இலங்கை வரும் ஜப்பான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய சுற்றுலாத்துறை அமைச்சு விசேட திட்டம் ஒன்றை வகுத்தள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணத்திலக்க இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி சொகுசு ரயில் சேவை மற்றும் உள்ளுர் விமான சேவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் ஜப்பான் மக்கள் வரவேற்பதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் வருடாந்தம் நடைபெறும் ஜப்பான் சர்வதேச சுற்றுலா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தம் வகையில் பங்குபற்றிய அமைச்சர் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக ஜப்பானில் மேற்கொள்ளப்படுவது போன்று பல திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.