இலங்கை கூடைப் பந்தாட்டச் சங்கத்தினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்படவுள்ள 51வது கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் பங்கு பற்றுவதற்கென யாழ்ப்பாணத்தில் இருந்து மாணவிகள் நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்துள்ளனர்.
கொழும்பு செல்வதற்கு முன்பதாக இம்மாணவிகளும் பயிற்சி ஆசிரியர்களும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் புனித கன்னியர் மடம் ஆகிய பாடசாலைகளில் இருந்து மேற்படி போட்டிகளில் கலந்து கொள்ளும் இம்மாணவிகளின் பயண, உணவு மற்றும் ஏனைய தேவைகளுக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி உதவியை வழங்கியதுடன் கொழும்பு சென்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியுடன் திரும்ப வேண்டுமென அம்மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து வழியனு ப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்
nallurkanthan
The complete annihilation of the cruel,facist forces opened the gates for many things.Last month a girl from Arunodaya college,Alaveddy established a national record in Pole vault.She is from a backward(poor) family.Those who shouts for Tamil people should help this girl economically to encourage for more achievements.I invite good mannered people to help her.