டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்

Little_Aid_Med_Deliveryபிரித்தானியாவில் பொது அமைப்புகளின் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட்1140 கிகி (1.12 தொன்) எடையுள்ள மருந்தப் பொருட்களை வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ்வளவு தொகையான மருந்துகளும் டென்மார்க்கில் உள்ள மருத்துவ பொது அமைப்பான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு இருந்தது. இம்மருந்துகளின் காலாவதிக் காலம் யூலை 2011. வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மருந்துப் பொருட்கள் பரவலாக உள்ள நோய்களுக்கான 7 வகையான மருந்துகளை உள்ளடக்கி இருந்தது. வலி நிவாரணம், மன அழுத்தம் மன உளைச்சல், இதய எரிவு, வயிற்று அல்சர், உயர் கொலஸ்திரோல் ஆகியவற்றிற்கான மருந்துகள் இந்த மருந்துத்தொகுதியில் உள்ளடங்கி இருந்தது. இம்மருந்துப் பொருட்களின் மதிப்பீடு 16,000 பவுண்கள் (30 லட்சம் ரூபாய்.) டென்மார்க்கில் உள்ள இனிசியேறிவ் 2009 என்ற அமைப்பு எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மருந்துப்பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்படுவதை உறுதிப்படுத்தியது. லிற்றில் எய்ட், இனிசியேற்றிவ் 2009, எல்லைகளற்ற மருத்துவர்கள் குழுவாக ஒரு நோக்குடன் செயற்பட்டு மருந்துப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.

Little_Aid_Med_Deliveryசெப்ரம்பர் 16ல் விமானமூலம் இந்தப் பொருட்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒக்ரோபர் 6ல் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டது. லிற்றில் எய்ட் சார்பில் டொக்டர் நிமால் காரயவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோர் இம்மருந்துத் தொகுதியை வவுனியாவுக்கு எடுத்துச் சென்றனர். வவுனியா மருத்துவமனையின் உயர் அதிகாரியான டொக்டர் பவானி பசுபதிராஜா வவுனியா உதவி அரசாங்க அதிபர் சம்பந்தர் முன்னைலையில் டொக்டர் நிமால் காரியவாசம், திரு மார்க் பெர்னான்டோ ஆகியோரிடம் இருந்து உத்தியோகபூர்வமாக மருந்துப் பொருட்களைக் கையேற்றார்.

இந்த மருத்துவத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனிசியேற்றிவ் 2009, மற்றுமொரு 7000 கி கி எடையுள்ள மருந்துப் பொருட்களை நோர்வேஜிய நிறுவனம் ஒன்றினூடாக பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தி உள்ளது. இம்மருந்துப் பொருட்களை வவுனியா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க லிற்றில் எய்ட் விரும்புகின்றது.

லிற்றில் எய்ட் பதிவு செய்யப்பட்ட பொது அமைப்பு. மே 18 2009ல் பிரித்தானிய பொது அமைப்புகள் ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டது. கடந்த 5 மாதங்களில் மரக்கறிகள், குழந்தைகளுக்கான பால்மா, துணிவகைகள் ஆகியவற்றை தம்புல்லவில் இருந்து செட்டிகுளம் முகாம்களுக்கு அனுப்பி வைத்தது. மேலும் அம்பேபுச முகாமில் உள்ள முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வில் அவர்களுக்கு இசைப் பயிற்சி வகுப்புகளை லிற்றில் எய்ட் மேற்கொண்டிருக்கின்றது. இத்திட்டம் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இத்திட்டம் சட்ட மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் லிற்றில் எய்ட் இனால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் பொது அமைப்புகளின் செயற்பாடுகளை வெளிப்படையாகவும் கணக்குகளைத் திறந்த புத்தகமாகவும் வைத்திருக்கும் பழக்கத்தையும் லிற்றில் எய்ட் ஏற்படுத்தி உள்ளது. அதன் இணையத்தளத்தில் சகல விபரங்களையும் காணலாம்.

மேலதிக விபரங்களுக்கு : www.littleaid.org.uk

ரி கொன்ஸ்ரன்ரைன்
தலைவர்
லிற்றில் எய்ட்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

 • chandran.raja
  chandran.raja

  வாழ்த்துகள் பணிதொடரட்டும். குறையில்லாதது ஒன்றில்லை. குறை கண்டுபிடிப்பதற்கே எம்மவர் மத்தியில் அதிகம் பேர் இருக்கிறார்கள். இதன் கரு தன்மையை புரிந்து கொண்டு முன்னுதாரமாக திகழும் லிட்டில்எயிட் அமைப்பு மேலும் வசதிகளையும் தொடர்புகளையும் ஏற்படுத்தி கல்வி மருந்து மட்டுமல்லாமல் இனவெறி மதவெறி இல்லாத ஐக்கிய இலங்கைகான அரசியலை நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்கிறோம்.

