(விடுதலைப் புலிகளால் புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றிய பின்னரே முகாம்களிலுள்ள 280000 தமிழ்மக்களை மீளக்குடியேற்றுவோம் என்று கூறுகிறது அரச தரப்பு. அந்த தமிழ் மக்களில் விடுதலைப் புலிகளும் தலைமறைவாகி இருக்கிறார்கள் என்று கூறுகிறது குற்றப் புலனாய்வுப்பிரிவு. ஆனால் ‘நாங்கள் என்ன குற்றம் செய்தோம் – எங்களை இன்னமும் ஏன் அரசியற் கைதிகளாய் அடைத்து வைத்திருக்கிறீர்கள்? ’ என்று அந்த ஆறாத் துயர்கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் கேட்கிறார்கள் தங்கள் தாய்மொழியில்)
எத்தனை காலம் நாம்
புதைத்து வைத்திருக்கிறோம்
எங்கள் அவலத்தை?
எத்தனை பேரிடம் நாம்
மறைத்து வைத்திருக்கிறோம்
எங்கள் காயத்தை?
எத்தனை இடங்களில் நாம்
தொலைத்துவிட்டிருக்கிறோம்
எங்கள் கனவுகளை?
எத்தனை தலைமுறையாய் நாம்
தேடிக்கொண்டிருக்கிறோம்
எங்கள் வாழ்க்கையை?
உங்களிடம்தான் கேட்கிறோம்
சொல்லுங்கள் தலைவர்களே!
துடிக்கும் இதயம்
உங்களுக்கிருந்தால்
எங்கள் ஆன்மாவின் பாடலை
நீங்களும் கேட்கலாம்
எங்களை நீங்கள்
என்னவும் செய்யலாம்
எப்படியேனும்
தடுத்து வைக்கலாம்
மானுடத்தை மறுக்கலாம்
மனிதநேசம் எதிர்க்கலாம்
மக்கள் மகிழ்ச்சி கெடுக்கலாம்
மண்ணில் இருக்கத் தடுக்கலாம்
புலிகளை அழிக்கலாம்
போரை நிகழ்த்தலாம்
முட்கம்பி முகாமுக்குள்
முடக்கியும் வைக்கலாம்
ஆனால் நாங்கள்
விடுதலை பற்றியே சிந்திப்பதனை
எப்படித் தடுக்கலாம்?
புழுதியில் புரண்டாலும்
குருதியில் நனைந்தாலும்
வறுமையில் உழன்றாலும்
நாங்கள் வாழ்வதற்கான கனவுகளை
எப்படித் தடுக்கலாம்?
தாட்சண்யமில்லா உங்கள் மனச்சாட்சியை
தீட்சண்யத்தோடு தட்டி எழுப்பினால்
எங்கள் ஆன்மாவின் பாடலை
நீங்களும் இசைக்கலாம்
பேதத்தை வேதமாய்
போதித்துப் போதித்து
(இன)வாதம் வளர்க்கலாம்
சர்வ சன சமரசம் பேசிப்
போதமாய் கதைக்கலாம்
மனிதநெறி இழந்து
மதவெறி பிடித்த
தமிழீழத் தலைவர் போல்
மானுடத்தின் விதையழித்து
மக்களை ஏமாற்றலாம்
வீதிகளில் ஊர்வலம் போன
கொலையாயுதங்களையும்
குடிசைகளுக்குள் ஒழிந்துகொண்டு
எட்டிப் பார்த்த மனிதத்தை
சமாதானம் ஒழித்து
சமாதியாகிப்போன சர்வாதிகாரத்தை
எப்படி மறக்கலாம்?
எங்கள் வானமும்
இருண்டு கிடப்பதால்
எங்கள் சிறகுகளும்
வானம் அறியாததால்
நாங்கள்
சுதந்திரம் பற்றியே சிந்திப்பதை
எப்படித் தடுக்கலாம்?
என்ன நினைக்கிறீர்கள் நீங்கள்?
நீங்கள் நீட்டுகின்ற
கரட் துண்டுகளுக்காகக்
கழுத்தை நீட்டும் கழுதைகள் என்று
எங்களை நினைக்கலாம்
ஆனால்
எங்கள் கனவை
எங்கள் கவிதையை
எங்கள் விடியலை
எப்படித் தடுக்கலாம்?
அக்கிரமம் செய்த அராஜகவாதிகளையும்
அகிம்சாவாதிகளையும் பிரித்தறியும்
நேர்மை நியாயம் எனும் ரசாயனம்
இல்லாமல் போகலாம் உங்களிடம்
ஆனால்
எங்கள் பசியை
எங்கள் சிந்தனையை
எங்கள் ஆன்மாவின் துடிப்பை
எங்கள் தாய்மொழியின் ஓலத்தை
உங்களால் எப்படி ஒழிக்கலாம்?
கூட்டுக்குத் தீ வைத்த
குருவிகள் இல்லை
மனிதர்களில்தானே
நாட்டுக்குத் தீ வைத்த
நயவஞ்சகர்கள்
இதை உணராமலா
ஜனங்களோடும் ஜனநாயகத்தோடும்
விளையாடுகிறீர்கள்?
இழந்த குருதி
இழந்த கண்ணீர்
இழந்த வியர்வை
இப்படி
ஓவ்வொரு இழப்பிலும்
புத்தனின் ஞானம்
முருகனின் கருணை
ஏசுவின் இரக்கம்
அல்லாஹ்வின் அருள் எல்லாம்
மனித நாகரீகம் பார்த்து
மருண்டுகொண்டிருக்கின்றன
அதனால் எச்சரிக்கிறோம்
‘சாதுமிரண்டால் காடு கொள்ளாது’ என்பார்களே
ஆனால்
‘சத்தியம் நிமிர்ந்தாலோ ஜெகமே தாங்காது’
பார்த்திபன்
யுத்தம் முடிந்து 5 மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னமும் அரசு, விடுதலைப் புலிகளையும் கண்ணி வெடிகளையும் சாட்டி அந்த அப்பாவி மக்களை சீரழிப்பதை மனச்சாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த மக்கள் அரசை நம்பி வந்தவர்கள் என்பதை மறந்து மகிந்த செயற்பட நினைத்தால், தெய்வம் கூட மகிந்தாவை மன்னிக்காது. புலிகள் செய்த அதே தவறைத் தான் மகிந்தாவும் செய்கின்றார் என்பதை எதிர்காலமும் உணர்த்தாது விடாது.
appu hammy
Government Minister Vinayagamurthi Muralitharan (Karuna Amman) has slammed the conditions under the Sri Lankan refugees in IDP
HISTORY REPEATS ITSELF….. PLEASE DO NOT SOW THE SEEDS FOR IT.WE DON’T WANT A WAR AGAIN….
SEE FULL INTERVIEW: http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=65226
VIDEO: http://video.dailymirror.lk/videos/138/minister-muralitharan-on-‘hot-seat’