தென் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த் முத்துஹெட்டிகம, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து இருந்து நீக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஐ.ம.சு.மு. பொதுச் செயலாளர் மைத்திரிபாலா சிறிசேன தெரிவித்தார்.
இவர் மீது மீண்டும் ஒழுக்காற்று முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இதன்மூலம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவின் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படும் என்ற காரணத்தால் இவரை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் இடத்துக்குக் காலஞ்சென்ற அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் மகன் டாக்டர் ரமேஸ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தில் நடிகை அனார்கலியுடன் மோதல்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது