ஜனாதிபதி மஹிந்தவே நோபல் பரிசுக்கு தகுதி – கனடா நஷனல் போஸ்ட்

Alfred_Nobelசமாதானத் திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவேயன்றி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அல்ல என்று கனடா நெஷனல் போஸ்ட் ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தப் பரிசை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்குவது வேடிக்கையான விடயம் என்றும் அந்த பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி எதிர்காலத்தில் ஆற்ற விருக்கும் பணிகளுக்காகவே இப் பரிசு இப்போது வழங்கப்படுவதாக அப் பத்திரிகையின் ஆசிரியர் ஜொனதன் கேனியா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்பதை செயற்பாடு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அப்பத்திரிகை தெரிவித்திருக்கின்றது.

மூன்று தசாப்தங்களாக இலங்கை குடி மக்கள் முகம் கொடுத்த குரூரமான பயங்கரவாதத்திலிருந்து அம் மக்களை விடுவித்து, அவர்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்திருப்பதற்காக அவர் இப் பரிசுக்குரிய தகுதியைப் பெற்றிருக்கின்றார் எனவும் அப்பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

  • sumithra
    sumithra

    ஒபாமா அப்படி என்னதான் பெரிதாக சாதித்துவிட்டார் சமாதானத்திற்கான நோபல் பரிசை பெறுவதற்கு. ஈராக்கில் நடந்து கொண்டிருந்த போரை ஆப்கானிஸ்தானுக்கும் விஸ்த்தரித்துள்ளார்.இது சமாதானமா? இதற்கும் ஒரு நோபல் பரிசா? ஏற்கனவே ஈராக் போரினால் ஐ.நா. தனது அந்தஸ்த்தை இழந்துவிட்டது போல், இந்த வேடிக்கையான கேலிக்கூத்தான வழங்கலால் நோபல் பரிசும் தனது அந்தஸ்த்தை அடியோடு இழந்து விட்டதாகவே கருதப்படுகின்றது. ஆகையால் ஒரு கால் நூற்றாண்டு பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை நிலைநாட்டத் துடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கு அப்பரிசைக் கொடுப்பதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும். இவ்விடயம் மறுபரிசீலனை செய்யப்படாவிட்டால் இதுவே சிலசமயங்களில் உலகில் இறுதியான சமாதான நோபல் பரிசாகவும் கூட இருக்கலாம் என்பதிலும் ஐயமில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    அதிபர் மகிந்தவுக்கு சாமாதான பரிசு கிடைக்காது போனாலும் , கொடுக்கப்பட வேண்டும் என கனடா நெஷனல் போஸ்ட் ஆங்கிலப் பத்திரிகை தெரிவித்துள்ளதே பரிசு கொடுத்தது மாதிரிதான். இது அதிபர் மகிந்த மனதில் இலங்கை தமிழர்களுக்கு விடிவொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனும் உணர்வை அதிகரிக்க தூண்டுதலைக் கொடுக்கும்.

    தினந்தோறும் 1 முதல் 100, 200 என செத்துக் கொண்டிருந்த நிலை இலங்கையில் இல்லாது போனதற்கு அரசின் யுத்த வெற்றியே காரணம். தடுப்பு முகாமிலிருக்கும் அப்பாவி மக்கள் விடுவிக்கப்பட்டு (புலிகளல்ல) சாதாரண வாழ்வுக்கு திரும்பி விட்டால் நாடு சுமூக நிலைக்கு 85 சத வீதமாவது மாறும். அதுவே முழு மாற்றத்துக்கும் வழி காட்டும்.

    Reply
  • sangamithrai
    sangamithrai

    ஆகையால் ஒரு கால் நூற்றாண்டு பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை நிலைநாட்டத் துடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கு அப்பரிசைக் கொடுப்பதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

    உண்மைதான் சுமித்ரா, அடுத்த தடவை விண்ணப்பம் கோருமபோது அதற்கான சிபார்சை நீங்கள் மேற்கொள்ளலாம். அதற்கிடையில் தடுப்ப முகாமிலுள்ள பாதிப்பேர் காணாமல் போய்விடுவர் மீதிப்பேர் நோயினாலும் இயற்கையாகவும் செத்தொழிந்துவிடுவர்.

    சமாதானத்தை நிலைநாட்டத்துடிக்கும் உங்கள் தலைவர் மகிந்தா நிம்மதிப் பெருமூச்சுடன் அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்வார். நீங்களும் பழையபடி அடுத்ததாக யாருக்க நோபல் பரிசு கொடுக்கலாம் அல்லது ஒஸ்கார் பரிசு கொடுக்கலாம் என்று தேடித்திரியலாம். அரசின் ஆதரவுகளாக மாறிவரும் வி.அருட்செல்வன் போன்ற செய்தியாளர்களும் அவர்களுக்குக் களம் அமைத்துக்கொடுக்கும் ஜெயபாலனும் விரைவில் இலங்கை அரசின் தேசமான்ய பட்டத்தையும் பெற்றுக்கொள்வார்கள். எல்லோரும் பட்டத்தையும் பதவியையும் பெட்டிகளையும் நம்பியே தமிழரினதும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களினதும் உணர்வுகளை நலமடித்து விடுங்கள். சுபம்.

