக்கள் வாழ்ந்து வந்தார்கள். இதைவிட மீன்பிடி மரம்வெட்டுதல் செங்கல்அரிதல் வியாபாரம் பேக்கரித்தொழில் என்பவற்றுடன் நீர்பாசன திணைக்களம் உட்பட அரசசேவையிலும் குறிப்பிடதக்க அளவிலான சிங்களமக்கள் ஈடுபட்டு வந்தார்கள். இதைவிட தேங்காய் மலையகமரக்கறி வகைகள் பழவகைகள் வெற்றிலைபாக்கு வியாபாரிகளும் வாரம்ஒரு முறை சந்தைகளுக்கும் கடைகளுக்கும் பொருள்களை கொண்டுவருவார்கள். யாழ்பாண பகுதியைவிட வன்னிப்பகுதி மக்களுக்கு சிங்களமக்களோடு பெருமளவு தொடர்புகளும் சேர்ந்துவாழும் பண்பும் இருந்தது. வன்னிப்பகுதியில் அனுராதபுரத்திற்கு அடுத்து இலங்கையில் அதிககுளங்கள் இருந்தது. எனவே இப்பகுதியில் குளங்களைத் திருத்தவும் சீர்ரமைக்க பணிபுரிந்த நீர்பாசணதிணைக்களத்தில் சிங்களதொழிலாளர் உத்தியோகஸ்தர் வன்னியின் கிராமப்புறமக்களோடு பகையற்ற உறவு தொடர்ந்து நிலவி வந்தது.
1958 இல் இனக்கலவரம்நடைபெற்றபொழுது மாங்குளத்தில் பேக்கரி வைத்திருந்த பாணிசில்வா என்ற சிங்களவர் தன்ஊருக்கு திரும்பிச் சென்றார். அவரின் பேக்கறியில் இருந்த பொருள்களை லொறியில் ஏற்றிவிட்டு பேக்கறிக்கு நெருப்பு வைத்தவர் அப்போது விதானையாக இருந்த சாவகச்சேரியைச் சேர்ந்த விசாகப்பெருமாள்ளாகும்.
கலவரம் அடங்கியபின்பு பாணிசில்வாவும் திரும்பிவந்து கடையைத்திருத்தி மறுபடியும் திறந்தார்.அத்தோடு துணுக்காய் ஒட்டகங்குளத்தில் நெற்செய்கையிலும் ஈடுபட்டு வந்தார்.1979 இல் வவுனிக்குளம் குடியேற்றத்திட்டத்தில் வந்து குடியேறியிருந்த யாழ்பாணத்தவர்களால் அவரது வயற்காவல்கொட்டிலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். பாணிசில்வா சிங்களவர்ரான போதும் அவர் பறங்கியகலப்பு இனத்தவராகும் என்பதை நிரூபிக்க சாம்பல்நிறக்கண்களும் சில்வாஎன்ற போத்துக்கீச பெயருமே போதுமானதாகும்.அவர் மாங்குளகிராமம் முதல் அண்டைக் கிராமங்களிலும் அறிப்பட்டவர்ராகவும் மக்களிடம் மதிப்புபெற்றவர்ராகவும் இருந்தார். ஊரின் கல்யாணவீடு செத்தவீடு எதிலும் காணப்படுவார். கோயில் திருவிழாக்களுக்கு காசு கொடுப்பார். அவர் மாங்குள கிராமத்தின் பழைய ஆட்களில் ஒருவர். பாணிசில்வா கொலை செய்யப்பட்ட போது மாங்குளகிராமம் மட்டுமல்ல அயல்கிராமத்திலும் வாழ்ந்த சனங்கள் கவலைப்பட்டார்கள். “போயும் போயும் இந்த மனிசனை கொன்றார்களே” என்று வருத்தப்பட்டார்கள். இக்காலப்பகுதியில் வவுனிகுளபகுதியில் மீன்பிடித்தொழில் செய்து கொண்டிருந்த நீர்கொழும்பை சேர்ந்த சிங்களமீனவர்களும் குடியேற்றதிட்டத்தில் இருந்த யாழ்பாணம் மட்டுவில் பகுதியை சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப் பட்டார்கள்.
இங்கு அவதானிக்க வேண்டியது என்னவெனில் சிங்களமக்களுடன் வாழ்ந்து பழக்கப்படாதவர்களாலும் தமிழரசுக்கட்சியுடனும் கூட்டணியுடனும் அரசியல்பாடம் கேட்டவர்களான யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்களால்லேயே இச்சிங்களமக்கள் கொல்லப்பட்டார்கள்.
