நிவாரணக் கிராமங்களிலிருந்து மக் களை படிப்படியாக சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையின் கீழ் நேற்றும் 2000 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். நிவாரணக் கிராமங்களிலிருந்து மக்களை படிப்படியாக சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையின் கீழ் நேற்றும் 2000 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
35 பஸ் வண்டிகளில் நேற்றுக் காலை முதல், கட்டம் கட்டமாக இவர்கள் யாழ். நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவர்களது உடைமைகள் அனைத்தும் 15 லொறிகளில் ஏற்றப்பட்டு பஸ் வண்டிகளுடனேயே அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். நேற்று முன் தினம் அனுப்பப்பட்ட 3220 பேருக்கும், நேற்று அனுப்பப்பட்ட 2000 பேருக்கும் தேவையான உலர் உணவுப் பொருட்கள் என்பனவும் வழ ங்கப்பட்டன.