நெல் சந்தைப்படுத்தல் சபையால் களஞ்சியப் படுத்தப்பட்டுள்ள 44 ஆயிரம் மெட்றிக்தொன் நெல்லை பொதுச் சந்தையில் விற்பனைக்கு விட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இதற்கான பிரேரனையை விவசாய அபிவிருத்தி அமைச்சர் மைத்திறிபால சிறிசேன முன்வைத்திருந்தார்.
2008ஆம் 2009ஆம் ஆண்டு பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைகளின்போது களஞ்சியசாலைகளில் சேமிக்கப்பட்ட 15000 மெட்றிக்தொன் நாட்டரிசி ஒரு கிலோ 33 ரூபா வீதம் பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.