“அகதிஇணையத்தளம்” தமிழரசன் குறிப்புகள்-நன்றி.
chandran.raja
சோட்டீ அணிந்த நிலையில் அந்த ஏழைத்தாய் இறந்துகிடந்த காட்சி சிலமின்னனு ஊடகங்களில் வெளிவந்தன.புலிகளின் இணையத்தளங்களான பதினம் நிதர்சனம் சூரியா என்பன லீலாவதி ஒழுக்கக்கேடான நடத்தைக்காக கலாச்சார சீரளிவிற்காக தண்டிக்கப்பட்டதாய் நியாயம் கற்பிக்கப்பட்டது. தமிழ்தேசிய வாதத்தின் ஊடகம் லீலாவதியின் மரணம் ஒரு ஒழுக்கங் கெட்டவளின் சாவு என்பதைத் தவிர வேறு எதுவும்மில்லை. அவர்களின் தமிழ்ஈழம் லீலாவதியை கொன்றதின் ஊடாக பரிசுத்தமாகியது. கற்புடைக்கும் நேரிட்ட பெரும் ஆபத்து நீங்கியது.
புலிக்கொலைஞரின் தூப்பாக்கி அந்த ஏழைத்தாயின் முன்பு நீட்டப்பட்ட போது சாவு அவளை நெருங்கிய போது அந்த கடைசி கணங்களில் அவள் எதை நினைத்திருப்பாள்? தான் மரணித்தால் தாய்தகப்பனை தின்றவர்களாக கருதப்போகும் தன் நான்கு பிள்ளைகளை…? ஒருவேளை தான் அதிகம் பரிவுகாட்டிய கடைசிக் குழந்தையை எண்ணியழுதிருப்பாள். தன் உயிருக்காக மண்ணில் வாழும் உரிமைக்காக கொஞ்சி மன்றாடியிருப்பாள். இதறகு பதிலாக புலிபாசிஸ்டுகள் தமது இலக்கு தவறாத சுடும் திறமையை மிகசிறப்பாக நிரூபிக்க முயன்றிருப்பார்கள். லீலாவதியின் பலஆயிரம் மில்லியன் கனவுகளை கொண்ட மூளையும் குழந்தைக்காக இரங்கிவந்த இதயத்தையும் குறிதவறாமல் சுட்டு சிதறடித்திருப்பார்கள். உலகின் மிகசிறந்த தாய்யன்பை லீலாவதியின் குழந்தைகள் இன்று இழந்து விட்டார்கள்.
புலிகள் சோழரின் இலட்சனையாகிய புலியைக் கொடியாய் கொண்டவர்கள்.தமிழ்ஈழ த்தின் மனுநீதிசோழன் பரம்பரை தாமே என்பவர்களை நம்ப மறுப்பவர்களையும் சந்தேகம் கொண்டவர்களையும் கொன்றுதள்ளி மனுநீதியை மனிதரத்தத்தால் உரைப்பவர்கள். புலிகளின் தமிழ்ஈழச்சட்டம் கோடு கச்சேரி போலீஸ் என்று வைத்திருந்தபோதும் லீலாவதியை எங்கேயாவது நிறுத்தி விசாரிக்கப்பட்டு அவரது குற்றம் குறைந்த பட்சமாவது விசாரிக்கப்பட்டதா? அதன் பின்பு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டதா? இயற்கையின் குழந்தையான மனிதர்களை சூழவுள்ள பொருளாதார
வாழ்வு நீதியாக பங்கிடாதவிடத்து அதனால் மனிததேவைகளை நிறைவு செய்ய முடியாதபோது திருட்டு மோசடி விபச்சாரம் கொலை என்பன உருவாகுகின்றன.
நன்மை தீமைகள் பண்புகளை கொண்ட மனிதர்கள் படைக்கப் பட்டிருக்கிறார்கள். வர்கரீதியான சமூககட்டமைப்பு மனிதர்களையும் மனித ஒழுக்கத்தையும் அலட்சியப்படுத்தும். பொதுவான சமூகவிதிகளை மீறும் போக்கிற்கு இட்டுசெல்கிறது. தவறுகளை உற்பத்திசெய்யும் அமைப்புகளை வைத்துக்கொண்டு திருடாதே பொய் சொல்லாதே பாலியல் ஒழுக்கத்தை மீறாதே என்பது பயன்படாது. பொருள் பண்டம் ஈட்ட வறுமையில்லிருந்து விடுபட பெண்கள் பாலியல்ரீதியாக விற்றுக்கொள்வது முதாலிளித்துவ அமைப்பை வைத்துகொண்டு தீர்கமுடியாது.சமுதாயத்தைப் பற்றியோ அல்லது மனிதயேத்தைப்பற்றயோ புலிகளுக்கு என்ன தெரியும்?.
