அண்ணா வுக்கு விழா எடுக்கும் உரிமை கொண்ட ஒரே இயக்கம் மதிமுகதான் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார். திருச்சியில் நடந்த மதிமுக மண்டல மாநாடு, அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் வைகோ பேசுகையில்,
தமிழகத்தில் சூழ்ந்துகொண்டிருக்கும் துயரங்களில் இருந்து நம்மை காக்கும் ஒரே தலைவர் அண்ணா. பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கும் தமிழ் சமுதாயத்தை தட்டி எழுப்பத் தான் இந்த மாநாடு. தமிழகத்தின் உரிமைகள் எல்லாம் பறிபோய் கொண்டிருக்கின்றன. அன்று ஈழத்தில் 25 தமிழர்கள் இறந்ததற்கு பதறிய போனார் அண்ணா ஆனால் இன்று நாதியற்ற நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். மிருகத்தைவிட கொடுமையான முறையில் கொடுமைப்படுத்தி கொல்லப்படுகின்றனர்.
உலகுக்கு முதன் முதலில் ஆடை அணிய வேண்டும் என்ற முறையை அறிமுகப்படுத்தியவன் தமிழன். ஆனால் இன்று ஈழத்தில் ஆடையற்ற நிலையில் கை, கால்கள் எல்லாம் கட்டி கொடுமைப்படுத்தப்பட்டு தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.
ஆனால் இதுபற்றி முதல்வரிடம் கேட்டால் அது எல்லாம் பழைய படங்கள், இது குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஈழத்தமிழர்கள் பிரச்சனை முடிந்து விடவில்லை. தமிழகர்களிடம் இலங்கையில் நடக்கும் அவவலங்களை எல்லாம் எடுத்து கூறும் குறும்படங்களை கொண்டு செல்ல வேண்டும். உலகெங்கும் இருக்கிற தமிழ் சகோதர, சகோதரிகள் சேர்ந்து நாம் இருக்கும் சமுதாயத்தை புதிய தேசமாக மலரச் செய்ய வேண்டும்.
ஈழத் தமிழர்களுக்கு விடிவு கிடைக்கும் வரை, என் நாவில் சக்தி இருக்கிற வரை நான் பேசிக்கொண்டே இருப்பேன். தனி ஈழம் மலர அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
இலங்கையில்தான் தான் எல்லாம் முடிந்து விட்டதே வைகோ ஏன் இங்கு புலம்புகிறார் என்று சிலர் கேட்கலாம். அவர்கள் கூறுவது போல, எல்லாம் அழிக்கப்பட்டு விடவில்லை. இனிதான் பிரச்சனையே இருக்கிறது. பிரபாகரன் என்ற ஒரு வார்த்தை போதும். ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம் ஏற்போம்.
பாலா
அண்ணன் பிரபா தந்துவிட்டுப்போன சொத்துக்கள் உள்ளவரை கத்துவேன் என்று சபதம் எடுத்துவிட்ட கெட்டிக்காரன். காசு கொடுத்துவிட்டு புலம்பிக் கொண்டிருக்கும் தமிழர்கள் அம்போ.
santhanam
முதலில் தமிழனை தெழுங்கு தமிழ் பேசும் தமிழரிடமிருந்து காப்பாற்றுங்கோ……. இல்லையேல் கற்பனையில் பேசுவார்கள்.
jeeva
இவ்வாறுதான் தமிழர்விடுதலைக்கூட்டணியினரும் (ஆனந்த சங்கரி உட்பட) தந்தை செல்வாவின் உடலில் சத்தியப்பிரமானம் செய்தனர்!
மாயா
//பிரபாகரன் என்ற ஒரு வார்த்தை போதும். ஈழம் மலர அண்ணாவின் கல்லறையில் சபதம் ஏற்போம்.//
வைகோ அண்ணே , பிரபாகரன் வருவார் என்றீங்க. இப்போ, பிரபாகரன் என்ற வார்த்தையே போதும் என்கிறீங்க. அப்போ பிரபா போயிட்டார் என்பது உங்களுக்குள் உறுதியாயிட்டுது.