    Reply
  • john
    john

    ஒரு கால் நூற்றாண்டு பயங்கரவாதத்தை தோற்கடித்து சமாதானத்தை நிலைநாட்டத் துடிக்கும் இலங்கை ஜனாதிபதிக்கு அப்பரிசைக் கொடுப்பதுதான் அர்த்தமுள்ளதாக இருக்கும்.//

    அவருக்கு மட்டுமல்ல மகிந்தாவை ஜனாதிபதியாக வர உதவிய பிரபாகரனுக்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

    Reply
  • Rohan
    Rohan

    “மேலும் ராஜபக்ஷ பிறப்பால் அமெரிக்கரோ அல்லது யூதரோ இல்லை என்பதால் வியட்னாம் போர் முடிவு போல இரு தரப்பினருக்கும் பரிசு கொடுக்க முடியாது. எனவே இங்கு “போரில் தோற்ற” தமிழர் பிரதிநிதிகளான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசு கொடுக்கலாம்”

    -நட்சத்திரன் செவ்விந்தியன் /

    Thesamnet writer had already told us why Rajapakshe doesn’t deserve it. ie he is neither a Jew nor an American.

    -Rohan.

    Reply
  • முன்னாள் பொரளி
    முன்னாள் பொரளி

    /எனவே இங்கு “போரில் தோற்ற” தமிழர் பிரதிநிதிகளான மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பரிசு கொடுக்கலாம்”/
    rohan மன்னிக்கவும் யார் அவர்கள் எங்கிருக்கின்றனர் எந்த நாடுதழிழர் பிரதிநிதிகள் எந்த தழிழரின் மனித உரிமைகளுக்காக யாரிடம் யாரைப் பற்றி யாருக்கு குரல் கொடுத்தனர் விளக்கமாகத் தரவும்.

    Reply
  • sumithra
    sumithra

    நன்றி சங்கமித்ரை,முகாம்களிலுள்ள மக்கள் காணாமல் போவார்கள், செத்து மடிவார்கள் என்று கூறும் நீங்கள் இதே மக்கள் தொடர்ந்தும் வன்னியிலிருந்திருந்தால் இவர்களின் நிலை என்னவாகியிருக்கும் என்று சற்றும் சிந்தித்ததில்லையா? இவர்களை பேரழிவிலிருந்து காப்பாற்றியது யார்? தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களின் உணர்வுகளைப்பற்றி எண்ணத் தோன்றிய தங்களுக்கு வடக்கில் 1990 ல் அவர்களின் வாழ்வுரிமையை நசுக்கியவர்கள் யாரென தெரியாதா?
    நம் நாட்டையும் மக்களையும் நாசமாக்கிய பாசிச பயங்கரவாதத்தை அடியோடு அழித்ததும் அரச பயங்கரவாதம்தான் என்று தாங்கள் கூறினாலும்,எம்மக்கள் மனங்களில் இன்று மறைந்து மலர்ந்து தெரிவது நிம்மதியும் சமாதானத்தின் எதிர்பார்ப்புமேயன்றி வேறொன்றுமல்ல என்ற உண்மையை மறைக்க முயலாதீர்கள் .நடந்து முடிந்தவை கசப்பாக இருப்பினும் இனி நடக்கப்போவன இனிப்பாக அமைய விரும்புமிடத்து அதற்காக பரிசளிப்பதில் என்ன தவறைக் காண்கின்றீர்களோ தெரியவில்லை.

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    The war mongers(Ltte supporters) now use the refugees problem as a weapon.This situation was created by LTTE solution was given by Rajapakse government.Of course he is the undisputed leader of Sri Lanka.Dont forget,even after clearing Kilinochchi president mahinda appealed to the LTTe to stop war and surrender.Well done National Post-This is what Jouranalism is all about.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    எனக்கும் ஒபாமாவுக்கு பரிசு வழங்கப்பட்டதில் ஒப்புதல் இல்லை.
    மஹிந்தாவுக்கு அமைதிப்பரிசு கொடுக்கவேண்டும் என இவர்கள் கோருவதில் வியப்பில்லை. ஏனெனில் கனடாவிலேயே இஸ்ரேலுக்கு ஆதரவாக (வக்காலத்து வாங்கும் அளவுக்கு)இயங்கும் ஒரே பத்திரிகை இதுதான். பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவானவர்களைப் பற்றிய இவர்களின் எழுத்து அருவருக்கத்தக்கது.
    நசனல் போஸ்ற் ஒரு கன்சவேற்றிவ் பத்திரிகை,சொல்லப்போனால் மிகமோசமான கன்சவேற்றிவ் பத்திரிகை. வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்களை வாந்தியெடுப்பது!
    அமெரிக்க கன்சவேற்றிவ் காரர்கள்கூட நஷனல் போஸ்ற் இனைக் கையில் எடுக்க விரும்பமாட்டார்கள் என சொல்வார்கள்.
    இப்பத்திரிகையில் பணியாற்றிய பலர் பொய், அவதூறு மற்றும் இலக்கியத்திருட்டுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    1925 இல் சேர்.பேர்னாட் ஷோவுக்கு இலக்கியத்துக்கான விருது வழங்கப்பட்டபோது அதனை வாங்கமறுத்து அவர் சொன்ன கருத்துகள் முக்கியமானவை. ”a man who has reached the shore does not lead a life boat” கரையேறியவனைக் காப்பாற்றவேண்டிய அவசியமில்லை.

    ஒருவேளை மஹிந்தா கரைசேர்ந்துவிட்டார், ஒபாமாவுக்கு ‘சமாதான நோபல்’ என்ற கலங்கரை விளக்கு தேவைப்படுகிறது என எடுத்துக்கொள்ளலாமா? அவரும் கரைசேர வசதியாக இருக்கும்.

    Reply