அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் பரிசு ? : என் எஸ் குமரன்

Alfred_Nobel2009ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவுக்கு வழங்க நோபல் பரிசுக் குழுவின் தீர்மானம்  இன்று 09ஆம் திகதி முற்பகம் 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இது சமாதானத்துக்கான 89ஆவது நோபல் பரிசாகும்.

உத்தியோகபூர்வ பரிசுவழங்கும் வைபவம் டிசம்பர் 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சர்வதேச அரசியல், சூழலியல், ஜனநாயகம் விடயத்தில் அவரின் பாத்திரத்தை கருத்திற்கொண்டே இவ்விருத்தினை வழங்குவதற்கான ஆராய்வுகள் இடம்பெற்றதாக இந்த அறிவிப்பை வெளியிட்டவேளை  பரிசுக்குழு தெரிவித்துள்ளது.

சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் 3வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆவார். ஏற்கெனவே, 1906இல் தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கும்,  1919இல் வூட்ரோ வில்ஸனுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதவியில் இல்லாத காலத்திலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. பதவியிலிருக்கும் போதே  வழங்கப்பட்டது இதுவே முதன்முறை.

2007ஆம் ஆண்டுக்கான பரிசு அமெரிக்கவின் முன்னாள்  உதவி ஜனாதிபதி அல்கோருக்கு வழங்கப்பட்டது. சூழலியல் குறித்த அவரது சேவையை கருத்திற்கொண்டே அது வழங்கப்பட்டிருந்தது.

இது குறித்து அமெரிக்க விவகாரங்களில் நிபுணத்துவமுள்ள ஒஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ஊலே மோன் கருத்து தெரிவிக்கையில், தான் இது குறித்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்ததாகவும், பரக் ஒபாமாவை நோபல் பரிசுக்காக கணிப்பதற்கான காலம் போதாது என்றும்,  அவரின்  குறுகிய கடமை காலத்தைக் கொண்டு கணித்தது சரியானதல்ல என்றும், ஆனால் மரபான அமெரிக்க தலைமையிலிருந்து மாறுபட்ட திசையில் சவாலினை எதிர்கொண்டபடி அவரது பயணத்தை இது ஊக்குவிக்கலாம் என்றார்.

இதே கருத்துபட வேறு பல அரசியல் நிபுணர்களும் உடனடியாகவே ஊடககங்களுக்கு கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

சமீப கால அவரது முயற்சிகளாக பேசப்பட்டுவரும் அணுஆயுதக் குறைப்பு, குவாத்தனாமோ முகாம் குறித்த விடயங்களிலும் அவரது முயற்சி உலக அளவில் அவருக்கான ஆதரவு அதிகரித்திருப்பதையும் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.

நோர்வேஜிய பிரதமர் தனது உரையில் இப்பரிசு அவர் முன்னால் உள்ள கடமைகளுக்கு உறுதுணையாய் இருக்கும் என அறிவித்திருக்கிறார்.

ஏறத்தாழ 150 தொடக்கம் 200 பேர் வரையிலானவர்களை இப்பரிசுத் தெரிவுக்காக ஆண்டு தோறும் ஆராயப்படும். சென்ற தடவை 205 பேர் ஆராயப்பப்பட்டார்கள். இதுவரை காலத்தில் அதிகமானோர் முன்மொழியப்பட்டது இந்த ஆண்டுதான். இம்முறை இப்பரிசுக்காக ஆராயப்பட்டவர்கள் வரிசையில், சிம்பாபே பிரதமர் மோர்கன் சுவாங்கிரய், கொலம்பிய அரசியலாளர் இங்கிரிட் பெத்தான்கோர்ட், ஆப்கானிய மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் சீமா சமார். ரஸ்ய மனித உரிமையாளர் ஸ்வெத்லானா கன்னுஷீனா. சீன மனித உரிமை செயற்பாட்டாளர் ஹ ஜியா.

அமைதிக்கான  நோபல் பரிசு சுவீடனின் வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் அவர்களால் நிறுவப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் ஒன்றாகும். அவரது உயிலின்படி அமைதிக்கான பரிசு “யாரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவரோ நிலவும் இராணுவத்தினை நீக்கவோ அல்லது குறைக்கவோ முயற்சி எடுத்தவரோ அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கிறாரோ” அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

நோபல் பரிசுப் பதக்கம்

ஆல்பிரட் நோபலின் உயிலின்படி இப்பரிசை நோர்வேயின்நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு கொடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் இப்பரிசு வழங்கப்படுகிறது. மற்ற நான்கு பரிசுகள் சுவீடனின் தலைநகர் ஸ்டொக்ஹோமில் வழங்கப்படும்போது இப்பரிசு மட்டுமே நோர்வேயில் வழங்கப்படுகிறது. நோபல் பரிந்துரை குழுவின் தலைவரிடமிருந்து நோபல் பரிசு பெறுபவருக்கு ஒரு பட்டயம்இ ஒரு பதக்கம் மற்றும் பரிசுப்பணத்தை உறுதிசெய்யும் ஆவணமும் வழங்கப்படுகிறது.

