வட கொரியா அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கம்யூனிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வடகொரியா, தற்போது அந்த கொள்கையிலிருந்து விலகி புதிய பொருளாதார திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து வருவதாக, தென் கொரிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கம்யூனிச நாடான வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் இல் (67). தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பகைமை போக்கை மேற்கொண்டுள்ள இந்நாடு ஏராளமான ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் குவித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும் ரஷ்யா, சீனா, மியான்மர், உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவின் தோழமை நாடாக விளங்கி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கிம் ஜாங் இல் நோய் வாய்ப்பட்டார். மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் இவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவரது மூன்றாவது மகனிடம் ஆட்சியை ஒப்படைக்கும் வேலைகள் நடக்கின்றன. இளம் தலைமுறையிடம் ஆட்சி மாற இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் கடந்த ஏப்ரலில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மாற்றத்துக்கு ஏற்ப கம்யூனிசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த வடகொரியா, தற்போது அந்த கொள்கையிலிருந்து விலகி புதிய பொருளாதார திட்டங்களை அமல்படுத்த முயற்சி செய்து வருவதாக, தென் கொரிய் தெரிவித்துள்ளது.