பஹ்ரெ யினில் 180 தினார்களைத் திருடி இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியதாகக் கூறப்பட்ட ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறைவாசம் விதித்ததுடன் அவரை நாடு கடத்தவும் பஹ்ரெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தம்முடன் அறையைப் பகிந்து கொண்டவரின் ஏ. டீ. எம். அட்டை மூலம் இவர் இந்த பணத்தொகையைத் திருடியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இவர் மீதான வழக்கு நேற்று முன்தினம் பஹ்ரெயினின் முஹாராக் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவரை 3 ஆண்டுகள் சிறைவாசம் விதித்ததுடன், அதன் பின்னர் இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.