புஷ் மீது பாதணியை வீசிய ஊடகவியலாளர் இன்று விடுதலை!

1099images.jpgஅமெரிக் காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது தமது பாதணியை வீசியெறிந்த ஊடகவியலாளர் முண்டாசர் அல் சய்தி இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக அவரது அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார்.
 
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் ஓய்வு பெறுவதற்கு முன் ஈராக் சென்றிருந்தபோது ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

மாநாட்டில் கலந்து கொண்ட டி.வி செனல் நிருபர் முண்டாசர் அல் சேய்திää தன் கால்களில் அணிந்திருந்த 2 ஷ_க்களையும் கழற்றி புஷ் மீது வீசி எறிந்தார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுசெய்ததில் இந்த தண்டனை ஓர் ஆண்டாக குறைக்கப்பட்டது. இவரது நன்நடத்தை காரணமாக அந்தத் தண்டனை மேலும் குறைக்கப்பட்டது. இவர் நேற்று விடுதலை செய்யப்படுவார் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

எனினும் சட்ட நெறிமுறைகள் முழுமை அடையாததால் அவர் நேற்று விடுதலை செய்யப்படவில்லை. இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் விடுதலை செய்யப்படுகிறார். இந்தத் தகவலை அவரது சகோதரர் டர்காம் தெரிவித்தார

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    திசைநாயகத்துக்கு தண்டனை கொடுத்த நீதியற்ற நீதிபதி இதை கவனிக்கவும்; எடுத்ததுக்கெல்லாம் ஜனனாயகம் என நாக்கு முக்கா நாக்கு முக்கா பாட வேண்டியது ஆனல் செயலோ ஏகாதியபத்தியத்தின் தலமை நாடுபோல் இருக்கிறது,

    Reply