இந்தப் பரிசுக்குழுத் தலைவருடன் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் பிரேத்தியமாக அழைத்து சந்தித்து உரையாடியிருந்தோம்.. அதன் போது இத்தெரிவு குறித்த எதிர்ப்புகளை ஒப்புக்கொண்டார். பரிசு அறிவிக்கப்பட்ட தினத்தில் வெளிவந்த மக்கள் கருத்து இத்தெரிவு குறித்த  தமது அதிருப்தியை நோர்வேஜியர்கள் பலர் வெளிக்காட்டி வருவதை வெளிப்படையாக்காண முடிகிறது.

வழமையான நோபல் பரிசுத் தெரிவில் அமெரிக்காவின் பங்கு இருப்பதான குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லையென்றும், ஆனால் நோபல் கமிட்டியில் உள்ளவாகளுள் அரசியல் கருத்துடையவர்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார் நோபல் பரிசுக்குழுத் தலைவர். ஏற்கெனவே 50களில் மகாத்மா காந்திக்கு பரிசு வழங்குவதனை எடுமையாக பிரித்தானியா எதிர்த்ததில் அது ஒத்தி வைக்கப்பட்டதையும் கடந்த வருடம் நோபல் பரிசுக் குழுத் தலைவருடனான உரையாடலின் போது அறிவித்திருந்ததை  குறிப்பிட விரும்புகிறேன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

 • சாந்தன்
  சாந்தன்

  ‘….சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறும் 3வது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆவார். ஏற்கெனவே, 1906இல் தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கும், 1919இல் வூட்ரோ வில்ஸனுக்கும் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதவியில் இல்லாத காலத்திலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது. பதவியிலிருக்கும் போதே வழங்கப்பட்டது இதுவே முதன்முறை…..’

  ஒரு சிறிய திருத்தம்….

  ஒபாமா சமாதான பரிசு பெறும் 4 ஆவது அமெரிக்க ஜனாதிபதி. ஜிம்மி காட்டர் 2002 இல் பெற்றிருந்தார்.
  அத்துடன் இந்நால்வரில் மூவருக்கு பதவிக்காலத்தில் வழங்கப்பட்டது.
  ரூசவெல்ற் 1906 – பதவிக்காலம் 1901-1909
  வூட்ரோ வில்சன் 1991 – பதவிக்காலம் 1913 – 1921
  ஒபாமா 2009 – பதவிக்காலம் 2009 – ?

  ஜிம்மி காட்டரே பதவியில் இல்லாதபோது பெற்றார்.

  Reply
 • gunarajah
  gunarajah

  yes mr saanthan your correct redecteur theesam not undestrad

  Reply
 • என்.எஸ்.குமரன்
  என்.எஸ்.குமரன்

  தகவலைத் திருத்தியதற்கு நன்றி சாந்தன்…

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  ஒபாமாவுக்கு தற்போது இந்த விருது வழங்குமளவிற்கு, இன்னும் அவர் ஒன்றும் சாதித்து விடவில்லை. இதன் மூலம் இதனைப் பரிந்துரைத்த குழு நோபல் பரிசை கேவலப்படுத்தி விட்டனர்.

  Reply
 • BC
  BC

  //பார்த்திபன்- ஒபாமாவுக்கு தற்போது இந்த விருது வழங்குமளவிற்கு இன்னும் அவர் ஒன்றும் சாதித்து விடவில்லை.//
  ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு என்று சமாதானத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் அமைப்பினால் அவர் ஆதரிக்கபடுகிறார்.அது ஒன்றே போதுமே அவரின் சாதனைக்கு.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘….இதன் மூலம் இதனைப் பரிந்துரைத்த குழு நோபல் பரிசை கேவலப்படுத்தி விட்டனர்….’

  இன்றும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் ஒரு கொம்பனியின் (ராஜீவ் காந்தி புகழ் போர்ஃபோஸ்) ஸ்தாபகரின் பெயரில் சமாதானத்துக்காக ஒரு பரிசை ஏற்படுத்தியதே கேவலம்.
  இதில் ஒபாமாவுக்கு கொடுத்துக் ஸ்பெசலாக கேவலப்படுத்தி விட்டனராம். இஸ்ரேலின் மெனாக்கம் பெகினுகும், யிற்சாக் ரபின், ஷிமோன் பெரிஸ், பாலஸ்தீன யாசர் அரபாத் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டபோது இல்லாத கேவலமா ஒபாமாவுக்கு வழங்கியபோது வந்தது?