  Reply
 • பல்லி
  பல்லி

  மனதார பாராட்டுகிறேன்:
  இதுக்காக உழைத்த நண்பர்கள் அனைவர்க்கும் பல்லியின் குடும்பம் சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்;
  நட்புடன் பல்லி;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  லிட்டில்எயிட்டின் சேவைகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அதுபோல் லிட்டில்எயிட்டிற்கு மருத்துகள் பெற்றுக் கொடுக்க பெரிதும் உதவிய டென்மார்க் இனிசியேறிவ் அமைப்பு மற்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு போன்றவற்றிற்கும் மனமார்நத பாராட்டுகள்.

  Reply
 • மாயா
  மாயா

  உதவிகள் சிறிதாக இருந்தாலும் , இன்றைய நிலையில் இருப்பதை கொடுப்பதே பெரிது. அந்த வகையில் இவ் அமைப்பின் செயல் திட்டம் வழி பலர் பயன் பெறுவார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

  சுவிஸ் கருத்தரங்கில் லிட்டில் எயிட் மற்றும் பலர் தமது கருத்துகளை மட்டுமல்ல, செய்த பலதை விளக்கினார்கள். தேவைகளையும் சொன்னார்கள். அதை கேட்க வீதியில் கொடி பிடித்து கொத்து ரொட்டி சாப்பிட்ட தமிழர்கள் வரவில்லை. நிகழ்வில் பங்கு கொண்டவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் குறைவானாலும், அனைவரிடமும் ஏதோ செயல் திறனை காண முடிந்தது. நாலு பேர் சேர்ந்தாலும் பரவாயில்லை நல்லவை தொடர்ந்தால் அதுவே போதும்.

  Reply
 • B J Mariar
  B J Mariar

  லிட்டில் எய்ட்டுக்கு
  மொழி இல்லை
  மதம் இல்லை
  இனம் இல்லை
  எமது மண்ணையும் கட்டி எழுப்புவோம்
  இன மொழி மத பேதம் இன்றி
  வாழ்த்துக்கள் லிட்டில் எய்ட்டுக்கு

  Reply
 • Thirumalai vasan
  Thirumalai vasan

  யாரோ செய்யட்டும் வாழ்த்தை மட்டும் அனுப்பி எமது பெயரைப் பதிவுசெய்வோம் என்று எண்ணும் பின்னூட்டக்காரர்களே- உங்களில் எத்தனைபேர் லிட்டில் எயிட்டுக்கு உதவினீர்கள்? எல்லாம் பேச்சுத்தானா? மனதில் பட்டது. சுட்டாலும் சுடும்.

  Reply
 • பல்லி
  பல்லி

  சுடாது சுட்டாலும் சுடாது;
  இது சின்ன சின்ன உதவியமைப்புதானே?
  ஆகவே செய்வதை சொல்லி செய்ய நாம் என்ன புலத்து பினாமிகளா? அல்லது, மறுபடியும் அமைப்பு கட்ட;;;;;; இல்லைதானே ஆகவே வாசனின் வார்த்தை எமக்கு சுடவில்லை சுடவில்லை; எதுக்கும் சந்திராவின் பின்னோட்டத்தை கவனிக்கவும்;

  Reply
 • Thaksan
  Thaksan

  மக்களை சென்றடையும் உதவிகள் பாராட்டுக்குரியது. “காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”. தொடரட்டும் “லிற்றில் எயிட்”.

  Reply
 • Constantine
  Constantine

  We (Little Aid) have been offered a consignment of medicine worth £100,000. Transportation cost is around £2000 – £3000. We have asked help from all the Sri Lankan temples Churches in London. Until now we haven’t received any positive reply.

  Little Aid will do all the work in Sri Lanka. INTITIVET 2009 – Denmark will coordinate the consignment. We both will not put your names in front if that you require…

  CAN YOU HELP

  Constantine – Little Aid

  Reply
 • சோழன்
  சோழன்

  கொன்ஸன்ரன் அவர்களே, உங்களுக்குத்தெரியும், இலங்கை அரசினால் முட்கம்பி முகாங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எம்மக்கள், இன்று சிறிலாங்கா அரசின் வருமானம் ஈட்டும் ஒரு வியாபாரப்பொருள்!! விலை பேசி உங்கள் போன்ற முகவர்களூடாக விற்கப்படுகிறார்கள். அவர்களை வைத்து உலகெங்கும் கையேந்தும் இலங்கை அரசு, புலம்பெயர் மக்களிடமும் கையேந்துகுகிறது.

  இலங்கை அரசின் ஒரு வியாபார பொருளாக மாறிவிட்ட முட்கம்பி முகாம்ங்களுக்கு உள்ள எம்மக்களின் இன்னொரு முகவராக லிட்டில் எயிட் அவ்வளவுதான்!

  Reply
 • T Constantine
  T Constantine

  Mr Solan – Another Key Board Marxist – Do nothing talk only

  Reply