இலங்கை தேயிலை சபையினால் தேயிலை உற்பத்தித் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக தரநிர்ணய நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இதற்கான பிரேரனை விவசாய கைத்தொழில் அமைச்சர் தி.மு. ஜயரத்ன மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸவிதாரண ஆகியோரால் முன்வைக்கப்பட்டது.
இதன்படி இந்த இரு நிறுவனங்களும் அரச நிதியைப் பெற்றுக்கொள்ளாது சேவை பெறுவோரிடமிருந்து கட்டணம் அறவிடக்கூடிய திட்டமொன்றை வகுத்துச் செயற்படும். இவ்வாறு அறவிடப்படும் கட்டணம் இரு நிறுவனங்களுக்குமிடையில் உரிய முறை பகிர்ந்துகொள்ளப்படும்.