தகவல் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக டப்ளியு.பீ.கனேகல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கபட்டுள்ளார்.
இந்த அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய ஏ.திஸாநாயக்க கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கனேகல ஏற்கனவே தகவல் ஊடகத் துறை அமைச்சின் செயலாராக கடமையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னர் பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றினார்