தனித் தமிழ் நாட்டுக்காக களம் இறங்கி , கடைசியில் மாநில சுயாட்சிக்கு காரணமான அண்ணா சமாதி முன் நின்ற போது கூட தமிழ் ஈழம் இனி இல்லை என்பதை வைக்கோல் மெல்லாமல் சப்பித் துப்பிவிட்டார் போல இருக்கு.
muthu
தம்பி பிரபாகரனுக்கு செத்தவீட்டை ஒழுங்காய்ச் செய்து கல்லறையினையும் கட்டியிருந்தால் நான் இப்பிடி அண்ணாவின் கல்லறையில் சபதம் செய்திருக்கத் தேவையிருந்திருக்காது என வைகோ மனதுள் நினைத்திருப்பார்.
தனஞ்சேயன்
தமிழ் நாட்டில் தமிழ் தலைவர்களா?
கருணாநிதி சுத்த தெலுங்கு. விஜயகாந்த் சுத்த தெலுங்கு
வைகோ சுத்த தெலுங்கு
எம் ஜீ ஆர் ஹெவகேட்டவில் பிறந்த மலையாளி
ஜெயலலிதா சுத்த கன்னடம்
பெரியார் கூட தமிழர் அல்ல.
சுன்னாகம், மல்லாகம், சூராவத்தை கொடிகாமம் வலிகாமம் பளை கொக்குவில் நந்தாவில் உடுவில் மட்டுவில் – இவை எல்லாம் தமிழர் வைத்த பெயர் அல்ல
எங்களில் ஆங்கிலம் எழுத் தெரிந்த அனைவரும் ஆங்கிலத்தில் தானே கையொப்பம் வைக்கிறோம்.
“சாருக்கு ரைஸ் வேணும்! பாஸ்! ஆட்டோவை ரைட்டில் கட் பண்ணி ஸ்டாப் பண்ணு”
இந்தப் பேச்சில் எத்தனை சொல்லு தமிழ்
மகுடி
கல்லறை கலாச்சாரம் பிரபாகரனோடு முடிந்து விட்டது முத்து. பிரபாகரனை புதைத்தார்களா? எரித்தார்களா? அஸ்தியை கடலில் தெளித்தார்களாம் என்கிறார்கள். அதை நினைத்து இந்து சமுத்திரத்தில் விழுந்து சாக வேண்டியவர்கள் வைகோ போன்றோர்.
பார்த்திபன்
வை.கோயபல்ஸ் தமிழீழத்தில் தான் அடுத்த பொங்கல் போன்று பலமுறை இப்பபடிச் சபதமெடுத்தவர். இவரின் சபதங்களைக் கணக்கிலெடுத்தால், நாங்களும் கோமாளிகள் ஆகிவிடுவோம்.
sumita
ஈழம் மலர அண்ணாவின் சமாதியில் வைகோ சபதம் எடுப்பதைவிட பிரபாகரனின் சமாதியிலல்லோ சபதம் எடுக்க வேண்டும். அதற்கு முதலில் தமிழ்நாட்டில் தலைவருக்கு ஒரு தற்காலிக சமாதி அமைக்க வேண்டும். அதற்கு புலம் பெயர்ந்த மக்களிடம் வசூல் செய்யவேண்டுமல்லவா. அதற்குத்தான் இந்த ஏற்பாடோ.
பார்த்திபன்
வை.கோ, சீமான் போன்றவர்கள் தமிழர்களை எப்படி ஏமாற்றிப் பிழைக்கின்றார்கள் என்பதற்கு இவ்வார விகடனில் சீமானின் அதிஉச்ச ஏமாற்றுப் பேட்டி ஒன்று வெளிவந்துள்ளது. அதில் தற்போது நடந்து முடிந்த போருக்கு சில நாட்கள் முன்பாக தான் பிரபாகரனைச் சந்தித்தது பற்றி கூறியிருக்கின்றார். இதில் பிரபாகரன் தனக்குச் சொன்னதாக “இந்திய அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகள் சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலத்தில், திடீரென்று ஒருநாள் கிட்டுவை அழைத்த எம்.ஜி.ஆர், ஒரு பெட்டியில் 36 லட்சம் ரூபாய் பணத்தை வைத்துக் கொடுத்ததாராம்” என்று சொல்லியுள்ளார். இதில் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால் இந்திய அமைதிப்படையுடன் புலிகள் போர் தொடங்கிய காலத்தில் எம்.ஜி.ஆர் உயிரோடில்லை. எப்படி எல்லாம் அடுத்தவர்களை ஏமாற்றிப் பிழைக்கின்றார்களென்பதற்கு இது நல்ல உதாரணம்.