சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 19 இலங்கையர்கள் தென் கொரியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவின் வோன் கரில் உள்ள காஜா ட்ரொன் பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு பேரை காவல்துறையினர் தேடி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் உரிய விஸா இன்றி தென் கொரியாவில் தங்கியிருந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.
குறித்த நபர்களை நாடு கடத்த அந்நாட்டு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறன சம்பவங்களின் மூலம் தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வியட்நாம் மற்றும் தாய்வான் பிரஜைகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது