யாழ் குடாநாட்டிலுள்ள நீர் நிலைகளில் கடல் நீர் கலப்பதைத் தடுப்பதற்கான திட்டம் 170 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்திட்டம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபியின் சிரேஷ்ட ஆலேசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. இன் நேரடி வழிகாட்டலில் முன்னெடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் ஆரம்பத்தில் ஆரியாலை அணைக்கட்டு திருத்தப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான செலவு மதிப்பீடு 170 மில்லியன் ரூபாவாகும். அரச அபிவிருத்திக்கான பொறியில் கூட்டுத்தாபணம் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
யாழ் தொன்டமானாறு அணைக்கட்டு நிர்மானப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. அமைச்சர் ராஜித சேனாரத்தன மற்றும் யாழ் அரசாங்க அதிபர் கே. கனேஸ் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர். இதற்கு அடுத்ததாக ஆணையிறவு அணைக்கட்டு மீள் கட்டுமாணப்பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒரு பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.