ஆனால்புலிப்பாசிசமோ இறைவனைத் தொழாமல் கணவனை தொழுது வாழ்ந்த காலமே பழந்தமிழ் சமூகம் என்று நிரூபிக்க முடியுமென நம்பகிறது.எமது வேதங்கள் புராணங்கள் இலக்கியங்கள் என்பன பாலியல் மீறல்களினாலும் விலைமாதர்களினாலும் நிரம்பிக்கிடக்கின்றன.மனித இயற்கையான பாலியல் உணாவுகள் கண்மூடித்தனமான சமுதாயக்கட்டுப் பாடுகளினால் தடுக்கப்பட்ட போதும் சிதைந்த விகாரமான வடிவில் வெளிப்படுத்தின. முன்பு யாழ்பாணப் பகுதிகளில் இருந்த உடையார் மணியகாரர்களுக்கு ஊர்ருக்கு ஊர் பொம்பிளைகளும் பிள்ளைகளும் இருந்தார்கள். இவைபெருமையாக கருதப்பட்டனவே ஒழிய ஒழுக்கக் கேடான பாலியல் தடைகளைமீறும் செயலாகக் கருதப்படவில்லை.ஆனால் பெண்
கள் மாத்திரம் பாலியல் ஒழுக்கவிதிகளால் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இதனால்லேயே பெண்கள் இவைகளை ரகசியமாக மீறினார்கள். கண்காணிப்பையும் சமூக நெறிகளையும் மீறவல்ல தந்திரமும் சூழ்சியும் சாகசமும் கொண்டவர்களாக மாறினார்கள். முன்பு பாலியல் கட்டுப்பாடு கொண்ட கிராமங்களில் இளம் கன்னியர்கள் தம்உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பேய் பிடித்து ஆடினார்கள் தமது ஆடைகளைக் கிழித்து பொருள்களை உடைத்து அட்டகாசம் பண்ணினார்கள். இளைஞர்கள் சுயபாலியல் சமபாலியல் உறவுகளுக்கும் சிறு ஆண் பெண் குழந்தைகளை கெடுக்கவும் முனைந்தார்கள். இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைசெய்து கொலை செய்யப்பட்ட கிரிசாந்திக்கும் புவனேஸ்வரிக்கும் கவிதைஎழுத வாசிக்க கொதித்தெழ பல பெண்ணியவாதிகள் இருந்தனர்.சிங்கள இராணுவம் பாலியல் வன்முறை செய்தால் மட்டும் தமிழ்பெண்ணின் யோனி கிழிந்து இரத்தம் சிந்திய கதையெழுத பலர் முன்வந்தனர்.ஆனால் அதே தமிழ்பெண்ணை புலிபாசிசம் நீதிநெறி தவறியவள் எனகொலை செய்தாலோ யாரும் பேச மாட்டார்கள். இவர்களுக்காக இரத்தமும் கண்ணீரும் சிந்தும் கவிதைகள் எழுதுப்பட மாட்டா. கண்டணங்கள் கிளப்பப்படடாட்டா அந்த மட்டத்திற்கு பெண்ணியம் தமிழ் தேசியவாத பெண்ணியமாகி நிற்கிறது.
யூனிசேவ் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி உலகில் இரண்டு மில்லியன் குழந்தைகள் விலைமாதர்களாக தொழில் புரிகின்றார்கள்.புலிகளின் நீதியின்படி இவர்களை எல்லாம் கொண்றொழிக்க முடியுமா?.வீட்டில் வளர்த்த கிடாவைக்கூட பிள்ளை போல் வளர்த்தது என்று தாமே வெட்டாதபோது….எமத சமூகம் பூனை நாய் ஆடுமாடு அடித்து உதைத்தால் வாய்பேசத ஜீவன்களை வருத்தாதே என்ற எமது தாய்மார்களின் குரல்கள் ஒலித்த பூமியில் இப்போ பெண்ணைக் கொன்று வீடுகளிலும் வீதிகளிலும் வீசுவதைப்பார்த்து அஞ்சி அடங்கி மெளனத்திருக்கிறது. பெண்ணாய் பிறந்தவளை கொல்லாதே என்று சொல்ல ஒரு தமிழீப் பிரஜைக்கும் துணிவில்லை.
கார்திகைப் பூக்கள் நாட்களில் முழுமையான மலர்ராகாமல் சருகாக்கப்பட்டவர்களையும் எண்ணி இந்த அஞ்சலி செலுத்தும் நாட்களில் யாராவது ஒரு சிலராவது நினைவு கொண்டால் … மனிதநேயம் முற்று முழுதாக மடிந்துவிடவில்லைத்தான்.
நன்றி “அகதி” இணையத்தளம்.
Kulan
வைரமாளிகையை நினைவுபடுத்தி விட்டீர்கள். ஒரு சிறு வயற்றுக்காக இந்த ஏகாதவெய்யிலில் நின்று வேடிக்கைகாட்டி மகிழ்வித்த மனிதனைச் சுட எப்படி மனம் வந்தது. புலிகளுக்கு மக்கள் மகிழ்ச்சியாய் இருப்பது என்றும் பிடிக்காதே. சந்திரன் இராஜா இப்படியா மறந்து போய்கொண்டிருக்கும் நிகழ்வுகளை மனத்தில் கொண்டு வந்ததற்காக மீண்டும் நன்றிகள்