தலிபான் களின் அச்சுறுத்தல் இருந்தாலும், பாகிஸ்தானின் அணுஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டு இருக்கும் அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ராவல்பிண்டியில் இராணுவ தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் ஆயுததாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதை காண்பிக்கிறது என கூறினார்.
ஆனால் ஆயுததாரிகள் பாகிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டிஷ் வெளியுறவுச்செயலர் டேவிட் மிலிபேண்ட் கூறும்போது, பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளில் சென்று சேர்ந்து விடும் என்ற பிரச்சினையே இல்லை என தெரிவித்தார்.