கொழும்பு தெஹிவளையிலுள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் பொலிதீன் கொண்டு செல்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதன் அடிப்படையில் விலங்கியல் பூங்காவிற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பூங்காவிலுள்ள விலங்கினங்களைப் பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
பூங்காவிற்கு வருகை தருகின்றவர்கள் விலங்கினங்களுக்கு பொலிதீன் கவர்களுடன் உணவுப்பொருட்களை வழங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
அன்மையில் பூங்காவில் காணப்பட்ட மிகவும் அரிதான ஒரு விலங்கு எதிர்பாராத விதமாக உயிர்நீத்தது. சோதனையின் போது அதன் வயிற்றிலிருந்து ஒன்றரைக் கிலோ பொலிதீன் கண்டெடுக்கப்படடுள்ளது.
john
விலங்குகளுக்கு போதிய சாப்பாடு கிடைக்காமல்தான் பொலித்தீனையும் தின்னுதோ தெரியாது. அதுவென்ன அரிதான ஒரு விலங்கு??…