இவ்வருடம் பெரும்போக வேளாண்மைச் செய்கையை மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கும் நோக்கில் தம்புள்ளையில் எதிர்வரும் 12ஆம் திகதி ஏர்பூட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட அரச அதிபர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை கண்டலம வயல் வெளியில் நடைபெறவிருக்கும் இவ்வேர்பூட்டு விழவில் விவசாய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.