அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொருளாதார நோக்கத்துடனேயே வருவதாக அந்த நாட்டின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இவர்கள் அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசிக்கின்ற போதிலும், பெரும்பாலானோர் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே பிரவேசிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ‘பானபி ஜோய்சி” தெரிவித்துள்ளார்.
புகலிடம் கோருவோராக நேற்று முன்தினம் 40 பேர் வரை அவுஸ்ரேலியாவுக்குள் பிரவேசித்தமையை அடுத்தே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அகதிகளாக வருவோரில் பெரும்பாலானோர் மல்டி விட்டமின் போசனை வில்லைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ள ஜோய்சி அவர்கள் மகிழ்ச்சியாகவே காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போதைய குடிவரவு கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.