பாலியல் தேவைகளுக்காக இந்தியாவில் பெண்கள், சிறுவர்கள் கடத்தப்படுவது குறித்து இந்திய பெண்கள் அமைப்பு அக்கறை செலுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேஷ், குஜராத், ராஜஸ்தான், புதுடில்லி ஆகிய மாநிலங்களிலே பெருமளவான பெண்களும் சிறுவர்களும் கடத்தப்படுகின்றனர்.
இவர்கள் பின்னர் பாலியல் தேவைகளுக்காகவும் தொழிலுக்காகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த வேலையை குறிப்பிட்ட குழுவொன்று செய்து வருகின்றது. நேபாளத் திலிருந்தும் பெண்கள் இந்தியாவுக்குள் அழைத்து வரப்பட்டு பாலியல் தொழில்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
இது குறித்து பெண்கள் அமைப்பு அதிக அக்கறை செலுத்தியுள்ளது.