  Reply
 • Shan N
  Shan N

  War And Peace Prizes By Howard Zinn
  10 October, 2009 The Guardian

  I was dismayed when I heard Barack Obama was given the Nobel peace prize. A shock, really, to think that a president carrying on two wars would be given a peace prize. Until I recalled that Woodrow Wilson, Theodore Roosevelt, and Henry Kissinger had all received Nobel peace prizes. The Nobel committee is famous for its superficial estimates, won over by rhetoric and by empty gestures, and ignoring blatant violations of world peace.

  Yes, Wilson gets credit for the League of Nations – that ineffectual body which did nothing to prevent war. But he had bombarded the Mexican coast, sent troops to occupy Haiti and the Dominican Republic and brought the US into the slaughterhouse of Europe in the first World War, surely among stupid and deadly wars at the top of the list.

  Sure, Theodore Roosevelt brokered a peace between Japan and Russia. But he was a lover of war, who participated in the US conquest of Cuba, pretending to liberate it from Spain while fastening US chains on that tiny island. And as president he presided over the bloody war to subjugate the Filipinos, even congratulating a US general who had just massacred 600 helpless villagers in the Phillipines. The Committee did not give the Nobel prize to Mark Twain, who denounced Roosevelt and criticised the war, nor to William James, leader of the anti-imperialist league.

  Oh yes, the committee saw fit to give a peace prize to Henry Kissinger, because he signed the final peace agreement ending the war in Vietnam, of which he had been one of the architects. Kissinger, who obsequiously went along with Nixon’s expansion of the war, with the bombing of peasant villages in Vietnam, Laos and Cambodia. Kissinger, who matches the definition of a war criminal very accurately, is given a peace prize! People should be given a peace prize not on the basis of promises they have made – as with Obama, an eloquent maker of promises – but on the basis of actual accomplishments towards ending war, and Obama has continued deadly, inhuman military action in Iraq, Afghanistan and Pakistan.

  The Nobel peace committee should retire, and turn over its huge funds to some international peace organization which is not awed by stardom and rhetoric, and which has some understanding of history.

  (Howard Zinn is the author of “A People’s History of the United States,” “Voices of a People’s History” (with Anthony Arnove), and “A Power Governments Cannot Suppress.”)

  Reply
 • பல்லி
  பல்லி

  இந்த நோபல் பரிஸை பெறுவதுக்கு பாமா உழைத்தது இரு வாரங்களே, மிகுதி 52 வாரங்களும் அவருக்கு இலவசமாக கிடைத்த பொன்னாடை;

  Reply
 • முன்னாள் பொரளி
  முன்னாள் பொரளி

  உலகே ஒரு நாடகமேடை

  Reply
 • Nick
  Nick

  United States of Ameruica is a fractured Nation- fractured between the Blacks , and the Whites. In to this fractured Nation was born on the 4 August, 1961, Barrack Obama, fathered by a black man and mothered by a white woman. As a child he went through all the rigors of a child of a mixed marriage. He suffered the separation of parents, and living with people who were not his.

  Born into such circumstances, he has now paved the way for others of different communities born in to a same Nation to find their identity as members of the same Nation.

  He set an example to those who fight for ethnic separation like the Tamils in Sri Lanka to understand, if they can use their intelligence more positively, that separation of minority communities from the majority is a disaster for the country and the nation. He showed that it is not by denouncing the majority, and claiming separate homelands and political settlements that they can achieve success, and make the country progress as a Nation. That itself makes him deserve the Nobel Peace Prize.

  Barrack Obama made it crystal clear, that it is through accepting the majority, seeking integration as equals that the communal unity could be achieved and even a leader from a minority community could rise to hold the highest office as the President of the country.

  The American blacks had been fighting for equal rights ever since slavery was abolished in America. Neither peaceful demonstrations nor aggressive opposition to the white American domination, found their acceptance and integration in to the white American Society.

  The early negro American movement that started from narrow racial advancement within America took a new turn after the World War 2 with the American black leaders lending their support for the people of countries seeking independence from European colonialism and against America for supporting the Colonialists.

  Subsequently they stopped their support for those seeking independence from colonialism to concentrate on a Civil Rights moment of the negro Americans. Many were the black Americans, such as Ella Baker, Rosa Parks, Malcolm X and Martin Luther King, who became pioneers of the American Civil rights movement slowly but surely making cracks in the almost impenetrable wall of the American racial segregation.

  In 1983 still a young man in his 20s awaiting graduation, Barrack Obama decided to become a community organiser. “…to mobilise the poor and giving back to the community.…… through organising , through shared sacrifice , ……….because this community I imagined was still in the making , built on the promise that the larger American community, black, white, and brown could somehow redefine itself- I believed that it might ,over time, admit the uniqueness of my own life…… This was my idea of organising”.

  Thus he wrote in his book “ Dreams from My Father”. Having had no response to all the letters he wrote to civil rights organisations, councils and tenant rights groups, he decided to find conventional work for a short time before starting on his community projects.

  Subsequently he found employment as a research assistant to a multinational corporation, the only Blackman in the company. He was accepted in the company and promoted to the post of a Financial writer. But the call to the service of the under privileged people of his community was greater and he gave up his promising job to become a community worker in Chicago “ a job closer to street”.

  But soon he was out of a job, service to the community a distant dream. He wrote “……In six months I was broke ,unemployed , eating soup from a can.”

  Finally he met people doing Community service, and met an Organiser who put him in charge to Organise the community of people in Altgeld Gardens Public Housing project. A place which had been abandoned due to bad sanitary conditions, and heavy, putrid odour emanating from a sewage treatment plant seeping through the windows of the residential buildings.

  The Altgeld Gardens a housing complex, which was built to house affluent white Americans, after its abandonment became a dump to house the poor blacks away from white neighbourhoods. He worked with the people to improve their condition of living organising them into active working groups through the help of the Community Churches. He was undaunted by failures, not discouraged by the indifference and the surrender to poverty and hopelessness of life of the people whose lot he was trying to improve.

  It was Barrack Obama, the man that gave himself to the upliftment of a community without anger, hatred, and aggresivity. He neither criticised the whites nor praised the blacks, but in silence with patience and hard work he brought a dim light to the darkness of the lives of those with whom he worked. He gradually moved into politics not for his self aggrandisement but for the sake of other, where he thought he would be better placed to help the disadvantaged communities.

  He did not follow his erstwhile elders, to manifest against the whites and their racial regimes. But he worked in friendly cooperation with the his black community as well as the white community. He was able, through peace and friendly contact break communal barrier, first to become a Senator, and then to become the President of the whole of America of the Blacks, and the Whites.

  He surprised the world and then won the affection of all Nations. And to-day he is still working hard for the welfare of the poor, coordinate the rich to make America, and then the world a better place for every one to live without fear of natural disasters, economic upheavals, or the perils of a nuclear war.

  To what extent he will be successful only the future will tell. But still there are the whites who dislike him despite what he is, there are nations who pay no attention to what he proposes.

  But a day will come when his peaceful ways, patience ,and unflustered acceptance of criticism pay dividends and he will be able to make of America a country dedicated to peace and service of man.

  Barack Obama- this man who brought so much of change to himself, and changed the attitude of the American people as a Nation, deserves the Nobel Peace Prize for what he had been, and his present pursuit of peace

  Reply
 • Nackeera
  Nackeera

  உபாமாவிற்கான நோபல் பரிசு பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும். உபாமா தன் குறுகிய கால தலைமைப்பதவில் அவர் செய்த செய்ய முயற்சித்த ஆய்கபூர்வமான நடவடிக்கைகளுக்கும்; சமாதானம் பற்றிய அவரது தொலை நோக்கிற்கும் உலகசமாதானத்தக்காக அவர் அடிப்படையில் ஏற்கனவோ மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குமாகவே இப்பரிசு வழங்கப்படுகிறது. இது சமாதானம் பற்றிய ஆய்தறிவுள்ள ஒரு குழுவே தீர்மானிக்கிறது. நோவேயிர்கள் இலகுவானர்வர்கள் அல்ல மிக மிக இராஜதந்திரம் உள்ளவர்கள். இதனால்தான் நோபலே இப்பரிசை நோர்வே வளங்கவேண்டும் என்று பரிந்துரைத்தார். இப்பரிசைப் பெறும் உபாமா தன் வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க முடியுமா? இது ஒருவகையில் உபாமாவுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தமே தவிர பரிசு என்பது என்நோக்கில் பிழையானதே. உமாபாவினால் இராஜதந்திர ரீதியில் அணுகப்பட்ட செய்யப்பட்ட சபைக்கு வராத பலவிடயங்கள் உண்டு. இவையும் இந்த நோபல் பரிசுகுழுவினால் ஆராயப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

  Reply