நில நடுக்கம் ஏற்படுவதற்கு 15 வினாடிகள் முன்னதாக அபாய மணியை எழுப்பும் கருவி ஒன்றை தாய்வான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
லெப்டாப்பின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருக்கும் இந்த கருவி கம்ப்யூட்டருடன் பொருத்தி கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதை லிப்ட்களுடனும் இணைத்துக் கொள்ளலாம். இந்த கருவி குறித்து தாய்வான் தேசிய பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் வூ யி மின் கூறுகையில் :-
இந்தக் கருவி நில நடுக்கத்தின் போது ஏற்படும் குறுக்கலை, நெட்டலைகளை அடையாளம் காணும் நில நடுக்கம் தரைமட்டத்துக்கு வரும் முன்பே அலைகளை இந்தக் கருவி கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இதன் மூலம் 15 வினாடிகள் முன்னதாக நில நடுக்கம் ஏற்பட போவதை அறிந்து கொள்ளலாம். இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முயற்சிக்கலாம் என்றார்.