நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபையின் நடவடிக்கைளில் தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இந்தச்சபையின் தமிழ் உறுப்பினர்கள் நேற்று 29 ஆம் திகதி வெளிநடப்பு செய்துள்ளனர்.
கொத்மலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போதே, கொத்மலை பிரதே சபையின் தமிழ் உறுப்பினர்களான அந்தனிராஜ், சிவகுமார், ஜோன்பிள்ளை ஆகியோர் இவ்வாறு வெளிநடப்பு செய்தனர்.
அத்துடன் 2004 ஆம் ஆண்டு முதல் கொத்மலை பிரதேசபையின் தமிழ் உறுப்பினர்களுக்குப் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமைக்கு குறித்தும் நேற்றைய அமர்வின் போது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாகக் கொத்மலை பிரதேசபை உறுப்பினர் அந்தனிராஜ் தெரிவித்தார்.