கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சைனைக்கு தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக 250 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் பிரதிக் கல்வி அமைச்சரை அண்மையில் சந்தித்த போது இடம் பெற்ற பேச்சு வார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் விரும்பும் பட்சத்தில் மேல் மாகாண பாடசாலைகளில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் பிரதிக் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.